வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


டி. ஜி. லிங்கப்பா

பி.ஜி.எஸ். மணியன்  

பழைய திரைப்பட பாடல்களை வானொலியின் திரைகானங்களிலோ பண்பலை வரிசைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளில் பழைய பாடல்கள் நிகழ்ச்சிகளிலோ தினம் ஒரு முறையாவது பி. சுசீலா "அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ" என்று தன்னுடைய குளுமை நிறைந்த குரலில் அழைக்க தவறமாட்டார்.

அந்த இனியபாடலுக்கு இசை அமைத்தவர்தான் டி.ஜி. லிங்கப்பா. அவரது தந்தையும் ஒரு இசை அமைப்பாளர்தான்.

பிரபல இசை அமைப்பாளர் டி. கோவிந்தராஜுலு நாயுடுவின் மகன் தான் டி. ஜி. லிங்கப்பா..
இவரது தந்தை டி. கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் இசை அமைப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள்:

1. மாய மனிதன்.
2. அந்தமான் கைதி (எம்ஜியார் நடித்த படம்)
3. மனிதனும் மிருகமும்
4. ராஜ பக்தி
5. கள்வனின் காதலி (சிவாஜி - பானுமதி)
6. நம் நாடு (பழைய படம்.)
7. பாக்தாத் திருடன் (எம்ஜீயார்-வைஜயந்திமாலா)
8. பத்தரை மாத்து தங்கம்.
9. சாந்த சக்குபாய்
10. வேடன் கண்ணப்பா.

தந்தையே ஒரு இசை அமைப்பாளராக இருந்த காரணத்தால் டி.ஜி. லிங்கப்பா அவரது தந்தையிடமே இசைபயிற்சி பெற்றார்.

திருச்சி சின்ன கண்ணம்மாள் வீதியில் இந்த குடும்பம் தங்கி இருந்தது. அங்குதான் எம். கே.. தியாகராஜ பாகவதர் அடிக்கடி பாடிக்கொண்டு இருந்தார். அந்த நாட்களில் எம்.கே. தியாகராஜ பாகவதரின் நாடகங்களுக்கு டி. கோவிந்தராஜுலு ஹார்மோனியம் வாசித்து வந்தார். மிகச் சிறந்த இசை வல்லுனரான கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் தான் தமிழ் இசை வித்தகி கே. பி. சுந்தராம்பாளுக்கு இசைப் பயிற்சி அளித்தவரும் கூட.

அதன் பிறகு பின்னாட்களில்...

இசைக் கருவிகளையும் கிராமபோன் ரிக்கார்டுகளையும் விற்பனை செய்து வந்தார் அவர். ஆனால் அந்த வியாபாரம் அவர் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அவருக்கு அளிக்கவில்லை. அதனால் அவர் கண்ட ஒரே பயன் அவரது மகனான லிங்கப்பா பலதரப்பட்ட வாத்தியங்களையும் லாகவமாக கையாளும் தேர்ச்சியை பெற்றதுதான்.

வாழ்வில் பசுமையை தேடி 1940௦ஆம் ஆண்டு கோவிந்தராஜுலு நாயுடு திருச்சியை விட்டு இடம் பெயர்ந்து சென்னைக்கு வந்தார்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னைப் பட்டினம் அவரை குடும்பத்துடன் இருகரம் நீட்டி வரவேற்றது.

சிகரம் தொடுவோம்...



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</