வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


கதவைத் திறந்தது யார் தவறு?

பூபதி  

இந்துக்களுக்கு பகவத்கீதை, இஸ்லாமியர்களுக்கு திருக்குரான், கிருஸ்துவர்களுக்கு பைபிள் போல பெரியார் புத்தகம் என்றால் அது நாத்திகர்களுக்கு என்றாகிவிட்டது. நாத்திகர்கள்தான் பெரியாரின் புத்தகங்களை படிப்பார்கள் என்ற எண்ணம் எப்படியோ அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டது. இதனால் பெரியாரின் புத்தகம் கையில் இருந்தால் ‘நீ நாத்திகனா?’ என்று கேள்வி கேட்கப்படும் சூழ்நிலை இப்போது உள்ளது. ஆனால் உண்மையில் பெரியாரின் புத்தகங்களை நாத்திகர்கள் படிப்பதை விட ஆத்திகர்களே கட்டாயம் படிக்க வேண்டும். அவர்கள் நாத்திகர்களாக மாறிவிடுவதற்காக அல்ல, புத்திசாலித்தனமான ஆத்திகர்களாக மாறுவதற்கு.

மற்ற இடங்களில் எப்படியென்று தெரியவில்லை, தமிழகத்தை பொருத்தவரையில் சாமி, அல்லது சாமியார் மீதான விவாதங்களையோ அல்லது விமர்சனங்களையோ யாரும் விரும்புவதில்லை. அப்படி யாராவது விமர்சனம் செய்யத்தொடங்கினால் உடனே அவருக்கு நாத்திகன் என்ற பட்டம் கொடுத்து அவரை ஒதுக்கிவிடுகிறார்கள். அதற்குப் பிறகு அவர் என்ன சொன்னாலும் நாத்திகம் பேசுகிறான் என்ற ஒரே வாக்கியத்தில் அவருடைய கருத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன.

உண்மை என்ன என்பதை ஜீரணிக்க இயலாத வரட்டுத்தனமான மூட நம்பிக்கை பாதையில் மக்கள் சென்று கொண்டிருப்பதால், நாத்திகத்தை வெறுத்து, கடவுள் பற்றிய விசயத்தில் விவாதத்திற்கு இடமே கொடுக்காமல், கண்மூடித்தனமாக ஆத்திகத்தில் ஈடுபட்டு அழிந்து போகிறார்கள். கடவுள் பற்றியோ, சாமியார்கள் பற்றியோ நாம் விவாதத்தில் ஈடுபட்டு விமர்சனம் செய்துகொள்வதன் மூலம் நாம் நாத்திகர்களாக மாறாவிட்டாலும், அந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் மூலமாக நாம் குறைந்தபட்சம் உண்மை என்ன என்பதை புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. புத்திசாலித்தனமான ஆத்திகனாக வாழ்ந்திட வழியிருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக கடவுளையோ, சாமியாரையோ விமர்சனம் அல்லது விவாதம் செய்தாலே அவர்களுக்கு மதரீதியான நம்பிக்கையற்றவர்கள் என்ற பொதுவான கருத்து மேலோங்கிவிட்டதால் இந்த செயல்பாடுகளை யாரும் விரும்புவதில்லை.

சிவனிடம் சென்று ஏமாந்துவிட்டேன், பெருமாள் என்னை ஏமாற்றி விட்டார் என்று எங்கேயும் குற்றச்சாட்டு எழுவதில்லை. சிவன் கோவில் பூசாரி என்னை கற்பழித்துவிட்டார். பெருமாள் கோவில் பூசாரி என்னை ஏமாற்றிவிட்டார் என்ற வகையில்தால் குற்றச்சாட்டு எழுகிறது. இதனால்தான் நாத்திகர்களின் விமர்சனத்திற்கு சாமிகளைவீட சாமியார்களே அதிகம் அடிபடுகிறாகள். காரணம் சாமிகளைவீட சாமியார்கள் தற்போது மக்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். சாமி என்பது ஒரு காரணப் பொருள் ஆகிவிட்டது. சாமியை அடிப்படையாகக் கொண்டு சாமியார்கள் உயர்வடைந்து வருகிறாகள். சாதாரண மக்களுக்கும் சாமிக்கும் இடையே ஒரு தொடர்பை உண்டாக்குபவர்களாக இருந்த இந்த சாமியார்கள் மக்கள் கொடுத்த தேவைக்கு அதிகமாக மரியாதையால் தாங்களே சாமிகள் என்ற சிந்தனைக்கு சென்றுவிட்டார்கள்.

சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றபோது, பணக்கார தோற்றத்தில் இருந்த ஒரு பக்தர் கோவில் பூசாரியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி பூசாரியின் தட்டில் 500 ரூபாய் வைத்தார். உடனே சாமியார் உள்ளே சென்று பூ, பழம் போன்றவற்றை எடுத்துவந்து அந்த நபரின் கையில் கொடுத்தார். அங்கிருந்த மக்கள் மத்தியில் இருவருக்கும் ஒருவிதமான பெருமிதம் நிலவியது. பணம் கொடுத்த பக்தர் அந்த பூசாரியின் காதில் ஏதோ சொல்ல உடனே அவர் ஒரு கயிறை எடுத்து மந்திரித்து அந்த நபரின் கையில் கட்டிவிட்டார்... இதெல்லாம் எதற்காக? கோவிலுக்கு வந்தது சாமி கும்பிட, அந்த வேலையை மட்டும் செய்தால் யார் உங்களை ஏமாற்றிவிட போகிறார்கள்? யாரால் நீங்கள் பாதிக்கப்பட்டுவிடப் போகிறீர்கள்! ஆனால் இவையெல்லாம் பாதிக்கப்படும் வரை மக்களுக்கு புரிவதில்லை.

பூசாரி, சாமியார்களை பார்த்து நெளிவது, குனிவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னால்கூட அது நாத்திகம் என்று ஒதுக்கிவிடுகிறார்கள். இந்த சிந்தனை தொடர்வதால்தான் இன்று வரை மக்கள் பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று வரை புதுப்புது சாமியார்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். அட பகுத்தறிவு தேவையில்லை ஒரு அனுபவ பூர்வமான அறிவு கூடவா மக்களுக்கு வராது? எவ்வளவோ சாமியார்கள் சிறைக்கு சென்று விட்டார்கள். ஆனாலும் மீண்டும் மீண்டும் வேறொரு சாமியாரிடம் ஏமாந்து போகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?

சமீபத்தில் ஒருவர் கதவைத் திற….. காற்று வரும் என்று சொன்னதும், ஏன் எதற்கு என்று யோசிக்காமல் கதவைத் திறந்து காற்று வாங்கிய மக்களுக்கு இப்போது எவ்வளவு காற்று அடித்தாலும் வியர்த்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முதல் தடவையாக இப்படி ஒரு சாமியார் சிக்கியிருக்கிறார் என்றால் சாமியாரை குறை சொல்லலாம். இது முதல் தடவை அல்ல, இனி எத்தனை தடவை தவறுகள் நிகழ்ந்தாலும் மக்கள் திருந்தப்போவதில்லை எனவே கதவை திற என்று சொன்னவர்களை விட்டு விட்டு, கதவை திறந்து காற்று வாங்கியவர்களைத்தான் இந்த முறை குற்றம் சொல்ல வேண்டும். இந்த சாமியாரையும் சிறையில் அடைத்துவிட்டால் மக்கள் அதோடு இந்த பிரச்சனையை மறந்து விட்டு புதிய சாமியாரை தேடிப்போக ஆரம்பித்து விடுவார்கள்.

கதவை திறக்கச்சொன்ன சாமியார் பிரச்னை தொடர்பாக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு காட்சி என்னை கவர்ந்தது. ஏதோ ஒரு பேருந்து நிலையம் என்று நினைக்கிறேன் அங்கே பெரியார் சிலையாக நின்று கொண்டிருக்கிறார். சிலைக்கு கீழே அந்த சாமியாரின் புகைப்படங்களை மக்கள் எரித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் சிந்தனையில் நாம் கவனம் செலுத்தாமல் அவரை சிலையாக முடக்கியதன் விளைவாகவும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றியது.

பெரியாருடைய புத்தகத்தை படித்தால் உடனே நீங்கள் நாத்திகர்களாக மாறிவிடுவீர்கள் என்பது தவறான கருத்து. உண்மையில் நீங்கள் பெரியாருடைய புத்தகங்களை படித்து அவற்றை உங்களின் ஆன்மீகத் தேடலில் பயன்படுத்தினால் நீங்கள் அறிவுபூர்வமாக ஆன்மீகப்பாதையில் பயணிக்க முடியும்.

இனிமேலாவது இந்த சாமியார்களின் புத்தகங்களை வாங்கிப் படிப்பதை விட்டு விட்டு, பகுத்தறிவு தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். நாத்திகனாக மாறிவிட அல்ல…… அறிவுபூர்வமான ஆத்திகனாக வாழ்வதற்கு.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</