வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


காணாமல் போன காளையைத் தேடி...1

பூபதி  

இது பங்குச் சந்தையில் ஆய்வு செய்து அறிவுரை கூறும் ஆய்வாளரின் கட்டுரை அல்ல, பங்குச் சந்தையில் வருத்தங்கள் பல சந்தித்த சக வாடிக்கையாளனின் சில அனுபவக் குறிப்புகள்.

வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த சீன ஜென் குரு ககுவான் எழுதிய 10 காளைகள் பற்றிய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தபோது பங்குச் சந்தையில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அப்படியே பிரதிபளிப்பதாக அமைந்திருந்தது. நானும், நான் மட்டுமல்ல பங்குச்சந்தையில் பயணிக்கும் அனைவரும் தேடிக்கொண்டிருப்பது காளையைத்தான். மானிடத்தேடலை, அதன் அனுபவத்தை விளக்கும் ககுவானின் கவிதைகள் அற்புதமாக இருந்தது அதில் ஒரு வாசகம் “தேடுவது காணாமல் போக காளையை. ஆனால், தேடுகிறவன் கண்டடைவது தன்னைத்தான். தன் சுயத்தைத்தான். பங்குச் சந்தையில் சிரத்தையுடன் காளையை தேடி அலைந்தவர்கள் நிச்சயம் இதை உணர்ந்திருப்பார்கள்.

”பங்குச்சந்தை” பலருக்கு இந்த வாசகம் புரியாத ஒன்று. ஒரு புறம் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்க மறுபுறம் பங்குச்சந்தை என்றால் என்ன? அதில் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? மாதம் எவ்வளவு பணம் வரும்? என்பது போன்ற கேள்விகளுடன் ஒரு குறிப்பிட்ட மக்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் விசயம் தெரிந்தவர்களுக்கு இது ஒரு நவீணமான தொழில் இது வழக்கமாக அவர்கள் செய்துவரும் தொழிலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. வழக்கமாக அவர்கள் செய்யும் தொழிலை செய்து கொண்டே பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடிகிறது என்பது இதன் தனிச்சிறப்பு. இந்த தொடர் பங்குச்சந்தை என்றால் என்ன என்பவர்களுக்கானது அல்ல, பங்குச்சந்தையை பழகிய, அதன் மூலம் தங்களை பாழ்படுத்திக் கொண்டவர்களுக்கானது.

காளையை நான் கண்டுகொண்ட விதம்:

நான் பங்குச் சந்தை துறையில் வேலைக்கு சேர்ந்த போது, பங்குச்சந்தை என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது. என்ன பேசிக்கொள்கின்றனர் என்றும் புரியாது. வேறு வேலை கிடைக்கும் வரை இந்த தொழிலில் இருப்போம் என்ற சிந்தனையுடந்தான் இந்த துறைக்கு வந்தேன். அதனால் அந்த தொழிலைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வமில்லாமல் காலம் கடத்திக்கொண்டிருந்தேன். நான் என்ன தொழிலில் இருக்கின்றேன் அதன் தாக்கம் மக்களிடம் எப்படி இருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. விருப்பமில்லாமல் இந்த வேலைக்கு வந்துவிட்டதால் வேறு வேலைகளை தேடுவதில்தான் அதிக அக்கரை கொண்டிருந்தேன். வேலை தேடிக்கொண்டிருந்த சமயங்களில் பழைய நண்பர்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தேன், பணியில் சேர்ந்து கொஞ்ச நாட்களுக்குப்பிறகுதான் என் பழைய நன்பர்களை சந்தித்தேன். ஒருவரோடு ஒருவர் வழக்கமாக கேட்டுக்கொள்ளும் கேள்விகளை பறிமாறிக்கொண்டிருந்தபோது, இப்போது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறாய் என்ற அவர்களின் கேள்விக்கு, பங்குச்சந்தை துறையில் இருக்கிறேன் என்று துக்கமாகத்தான் பதிலளித்தேன். ஆனால் அதை கேட்ட அவர்கள் ஆச்சரியத்தில் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது எந்த பங்குகளை வாங்காலம்? எந்த பங்குகள் சிறப்பானதாக இருக்கும்? எதை எப்போது விற்கலாம்? தெரியாது என்று கொஞ்ச நாட்கள் பதில் கூறி சமாளித்துவந்தேன். அணைத்து நன்பர்களும் இப்படி கேள்விகளை கேட்கும்போதுதான், என்னைத்தவிர என் நன்பர்கள் அனைவரும் பங்குச்சந்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்ற விசயம் புரிந்தது. பங்குச்சந்தையில் நல்ல இலாபம் சம்மாதித்துக்கொண்டிருப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு சில மாதங்களிலேயே அவர்கள் முதலீடு செய்த பணம் மூன்று மடங்கு அதிகரித்துவிட்ட அற்புதங்களையும் சொன்னார்கள். இதனால் அவர்கள் என்னை சந்திக்கும் போதெல்லம், என்னை சிந்திக்க வைக்கும்படியான பல கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். சரி எவ்வளவு நாளைக்குத்தான் தெரியாது தெரியாது என்று கூறிக்கொண்டே இருப்பது! அப்படிக்கூற எனக்கே சற்று கூச்சமாக இருந்ததால் அவர்களின் கேள்விகளுக்கான விடையை தேட ஆரம்பித்தேன்.

பங்குச்சந்தை என்றால் என்னவென்று பலரிடம் கேட்க ஆரம்பித்தேன். இதுதெரியாதா! மேல் நிலை வகுப்புப் பாடபுத்தகத்திலேயே பங்குச்சந்தை விபரங்கள் இருக்கின்றனவே என்றார்கள். அந்த புத்தங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன், பங்குச்சந்தை தொடர்பாக பலரிடம் பேச ஆரம்பித்தேன், குறிப்பிட்ட சில நாட்களிலேயே பங்குச்சந்தை என்ற ஒரு தொழில் படித்த பட்டதாரிகள் முதல் படிக்காத பாமர மக்கள்வரை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் கூட வீட்டில் இருந்தபடியே பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிக்கிறார்கள் என்ற விசயம் வியப்பாகத்தான் இருந்தது. ஊதுபத்தி உருவாக்கிக்கொண்டிருந்த பெண்கள் பங்குச்சந்தையில் பயணிக்கிறார்கள் என்ற விசயம் தெரியும்போது வியப்பில்லாமலா இருக்கும். பங்குச்சந்தையை பற்றி நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்த காலகட்டங்களிலேயே பல பெண்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இப்போது பெண்களின் பங்கு அபரிதமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

ஒன்றும் தெரியாத பாமரராக நான் எண்ணிக்கொண்டிருந்த பல நபர்கள் பங்கு வர்த்தகத்தை புள்ளிவிபரங்களுடன் தெரிந்து வைத்திருந்தார்கள். அவர்களுடன் பேச ஆரம்பித்த உடனேயே, இந்த பங்குகளை இந்த விலையில் வாங்கு, இந்த விலை வந்த உடன் விற்றுவிடு, இந்த இந்த துறை சார்ந்த பங்குகளை வாங்கிவிடாதே...என்று அவர்கள் சொல்லிக்கொண்டே போக, அவர்கள் சொல்லும் விசயத்தில் ஆர்வம் செல்லாமல் அவர்களிடம் ஆச்சரியமாக கேட்டேன், உங்களுக்கு எப்படி இவ்வளவு விபரங்கள் தெரிந்தது? எதை வாங்கலாம் எதை விற்கலாம் என்று எப்படி தீர்மானம் செய்கின்றீர்கள்? மிக சாதாரணமாக பதில் சொன்னார். நான் எதுவும் செய்வதில்லை மாதம் இவ்வளவு பணம் கட்டிவிட்டால் என் அலைபேசிக்கு குறுச்செய்தியாக தேவையான விசயங்கள் வந்து சேர்ந்துவிடும். அதை பயன்படுத்தி நான் பங்குவர்த்தகத்தில் பயணிக்கின்றேன் என்றார். அவர் குறுச்செய்தி என்று சொன்ன பிறகுதான் கவணித்தேன் பங்கு வர்த்தகத்தில் பயணிக்கின்ற அனைவருக்கும் இந்த குறுச்செய்தி மிக முக்கியமக விசயமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட கண்பார்வையற்ற ஒருவருக்கு தன் கையில் இருக்கும் குச்சி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இந்த குறுச்செய்தி. இது இல்லாமல் பங்குச்சந்தையில் பயணிக்க முடியாது. நான் பங்குச்சந்தை துறையில் இருபதால் நான் பணிபுரியும் நிறுவனத்தின் குறுச்செய்திகளை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளவும், அவர்களுக்கு வரும் குறுச்செய்திகளை எனக்கு அனுப்பவும் ஒருவருக்கொருவர் அலைபேசி எண்களை பறிமாறிக்கொண்டோம். ஒவ்வொரு நாள் விடிந்ததும் அலைபேசிகள் குறுச்செய்திகளால் அலரத்தொடங்கும். என் நன்பர்களிடமிருந்து தினமும் நீ அனுப்பிய குறுச்செய்தி மூலமாக இதை வாங்கினேன் இவ்வளவு இலாபம், இதை விற்றேன் இவ்வளவு இலாபம் என்று நற்செய்திகள் கேட்டுக்கொண்டிருக்க, நான் கவணம் செலுத்திய விசயம் வேறாக இருந்தது. என் நன்பர்கள் அனைவரும் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்தார்கள். ஆனால் நான் குறுச்செய்தி எப்படி வருகிறது, எப்படி உருவாகிறது என்பதை கற்றுக்கொள்வதில் குறியாக இருந்தேன். அதை தெரிந்துகொண்டால் நாமும் எந்த பங்குகளின் விலை ஏறும் இறங்கும் என்று கண்டுகொள்ள முடியுமே! அப்படி முடிந்தால் அது எவ்வளவு பெரிய விசயமாக இருக்கும்!.

இரண்டு கேள்விகள் என் தலையில் இடிபோல் இடித்துக்கொண்டே இருந்தது. 1. அந்த குறுச்செய்தியை யார் அனுப்புகிறார்கள்? 2. அவர்களுக்கு எப்படி குறிப்பிட்ட பங்கின் விலை ஏறும் அல்லது இறங்கு என்று தெரிகிறது? இந்த இரண்டு கேள்விகளோடு இரண்டு மூன்று மாதங்கள் கழிந்தது. தேடுங்கள் கிடைக்கும் என்ற வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக அந்த இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க தகுதியுள்ள மூன்று நபர்கள் எங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார்கள். அதில் முக்கியமான இரண்டு பேர் ஒருவர் பெயர் கனேஷ் மற்றொருவர் பெயர் சுகன்யா. இந்த இரண்டுபேரும் தான் என்னை பங்குச்சந்தை என்ற படகில் ஏற்றிவிட்டார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்கள் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன், Technical analysis என்றொறு படிப்பு உண்டு அதை படித்து தேறிவிட்டால் விலை ஏறும் பங்குகளை நம்மால் தேடிப்பிடிக்க முடியும் என்று கூறியதோடல்லாமல், அதற்கான விபரங்களையும் கொடுத்து தினமும் படித்துவரச்சொன்னார்கள். எந்த பங்குகளின் விலை ஏறும் என்பதை என்னாலும் கணிக்க முடியாமா என்ற ஆச்சரியமான கற்பனையே விரைவாக நான் Technical analysis பற்றி தெரிந்துகொள்ள காரணமாக அமைந்துவிட்டது. அதில் முக்கியமாக ஒரு பங்கின் வரை படத்தை பார்த்து என்னென்ன விசயங்களை கவணிக்க வேண்டும் என்பதையும், Moving average மற்றும் Candle stick போன்ற விசயங்களை கற்றுக்கொண்டேன். தினமும் கிடைக்கும் விலை தொடர்பான தரவுகளை ஒரு மென்பொருளில் இறக்கி வரைபடத்தை உருவாக்கி அந்த வரைபடத்தின் மூலமாக கிடைக்கும் செய்திகளைக்கொண்டு நாளை அந்த பங்கின் விலை ஏறுகிறதா! அப்படி விலை ஏறினால் எவ்வளவு ரூபாய் ஏறும்? என்பதை தினமும் சோதித்துக்கொண்டே இருந்தேன். ஆச்சரியப்படும் விதமான பத்து பங்குகளை பற்றி கணித்தேன் என்றால் அதில் ஆறு அல்லது ஏழு முடிவுகள் மிசச்சரியாக இருந்தது. மற்றவர்களிடமிருந்து குறுச்செய்தியை பெற்று என் நன்பர்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்ததை மெல்ல மெல்ல குறைத்துவிட்டு என்னுடைய செய்திகளை நன்பர்களுக்கு அனுப்ப ஆரம்பித்தேன். முடிவுகள் சாதகமானதாக அமைகிறது என்று அறிந்ததும் அதை நான் தான் உருவாக்கினேன் என்று அறிவித்தேன். நன்பர்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பு உருவாகிவிட்டது. நான் கேள்வி கேட்டுக்கொண்டிருந்த காலம் மாறி என்னிடம் மற்றவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். எப்படி? எதை வைத்து தெரிந்துகொள்கிறாய்? எனக்கும் நேரம் கிடைக்கும்போது சொல்லிகொடேன் என்பார்கள். சரி என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவேன். மனதினுள் ஆனவமா, ஆனந்தமா என தெரியவில்லை ஆனால் வித்தியாசமான ஒரு சந்தோசம் நிலவும். வேறு வேலைகள் தேடிக்கொண்டிருந்த நான், இனி இந்த துறையிலேயே இருபது, இதையே சிறப்பாக செய்வது என்று முடிவு செய்துகொண்டேன்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</