ஹோர்ஜ் லூயி போர்ஹே (1889–1986)வை புனைவுச் சிறுகதை எழுத்தாளர் என்றே பெரும்பான்மையோர் அறிவர். அவர் ஒரு கவிஞராக எழுத்து வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியம். 1914ஆம் ஆண்டிலிருந்து 1920ஆம் ஆண்டு வரை போர்ஹே ஐரோப்பியாவில் படித்தார். முதல் உலகப்போரின் போது அவரது தந்தையின் கண் அறுவைச் சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்கு சென்ற அவர் குடும்பம், போர் முடியும்வரை அங்கே தங்க வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று. ஸ்பெயினில், குறிப்பாக மேட்ரிட் நகரில், அவர்கள் சிலகாலம் இருக்க வேண்டி வந்தது. போர்ஹே எழுதிய முதல் கதை ஒன்றினை மேட்ரிட் பத்திரிகை ஒன்று நிராகரித்தது. ஆனால் அவர் எழுதிய முதல் கவிதை பிரசுரம் கண்டது. பல வேறுபட்ட ஐரோப்பிய இலக்கியக் குழுக்களுடன் போர்ஹே தொடர்பு கொண்டிருந்தாலும் தன்னுடைய உத்வேகத்தை (கவிதையில்) அவர் கண்டுபிடித்துக் கொண்டது ஸ்பானிய யூதக்கவிஞரான ரஃபேல் கான்ஸினோஸ் அஸென்ஸ் என்வரைச் சந்தித்த பிறகுதான்.
1) புன்னகை புரியும் இளவரசி - இந்தியச் சிறுகதைகள், மருதம், நெய்வேலி, 1995
2) பகத்சிங் சிறைக்குறிப்புகள், விஜயா பதிப்பகம், கோவை, 1995
3) கதாசாகரம் - சர்வதேச வாய்மொழிக் கவிதைகளின் தொகுப்பு, விஜயா பதிப்பகம், கோவை, 1999
4) குளிர்கால இரவில் ஒரு பயணி, இடாலோ கால்வினோ, உன்னதம், ஈரோடு, 2001
5) ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை, இடாலோ கால்வினோ, வ.உ.சி. நூலகம், சென்னை, 2006
6) புலப்படாத நகரங்கள், இடாலோ கால்வினோ, வ உ சி நூலகம், 2003
7) சேகுவோராவின் கொரில்லா யுத்தம், ரெஜி டெப்ரே, வ உ சி நூலகம், சென்னை, 2003
8) காஃப்கா - கடிதங்கள், கதைகள், கட்டுரைகள், வ உ சி நூலகம், சென்னை 2006
9) டாலியன்டைரி, வ உ சி நூலகம், சென்னை 2006
10) பிளாடெரோவும் நானும், ஜுவான் ர«£ன் ஜிமெனெஸ், வம்சி, திருவண்ணாமலை, 2005
11) செவ்விந்தியன் நீண்ட பயணம், பெர்னார்ட் மலமூட், வம்சி, திருவண்ணாலை, 2008
12) யூதப்பறவை, உலக சிறுகதைகள், அனன்யா, தஞ்சாவூர், 2007
13) லியோனார்டோ டாவின்ஸி, ஆழிபதிப்பகம், சென்னை, 2008
14) அமெரிக்கன், ஹென்றிஜேம், வம்சி, திருவண்ணாமலை, 2009
15) இறுதிசுவாசம், லூயிபுனுவல், வம்சி, திருவண்ணாமலை, 2009
ஆய்வுகள் - கட்டுரைகள்
1) தேவதாஸ் கட்டுரைகள், அன்னம் சிவகங்கை, 1993
2) மறுபரிசீலனை, விஜயா பதிப்பகம், கோவை, 2001
3) மூன்றாவது விழியன் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும், ஆரூத் புக்ஸ், சென்னை, 2002
4) சூரிய நடனம், விளிம்புநிலைப் பிரதிகள், தென்திசை, சென்னை, 2007
5) அமர்தியாசென்- ஒரு சுருக்கமான அறிமுகம், ஆழி பதிப்பகம், சென்னை 2008
6) சார்லஸ் டார்வின், பரிணாமத்தின் பரிமாணங்கள், ஆழிபதிப்பகம், சென்னை 2009
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.
லி – போ/ லி பை /லி பை (Li Bai) என்றெல்லாம் வழங்கப்படுபவர். தொல் பழங்காலத்துச் சீனக் கவிகளுள் முக்கியமான ஒருவர். சீனாவெங்கும் சுற்றி வந்தவர். சீனச் சக்கரவர்த்தி ஒருவரால் உயர்ந்த கல்வித்துறை பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டிருந்த இவர், பின்னர் அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டவர். அப்புறம் கலக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளவரசர் ஒருவரிடம் பணியாற்றியவர். இரண்டாவது முறை நாடு கடத்தப்பட்ட லி போ, கடைசியில் மன்னிப்பு பெற்றார்.
`உலகத்திற்கும் அதனை உற்று நோக்கும் மனதிற்கும் இடையிலான உறவு நிலையில் ஒருவித தூய்மையான அமைதிநிலையை உணர்த்தி நிற்பவை இவரது கவிதைகள்` எனப்படுகிறது.
மலையில் களியாட்டம்
காலங்காலமான துயரங்களை எமது
ஆன்மாக்களிலிருந்து கழுவித்துடைப்பதற்காக
நூறு குவளைகள் ஒயினைக் காலியாக்கினோம்
அது ஓர் அற்புத இரவாய் இருந்தது..
தெளிந்த நிலவொளியில் தூங்கப் போவது வெறுப்பாயிருந்தது
கடைசியில் போதை தலைக்கேறிற்று
வெற்றுமலை மேல் படுத்துக் கிடந்தோம்,
பூமி தலையணையாயம் மாபெரும் வானம் போர்வையாம்
நிலவின் கீழே தனியே மது அருந்தியபடி
பூக்களிடையே நான்
மட்டும் தனித்திருக்கிறேன் ஒயின் கிண்ணத்துடன்
அருந்தியபடி, நின் கிண்ணத்தை
உயர்த்தி நிலவை வேண்டினேன்
என்னுடன் அருந்துமாறு, அதன்
பிம்பம் மற்றும் என்னுடையது கிண்ணத்தில்,
நாங்கள் மூவர் மட்டுமே, பின்னர்
நிலவால் அருந்த முடியாதே என்று
பெருமூச்செறிந்தேன், மற்றும் என்நிழல்
என்னுடன் செல்கிறது வெறுமையாக
ஒருவார்த்தையேனும் சொல்லாமல்,
இங்கே நண்பர் வேறு யாரும் இல்லாததால்
இவ்விருவரையே தோழமையாய்க் கொள்ள முடியும்,
சந்தோஷமான நேரத்தில், நானும்
என்னைச் சூழ்ந்துள்ள அனைவருடனும் சந்தோஷமாயிருக்க
வேண்டும், நான் அமர்ந்து பாடுகிறேன்
நிலவு என்னுடன் சேர்ந்து வருவது
போன்றுள்ளது, அப்புறம் நான்
ஆடினால், என்னுடன் ஆடுவது
என் நிழலே, இன்னும் குடிக்காதவரை
நிலவையும் என் நிழலையும்
நண்பர்களாக்கிக் கொள்வதில் எனக்குச்
சந்தோஷம், ஆனால்
நான் அதிகம் குடித்திருக்கையில்,
நாங்கள் எல்லாம் பிரிகின்றோம், எனினும்
இவர்களெல்லாம் நான் பொருட்படுத்தும்
நண்பர்கள், எந்தவிதமான
உணர்வோட்டமும் இல்லாதவர்கள் இவர்கள்,
ஒரு நாள் நாங்கள் மூவரும் திரும்பவும்
பால்வீதியின் ஆழத்தில் சந்திப்போம் என்று நம்புகிறேன்.
மலையினைத் தனியே உற்றுநோக்குகையில்
பறவைகளெல்லாம் பறந்து போயுள்ளன
தனியொரு முகில் மிதக்கின்றது மிக மெதுவாக
நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்
கொள்வதில் அலுக்கவே இல்லை,
மலையும் நானும் மட்டும்
பூக்களிடையே ஒரு கிண்ணம் ஒயின்
பூக்களிடையே ஒரு கிண்ணம் ஒயினை,
ஊற்றுகிறேன் தோழமையின்றித் தனியே
ஆக கிண்ணத்தை உயர்த்தி நிலவை வரவேற்கிறேன்
அப்போது என் நிழலைத் திரும்பிப் பார்க்க நாங்கள் மூவராகின்றோம்
நிலவுக்குக் குடிக்கத் தெரியாததால்
என் நிழல் வெறுமனே தொடருகிறது என் உடல்
அசைவினை
சிறிது நேரம் எனக்குத் தோழமை தர நிழலைக் கொண்டு வந்துள்ளது நிலவு,
மகிழ்வை நிறைவேற்றுவது வசந்தத்துடன்
இசைவு கொள்ள வேண்டும்,
ஒரு பாடலை ஆரம்பிக்கின்றேன், நிலவு சுற்றத் தொடங்குகிறது
எழுந்து ஆடுகிறேன், நிழல் அசைகிறது அருவருப்பாய்.
இன்னும் நான் பிரக்ஞை கொண்டிருக்க,
ஒருவருடன் ஒருவர் சேர்ந்து கொண்டாடுவோம்,
எனக்குப் போதை ஏறியிருக்கையில்,
அவரவர் வழியில் போய்விடலாம்
எப்போதைக்கும் வேட்கையற்ற பயணங்களில்
நினைத்திருப்போம் நம்மை
பால் நதியின் தொலைவிலே திரும்பவும் சந்திப்போம்
என்று உறுதி கொள்வோம்
சுவாங் சூவும் பட்டாம்பூச்சியும்
சுவாங்க சூ பட்டாம்பூச்சியாகி விட்டார் கனவில்
மற்றும் பட்டாம்பூச்சி சுவாங் சூ ஆகிவிட்டது தூங்கி எழுந்ததும்
எது நிஜம் பட்டாம் பூச்சியா மனிதனா?
பொருட்களின் முடிவற்ற மாற்றங்களின்
முடிவினை யாரே கூறக்கூடும்?
தொலைதூரக் கடலின் ஆழத்திற்குள் பாயும் நீர்
ஆழமற்ற ஆற்றுக்குத் திரும்புகிறது உடனே.
நகரின் பசிய வாயிலுக்கு வெளியே
முலாம் பழங்கள் பயிரிடுபவன்,
கீழைக் குன்றின் இளவரசனாயிருந்தவன் ஒரு காலத்தில்,
ஆகவே மறையவேண்டும் பேதங்களும்
பிரிவினைகளும்
நீ அறிவாய், இருந்தும் உழைக்கின்றாய்,
உழைத்துக் கொண்டே இருக்கிறாய்
எதன் பொருட்டு?
தனியே அருந்துதல்
மலர்களிடையே கொண்டு செல்கின்றேன்
என் மதுக்கிண்ணத்தை
நண்பர்களில்லாமல் தனியே அருந்துவதற்காக
நிலவை ஈர்ப்பதற்காக உயர்த்துகிறேன்
என் கிண்ணத்தை,
நிலவு, என் நிழல் என மூவராகிறோம்
ஆனால் நிலவு அருந்துவதில்லை,
என் நிழல் பின் தொடர்கிறது நிசப்தமாய்
நிலவுடனும் நிழலுடனும் பயணிப்பேன்
நீரூற்றின் இறுதிவரை சந்தோஷமாக
நான் பாடுகையில், நிலவு ஆடுகிறது
நான் ஆடுகையில், என் நிழலும் ஆடுகிறது
வாழ்வின் ஆனந்தங்களைப் பகிர்ந்து
கொள்கிறோம் நிதானமா யிருக்கையில்
போதையேறினால், அவரவர் வழியில்
போகின்றோம்
அலைந்து திரியினும், நிரந்தர நண்பர்களான நாம்
மீண்டும் சந்திப்போம் பால் நதியில்.
வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.