வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள் TS அம்மாசி சிறுகதைகள் வாயில்

அம்மாசி

அ.வ. உத்திரக்குமரன், அரசூர்  

உருக்கிய தார் கொண்டு வண்ணமடித்தது போல் ஊரெல்லாம் இருள் கவ்வியிருந்தது. மூன்று பக்கம் நீரும் ஒரு பக்கம் நிலமும் சூழ்ந்திருக்கும் இந்திய துணைக் கண்டம் போல அந்த ஓலைக் குடிசையை ஒரு பக்கம் கரும்புத் தோட்டமும் மற்ற பக்கங்களை நெற்பயிரும் சூழ்ந்திருந்தது. வயல்வெளிகள் சூழ்ந்த வீடு என்பதால் ஆங்காங்கே தவளைகளும், பாம்புகளும் இன்னபிற பூச்சிகளும் தத்தம் தங்களது ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தன.

அந்த நள்ளிரவில் கருப்பாயி தன் குடிசைக்குள் தூங்காமல் ஊரிலிருந்து வந்திருக்கும் தன் மகனுக்கு காலையில் கறி எடுக்கலாமா? மீன் எடுக்கலாமா? என்பதைப் பற்றி யோசித்தவாறு படுத்துக் கொண்டிருந்தான். அருகில் கயிற்றுக் கட்டிலில் அவள் மகன் ஆராவமுதன் ஊரிலிருந்து வந்த களைப்பில் படுத்துக் கொண்டிருந்தாள். அப்போது தவளை மற்றும் பூச்சிகளின் சத்தத்தையும் மீறி ஏதோ ஒரு சத்தம் கேட்டது.

“ம்மே. . . ம்மே. . . - கருப்பாயி பதறி எழுந்தாள் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் தன் மகள் ஆராவமுதனை எழுப்பினாள்.
ஆராவமுதன் தூக்கக் களைப்பிலேயே கேட்டான் என்னம்மா இந்நேரத்திலே எனக்கு தூக்கம் தூக்கமா வருது. அப்பன எழுப்ப வேண்டியதுதானே

“சாமி கெடையில ஏதோ சத்தம் கேட்குதுப்பா: நாளு நாளைக்கு மிந்திகூட பொன்னுத்தாயி வூட்டு ஆட்ட எவனோ ஓட்டினு பூட்டானாம்பா: வா சாமி என்னன்னு பாத்துட்டு வருவோம்.

ஆராவமுதன் அரிக்கேன் விளக்கை கையில் ஏந்திக்கொண்டு முன்னால் செல்ல கருப்பாயி அவனைத் தொடர்ந்து கெடைக்குள் நுழைந்தாள்.

மீண்டும் அதே சத்தம் கேட்டது “ம்மே. . . ம்மே. . . ஆராவமுதனும் கருப்பாயிம் அரிக்கேன் விளக்குத் துணையுடன் கெடையைச் சுற்றி நோட்டமிட்டார்கள். ஆடுகளெல்லாம் விளக்கு வெளிச்சத்தில் பயத்தில் கூட்டம் கூட்டமாக கெடைக்குள்ளேயே அங்குமிங்கும் ஓடின. மறுபடியும் அதே சத்தம். “ம்மே. . . ம்மே. . . ஆராவமுதன் சத்தம் வந்த திசையை நோக்கி வெளிச்சத்தைப் பரப்பினான். கழுத்தைச் சுற்றி வெள்ளைக் கோடு போட்ட ஆடு ஒன்று கொழுகொழுவென்று சாணி கழிந்தவாறு கண் சொருக படுத்திருந்தது.
ஆராவமுதன் அம்மாவிடம் சொன்னாள்” எம்மா நம்ம வெள்ளப் பொறா எம்மா.

“வெள்ளப் பொறாவா என்னடா ஆச்சி அதுக்கு? இருவரும் ஆட்டின் அருகில் சென்றார்கள் ஆட்டின் பலத்தைப் பார்த்தவள் சொன்னாள் “அய்யய்யோ ஆடு கழியுதே என்னத்த தின்னுச்சுன்னு தெரியலியே. அய்யனாரப்பா சென ஆடு வேற ஒன்னியும் ஆகாமா பாத்துக்கப்பா.

எம்மா நான் வேணும்னா போயி நம் அம்மாசி தாத்தாவக் கூட்டியாரட்டுமா...
அம்மாசியா அந்தக் கெழவஞ் செத்து மூனு மாசம் ஆகுது ராசா.
ஆடு கண்களை சொருகியவாறு கழிந்து கொண்டே இருந்தது. கருப்பாயி பதறினாள். “அய்யோ நான் என்ன பண்ணுவேன்னுத் தெரியலியே; மில்லுக்குப் போன மனுஷன வேற இன்னுங்காணமே.
கருப்பாயி நாக்கு கருநாக்கோ இல்லை ஆட்டின் நேரமோத் தெரியவில்லை. அப்போது குரல் கொடுத்தவாறே கெடையை நோக்கி வந்தான் அவினாசி.

“கருப்பாயி ஏய் கருப்பாயி; அங்க என்ன புள்ள பண்ற.
கருப்பாயி புருஷங்காரனின் குரல் கேட்டதும் ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.
கட்டுக்கட்டா புல்லறுத்து கடவாயிலே கொடுத்தேனே; சைனா டீ கனக்காக நீச்சத்தண்ணி வெச்சேனே, இப்படி வாயாலயும் வயித்தாலயும் போயினு கெடக்குதே.

ஒப்பாரியைக் கேட்டவாறே கெடையில் நுழைந்த அவினாசி கண்களில் நீரொழுக கழிந்து கொண்டிருக்கும் ஆட்டைப் பார்த்தான். அதன் மலத்தை இடது கையால் கொஞ்சமாய் அள்ளினான். கொதி சோற்றை வடிக்கப் பதம் பார்ப்பது போல சோதனை செய்தான் பின் ஏதோ உணர்ந்தவனாய் தன் கையிலிருந்து டார்ச் விளக்கை ஆராவமுதனிடம் கொடுத்துவிட்டு அவனிடமிருந்த அரிக்கேன் விளக்கை வாங்கிக்கொண்டு கெடையை விட்டு வெளியேறினான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மூங்கில் இலைகளோடு வந்தவன் கருப்பாயிடம் சொன்னான்.

“ஏய் பொறாவ் நிக்க வையிபுள்ள - ஆராவமுதனும் கருப்பாயிம் ஆட்டைத் தூக்கி நிற்க வைத்தார்கள். அது நிற்க முடியாமல் கால்களை இடறியவாறு படுக்க முயற்சித்தது. அவினாசி கொண்டு வந்த மூங்கில் இலைகளை ஆட்டிடம் நீட்டினான். அது என்னவோ ஏதோவென்று இலைகளை மோந்து பார்த்தது. பின் வெடுக். . . வெடுக்கென்று பிடுங்கி திண்றது. அனைத்து இலைகளையும் கொடுத்தபின் அவினாசி கருப்பாயிடம் சொன்னான்.

“ம். . . துன்னக் கூடாத எதையோ துன்னுருக்கும் போலிருக்கு அதான். சரி சரி வா புள்ள அதான் மூங்க எலை கொடுத்தாச்சி இல்ல இனி ஒண்ணியும் ஆவாது.

இல்ல மாமா நீ போ நான் அப்புறமா வரேன் சாமி போப்பா நீயும் போயி படுத்துக்க.

அவினாசி அரிக்கேன் விளக்கை வைத்துவிட்டு ஆராவமுதனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

ஏன் ராசா சாப்டியா நீ - அவினாசி “ம்.. சாப்டேன் எப்பா; ஏன் எப்பா நம்ம அம்மாசி தாத்தா செத்தாப் போயிட்டாங்க?

ஆமாம் ராசா. அவருக்கு மூணு ஆம்பளப்புள்ளங்கன்னுதான் பேரு. படுபாவிங்க கடைசி காலத்துல காயலா வந்தப்ப, நீ இட்டுனு போவ வேண்டியதுதானே அவன் இட்டுனு போவவேண்டியது தானே அப்பிடி இப்பிடின்னு மூணு பேரும் போட்டி போட்டுனு கடைசி வரைக்கும் வைத்தியம் பாக்காமலேயே சாகடிச்சிட்டானுவ. நாசமாப் போனவனுங்க பாத்தாலும் பாத்தேன் இப்பிடி ஒரு கல் நெஞ்சுக்காரப் பசங்கள நான் பாத்ததே இல்லே. சரி ராசா நீ படுத்துக்க நான் உன் ஆத்தாக்கிட்ட போறேன். அவ வேற வெசனம் புடுச்சிக்கிட்டு ஒக்காந்துட்டா. என்றவாறு கொவளையில் இருந்த தண்ணீரையும் கையில் சிறிது உப்புக் கல்லையும் எடுத்துக் கொண்டு அவினாசி கெடையை நோக்கி கிளம்பினான்.

ஆராவமுதனுக்கு அம்மாசி தாத்தாவின் இறப்பு செய்தியைக் கேட்டதிலிருந்து மனம் நிலை கொள்ளவில்லை. கட்டிலில் சாய்ந்து படுத்தான். அம்மாசித் தாத்தா கடைசி காலத்துல கவனிக்காம விட்டு சாகடிச்சிட்டாங்களா? என்ன உலகம் இது? பல உசுருகளை காப்பாத்தினவராச்சே. அவருக்கா இப்படி ஒரு நெலம ஏற்படனும். அடக்கடவுளே: அம்மாசியின் ஞாபங்கள் அவர் கண்முன் நினைவுகளாக ஓடின.

அம்மாசி. அம்மாசி என்றால் அரசூரில் மட்டுமல்ல அதன் சுற்றுப்புற அனைத்துக் கிராமங்களிலும் பேர் போன பெயர். எங்கெல்லாம் ஆடுமாடுகள் சீக்காயி கெடக்கிறதோ அங்கெல்லாம் “எங்கே அம்மாசி கூப்பிடு என்பார்கள். அந்த அளவிற்கு அம்மாசியின் கை ராசியான கை. கால்நடைகளின் நாக்கையும் பல்லையும் பார்த்தே என்ன வியாதியென்று கண்டுபிடித்து விடுவார். கண்டுபிடித்து இடுப்பில் கோவணத்தோடு சேர்த்து கட்டியிருக்கும் நீளமான தன் சுருக்குப் பையிலிருந்து மூலிகைச் செடிகளை எடுத்துக் கசக்கி ஆடுமாடுகளின் வாயில் திணிப்பார். அரைமணி நேரத்திற்கெல்லாம் ஆடு மாடுகள் எப்பேற்பட்ட வியாதியில் சிக்கியிருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி விடும்.

ஒரு சமயம் அப்படித்தான் ஊர்த் தலைவர் ராமரின் வண்டிமாடு ஒன்று ஊரே அதிரும்படி உடம்பெல்லாம் ஈக்கள் மொய்க்க “ம்மா. ம்மா.. என்று அலறியது. ஊர் சனமெல்லாம் அங்கு திரண்டு விட்டது. என்ன வியாதியென்று தெரியவில்லை மாடு அலறிக்கொண்டே இருந்தது. எல்லோரும் அம்மாசியைக் கூப்பிடு. அம்மாசியைக் கூப்பிடு என்றார்கள். அம்மாசி அன்று ஊரில் இல்லை மவ வவுத்துப் பேரனைப் பார்க்க ஊருக்குச் சென்றிருந்தார். அப்போது அந்த வழியாக வேறு எங்கோ சென்று கொண்டிருந்த ஆராவமுதன் விஷயம் கேள்விப்பட்டு அவனும் கூட்டத்தோடு கூட்டமாய் நின்று வேடிக்கைப் பார்த்தான். நேரம் ஆக ஆக கண்கள் சொருக மாட்டிறகு கால்கள் இழுக்க ஆரம்பித்தது. ஊர்த் தலைவர் ராமர் என்ன செய்வதென்று தெரியாமல் அரைகுறையாய் வைத்தியம் தெரிந்தவர்கள் செய்யும் சிகிச்சையை பார்த்தவாறு நின்றிருந்தவர் இனி இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்பது போல உணர்ந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்தார். ஒரு மணி நேரத்திற்கெல்லாம் குமார மங்கலம் சென்று அம்மாசியை கையோடு தனது வண்டியில் அழைத்து வந்தார்.

அம்மாசி மாட்டை ஒரு முறைச் சுற்றி கைகளால் தட்டித் தட்டி பார்த்தவாறு நோட்டமிட்டார். ஏதோ காரணம் புலப்பட்டவராய் அம்மாசி சொன்னார்.

“ஏம்ப்பா ராமரு மாட்டைத் தேள் கடிச்சிருக்கியா; நீ போயி எங்க வூட்டுல நான் கேட்டனு பச்சக்கலர்ல ஒரு மருந்து பையிருக்கும் அத வாங்கினு வாஞு!

ராமர் தன் மூச்சுப் பையனை சீக்கிரம் போய் வரும்படி அனுப்பினார். பையன் சிறிது நேரத்திற்கெல்லாம் மருந்துப் பையுடன் ஓடி வந்தான். அம்மாசி பதப்படுத்தப்பட்ட ஏதோ ஒரு மூலிகைச் செடியை பையிலிருந்து எடுத்துக் கசக்கினார். அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்து போல் ஆக்கி மாட்டு கடவாயில் ஊற்றினார். பின் தன் சிவப்பு சுருக்குப் பையிலிருந்து கொஞ்சம் உரம் எடுத்து அதில் சுண்ணாம்மை போட்டு எச்சில் துப்பி அழை குழப்பி மாட்டின் மூக்கின் அருகில் கொண்டு சென்று சுவாசிக்கும்படி செய்தார். சுவாசித்த மாடு இரண்டு மூன்று முறை பலமாக தும்மியது. நான்கைந்து முறை அம்மாசி அதே போல் மாட்டின் மூக்கில் வைக்க மாடு தும்மிக் கொண்டே இருந்தது. பின் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி தன் கைகளைக் கழுவிக் கொண்டவர் சொன்னார்.

“ம் அவ்வளவுதான் தும்மிருச்சில்ல இனி ஒண்ணியும் ஆவாது. ராமரு ஆய்சு நூறுப்பா ஓம்மாட்டுக்கு.

மறுநாள் காலை கழனிப்பக்கம் வெளிக்கிறருக்கப் போன ஆராவமுதன் அப்போதுதான் அந்தக் காட்சியைக் கண்டான். ஊர்த் தலைவர் ராமரின் நடுத்தம்பி ஓட்டிச் செல்ல நேற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மாடு போர்க்குதிரையைப் போல வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. ஆராவமுதனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அம்மாசி தாத்தாவை நினைத்து பெருமை கொண்டான். தன் மனதில் ஓர் டாக்டர் இருக்கையை போட்டு அதில் அவரை அமர வைத்தான், ஊர்க்காரர்களும் அம்மாசியின் வைத்தியத்தை நினைத்து பெருமைப்பட்டார்கள். இவை மட்டுமல்ல இப்படி எத்தனையோ ஆடுமாடுகளின் வலியை தன் வலியாகக் கருதி நேர காலம் பாக்காமல் ஓடிச் சென்று காப்பாற்றி உயிர் கொடுத்த அந்த நடமாடும் தெய்வத்தையா அவரின்பிள்ளைகள் அவர் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தபோது சிகிச்சையளிக்காமல் சாகடித்துவிட்டார்கள், நினைக்க நினைக்க ஆராவமுதனுக்கு நெஞ்சம் கணத்தது. வேதனைப்பட்டான்.

வைத்தியன் மகன் சீக்காளி. வாத்தியார் மகன் முட்டாள் என்பார்கள். ஆனால் அம்மாசியின் விஷயத்தில் அது வேறுவிதமாக மாறியிருக்கிறது. வைத்தியர் மகன்கள் முட்டாள்கள். அவர்கள் செய்த முட்டாள் தனத்தினால் வைத்தியனே சீக்காளி: அந்த சீக்கினால் மரணம், அம்மாசி தாத்தாவிடம் அதிகம் பகழியிராத அவரிடம் எதையுமே எதிர்பார்த்திராக எனக்கே அவர் மீது கொண்ட அன்பினால் துக்கம் இப்படி பீறிடுகிறதே அவர்களால் நன்மை அடைந்தவர்களுக்கு? ம் . . . . க்கும் பெத்த பிள்ளைங்களே கவலப்படல ஊர்க்காரங்க கவலைப்பட்டிருப்பாங்களாக்கும்?

அம்மாசியின் மறைவுக்கு யார் யாரோ? எப்படி வேண்டுமானாலும் கண்ணீர் வடித்திருக்கலாம். பங்காளிகள் முதலைக் கண்ணீர், பகையாளிகள் சந்தோஷக் கண்ணீர். கடன்காரர்கள் நஷ்டக் கண்ணீர் என யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கண்ணீர் வடித்திருக்கலாம்.

ஆனால் அவர்களைவிட அதிகமான குறிப்பாக உண்மையான துக்கங்களையும், சோகங்களையும் தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொண்டு யாரிடமும் பரிமாறக் கூட முடியாமலும் தாயை இழந்த குழந்தையைப் போல அன்றும் இன்றும் வேதனைப் பட்டுக் கொண்டு இருக்கிறது அந்த ஊர்க் கால்நடைகள், பாவம் வேறென்ன செய்ய முடியும் அவைகளால்: நானாவது என் சோகத்தை உங்களிடம் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவைகள்?

ஆனால் ஒன்று இந்த ஊர்க் கால்நடைகள் மட்டுமல்ல வேறு எந்த ஊர் கால்நடைகளாக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு எத்தனை முறைகள் அவைகள் பசிக்காகவோ இல்லை வேறு எதற்காகவோ? ம்மா. . . என்று கத்தியழுகிறதோ கூர்ந்து கவனியுங்கள். அதில் ஒரு முறையாவது தனக்கு உதவி செய்தவவர்களுக்காகவும், பிரிநது போனவர்களுக்காகவும் கூட அவைகள் அழலாம். அதற்கு எங்கள் ஊர் கால்நடைகளே சாட்சி. அம்மாசியே அதற்கு உதாரணம்.

முற்றும்


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.