வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

இந்த கூட்டில் நான் இடும் முட்டை எப்படிப்பட்டதாக இருக்கும்!
எனக்கு
தெரியாத இலக்கியங்களை தெரிந்துகொள்வதற்காகவும்,
புரியாத சமுதாய நிகழ்வுகளை புரிந்துகொள்வதற்காகவும்,
நான் எடுக்கும் சிறு முயற்சியாக இருக்கும்.

எழுத்துலகில் தவழ்ந்துவரும் மழலை நான், தவறு இருந்தால் மன்னிக்கவும்.

இந்த பயணத்தில் இல்லா நெற்றிக்கண்ணை நான் திறக்க முற்பட்டால் நன்நெறி கூற நக்கீரர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில்!!
- பூபதி

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
என் பேனாவின் கால் தடங்கள் ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


அக்கரையுள்ள அரசும், அறிவற்ற மக்களும்

பூபதி  

மக்களை திருத்துவதும், மலையை நகர்த்துவதும் ஒன்றுதான். சில விசயங்களை பார்த்து இந்த மக்கள் திருந்தவே மாட்டார்களா எனப் புலம்பும் நமக்கே இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, மக்களை திருத்தி நல்வழிப்படுத்துவதையே கடமையாகக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் நிலமையை நினைத்தால் பரிதாபம் ஏற்படுகிறது. எப்படி இது போன்ற நிகழ்வுகளை சகித்துக்கொண்டு, நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.

செம்மொழிக்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எங்கள் ஊரில் வேலைக்கு செல்லும் நேரத்தில் ஒரு நண்பரை சந்திப்பதற்காக அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஏன் இவ்வளவு கூட்டம் பேருந்துகள் வரவில்லையா! ஏதேனும் பிரச்சனையா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே பளபளப்பாக புதியதாக, முழுமையாக ஒரு பேருந்து வந்து நின்றது. நின்றது, நின்றது அப்படியே நின்றுகொண்டே இருந்தது. வானத்தில் இருந்து பறந்துவந்து மின்னல் வேகத்தில் தன் இரையை கொத்திச் செல்லும் பருந்து போல, பயணிகள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே புறப்படும் பேருந்துகளுக்கு மத்தியில் ஒரு பேருந்து தொடர்ந்து சில நிமிடங்கள் நின்று கொண்டே இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆச்சரியத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக காத்திருந்த மக்கள் யாரும் அந்த பேருந்தில் ஏறவில்லை! காரணம் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் போது அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. சற்று நேரம் கழித்து மீண்டும் ஒரு புதிய பேருந்து வந்தது, நின்றது யாரும் ஏறவில்லை இப்படி மூன்று பேருந்துகள் கடந்து சென்றன. நான்காவதாக ஒரு பழமையான பேருந்து என கருதப்படும்படியாக இருக்கும் வழக்கமான பேருந்து வந்து கொண்டிருந்தது, வரும் போதே அதிகமான மக்களை ஏற்றிக்கொண்டு வந்து நின்றது. அந்த பேருந்தை கண்டதுதான் தாமதம் தாயைக்கண்ட குழந்தைபோல அங்கிருந்த அனைவரும் ஓடிச்சென்று அந்த பேருந்தில் ஏறத்தொடங்கினார்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மக்கள் ஏறிக்கொண்டிருக்கும்போதே பேருந்து மெல்ல நகரத்தொடங்கியது. முன்புறம் பெண்கள் படியில் தொங்க, பின்புறம் ஆண்கள் படியில் தொங்க, நன்றாக சாப்பிட்ட மலைப்பாம்பு போல முக்கிக்கொண்டு முன்னேறியது அந்த பேருந்து.

ஏன் இப்படி படியில் தொங்கிக் கொண்டு செல்கிறார்கள்! ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் என்னாவது? விபரீதம் நடந்த பின் ஓட்டுனர் அல்லது நடத்துனரை குறை சொல்லி ஆகப்போவதென்ன? கொஞ்ச நாளைக்கு முன்பு மாணவர் கூட்டம் ஒன்று இது போன்று தொங்கிக் கொண்டு செல்லும் போது பேருந்து சிறு குழியில் இறங்கி ஏறியதில் கையில் வைத்திருந்த புத்தக பையை ஒருவன் தவறவிட்டுவிட, என்ன செய்வதென்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பேருந்து வெகு தொலைவிற்கு சென்று விட்டது. அவன் யோசிப்பதை பிரதிபலிக்கும் விதமாக அந்த புத்தகப்பை அநாதையாக சாலையில் கிடந்தது. தொங்கிக் கொண்டு சென்று ஏன் இப்படி சிரமப்பட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே இதைத் தடுக்க அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று நினைவில் ஓடத்தொடங்கியது.

1. ஒரு சமயத்தில் காவலர்கள் தங்கள் கையில் இருந்த லத்தியால் அடித்து பேருந்தில் தொங்கிச் செல்பவர்களை கீழே இறக்கிவிட்டு எச்சரிக்கை செய்து அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.
2. கொஞ்சகாலமாக பேருந்து நடத்துநர்களை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்கள்
3. மிகச்சமீப காலமாக தொங்கிக் கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளார்கள்
4. தற்போது பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார்கள்.


இதில் எந்த நடவடிக்கைகளுக்கும் மக்கள் அசைந்துகொடுக்காததற்கு காரணம் என்ன? ஏன் மக்கள் இப்படி தொங்கிக்கொண்டு செல்கிறார்கள்? குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு வரும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதே இதற்கு காரணம் என்று காரணம் கூறுகிறார்கள். அந்தக் குறையை சரி செய்வதற்குத்தான் அரசு பல புதிய பேருந்துகளை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறதே என்று கேட்டால், அந்த பேருந்துகளில் வழக்கமாக வாங்கப்படும் கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு அதிகமாக வாங்குகிறார்கள் எனவே அந்த பேருந்துகளை பயன்படுத்த இயலாது என்கிறார்கள்.

இதென்ன அநியாயம்? இதுவரை ஓடிக்கொண்டிருந்தவைகளை பேருந்து என்று சொல்ல இயலுமா, மாடு இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த மாட்டு வண்டிகள் அவை. எப்போது எங்கு விபத்து நடக்கும் என்ற சந்தேகத்திலேயே ஓடும் வாகனங்கள் அவை. படிக்கட்டில் தொங்கிச்செல்லும் போது படிக்கட்டு உடைந்து பலபேர்கள் இறந்திருக்கிறார்கள். எனவே சேதத்தை விரும்பாதவர்கள் செலவைப்பற்றி கவலைப் படக்கூடாது. ஓடும் போது வாகனம் பாதிக்கப்பட்டது போன்ற சத்தம் கேட்காமல், உடைந்து போய் மீண்டும் ஒட்டவைக்கப்பட்ட படிக்கட்டுக்கள் இல்லாமல், அடிக்கடி பஞ்சராகிவிடாத சக்கரங்களைக்கொண்டுள்ள, விபத்து நேரிட வாய்ப்பில்லாத, சரியாக பிரேக் பிடிக்கக்கூடிய முழுமையான ஒரு பேருந்தில் செல்லும் போது சற்று கட்டணம் அதிகமாகத்தானே இருக்கும்! இப்படிப்பட்ட ஒரு முழுமையான பேருந்தை கனவில் கூட நினைத்துப்பார்க்காத மக்கள், அதிலும் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமான சிந்தனை?. மக்களையும் குறை சொல்ல வாய்ப்பில்லை காரணம் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்தும் இலவசமாக கிடைக்கும் போது இதிலும் நமக்கு சலுகையில் கிடைக்காதா என எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். எதிர்பார்ப்பதில் தவறில்லை அதற்கு ஒரு நேரம் காலம் வேண்டாமா? ஐந்து வருடம் முடிந்து தேர்தல் ஆரம்பிக்கும் நேரத்தில் இப்படி ஒரு கோரிக்கை வைத்தால் நிச்சயம் செய்வார்கள். அதை விட்டு விட்டு நேரம் கெட்ட நேரத்தில் கேட்டால் நடக்குமா?

தினமும் கூலிவேலைக்கு சென்று ஐம்பது ரூபாய் அறுபது ரூபாய் சம்பாதிக்கும் நபர்கள் பத்து ரூபாய் இருபது ரூபாய் கொடுத்து பேருந்தில் பயணம் செய்தால் என்ன கெட்டு விடப்போகிறது! பேருந்துக்கே இவ்வளவு செலவா! அப்படியானால் நாங்கள் எப்படி குடும்பம் நடத்துவது! அதற்குத்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறார்கள் அல்லவா பின்பு என்ன குறை வந்துவிடப்போகிறது?

மக்களின் இந்த குறை அமைச்சரை சென்றடைந்ததும், இது தேர்தல் நேரமாக இல்லாவிட்டாலும், அரசிற்கு ஏற்படும் இழப்பையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலன் கருதி அமைச்சர் ஒரு அறிக்கை விட்டார். ஓடிக்கொண்டிருக்கும் நூற்றி ஐம்பது பேருந்துகளில் நூறு பேருந்துகளில் மட்டுமே புதிய கட்டணம் வசூலிக்கப்படும் மீதி ஐம்பது பேருந்துகளில் எப்போதும்போல் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்று சொன்னார். ஆனாலும் அடங்காத, அறிவில்லாத மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் புதிய பேருந்துகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருக்கிறது எது புதிய கட்டணத்திற்கு உரியது, எது பழைய கட்டணத்தில் ஓடும் பேருந்து என வித்தியாசம் தெரியவில்லை, அனைத்து பேருந்துகளிலும் புதிய கட்டணமே வசூலிக்கிறார்கள் என்று சொன்னால், பாவம் அந்த அமைச்சர் இதற்குமேல் என்ன தான் செய்துவிட முடியும்!

வாரிவிட்ட தலைமுடி கலையாமல், சட்டை கசங்காமல் பயணிக்க விரும்பும் படித்த, நாகரிகமான ஒரு சில நபர்கள் மட்டும் புதிய பேருந்தில் செலவு பற்றி கவலைப்படாமல் செல்கிறார்கள். இந்த ஒரு சிலருக்காக மட்டும் பேருந்து ஓடிக்கொண்டிருந்தால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும். அதனால் பாதிக்கப்படப்போவது யார் நாம் தானே? இது ஏன் இந்த அடித்தட்டு மக்களுக்கு புரிவதில்லை?

ஓடிக்கொண்டிருந்த பழைய மாதிரியான பேருந்துகளைப் போலவே புதிய பேருந்துகளை கொண்டுவந்தால் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும்? எனவே மக்களின் வாழ்க்கைத்தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லவே புதிய நவீன வகையான பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது கொஞ்சம் செலவு அதிகமாகத்தான் இருக்கும்.

மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப எங்களால் இறங்கி வர இயலாது, எங்களின் உயர்வான வாழ்க்கைத்தரத்திற்கு ஏற்ப நீங்கள் மேலே வாருங்கள் என அழைக்கும் அரசியல்வாதிகளின் கரங்களை மக்கள் எப்போது பிடிப்பார்கள் என அக்கரையுள்ள அரசுடன் சேர்ந்து ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</