இணைய உலகில் கிட்டத்தட்ட மூன்று கோடிக்கும் மேல் வலைபூக்கள் உள்ளதாக ஆய்வு சொல்கிறது. அவை அனைத்தையும் நாள்தோறும் படிக்கும் வாய்ப்பு நமக்குக் கிட்டுவதில்லை. ஆனால் ஒரு சில வலைப்பூக்களில் மிகவும் நேர்த்தியாக, பல பயனுள்ள தகவல்கள் மற்றும் இலக்கியம் சார்ந்த செய்திகள், பதிவுகள் நமக்குக் கிடைத்த வண்ணம் உள்ளது. அதுபோன்ற வலைப்பூக்களில் காணக் கிடைக்கும் ஒரு சில அழகிய அறிவார்ந்த செய்திகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வதே இந்த இணைப்பின் நோக்கம்.
நாங்கள் வாசித்த வலைப்பூக்களில் எங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில தகவல்களை மட்டும் இங்கு பதிவு செய்கிறோம். வாசகர்களும் இதில் பங்கேற்கலாம். நீங்கள் படித்த வலைப்பூக்களில் உங்களைக் கவர்ந்த தகவல்களை இங்கு பதிவு செய்யலாம். அல்லது உங்கள் வலைப்பூவில் உள்ள ஒரு சில நல்ல தகவல்களை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளலாம்.
இந்தப் பகுதியில் திரைப்படங்கள் சார்ந்த வலைபூக்கள் மட்டுமே வசகர்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியப் பகுதியில் இலக்கிய வலைப்பூக்களும், பொழுதுபோக்கு வலைப்பூக்களும், மற்ற வலைப்பூக்களும், தமிழ் வரலாறு பிரிவில் வரலாறு சார்ந்த வலைப்பூக்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வலைப்பூத் தகவல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
|