வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்பற்றி

சதுரங்க ஆட்டத்தில் ஆடும் இரு நபர்களுக்கும் தெரியாத பல வழிமுறைகள் அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் நபர் நன்றாக அறிந்திருபார். அந்த வழிமுறைகளை, “இப்படி செய்திருக்கலாம் என அவர் சொல்லியதும்” சதுரங்க ஆட்டம் ஆடுபவர்களே சற்று ஆடித்தான் போவார்கள். பிரச்சனையில் இருப்பவர்கள் பிரச்சனையின் பிடியிலேயே இருப்பதால் அவர்களின் பார்வைக்கு சரியான பாதை தென்படாது. நம் வாழ்க்கையும் சதுரங்க ஆட்டம் போன்றதுதான். பல விதமான சிக்கல்களில் சிக்கியிருக்கும் நம்மை அதிலிருந்து விடுவிக்க ஆச்சரியப்படுத்தும் விதமான பல ஆலோசனைகளுடன் அந்த மூன்றாம் நபராக வருகிறார். டாக்டர் B. செல்வராஜ்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


முனைவர்.பா.செல்வராஜ்

முனைவர்.பா.செல்வராஜ், கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறையில் உதவி பேராசிரியராகப் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

அத்துறையில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையத்தில் மனநல ஆலோசகராக கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள், அவர்தம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். உணர்ச்சியறிவு, சாதனை ஊக்கம், புதுவித சிந்தனை ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்த இவர் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இக்கருத்துக்கள் பற்றிய பயிற்சிகளை நடத்தி வருகிறார். மக்களுக்குப் பயனக்களிக்கக்கூடிய உளவியல் விசயங்களைப் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரை, பேட்டி ஆகியவை மூலமாக தெரிவித்து வருகிறார். மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் என்னும் இவரின் நூல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும்.

கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி, போலீஸ் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் கௌரவ பேராசிரியாரான இவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உளவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உளவியல் தொடர்பான அறிவியல் ஆய்வு கட்டுரை ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். இவரின் வலைப் பூ உளவியல் கருத்துக்கள் நிறைந்த சிறந்த வலைப் பூவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்கள் வாயில்


உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –2

பா.செல்வராஜ்  

”ரேவதி” சில பல நோய்களுக்கு உள்ளாகி உடல் தளர்ந்து தூக்கமில்லாமல் சோர்ந்துபோய், தலைமுடி கருகிய நிலையில் காய்ந்த சருகாய் நாற்காலியில் சரிந்து கிடந்தாள். என்ன நேர்ந்துவிட்டது ரேவதிக்கு? என்ன குறையுள்ளது அவள் வாழ்வில்? ஒரு குறையுமில்லை அவள் வாழ்வில் அந்த அமானுஸ்யம் அவளை அனுகும் வரை. குடிப்பழக்கம் இருந்தாலும் நன்றாக குடித்தனம் நடத்தும் அப்பா. அப்பாவிடம் அவ்வப்போது அடிபட்டாலும் அன்பாகவே நடந்துகொள்ளும் அம்மா. பழகுவதற்கு இனிமையான தங்கை. கல்வியின் அவசியத்தை அவ்வப்போது தன் அறிவிற்கு அறிவித்துக்கொண்டே இருக்கும் உறவினர்கள். மற்றும் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் ரேவதிக்கு அவள் சந்திக்க வேண்டிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆசிரியர் என அழகாகத்தான் சென்று கொண்டிருந்தது அவள் வாழ்க்கை. வகுப்பிற்கு அமைதியாக சென்று கொண்டிருந்த அவள் ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு மரத்தின் அருகில் சென்றவுடன் அலறியபடி தன் கழுத்தை தானே நெறித்துக்கொண்டு கத்தியிருக்கிறார். ஒரு நாள் இருநாள் நடந்தால் இயல்பான விசயமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இடைவிடாது தொடர்ந்து இது போல் நடந்திருக்கிறது. அப்போதுதான் கவனித்திருக்கிறார்கள், அந்த குறிப்பிட்ட இடம், குறிப்பிட்ட மரம் வந்ததும்தான் இப்படி நடந்துகொள்கிறாள். உறுதுனையாக யாராவது உடன் வந்தபோதும் கூட அந்த மரம்... அருகில் சென்றதும் அதே அலறல். என்ன செய்வது என்று புரியாமல் ரேவதியின் பெற்றோர் ஆங்கில மருத்துவர் முதல் அருகில் உள்ள சாமியார் வரை அனுகியிருக்கிறார்கள். பூஜையின் போது தலையில் கற்பூரம் பற்றவைத்தால் தலைமுடி கருக்கியதைத்தவிர வேறெந்த பலனும் கிட்டவில்லை. என்ன நேர்ந்துவிட்டது ரேவதிக்கு! அந்த மரத்திற்கும் ரேவதிக்கு என்ன தொடர்பு? எந்த மாதிரியான பிரச்சனை இது? எப்படி சரி செய்வது?

உளவியல் உண்மைகள்:

ஆலோசனைக்காக அழைத்து வரப்பட்ட ரேவதி, அப்பெண்ணின் தாய், இவர்களின் குடும்ப நண்பர் ஆகியோரிடம் பேசியதில் இருந்து மேலும் பல விபரங்கள் கிடைத்தன. ரேவதியின் தந்தை ஒரு குடிகாரர். தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தன் மனைவியை அடித்து துவசம் செய்து விடுவார். அவர் தாயாரோ கல்வியறிவு இல்லாதவர். பார்பதற்கு மிகவும் கவலையாக காட்சியளித்தார். ரேவதியின் தங்கை தான் உண்டு த்ன் வேலை உண்டு என்று பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் தினமும் வீட்டில் நடக்கும் சண்டையை ரேவதியால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இயற்கையாகவே இளகிய மனம் கொண்ட ரேவதி தன் மனதில் உள்ளவைகளை வெளிக்காண்பிக்க இயலாமல் அடக்கி வைத்து மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறாள். இப்பிரச்சனைகளினால் படிப்பில் சரியாக கவணம் செலுத்த முடியவில்லை ஆனால் பண்ணிரண்டாம் வகுப்பு என்பதால் ஆசிரியர் மிகுந்த கண்டிப்புடன் வகுப்பில் நடந்து கொண்டுள்ளனர். ரேவதியின் உறவினர் மற்றும் குடும்ப நண்பர்களும் ‘அதிக மதிப்பெண் வாங்கி மேற்படிப்பில் சேர வேண்டும்’ அதுதான் கெளரவம் என்று தொடர்ந்து அப்பெண்ணிடம் சொல்லி வந்துள்ளனர். இந்நிலையில்தான் ரேவதியை பேய் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது.

ரேவதிக்கு பிடித்திருப்பது பேயல்ல. அவருக்கு ஹிஸ்டீரியா என்ற மனநோய் ஏற்பட்டுள்ளது. பொதுவாக மனச்சோர்வும் மனத்தவிப்பும் கொண்ட தனியாட்களுக்கு இந்த மனநோய் ஏற்படும். அவர்களுக்கு மனவெழுச்சி பிரச்சனைகள் (Emotional Problems) இருக்கலாம். நிலையற்ற மனநிலை கொண்ட இந்நோயாளிகள் அதிக கோபம் கொண்டவர்களாகவும், தன்னை உயர்வாக எண்ணிக் கொள்பவர்களாகவும், தன் மனம் போன போக்கில் நடந்து கொள்ப்வர்களாகவும், விரைவில் நோய்க்கு ஆளாகக் கூடியவர்களாகவும் இருப்பர். குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் நிந்தனைக்கு ஆளாகியிருக்கலாம்.

இந்நோய் கொண்டவர்கள் தக்களின் மனத்துன்பத்தை நேரிடையாக தெரிவிக்காமல் உடலின் உறுப்புகளில் நோய்களை வரவழைத்துக் கொண்டு அதன் மூலம் தங்கள் வேதனையை வெளிப்படுத்துவர். ஆண்களைவிட பெண்களிடையே அதிகமாக காணப்படும் இந்நோய் இராணுவ வீரர்களிடையே பரவலாக இருக்கும்.

வீட்டின் முதல் குழந்தையான ரேவதி அம்மா அப்பாவின் அன்புக்காக ஏங்கும் குணம் கொண்டவர் தன் அப்பாவும் அம்மாவும் தினமும் சண்டையிட்டுக் கொள்வதை தாங்கிக் கொள்ள இயலாத இளகிய மனம் படைத்த அப்பெண் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளாள். அதே சமயத்தில் பண்ணிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கடினமாக உழைத்து அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற கட்டாயமும் அப்பெண்ணுக்கு உள்ளது. ஒருவேளை மதிப்பெண் குறைவாகப் பெற்றாலோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்தாலோ மிகுந்த அவமானத்துக்கு உள்ளாக நேரிடும் என்ற சூழ்நிலையும் உள்ளது. தற்போது அப்பெண் நடந்து கொள்ளும் முறை மனம் அழுத்தம் தரும் இச்சூழ்நிலையிலிருந்து விடுபடவும், பிறரின் அன்பையும் கவனத்தையும் தன்பால் ஈர்க்கவேண்டும் என்ற எண்ணத்தினால் தோன்றியதாகும்.

நீ தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நீ தோல்வியடைந்தால் கூட யாரும் அதை பரிகசிக்கப் போவதில்லை. உன்னால் முடிந்த அளவுக்கு படித்தால் போதுமானது. அதே சமயத்தில் உன் தாய் தந்தையர் சண்டையிட்டுக் கொள்வதை நினைத்து நீ வேதனைப்படவேண்டாம். ஏனெனில் அவர்கள் சண்டையை நிறுத்த உன்னால் முடியாது. இனிமேல் அவர்கள் தங்களுக்குள் சண்டையிடாமல் இருக்க முயற்சிப்பார்கள் என்று கூறி அப்பெண்ணை உடல் தளர்வு பயிற்சியினை தொடர்ந்து செய்துவருமாறு அறிவுறுத்தினேன்.

ரேவதியின் பெற்றோர்களை முடிந்த அளவு இனிமேல் பெண்களின் முன்பாக சண்டையிடாமல் அவர்களை அன்பாக கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். மேலும் ரேவதி படிக்கும் வகுப்பு அசிரியர்களிடம் விவரத்தை எடுத்து சொல்லி அவளை கண்டிப்புடன் நடத்தாமல் பாச உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு வேண்டுகோள் வைக்கச் சொன்னேன்.

தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை வழங்கப்பட்ட உளவியல் ஆலோசனையின் மூலம் ரேவதி தற்போது நல்ல முறையில் நடந்து கொள்கிறார். இக்கால கட்டத்தில் அப்பெண்ணுக்கு கிடைத்த பெற்றோரின் அன்பும் கவனமும், பெற்றோர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாததால் வீட்டில் நிலவி வந்த மன அழுத்தம் மிகுந்த சூழ்நிலை சுமுகமாக மாறியதும் மனநோயை விரைவிலேயே குணமாக்க காரணமாக அமைந்தன. குறிப்பிட்ட மரத்தின் அருகில் சென்றாலும் கூட ரேவதி பழையபடி தன் கழுத்தை நெறித்துக் கொள்வது போன்றெல்லாம் நடந்து கொள்வதில்லை.

இது போன்ற ஹிஸ்டீரியா அல்லது மாற்ற நோய்க்கு சம்பந்தப்பட்டவர்களிடம் அன்பு காண்பித்து அவர்களின் மன அழுத்தம் தரும் பிர்ச்சனையை குறைப்பதே சிறந்த சிகிச்சையாக அமையும். மாறாக நோய் உண்மை என்று கருதி மாய மந்திர சிகிச்சை அளிப்பது அவர்களின் உடல் நலத்திற்கே நிரந்தர கேடாக அமையும்.

சென்ற வாரம் கேள்வி கேட்டிருந்த மங்கை அவர்களின் கேள்விக்கான பதில்:

குழந்தைகள் எதைக் கேட்டாலும் இப்போதே வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களே? அது இயல்பானதுதானா? அதை நாம் ஊக்குவிக்கலாமா?

குழந்தைகள் இன்ப விதியின் அடிப்படையில் வளர்பவர்கள். அதாவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஒரு போதும் துன்பத்தை அனுபவிக்க கூடாது என்பதே அவர்களின் வாழ்க்கைக் கோட்பாடு. எனவே அவர்கள் தன் மனதில் எழும் ஆசைகளை உடனுக்குடனே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என நினைப்பதும், தன் தேவைகளை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும் இயற்கையானது தான். இந்த நடத்தையின் காரணமாகத்தான் எதாவது ஒரு பொம்மையைக் கேட்கும் குழந்தை “ எனக்கு ஒரு பொம்மை வேண்டும், இப்போதே, இன்றைக்கே வேண்டும்” என கேட்பது. அதற்காக குழந்தையின் ஆசையை நாம் உடனே நிறைவேற்றி விடவேண்டும் என்று துடிதுடிக்க வேண்டியதில்லை. அது நம்மால் முடியவும் முடியாது. மேலும் ஓரிரு முறை அவ்வாறு உடனுக்குடன் குழந்தையின் ஆசையை உடனே தீர்த்து வைத்தால் அதுவே பழக்கமாகி பின்னர் நாம் எப்போது அவ்வாறு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிற்காலத்தில் தான் நினைப்பது உடனே நடக்கவில்லை என்றால் அக்குழந்தைக்கு மனச்சோர்வும், மன முறிவும் ஏற்படும். அது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.

தற்கால உளவியல் ஆய்வுகள் யார் தன் உள்ளுணர்வு ஆசைகளை கட்டுப்படுத்தி சிறிது பொறுத்திருந்து பின்னர் சரியான வேளை வரும்போது தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் திறமை பெற்றிருக்கிறார்களோ அவர்களே சிறந்த வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் எனக் கண்டறிந்துள்ளன. இத்திறமை படைத்தவர்களுக்கு நுண்ணறிவு சற்று குறைவாக இருந்தாலும் அது அவர்களின் வெற்றியைப் பாதிப்பதில்லை எனவும் தெரியவந்துள்ளது. இத்திறமையை நாம் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்து விட்டால் குழந்தைகள் பெரியவர்களாகும் போது அது ஓர் வாழ்க்கை முறையாக மாறிவிடும்.

இப்போதே ஓர் பொம்மை வேண்டும் என்று குழந்தை கேட்டால், இரண்டு மணி நேரம் வேலை இருக்கிறது. முடித்துவிட்டு நாம் இருவருமே சென்று வாங்கி வரலாம் என்று கூறுங்கள். இன்றே ஐஸ்கிரீம் வேண்டும் என்றால் இன்று முடியாது நாளை வாங்கித்தருகிறேன் என்று கூறி அடுத்த நாள் வாங்கித் தாருங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் “சற்றே தள்ளிப்போடும் மனநிலையையும்” பொறுமையையும் குழந்தைகளிடத்தில் இளம் வயதிலேயே விதைத்து விடலாம்.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை காத்திருக்க வையுங்கள் உங்கள் கொக்கை. உலகில் வெற்றியாளராக்குங்கள்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</