வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


தோற்றம்

பூபதி  

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.


வடிவால் நேரானதாக இருந்தாலும் செயலால் அம்பு கொடியது. வளைந்து இருந்தாலும் யாழ் இனிமையானது. அதனால் தோற்றத்தை பார்த்து மனிதரை எடைபோடாமல் அவர்களின் செயலை அடிப்படையாக வைத்து மனிதர்களை எடைபோடுங்கள் என்று அப்போதே வள்ளுவர் கூறியிருந்தாலும் இன்றுவரை நாம் மனிதர்களின் தோற்றத்தை வைத்தே அவர்களை நாம் எடைபோடுகிறோம்.

தோற்றம் (Appearance) - என்பது அனைத்து துறைகளிலும் மிக முக்கியமான விசயமாக கருதப்படுகிறது. நாம் எந்த துறையில், எந்த மாதிரியான பணியில் இருக்கிறோமோ அதற்கேற்ற மாதிரி நம்முடைய தோற்றம் இருக்க வேண்டும். அதிகாரமிக்க துறைகளில் சாதுவான தோற்றம் கொண்டவர்கள் பணியாற்றுவது. மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய துறைகளில் முரட்டுத்தனமான தோற்றம் கொண்டவர்கள் பணியாற்றுவது பார்ப்பவர்களுக்கு முரண்பாடாக தோன்றும். இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லாவிட்டாலும், பொருத்தமான தோற்றத்துடன் இருப்பதன் மூலம் தேவையில்லாமல் எழும் சந்தேகங்களை தவிர்க்க முடியும்.

நல்லவனாகவே இருந்தாலும் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் ‘அவனைப் பார்த்தாலே தெரியல’ அவன் கண்டிப்பாக தவறு செய்திருப்பான் என்றும், தவறே செய்திருந்தாலும் ‘அவனா! ச்சே அப்படி இருக்காது, அவன் செய்திருக்க மாட்டான்’ என்பது போன்ற பேச்சுகள் அவரவரின் வெளித்தோற்றத்தை அடிப்படையாக வைத்து எழுபவைதான். விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்றாலும், முதலில் ஒருவனைப் பற்றிய எண்ணங்கள் தோன்றுவதற்கு அவனுடைய தோற்றம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

தாடி வைத்திருந்தால் உனக்கு என்ன பிரச்சனை என்று விசாரிப்பது. தாடியை மழித்து, நேர்த்தியான உடையணிந்திருப்பவர்கள் பிரச்சனையற்றவராக கருதப்படுவதற்கு காரணம் தோற்றத்தை அடிப்படையாக வைத்து சிந்திப்பதே. மற்றவர் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துமளவுக்கு வெளித்தோற்றத்திற்கு சக்தியுள்ளது.

ஆன்மீகத்துறையிலும் இந்த வெளித்தோற்றம் என்பது மிக முக்கியமான விசயமாக மக்கள் கருதுகிறார்கள். ஒருவர் உண்மையான ஆன்மீக குருவாக, கடவுள் தன்மைமிக்கவராக மக்களால் கருதப்பட அவரின் தோற்றம் இன்றியமையாத ஒரு விசயமாக உள்ளது. துறவி என்றால் எப்படியிருப்பார்கள் என்ற ஒரு உருவ அமைப்பு மக்களின் மனதில் உள்ளது அதாவது துறவி என்றால் அனைத்தையும் துறந்திருக்க வேண்டும். எந்தவிதமான உடைமையுமற்றவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட தோற்றத்துடன் ஒரு ஆன்மீக குருவைக் கண்டால் அவர் ஒரு வேளை போலியான குருவாக இருந்தாலும் கூட உடனே அவர் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்பட்டு அவரை வழிபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய, அவர்களை ஆன்மீக பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய அளவுக்கு சக்தியை ஒரு ஆன்மீக குரு பெற்றிருந்தாலும் அவர் தோற்றத்தை பொருத்தவரையில், பழக்கவழக்கங்களை பொருத்த வரையில் செல்வந்தராக இருந்தால் -- அதாவது துறவி என்றால் எப்படி இருப்பார்கள் என்ற மக்களின் எண்ணத்திற்கு மாறாக இருந்தால் -- அவர் உண்மையான ஆன்மீக குருவாக இருந்தாலும் கூட அவரை மக்கள் முழுமனதுடன் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு வேலை அவரை ஏற்றுக் கொண்டாலும் அவரைப் பற்றிய சந்தேகங்கள் ஒருபுறம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கிறது. காரணம் அந்த ஆன்மீக குருக்களின் செல்வச் செழிப்பான தோற்றம், அவரின் மீதான நம்பகத்தன்மையை மக்களிடம் குறைக்கிறது. உதாரணமாக லட்சக் கணக்கான பக்தர்களை கொண்ட ஆன்மீக குருக்கள் நம் நாட்டில் அதிகமாக உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் ஷீரடி சாயிபாபா. நீங்கள் எப்போதாவது யாராவது ஒரு சாயிபாபா பக்தரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் தான் சாயிபாபா பக்தர் என்று உங்களிடம் வெளிப்படுத்தினால் உடனே தான் எந்த சாயிபாபாவை வணங்குகிறேன் என்ற சிறு விளக்கமும் தருவார். அந்த சிறு விளக்கத்திற்கு மிகப் பெரிய அளவில் அர்த்தம் உண்டு.

சமீபத்தில் ஒரு செய்தியில் திருப்பதிக்கு அடுத்ததாக காணிக்கை அதிகம் பெரும் கோவில் சீரடி சாய்பாபா கோவில்தான் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில் சீரடி சாயி பாபா என்ற பெயரை கேட்டதும் மனதில் பிராத்தனை செய்பவர்கள், அவரின் வழி நடப்பவர்கள், அவரை தங்கள் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் போன்றோரின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

சீரடி சாய்பாபாவின் மீது பக்தி கொண்டவர்களின் எண்ணிக்கை இன்றளவும் அதிகரித்து வருகிறது. தங்களின் பிரச்சனைகளை தீர்க்குமாறு தங்களுக்கு உதவுமாறு கண்ணீருடன் அவரின் கோவிலில் பிராத்தனை செய்கிறார்கள். சீரடி சாய் பாபா சமாதி நிலை அடைந்து பல வருடங்கள் ஆனாலும் அவரின் மீதான அன்பு இன்றளவும் குறையவே இல்லை. சாயிபாபா மீது அன்புகொண்ட மக்கள் அவரின் புகைப்படம் மற்றும் அவரின் கோவில்களில் அவரைக்கண்டு சந்தோஷப்படும் மக்கள். அவரை மீண்டும் நேரில் கண்டால், அதாவது மீண்டும் உயிரோடு அவர் வந்தால் அவர்கள் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் அவர்களுக்கு வேறு என்ன சந்தோசம் இருக்கிறது அவரை மீண்டும் காண்பதைவிட.

ஆனால் அப்படி நடக்கவில்லை, இதோ சத்யசாய் பாபா தன்னை சீரடி பாபாவின் அவதாரம் என்கிறார் ஆனால் சீரடி சாய் பக்தர்களிடம் மீண்டும் அவரை உயிரோடு கண்ட சந்தோஷம் இல்லை. ஒரு சிலையாக சீரடி சாய்பாபாவை பார்க்கும் போது ஏற்படும் சந்தோசம் கூட சத்ய சாய்பாபாவை உயிரோடு பாக்கும் போது அவர்களுக்கு ஏற்படுவதில்லை. கிட்டத்தட்ட இருவேறு மதத்தினர் போல் சத்ய சாய் பக்தர்கள் சீரடி சாய் பக்தர்கள் என உருவாகி உள்ளனர். ஏன் இப்படி நடந்தது ஒருவர் உயிரோடு மீண்டும் வந்த பிறகும் அவரின் மீது அன்பு, பக்தி கொள்ளாமல் அவரின் முந்தைய அவதாரமான சிலையை மட்டும் வணங்குவோம் என்று இருக்க காரணம் என்ன? சத்ய சாய்பாபாவை ஏன் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்? தோற்றம் தான் முதல் காரணம். அதாவது ஒரு துறவி எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் மனதில் உருவாகியிருந்த தோற்றத்திற்கு ஏற்றபடி சீரடி சாயி இருந்தார். அவரை முழுமையாக அறிந்தவர்கள் சத்ய சாய்யின் வாழ்க்கை முறையை கண்டு அதிர்ச்சியடைந்து இன்றளவும் சீரடி சாய்பாபாவையே அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். சத்யசாய் பாபாவின் பக்தர்கள் சீரடி சாய்பாபாவை வணங்குவார்கள் ஆனால் சீரடி சாய்பாபாவின் பெரும்பாலான பக்தர்கள் சத்யசாய் பாபாவை வணங்குவதில்லை.

எனவே வெளித்தோற்றம் என்பது விளையாட்டு விசயம் அல்ல, உங்களின் பல முயற்சிகளில் உங்களின் வெளித்தோற்றம், நீங்கள் வெற்றியடையவும் தோல்வியடையவும் உங்களுக்கு தெரியாமலேயே காரணமாக அமைந்திருக்கும். நேரடி தேர்விற்கு செல்பவர்கள் அதிகமாக இந்த விசயத்தில் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</