இதழ்: 11, நாள்: 15- ஐப்பசி -2013 (October)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 8 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 7 - ராஜேஷ்

--------------------------------

எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும் – தியோடர் பாஸ்கரன்

--------------------------------
அச்சிலிருந்து திரைக்கு – தியோடர் பாஸ்கரன்
--------------------------------
மெட்ராஸ் கஃபே - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
சினிமாவும் இலக்கியமும் - சாஹித்ய அகாடெமி கருத்தரங்கு - இரா.குமரகுருபரன்
--------------------------------
To Live - வாழ்வென்பது யாதெனில்!! - தினேஷ்
--------------------------------
ஏழை படும் பாடு – காட்சிமொழியால் தீட்டிய ஓவியம் - பிச்சைக்காரன்
--------------------------------
சிறுகதையிலிருந்து உருவான குறும்படங்கள் - தினேஷ்
--------------------------------
நாவலில் இருந்து படமாக்கப்பட்ட திரைப்படங்கள் பட்டியல். - தினேஷ்
 
   
   

 

 

திரைமொழி - 7

முதல் பாகம் – Visualization – The Process

அத்தியாயம் 3 – Storyboards (தொடர்ச்சி)...

film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

சென்ற கட்டுரையில் ஸ்டோரி போர்ட்களில் டாலி மற்றும் ஸூம் ஷாட்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இவற்றில், மிகவும் சுலபமானதும், வசதியானதுமான ஒரு வழிமுறையை கீழே உள்ள படத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். ஆனால் இந்த ஸ்டோரிபோர்டில் என்னபிரச்னை என்றால், இரண்டு முறைபடத்தை வரையவேண்டி இருக்கும். கூடவே, ஆங்காங்கே அந்தப் படங்களைப் பற்றியும் விபரமாக எழுதவும் வேண்டி இருக்கும். ஆனால், ஷாட்டின் சைஸை வெளிப்படுத்த உதவும் மிக எளிய முறை இது.

இதைப் போலவே, சில காட்சிகளில் அதில் இருக்கும் கதாபாத்திரம் திடீரென தரை ஆடுவதால் நிலை தடுமாறி ஆடுவதை க்காண்பிக்க வேண்டி இருக்கலாம். உதாரணம் – பூகம்பம் அல்லது கப்பலின் மேற்தளம். இதை, ஒரு ஃப்ரேமுக்குள் ஒன்றிரண்டு ஃப்ரேம்கள் சற்றே வேறுபட்டு இருப்பதைப் போல் காண்பிக்கலாம். அது இங்கே:

ஷாட்களுக்கு இடையேயான மாற்றங்கள்

இனி வரும் சிலபடங்களில், மெள்ள மறையும் ஷாட் உத்திகளான dissolve மற்றும் Fade ஆகியவை ஸ்டோரிபோர்ட்களில் எப்படிக் கையாளப்படுகின்றன என்று பார்ப்போம். இந்த லே அவுட், அனிமேஷன் ஸ்டோரிபோர்ட்களில் இருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அனிமேஷன் ஸ்டுடியோவுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆனாலும், இதோ இங்கே உள்ள படத்தில், இரண்டு ஃப்ரேம்களுக்கு இடையே உள்ள காலி இடத்தைக்கூட எத்தனை அழகாக உபயோகித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

க்ரேன்ஷாட்

எடிட்டிங் மற்றும் கண்டின்யுடியை விளக்கும் உதாரணங்களில் கடைசி உதாரணம், கிரேனை உபயோகித்து எடுத்த ஒரு சீக்வென்ஸ்ஷாட். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் மொத்தம் 11 பேனல்கள் இருந்தாலும், இது ஒரே ஒரு ஷாட்டிலேயே எடுக்கப்பட்டது.







ஸ்டோரிபோர்ட்களின் வடிவமும் அவற்றை அமைப்பும் விதமும்

தனிப்பட்ட பேனல்களின் அளவைவைத்து, ஸ்டோரிபோர்ட்களை அமைக்கும் விதங்களும் மாறுபடும். சராசரியாக, ஸ்டோரி போர்டில் இருக்கும் பேனல்களின் அளவு, 4X6 இன்ச்களாக இருக்கலாம். இதுவுமே கூட ஒரு ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்டின் இஷ்டம்தான். ஒருவேளை அதிகமான விபரங்கள் தேவைப்பட்டால் பெரிய பேனல்களில் வேலை செய்யவும் சிலர் தயாராக இருப்பார்கள். இவைகளை அப்படியேயும் உபயோகிக்கலாம், அல்லது அவற்றைப் பிரதி எடுக்கும்போது அளவை குறைக்கவும் செய்யலாம்.

படத்தின் தயாரிப்பின்போது படப்பிடிப்புக்கு முன்னதாக pre-productionல் இருக்கும்போதே ஸ்டோரிபோர்ட்களை பல்வேறுப் ரொடக்‌ஷன் துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிடுகின்றன. சிலப்ரொடக்‌ஷன் டிஸைனர்கள், ஸ்டோரிபோட்களை நோட்டீஸ் போர்டுகளிலேயே ஒட்டி வைப்பது உண்டு. இதை டிஸ்னி நிறுவனம் செய்வது வழக்கம். காரணம், அப்போதுதான் அலுவலக மீட்டிங்களில் இந்தஸ்டோரி போர்ட்கள் எல்லாரும் பார்க்கும்படியாக அமையும். கூடவே இப்படி தொடர்ந்து ஒட்டப்படுவதால், பல்வேறு பேனல்களும் அங்கு இருக்கும். இவற்றின் பெரிய அளவால், படப்பிடிப்புக்காக அங்குமிங்கும் எடுத்துசெல்ல முடியாதவாறு ஆகிவிடுகின்றன என்பது இவற்றின் பிரச்னை. கூடவே, ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி எடுக்க வேண்டும் என்பது எளிதில் கணிக்க முடியாமல் போகிறது. ஆனாலும்கூட, படப்பிடிப்புத்தளத்தில் பிறதளவாடங்கள் எப்படி அமையவேண்டும் என்பதை இவற்றின் பெரிய அளவால் எளிதில் முடிவு செய்துவிட முடிகிறது. ஆனால், அளவில் சிறிய ஸ்டோரிபோர்ட்களை எளிதில் ஒரு ஃபைலில் வைத்துக்கூட எடுத்துச் சென்றுவிடலாம். இவற்றில் ஆறிலிருந்து இருபது பேனல்களை வைக்கலாம். அதேசமயம், இன்னும் சில இயக்குநர்களுக்கு இவை புத்தகவடிவில் தயார் செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. அளவில் 8X10 இன்ச்கள் இருக்கும் ஒரு பெரிய பேனல், அந்தப்புத்தகத்தில் ஒரு பக்கம் இருக்கலாம். இதனால், ஆர்ட் டைரக்டருக்கு எந்த ஸீனையும் திரைப்படத்தில் எப்படி அமைக்கலாம் என்பது விளங்கிவிடுகிறது. இந்த புத்தகத்தின் பக்கங்களை அவர் திருப்பும் வேகத்தில் இருந்தே, இறுதி எடிட்டிங்கில் எப்படி அந்த ஷாட்கள் கையாளப்படும் என்பதை அவரால் முடிவு செய்ய இயலலாம். போலவே, ஒரு எடிட்டர் வேலை செய்வதைப்போலவே, இந்தப் புத்தகத்தில் தனித்தனி பேனல்களை எளிதில்சேர்க்க, நீக்க மற்றும் சரிசெய்ய முடியும்.

எளிமையான ஸ்டோரி போர்ட் வரையும்முறை

ஒரு ஸ்டோரிபோர்டிலிருந்து இரண்டு வகையான செய்திகள் கிடைக்கின்றன. 1. திரைப்படம் எடுக்கப்படப்போகும் இடத்தின் தன்மைகள் (அவுட்டோட்மற்றும்செட்கள்). 2. அந்த சீக்வென்ஸின் குறிப்பிட்ட விசேட தன்மைகள் (அமைப்பு, கேமராஆங்கிள்கள், லென்ஸ்கள் மற்றும் ஷாட்டில் இடம்பெறும் விஷயங்களின்மூவ்மெண்ட்). ஒரு ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்டால் அந்த இடத்தின்தன்மை, mood மற்றும் லைட்டிங் உட்பட்ட இதர தகவல்களை தர முடியவேண்டும். அதுவே ஒரு இயக்குனரால் அத்தனை தத்ரூபமாக வரைய இயலாமல் போனாலும், அந்த கேமரா செட்டப்பின் சில அடிப்படைகளை எளிமையான வரையும் முறைகளாலேயே விளக்கமுடியும்.

தொடரலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </