வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. நேர்காணல்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

தொடர் பற்றி

கவிஞர் விக்ரமாதித்தன் நம்பி.. தமிழின் மிக முக்கியமான ஆளுமை.. எப்போதும் விக்ரமாதித்தன் ஒருவரை கவிஞர் என்று அங்கீகரித்தால் அவரது கவிதை சக்தி வாய்ந்த சொல்லாடல்களின் கூடலாக இருக்கும். எப்போது விக்ரமாதித்தன் நம்மை கவிஞர் என்று சொல்லுவாரோ என்று பல பெருங்கவிகள் ஏங்கியக் காலங்கள் கூட உண்டு... இப்போதும் தொடர்ந்து நல்ல கவிதைகளை அடையாளம் கண்டு அதனை ஊரறிய செய்து வருகிறார் விக்ரமாதித்தன். அந்த வகையில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒரு கவிஞரின் சில கவிதைகளை எடுத்துக் கொண்டு அது பற்றி விவாதிக்க இருக்கிறார்.

 

 

 

 

 
     
     
     
   
அரும் பெறல் மரபின் கரும்பு இவண்...
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண:

விக்ரமாதித்தன் நம்பி

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
   
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அரும் பெறல் மரபின் கரும்பு இவண்... தொடர்கள் வாயில்


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - தூரன் குணா

விக்ரமாதித்தன் நம்பி  

திரும்ப முடியாத காட்டின் ராஜா

புள்ளினமும் பூக்களும் அடர்நிழலும்
வதியும் காட்டில்
சதா அலைந்து திரியுமவன்
வயிற்றை உத்தேசித்து
விற்பனைப் பிரதிநிதியாகத் தன்னைப்
பணியமர்த்திக் கொண்டான் ஒரு நாள்
வணிகக் கட்டடங்களுக்கு நறுமணம்
சுமந்து சென்று முழு கேலிச் சித்திரமாகினான்
நல்ல உச்சி வெயிலில்
புராதனப் பெருமைவாய்ந்த பெருநகரத்தில்
துண்டு நிழலைத் தேடியலைந்து
தண்ணீர் பாக்கெட்டுகளில் தாகம்
தீர்த்துக்கொண்டான்
மேலிடத்திற்குப் பறவைமொழியில்
தின அறிக்கை சமர்ப்பித்து நன்றாக
வாங்கிக் கட்டிக் கொண்டான்
ஆடி நடுநீசியில் மிகுபோதையில் படுக்கையில் விழும்
அத்தனிக் காட்டு ராஜாவுக்கு
என்றும் காடு திரும்ப முடியாததாயிருந்தது.
-அகச்சேரன்

361 காலாண்டிதழ்
ஐப்பசி 2011

சிக்கித் தவித்தல்தான் விஷயம். முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப் பாலையென்பதோர் படிவங்கொள்ளும் எனும் சிலம்பின் வரிகள் மனசுள் ஒலிக்கின்றன. பொறியில் மாட்டிக்கொள்கிற எலிபோலவா மனிதவாழ்வு. கவிதை, எளிமையும் நேரடித்தன்மையுமாகத்தான் இருக்கிறது. இறுதி மூன்று வரிகளிலுள்ள குரூர ஏதார்த்தம்? திரும்ப முடியாமல் போவது என்ன கொடுமை, என்ன அவலம், எவ்வளவு வெப்புராளம், எவ்வளவு துயரம்.
சமகால வாழ்வை ஒரு ஓவியமாக்கியிருக்கிறார் கவிஞர். நவீன கவிதையில் வாழ்வியலைக்
கொண்டு வரும் கவிஞர்கள், சங்கக் கவிஞர்கள் போல என்றும் நின்று நிலைத்திருப்பார்கள்.
அகச்சேரன், இன்னும் உத்வேகத்துடன் எழுதுவாராக.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

</