வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. சிறுகதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்த முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

நூறு சிறந்த சிறுகதைகள் -

எஸ். ராமகிருஷ்ணன்

1. காஞ்சனை - புதுமைபித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்
3. செல்லம்மாள் - புதுமைபித்தன்
4. அழியாச்சுடர் -மௌனி
5. பிரபஞ்ச கானம் - மௌனி
6. விடியுமா - கு.ப.ரா
7. கனகாம்பரம் -கு.ப.ரா
8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா
9. ஞானப்பால் - பிச்சமூர்த்தி
10. பஞ்சத்து ஆண்டி - தி.ஜானகிராமன்
11. பாயசம் - தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
13. அன்பளிப்பு - கு. அழகிரிசாமி
14. இருவர் கண்ட ஒரே கனவு � கு. அழகிரிசாமி
15. கோமதி - கி. ராஜநாராயணன்
16. கன்னிமை - கி.ராஜநாராயணன்
17. கதவு. கி.ராஜநாராயணன்
18. பிரசாதம் -சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி
20. விகாசம் - சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்ரன்
26. பிரயாணம் - அசோகமித்ரன்
27. குருபீடம் - ஜெயகாந்தன்
28. முன்நிலவும் பின்பனியும் - ஜெயகாந்தன்
29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள் - பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது - பிரமீள்
32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்
35. மகாராஜாவின் ரயில்வண்டி - அ. முத்துலிங்கம்
36. நீர்மை - ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
38. காட்டிலே ஒரு மான் -அம்பை
39. எஸ்தர் - வண்ணநிலவன்
40. மிருகம் - வண்ணநிலவன்
41. பலாப்பழம் - வண்ணநிலவன்
42. சாமியார் ஜ�விற்கு போகிறார் - சம்பத்
43. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
44. தனுமை - வண்ணதாசன்
45. நிலை - வண்ணதாசன்
46. நாயனம் - ஆ.மாதவன்
47. நகரம் -சுஜாதா
48. பிலிமோஸ்தவ் -சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள் - ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு - கிருஷ்ணன் நம்பி
54. ரீதி - பூமணி
55. இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்
58. சோகவனம்- சோ.தர்மன்
59. இறகுகளும் பாறைகளும் -மாலன்
60. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
61. முங்கில் குருத்து - திலீப்குமார்
62. கடிதம் - திலீப்குமார்
63. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார இந்திரஜித்
64. சாசனம் - கந்தர்வன்
65. மேபல் -தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை - உமா வரதராஜன்
67. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள் - சாரு நிவேதிதா
69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்
70. வனம்மாள் -அழகிய பெரியவன்
71. கனவுக்கதை - சார்வாகன்
72. ஆண்மை - எஸ்பொ.
73. நீக்கல்கள் - சாந்தன்
74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்
75. அந்நியர்கள் - சூடாமணி
76. சித்தி - மா. அரங்கநாதன்.
77. புயல் - கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை - கோணங்கி
79. கறுப்பு ரயில் - கோணங்கி
80. வெயிலோடு போயி - தமிழ்செல்வன்
81. பத்மவியூகம் - ஜெயமோகன்
82. பாடலிபுத்திரம் - ஜெயமோகன்
83. ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
84. தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
85. புலிக்கட்டம் - எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்
88. விளிம்பின் காலம் - பாவண்ணன்.
89. காசி - பாதசாரி
90. சிறுமி கொண்டு வந்த மலர் - விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள் - பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
93. வேட்டை - யூமா வாசுகி
94. நீர்விளையாட்டு - பெருமாள் முருகன்
95. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
96. கண்ணியத்தின் காவலர்கள் - திசேரா
97. ஹார்மோனியம் - செழியன்
98. தம்பி - கௌதம சித்தார்த்தன்
99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100. பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

 

 

 
     
     
     
   
சிறுகதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

சிறுகதை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அநுபவத்தை விபரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறுநாவல் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

 
  ---------------------------------  
  ஜெயமோகன்  
  ”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எனக்கு சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.  
  -----------------------------------  
  சிறுகதை வரலாறும், வளர்ச்சியும்  
     
  http://tamilstories-sakthi.blogspot.com/2010/01/blog-post_07.html  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  சிறுகதைகள்   சிறுகதைகள் வாயில்

நினைவுகள்

கிரகம்  

கடிகாரத்தில் வைத்திருந்த அலாரம் அதிகாலை நான்கு மணிக்கு அடித்தது. கடிகாரத்தின் முதல் அழைப்பில் எழுந்த வைஷ்ணவி கடிகார சப்தத்தை நிறுத்தினாள். படுக்கையை விட்டு எழுந்தவள் விடிவிளக்கை போட்டாள். சன்னலின் வழியே நுழைந்த டிசம்பர் மாத குளிர்காற்று படுக்கை அறையை குளிரூட்டி இருந்தது. படுக்கை சுத்தமாக இருந்தது. தலையணையில் முடி கீற்றுகள் இல்லை, போர்த்திக்கொள்ள உபயோகித்திருந்த கருப்பு நிற கம்பளி கசங்கள் இல்லாமல் படுக்கும் போது விரித்தது போல் இருந்தது, படுக்கையில் கசங்கிய பூக்கள் எதுவும் இல்லை, படுக்கையின் மேலோ, படுக்கையை சுற்றியோ விட்டெறிந்த உள்ளாடையோ, நைட்டியோ, லுங்கியோ தென்படவில்லை.

குளியலறை கதவு தாளிட்டிருந்தது. குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது. குளியலறை கதவை திறந்ததும் குளியலறையினுள் இருந்த வெப்பக்காற்று வெளியே வந்தது. வைஷ்ணவி வெந்நீர் போட்டு குளித்திருக்க வேண்டும். மார்பிலிருந்து தொடை வரை மறைத்திருந்த குற்றால துண்டுடன் கண்ணாடி முன் அமர்ந்தாள். கண்ணாடியில் அவள் உருவம் தெரிந்தது. நேற்று அழகு நிலையம் சென்று வந்ததால் முடிகள் காற்றில் அலைந்து திரிந்தன, கை, கால், விரல் நகங்களுக்கு சிவப்பு நிற சாயம் பூசப்பட்டிருந்தன, புருவங்களுக்கு கருப்பு நிற மையினால் பட்டை போட்டுக் கொண்டாள். அவனுக்கு பிடித்த சிவப்பு நிற புதிதாக வாங்கியிருந்த உள்ளாடையை உடுத்திக் கொண்டாள். எழுந்து நின்றவள் கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பல கோணங்களில் நின்று பார்த்தாள்.

'தேனிலவிற்கு கொடைக்கானல் சென்றிருந்தோம். அப்போது கொடைக்கானலில் மழைக்காலம். தங்கியிருந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவு மழை பெய்து கொண்டிருந்தது. முதன்முதலில் ஒரு ஆணுடன் படுக்கை அறையினுள் தனியாக இருப்பது மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று. ரங்கநாதன் நல்ல அழகான உடலமைப்பு கொண்டவன். கைகள், தோள் பட்டை, மார்புகளில் இருந்த சதைகள் இறுகியிருந்தன. முடிகள் இல்லாத அவனது உடல் வழுவழுப்பாக இருந்தன. அறையில் ஒரு கண்ணாடி ஜன்னலின் திரை மட்டும் விலகியிருந்தது. அந்த ஜன்னலின் வழியே பார்த்தால் கொடைக்கானலின் உயரமான மலைகள் தெரியும். எங்களுக்கு எது இரவு எது பகல் என்று தெரியாமல் போனது. உடல் தேவையே எங்களின் முதல் தேவையாக இருந்தது. அவன் இயக்கம் என் உடலில் புது உணர்ச்சியை தோற்றுவித்தது. அறைமுழுவதும் இருள் கவ்வி இருந்தாலும் அவனது முணகல் சப்தம் அவனிருக்கும் திசையை காட்டியது. அங்கு தங்கியிருந்த வாரத்தில் எத்தனை முறை புணர்ச்சி செய்தோம் என்று தெரியாது. ஆனால் குப்பைகூடை முழுவதும் ஆணுறை நிறைந்திருந்தது.'

'ரங்கநாதன் ஒரு நாத்திகவாதி. கடவுள், ஜோசியம், நல்ல நேரம் போன்றவைகளில் சுத்தமாக நம்பிக்கை இல்லாதவன். சில வருடங்களுக்கு முன்பு கோயில்களுக்கு சென்றிருக்கிறான், ஜந்து முறை சபரிமலைக்கும் கூட சென்றிருக்கிறான். அவன் தங்கை மல்லிகா காசநோய் வந்து இறந்த பிறகு இவ்வாறு ஆகிவிட்டான். காசநோய்க்கு அப்போது மருந்து இருந்த போதிலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல் கோயில், குளம் என்று அழைத்துச் சென்றிருக்கிறார் மாமா. நோய்முற்றி இனிமேல் பிழைக்க வாய்ப்பில்லை என்ற சமையத்தில் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள். மாமா இப்போதும் மல்லிகாவை அழைத்துச் சென்றது கடவுள் என்கிறார்.'

'ரங்கநாதன் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். மாமா அப்போது பாண்டியன் பேங்கில் கிளார்க் ஆக வேலை செய்து வந்தார். ரங்கநாதன் பத்தாவது முடிந்து டிப்ளமோ படிக்க சென்றான். கம்பியூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் கிடைத்தும் இரும்பு சம்பந்தமான படிப்பு படித்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உடனடியாக இருக்கும் என்று ஜோசியக்காரன் சொன்னதால் மாமா ரங்கநாதனை மெக்கானிக்கல் பிரிவில் சேர்த்துவிட்டார். டிப்ளமோ முடித்த பின்பு இஞ்ஜினேயரிங் படித்தான். இஞ்ஜினேயரிங் முடித்து இரண்டு வருடங்கள் வேலைக்காக சென்னையை சுற்றி அலைந்தான். கடலூரில் இண்டஸ்டிரி ஒன்றில் வேலை கிடைத்து மாதம் ஆயிரத்தி ஜநூறு சம்பளத்தில் இரண்டு வருடம் அதே சம்பளத்தில் வேலை செய்தான். பிறகு சென்னையில் கூடுதல் சம்பளத்தில் மூன்று வருடம் வேலை செய்தான்.'

'ரங்கநாதன் ஹைய்தராபாத் வந்து மூன்று வருடம் ஆன பிறகு எங்களுக்கு திருமணம் ஆனது. வந்த சில நாட்களிலே எனக்கு ஹைய்தராபாத் பிடித்துப் போனது. மிதமான வெயில், சுத்தமான காற்று, ஊரை சுற்றி ஏகப்பட்ட குள்ங்கள், டிசம்பர் மாத காலை பனி, சென்னை போல் வீட்டின் முன் குப்பையை கொட்டாமல் சுத்தமாக இருக்கும் தெருக்கள். இவை போதாதா ஒரு நகரத்தில் சுகமாய் வாழ.'

'மியாபூர் டாக்கிடவுணில் போட்டிருந்த ஹிந்தி படத்திற்கு திருமணமான புதில் அழைத்துச் சென்றிருந்தான். அக்ஷய் குமார் நடித்த படம் ஆனால் படத்தின் பெயர் நினைவில்லை. இரவு ஆட்டத்திற்கு இளம் பெண்கள் ஜோடி ஜோடியாக வந்திருந்தனர். பெண் ஒருத்தி ஆணின் கைகளை பிடித்திக் கொண்டு தியேட்டரின் வாசலில் அலைந்து கொண்டிருந்தாள். அவளின் முக அமைப்பு, வெள்ளையான தோளின் நிறம் பார்ப்பதற்கு வட இந்திய பெண் போல் இருந்தாள். அவள் கைகள் நிறைய கண்ணாடி வளையல், கால்களில் மருதாணி, உள்ளங்கைகளில் வரைந்திருந்த மெகந்தி கோளம், உதட்டில் பூசியிருந்த சிகப்பு நிற சாயம் இவைகளை வைத்து பார்ப்பதற்கு சமீபத்தில் திருமணமான பெண் போல் இருந்தாள். அந்தப்பெண் என் அருகில் அமர்ந்திருந்தாள். அவர்கள் இருவரும் படம் பார்க்க வந்தவர்கள் போல் தெரியவில்லை. அவளுடன் வந்திருந்தவன் அவளின் தொடை, ஸ்தனங்களில் கை வைத்து அமுக்குவான் நான் பார்ப்பது தெரிந்தால் கைகளை உடனே எடுத்து விடுவான். இருவரும் இடைவேளைக்கு முன்னரே எழுந்து சென்றுவிட்டனர். படம் முடிந்து வீடு சென்றவுடன் ரங்கநாதனை உடலுறவிற்கு அழைத்தேன். வாரநாட்களை விட விடுமுறை நாட்களில் உடலுறவின் போது அவன் இயக்கம் பொறுமையாகவும், நிதானமாகவும், உடலுறவு முடிய சற்று அதிக நேரமும் பிடித்தது. அவன் முணகல் சப்தத்தில் ஏதோ பெயரை உச்சரிப்பது போல் கேட்டது. இயக்கத்தை சற்று தளர்ச்சி செய்து அவன் உச்சரிப்பை உன்னிப்பாக கவனித்தேன். நான் யூகித்தது சரியானது அவன் உச்சரித்தது ஒரு பெண்ணின் பெயர்.'

வைஷ்ணவி வீட்டின் கதவை பூட்டிவிட்டு இரண்டு வயது மகள் ஜய்யப்பாவை தோளில் போட்டுக் கொண்டு நான்குவயது மகள் நித்திலாவின் கைகளை பிடித்திக் கொண்டு கார் பார்க்கிங் நோக்கி நடந்தாள்.
"அம்மா எங்க போறோம்?"
"அப்பாவை பார்க்க, மெதுவா கார்க்குள்ள போ தம்பி எழுந்தா அழுவான்"
நித்திலா காரின் பின் சீட்டில் சென்று அமர்ந்து கொண்டாள். ஸ்வட்டர் அணிந்திருந்தும் நித்திலாவிற்கு அதிகம் குளிர்ந்தது.
"அம்மா ஹீட்டர் ஆன் செய் ரொம்ப குளிருது"
"சரி போடுறேன்"

வீட்டிலிருந்து கிளம்பிய கார் மியாபூர் சிக்னலின் இடதுபுறம் திரும்பி ரோட்டில் சென்றது. காரின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள் பனியை ஊடுருவி சென்றன. சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தவர்கள் சிகப்பு நிற ப்ளூரசண்ட் ஜாக்கெட் அணிந்திருந்தனர். டீ கடைக்காரன் மப்லரை முண்டாசு போல் காதை மறைத்து கெட்டிக்கொண்டு பால் காய்ச்சி கொண்டிருந்த சட்டியினுள் கரண்டியை விட்டி கிண்டிவிட்டான். கொண்டாபூர், கச்சிப்பெளலியை கடந்து அவுட்டர் ரிங்ரோட்டில் கார் சென்றது.

'ஒரு நாள் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு வாக்கிங் சென்றோம். என் இடது கைவிரல்களை அவன் வலது கைவிரல்களுக்குள் நுழைத்து கட்டியாக பிடித்துக் கொண்டு சிமிண்ட் சாலையில் நடந்தோம். எங்களைப்போல் வேறோரு ஜோடி வாக்கிங் வந்திருந்தனர். சாமான்களை கடையினுள் எடுத்து வைத்து மளிகைகடையை பூட்டுவதற்கு தயாராகி கொண்டிருந்தார் கடைமுதலாளி.'
"ரங்கா, கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது காதலிச்சிருக்கீங்களா?

'வெகு நாட்களாக் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தை கேட்டேன். சிறிது நேரம் பதிலேதும் கூறாமல் நடந்தான்.'
"ஆமாம்" என்றான்.
"அவங்க பெயர் என்ன?'
"ஸ்னிக்தா"
"என்ன பெயர் வித்தியாசமா இருக்கு"
"பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவள். என்னோட ஆபிஸ்ல ரிக்கூர்ட்மெண்ட் டீம்ல வேலை செய்திட்டிருந்தா"
"ஸ்னிக்தா பற்றி விரிவா சொல்லுங்களேன்"

'ஸ்னிக்தாவை முதன்முதல ஜிம்ல வச்சி பார்த்தேன். புல்அப்ஸ் எடுத்திட்டு இருந்தப்ப அவள் என் கிட்ட வந்தா.'
"ஹாலோ, அந்த டிரண்ட் மில் மிசனை எப்படி உபயோகிப்பது?" என்று கேட்டாள்.
'அவளுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவள் அவ்வளவாக அதிக எடை கிடையாது. ஜந்தடி எட்டு அங்குலம் உயரம், அறுபத்திஜந்து கிலோ எடை இருப்பாள். இவள் எதற்கு ஜிம்முக்கு வந்தால் என்று புரியவில்லை. மறுநாள் என்னிடம் வந்து கழுத்து பட்டையிலுள்ள சதையை இறுக்க என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று கேட்டாள்."
"நீங்க எதற்கு ஜிம்முக்கு வந்திருக்கீங்க?"
"இதோ பாருங்க இந்த தொப்பையை கொஞ்சம் குறைக்கணும்" என்று தொப்பையில் கை வைத்து கூறினாள்.
"வேற?"
"கை, கால், தோல், மார்பில இருக்கிற சதையை இறுக்கணும்" என்று கூறிவிட்டு காதில் கெட்-போனை மாட்டிக்கொண்டு கழுத்துப்பகுதிக்கான உடற்பயிற்சி செய்தாள்.
'ஸ்னிக்தா வெள்ளைநிறம், உயரத்திற்கேற்ற எடை, உடலுக்கேற்ற மார்பகங்கள், நடக்கும்போது மேலும் கீழும் ஏறி இறங்கும் பின்னழகு. பார்த்த சில நாட்களிலே அவளை எனக்கு பிடித்துப்போனது. அவளிடம் எனக்கு பிடிக்காதது ஒன்றே ஒன்று செவிட்டு மிஷின் போல் எப்போதும் காதில் மாட்டி இருக்கும் கெட்-போன். நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ரிக்கூர்ட்மெண்ட் டீமில் ஸ்னிக்தா வேலை பார்ப்பது பழகிய சில நாட்கள் கழித்தே தெரிந்தது. தேநீர் நேரம், மதிய உணவு நேரம், சாயந்திரம் மிளகாய் பஜ்ஜி தின்பது போன்ற அதிகப்படியான நேரங்கள் அவள் பின்னாலே சுற்றி அலைந்தேன். அவள் மேல் எனக்கு இருந்தது காமமா இல்லை காதலா என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவளிடம் ஒருவித ஈர்ப்பு இருந்தது.'

'மூன்றுமாத பழக்கத்திற்கு பிறகு ஸ்னிக்தாவிடம் காதலை மெயில் மூலம் தெரிவித்தேன். என் மெயில் படித்தவுடன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு பேசினாள்.'
"ரங்கா, நான் ஒருத்தரை காதலிக்கிறேன். அவரை தான் கல்யாணம் செய்துக்கப்போறேன்"
"உண்மையிலே நீங்க வேறொருத்தரை விரும்புறீங்களா இல்ல என்னோட காதலை நிராகரிக்க பொய் சொல்றீங்களா?"
"உண்மையாகவே நான் ஒருத்தரை விரும்புறேன். அவர் பேரு ஆண்டனி. ரெயின்போ எஃப்எம்ல ரேடியோ ஜாக்கியா வேலை செய்கிறார்"
"இதை நம்பளாம்மா?"
"நீ நம்பளைன்னா நாளைக்கு சாயந்திரம் நம்ம ஆபிஸ்க்கு அவர் வருவார் அப்ப நேரவே காட்றேன்."

"ரங்கா, ஸ்னிக்தா காதலனை அடுத்த நாள் பார்த்தீங்களா?"
"வா வீட்டுக்கு போகலாம். மணி பனிரெண்டு இருக்கும். காலையில சீக்கிரம் எழுந்திருக்கணும் மீட்டிங் இருக்கு"
'ரங்கநாதன் மேற்கொண்டு தொடராமல் அவனுடன் வீடு வந்து சேர்ந்தேன். என் யூகிப்பு சரியானதுடன் அவர்கள் இருவரிடையேயும் எந்தவித நெருக்கமான உறவும் இல்லையேன தெரிந்தது ஒருவித மன அமைதியை தந்தது.'

'இரவுவேளை உணவிற்கு ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்றிருந்தோம். ரெஸ்டாரண்டினுள் நுழைந்தவுடன் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. உள்ளே சென்ற சில நிமிடங்கள் கழித்து ஆட்கள் அமர்ந்திருப்பது தெரிந்தது. இரண்டு இருக்கைகள் எதிரெதிர் திசையிலிருந்த மேஜையில் சென்று அமர்ந்து கொண்டோம்.'
"ஹைய்தராபாத்ல குறைஞ்ச விலையில சாப்பிடுற மாதிரி ஹோட்டல் இல்லையா?"

"இல்லை. நாப்பது ரூபாய் இல்ல ஜம்பது ரூபாய்ல சாப்பிடுற மாதிரி நடுத்தர ஹோட்டல் கிடையாது. ஒரு ஆள் சாப்பிட ஹோட்டல் போனா குறைஞ்சது இருநூறு இல்ல முன்னூறு ரூபாய் ஆயிடும். போன மாதம் வரைக்கும் இந்த ஹோட்டல்ல ராத்திரி இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி கிடைக்கும். இப்ப இட்லி, தோசையை தூக்கிட்டு பிரியாணி, ப்ரைட் ரைஸ், நாண் போட்டு மல்டி குசைன் ரெஸ்டாரண்டா மாத்திட்டான். எல்லாரும் காசு பார்க்கணும் ஆச படுறாங்க"

'ஆர்டர் செய்திருந்த நான்கு நாண், சிக்கன்மசாலா, சிக்கன் பிரியாணி வந்தது. வெள்ளை உடை அணிந்திருந்த சர்வர் நாண், சிக்கன்மசாலாவை கண்ணாடி பீங்கானில் பரிமாறினான்.'
"சிக்கன்மசாலா க்ரேவி நல்லா இருக்கு"
"விலை எவ்வளவு தெரியுமா நூறு ரூபாய்"
"ஸ்னிக்தாவோட காதலனை அடுத்த நாள் பாத்தீங்களா?"

"இது ஆண்டனி எஃப்எம் ரெயின்போல ரேடியோ ஜாக்கியா வேலை செய்கிறார்."
' என்று காதலனை காட்டினாள். ஓணான் மாதிரி ஒல்லியாக இருந்தாள். முக அமைப்பு இல்லாதவன். தலைமுடியை கலரிங் செய்திருந்தான். காதில் கடுக்கன் போட்டிருந்தான். சட்டையின் வெளியே தெரிந்தபடி யேசுநாதர் சிலுவையில் அறைந்தபடி முத்துமாலை அணிந்திருந்தான். ஆள் கருப்பாக இருந்தான்.'

"இவர் ரங்கநாதன் என்னோட கம்பெனியில வேலை பார்க்கிறார்" என்று என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.

"நீங்க எஃப்எம்ல வேலை பார்க்குறீங்க. இவா சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்றா. உங்க இரண்டு பேர்த்துக்குள்ளேயும் எப்படி காதல் வந்தது?"

"ரங்கா, ஆண்டனி சொந்த ஊர் ஒரிஸால இருக்கிற கந்தமால் மாவட்டத்தில் இருக்கு. எனக்கு பஞ்சாப். ஆண்டனியை ஹைய்தராபாத் வந்த பிறகுதான் தெரியும். அதுவும் என்னைக்கு ரெயின்போ எஃப்எம்ல ஆண்டனியோட ப்ரோக்ராம் கேட்க ஆரம்பிச்சேனோ அன்னையில இருந்து ஆண்டனி பின்னாடி சுத்த ஆரம்பிட்டேன். நீ எஃப்எம் கேட்பியா?"

"கேட்கமாட்டேன். அதுல இண்டர்ஸ்ட் இல்லை. வந்ததில் இருந்து நீயும் நானும் மட்டும் பேசிக்கிட்டு இருக்கோம். ஆண்டனி எதுவுமே பேச மாட்டீங்காரே?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல, சும்மாத்தான்"

"மைக்கை மட்டும் கொடுத்துப்பாருங்க சும்மா பின்னி எடுத்துடுவாரு" என்றாள்.

"ரேடியோ கேட்கிறது என்னோட பொழுதுபோக்கு. டிவி பார்க்கிறத விட எனக்கு எஃப்எம் கேட்கிறது ரொம்ப பிடிக்கும். இந்த பழக்கம் என்னோட அப்பாகிட்ட இருந்து வந்திச்சி. அப்பா ஊர்ல கடை வச்சிருக்கார். கடையில எப்போதும் ரேடியோ கேட்டுட்டு வியாபாரம் செய்வார். இன்னிக்கு வரைக்கும் எங்க வீட்ல மொத்தம் பதினைந்து ரேடியோ இருக்கும். நேஷனல் கம்பெனியோட ரேடியோ, வால்வு ரேடியோ கூட இருக்கு. இந்த மொபைல்போன் கூட அப்பா வாங்கி கொடுத்தது. இதிலயும் ரேடியோ இருக்கு. ஆண்டனியை நான் விரும்ப ஆரம்பிச்சது அவனோட முகத்தை பார்த்து இல்ல அவனோட குரலை கேட்டு. அந்த மாதிரி குரல் எல்லோருக்கும் கிடைச்சிடாது. அவனோட குரல்ல இருக்கிற மென்மை, அதுவும் இரவில் தனியா கட்டிலில் படித்துட்டு அவனோட ப்ரோக்ராம் கேட்டா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா!"

"ஏய் ஸ்னிக்தா உன்னோட கதையை கேட்டு மனுஷன் தூங்கிட்டார்" என்று ஆண்டனி கிண்டலாக கூறினான்.

'வெள்ளைநிற உடை அணிந்திருந்த சர்வர் சிக்கன் பிரியாணியை பரிமாறினான்.'

"ரங்கா, ஸ்னிக்தாவோட போட்டோ உங்ககிட்ட இருக்கா?"
"ஆமாம், என்னோட மொமைல்ல இருக்கு. இதான் ஸ்னிக்தாவோட போட்டோ"
"வாவ். எவ்வளவு அழகா இருக்காங்க. இப்ப உங்க ஆபிஸ்ல தான வேலை செய்றாங்க?"
"இல்லை"
"வேற எங்க வேலை செய்றாங்க?"
"இறந்துட்டா"
"எப்படி ரங்கா?"
"ஹொனர் கில்லிங்(Honour Killing) பற்றி கேள்வி பட்டிருக்கியா?"
"அப்படின்னா?'

"தன்னோட கெளரவத்தை காப்பாத்திக்க தான் பெத்த பிள்ளைங்களையே கொல்றது. தெளிவா சொல்லணும்னா சாதிவிட்டு வேற சாதி கல்யாணம் செய்தாலோ, மதம் விட்டு வேற மதம் கல்யாணம் செய்தாலோ கட்டிங்கவங்களோட அப்பாவோ, அண்ணனோ அவங்களை கொலை செய்துடுவாங்க. இதுக்கு அவங்க சொல்ற காரணம் கெளரவம் கெட்டுப்போச்சி, வீட்டோட மானத்தை கெடுத்துட்டா அதனால அவங்க இரண்டு பேத்தையும் கொன்னுட்டோம். ஸ்னிக்தா ஹிந்து, ஆண்டனி கிரிஸ்டியன். ஸ்னிக்தா கல்யாணத்துக்கு சம்மதம் கேட்ட போது அவளை வீட்ல வச்சி பூட்டிட்டாங்க. எப்படியோ தப்பிச்ச்சி ஹைய்தராபாத் வந்தா. ஹைய்தராபாத்ல ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துட்டு பம்பாய் போயிட்டாங்க. கல்யாணம் முடிஞ்ச ஒரு வருசத்தில அவா இருக்கிற இடத்த கண்டுபிடிச்சி இரண்டு பேத்துக்கும் மறுபடியும் கல்யாணம் செய்து வைக்கப்போறதா அன்பா பேசி பஞ்சாப் கூட்டிட்டு போனாங்க. ஸ்னிக்தாவோட அண்ணன் போகிற வழியிலே இரண்டு பேரையும் கொன்னு ஆத்தில தூக்கிப்போட்டு போலீஸ்ல தற்கொலையினு சொல்லியிருக்கான். இந்த விஷயம் ஆண்டனி வீட்ல தெரிஞ்சி இது தற்கொலை இல்ல கொலைன்னு கோர்ட்ல கேஸ் போட்டங்க. இரண்டு வருசம் ஆச்சி இன்னும் கேஸ் முடியல. இந்த மாதிரி கொலைகள் வருசத்துக்கு ஆயிரம் நடக்குதுன்னு புள்ளிவிவரம் சொல்லுது. ஹரியானா, மத்தியபிரதேசம், பீகார்ல வருசத்துக்கு எண்ணூறு முதல் தொள்ளாயிரம் இந்த மாதிரி கொலைகள நடக்குது. இதை தவிர்த்து மற்ற மாநிலங்களில் மொத்தம் நூறு கொலைகள் நடக்குது. ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் இந்த கொலைகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர். ஸ்னிக்தாவோட உடலை பிரேத பரிசோதனை செய்த போது மூன்று மாத கர்ப்பமாக இருந்தாள்"

கார் ராஜீவ்காந்தி இண்டர்நேஷனல் ஏர்போர்ட்க்கு வந்து சேர்ந்தது. காரினுள் நித்திலாவும், ஜய்யப்பாவும் நன்கு தூங்கிக் கொண்டிருந்தனர். ரங்கநாதன் இரண்டு மாத அலுவலக வேலையாக ஜெர்மனி சென்றிருந்தான். அவன் இல்லாத இரண்டு மாதமும் அவனின் நினைவுகளே வைஷ்ணவிக்கு துணையாக இருந்தது. அந்த நினைவுகளை மனதில் அசைபோடுவதே அவளின் தினப்பொழுதின் வேலையாக இருந்தது. இன்று ரங்கநாதன் ஜெர்மனியிலிருந்து வரும் நாள். அவன் வருகைக்காக கார் கண்ணாடியின் கதவினை திறந்து கொண்டு டிசம்பர் மாத காலை காற்றை சுவாசித்தபடி சாலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.


-------------------------------------முற்றும்----------------------------------------------------------

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.