வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


களம்

பூபதி  

பயணிகள் கவனத்திற்கு வண்டி எண் 2680 கோயம்புத்தூரில் இருந்து சென்னை வரை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 6 மணி 25 நிமிடத்திற்கு தடம் இரண்டில் இருந்து புறப்படும். Your attention please, train number 2680 …. கோயம்புத்தூரில் இருந்துதான் வண்டி புறப்படுகிறது என்பதால், எப்படியும் உட்கார இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் என்னைப்போல பல நபர்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்யாமல், முன்பதிவு செய்யாதவர்களுக்கான பெட்டி இருக்க வேண்டிய இடம் நோக்கி வேக வேகமாக வந்துகொண்டிருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட தடத்தில் இன்னும் ரயில் தன் தடம் பதிக்கவில்லை. அனைவரும் காத்திருக்கிறோம். யாரையும் யாருக்கும் தெரியாது, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் நிற்பது!, அதிகாலை நேரத்தில் புறப்பட்டு வந்ததால் அனைவரின் முகத்திலும் ஒவ்வாத ஒப்பனைகள். தண்டவாளத்தில் கிடந்த மலத்தையும், மக்கிய குப்பைகளையும் பார்த்துக்கொண்டிருந்த வேலையில், கூட்டத்தினுள் சிறு சலசலப்பு இன்னும் முன்னாடி போ, நீ இங்கேயே இரு, இந்த கர்ச்சீப்பை சீட்டில் போடு... பாதி தூக்கத்தில் நடந்துவரும் சிறு பையன்போல மெல்ல நகர்ந்து வந்துகொண்டிருந்தது ரயில். அடித்துப்பிடித்து அங்கிருந்த அனைவரும் ஏறியாகிவிட்டது. சிறிது நேரத்தில் பெட்டி நிரம்பிவிட்டது. இதற்குமேல் உட்கார யாருக்கும் இடமில்லை. தாமதமாக வரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக ஒரு சிலர் உட்காரும் இடத்தில் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை வைத்து இடம்பிடித்திருந்தார்கள். இடம் இருக்கிறதா என தேடிவரும் நபர்களிடம், இங்க ஆள் வருவாங்க என்று கூறிக்கொண்டிருந்தனர். அந்த பக்கம் வந்த பலர் அப்படியா என கேட்டு அடுத்த பக்கம் நகர்ந்துகொண்டிருக்க, ஒரு சிலர் மட்டும் இது பொதுப்பெட்டிதானே இங்க எப்படி நீங்க இடம் பிடிக்கலாம் என்று விவாதத்தில் ஈடுபட, இடம் தேடி வந்தவர்களுக்கு பதில் சொல்லி சொல்லி அதிகரித்த கோபத்தை அடுத்தவர்களிடம் காட்ட இயலாமல் வர வேண்டிய நபர்களை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டிருந்தார்கள். வந்துதொலைய வேண்டியதுதானே, முன்னாடி வந்து இவங்களுக்கு இடம் பிடித்து வைத்தால் இப்படித்தான் ஆடி அசைந்து வருவார்கள் என புலம்பிக்கொண்டு ஜன்னல் வழியாக வருகிறார்களா என குனிந்து பார்த்தால், தன்னைத்தான் அழைக்கிறார்களோ என்ற ஆர்வத்தில் காஃபி கேண்டுமா என காஃபி விற்பபவர் ஜன்னலை மறைத்துக்கொண்டு கேட்க, பதில் ஏதும் கூறாமல் பக்கவாட்டில் திரும்பிக்கொண்டனர் பயணிகள். இப்படிப்பட்ட அனுபவங்களை அடிக்கடி சந்திப்பதால் சலனமில்லாமல் அங்கிருந்து அகன்றார் காஃபி விற்பவர்.

நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்து உள்ளே வருபவர்கள் உட்காருவதற்கு இடமில்லை என்பதை புரிந்துகொண்டு இருந்த இடங்களில் நின்றுகொள்ள ஆரம்பித்தார்கள். கொண்டை போடப்பட்ட தலையுடன், சற்று குண்டான உருவத்தில், அடித்துவிடுவாரோ என்ற அச்சத்து உண்டாக்கும்படியான பெண் ஒருவர் உள்ளே வந்து உட்கார்ந்துகொள்ள இடம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தார், மனிதனுக்கு மாற்றாக பொருள் வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் கொஞ்சம் இத எடுங்க நான் உட்காரனும் என்றார், அதெல்லாம் எடுக்க முடியாது அங்க ஆள் வருவாங்க என்ற வழக்கமான பதிலை அங்கிருந்தவர்கள் சொல்ல, ஆள் வருவாங்கனா யார் வருவாங்க, அதப்பத்தி உங்கிட்ட எதுக்கு சொல்லனும் அதான் ஆள் வருவாங்னு சொல்றோம்ல... வார்த்தைகள் வரம்பை மீற வம்புச்சண்டை ஆரம்பமானது. அருகில் இருந்தவர்களின் அறிவுரைப்படி சமாதன ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த பெண்மனியும் சரி யார்தான் வருகிறார்கள் என்று பார்க்கிறேன் என்று வீம்பாக அங்கேயே நின்றுகொண்டிருந்தார். ஏற்கனவே கொந்தளித்துபோய் கோபத்தில் இருந்தவர்களை மேலும் கொதிப்படையச்செய்யும் விதமாக, இருந்த கொஞ்ச இடத்திலும் காஃபி காஃபி, இட்லி வடா இட்லி வடா என விற்பனையாளர்கள் வந்துபோய்க் கொண்டிருந்தார்கள். 6 மணி 25 நிமிடத்திற்கு வண்டியை கிளப்பி, சொன்ன நேரத்திற்கு நாங்க வாரமல் இருக்கலாம் ஆனால் சொன்ன நேரத்தில் கிளம்பிவிடுவோம் என்பதை சொல்லாமல் சொன்னார்கள் ரயில்வே துறையினர். அங்கிருந்தவர்கள் சொன்னபடி புதிதாக யாரும் வரவில்லை, அதற்காகவே காத்திருண்த அந்த பெண், இதோ வண்டி கிளம்பிவிட்டது இனி யாரு வருவாங்க, ஏன் இப்படி பொய் சொல்லி பொழைக்கிற, வாயில நல்ல வந்துடும் பாத்துக்கோ என்று கோபத்தில் கொந்தளித்துவிட்டார். இதற்குமேல் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள், நீ அநாகரீகமாக பேசியதால்தான் இடம் கொடுக்க வில்லை என்று சமாளித்துக்கொண்டிருக்கும்போதே அந்த பொருளை கீழே தூக்கி வைத்துவிட்டு அங்கே அமர்ந்து வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் வரவேற்று வெளியே அனுப்பிக்கொண்டிருந்தார். இங்க ஆள் வருவார்கள் என்று சொன்னதும் அப்படியா என கேட்டு அருகில் நின்றுகொண்ட மனிதர்கள் அந்த பெண்மனியை அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டு நின்றார்கள். யோசித்துப் பார்த்தேன் அந்த பெண்ணின் நிலமையில் நானாக இருந்தால் என்ன செய்திருப்பேன் போராடி இடம் பிடித்திருப்பேனா அல்லது அப்படியா என கேட்டுவிட்டு அருகே நின்றிருப்பேனா! நிச்சயமாக நான் போராட வாய்ப்பில்லை. ஒதுங்கித்தான் நின்றிருப்பேன். இப்படி ஒதுங்கி நிற்பது நாகரீகமா! அல்லது கையாலாகாதத்தனமா! ச்சே ச்சே இப்படி ஒதுங்கி நிற்பது நிச்சயம் நாகரீகம்தான். இதெற்கெல்லாம் போய் யாராவது இப்படி சண்டை போடுவாங்களா என்று என்னை நான் சமாதானப்படுத்திக்கொண்டாலும் நிச்சயம் அது கையாளாகாதத்தனம்தான்.

மனதில் தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தும் அந்த பெண்ணை அநாகரீகமானவராக அங்கிருப்பவர்கள் நினைத்தாலும், எது சரி என்று பட்டதோ அதை அப்படியே வெளிப்படுத்திவிட்டு அலட்டிக்காமல் இருந்த அந்த பெண்மணி மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல் சாதாரணமாக இருந்தார். ஆனால் பார்ப்பதற்கு நாகரீகமாக உடை அணிந்துகொண்டு, மனதில் தோண்றிய ஒரு விசயம் சரியாக இருந்தாலும்கூட அதை செய்ய துணிவில்லாமல் நாகரீகம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு நடித்த மற்றவர்களின் மனநிலை மிகவும் பாதிபிற்குள்ளானதாக இருந்தது. எங்காவது உட்கார இடம் கிடைக்குமா என தேடிக்கொண்டு, நின்றுகொண்டே பயணம் செய்ய வேண்டுமே என்று புலம்பிக்கொண்டு ஒரு நிம்மதியற்ற பயணத்தை அவர்கள் மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. இதை நான் பல முறை அனுபவித்திருக்கிறேன். என்னைப்போன்ற நாகரீகத்திற்காக நடிக்கும் மனிதர்களால் நிம்மதியாக வாழ முடிவதில்லை. சில சமயங்களில் என்னை கடுப்பாக்கிய மனிதனுடன் நான் கைகுழுக்க வேண்டியிருக்கிறது. அவர்மீதுள்ள கோபத்தை அப்படியே அடக்கிக்கொண்டு, அருகில் இருக்கும் அவரைப்பார்த்து ஆமா சார், உண்மைதான், ஆமா ஆமா, சரிதான் என்று தலையையும் தன்மானத்தையும் ஆடிக்கொண்டிருக்க வேண்டிய அவல வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. இந்த அவல வாழ்க்கையால் ஏற்படும் மன அழுத்தமானது, நிம்மதிக்கு காரணமான அனைத்தையும் அழித்துவிடுகிறது. மனதில் மட்டும் இப்படி திட்டிக்கொண்டு, வெளியில் கஷ்டப்பட்டு சிரித்து மன அழுத்தத்தை உண்டாக்கிக் கொள்வதைவிட அந்த நபரை வெளிப்படையாக திட்டியே இருக்கலாம் என்று பல நேரங்களில் தோன்றும். ஆனாலும் அதை வெளிக்காட்ட விடாமல் நாகரீகம், நல்ல பெயர், சூழ்நிலை என்ற கட்டுப்பாடுகள் என்னை கட்டிப்போட்டுவிடும். வெளிப்படையாக நடந்துகொள்ளத்தெரியாமல், கோபம் கொள்ளாமல் இருப்பது எப்படி என்ற விசயங்களில் கவனம் செல்லுத்தி காலத்தை வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்.

அப்படியானால் சூழ்நிலைக்கு கட்டுப்பட்டு சுய சிந்தனைகளை மனதினுள் சுருட்டி வைத்துக்கொள்வதுதான் நாகரீகமா! நாகரீகமானவர்கள் தங்களுக்கு ஏற்படும் கோபத்தை வெளிக்காட்ட மாட்டார்களா! நிச்சயம் வெளிக்காட்டுவார்கள். ஆனால் இப்படி எல்லா இடத்திலும் வீரத்தை காட்ட மாட்டார்கள். அது தேவையில்லாமல், பிரச்சனையில் தொடர்பு கொள்ளாதவர்களுக்கும் தொல்லையாக அமைந்துவிடும். எனவே நாகரீகமானவர்கள் வீரம் காட்டுவதற்கென்று தனிப்பட்ட ஒரு களம் அமைத்திருக்கிறார்கள். அங்கு கோழைத்தனமான சிந்தனையோ, மன்னிக்கும் மனநிலையோ எங்கும் காண முடியாது. அந்த களத்தில் இறங்கும் நாகரீகமான வீரர்கள் மிகவும் வெளிப்படையானவர்கள். நம்மைப்பற்றி இந்த சமுதாயம் என்ன நினைக்கும்! நம்மை மனித இனமா என்று ஐயம் கொள்வார்களோ என்ற சந்தேகமோ, சங்கடமோ இல்லாதவர்கள். ஒருவரை திட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பக்கத்தில் இருப்பவர் என்ன நினைப்பார், நம்மைப்பற்றி இதுவரை உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எந்த கவலையுமில்லாமல் மனதில் உள்ளதை மறைக்காமல் நூறு சதவீத குணத்தையும் வெளிப்படுத்துவார்கள்.

படித்த மிக நாகரீகமான உடையணிந்தவர்கள் கலந்துகொள்ளும் களம் அது. அன்று ஏதோ அலுவலகம் தொடர்பான பிரச்சனை என்று நினைக்கிறேன். என்ன பிரச்சனை, எப்படிப்பட்ட பிரச்சனை, யார் மீது தவறு என்றெல்லாம் எனக்கு தெரியாது. எதேச்சையாக வீரம் காட்டும் களத்திற்கு சென்று விட்டேன். பிரச்சனையில் பாதிக்கப்பட்டவராக தெரிந்தவர் தன் வீரத்தை காட்டிக்கொண்டிருந்தார். பிரச்சனையில் தொடர்புடைய மற்றொருவரை ன், த், ம், என மெய்யெழுத்துக்களுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கும் கெட்ட வார்த்தைகளால் வெளிப்படையாக திட்டிக்கொண்டிருந்தார். மேனேஜர்னா நீ பெரியா ................ அதிர்ச்சியாக இருந்தது. அதேசமயத்தில் என்ன ஒரு வெளிப்படையான செயல் என்று ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படி கட்டுரையில் எழுதிக்காட்டிவிட முடியாத வெளிப்பாடையான வீரமிக்க செயல்பாடுகள் அந்த களத்தில் நடப்பதுண்டு. நாகரீகம் என்ற பெயரில் நடிக்காமல் மனதில் பட்டதை இப்படி பட்டென போட்டு உடைத்துவிடுவதினால் மனதினுள் மேலும் மனச்சிக்கல் ஏற்படுவதை தடுக்க முடியும். நான் இப்படி பாதிக்கப்பட்டவனாக இருந்தால், குறைந்தபட்சம் என்னால் இந்தமாதிரியாவது வெளிப்படையாக நடந்துகொள்ள முடியுமா என்று யோசித்தேன். ம்ஹும் நிச்சயமாக முடியாது இப்படி ஒரு வெளிப்படையான சிந்தனையும், செயலும் என்னிடமிருந்து வெளிப்பட வாய்ப்பே இல்லை. ஒரு வகையில் மனதில் தோன்றிய விசயங்களை என்னைப்போல் அடக்கி வைத்துக்கொண்டு அவதிப்படாமல் வெளிப்படுத்தி விடுவது நல்லதுதான். இதோ நான் உங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஒரு நாகரீகமானவர் கையில் எழுதுவதற்கு எதையோ எடுத்துக்கொண்டு களத்திற்கு வருகிறார். கோபத்தை வெளிப்படுத்திவிடுவது நல்ல விசயம்தான் ஆனால் இப்படியே தொடர்ந்தால் கழிவறையின் அந்த நான்கு சுவர்களும் நாறிப்போய்விடாதா!

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</