 |
நல்ல பணிகளுக்காக வாரி வழங்குவதில் தமிழர்கள் அனைவரும் என்றுமே வள்ளல்களாக இருந்துள்ளனர். அந்த உறுதியான நம்பிக்கையில் தொடங்கப்பட்டதே இந்த உண்டியல் இயக்கம். நல்ல பல திறமையான இளம் இயக்குனர்கள் தமிழ்நாட்டில் புதைந்து கிடக்கின்றனர். அவர்களை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் உண்டியல் இயக்கம் செயல்படுகிறது. ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான அதன் வரலாறு, மொழி, இனம் மற்றும் கலாச்சாரம் என ஒவ்வொரு நிலையும் காக்கப்பட வேண்டியது. |
ஆனால் இந்தியா போன்ற தேசங்களில் அடுத்த வேலை சோற்றுக்காக திண்டாடும் மக்களே பல கோடி உள்ள நிலையில் இது போன்ற செயல்கள் நடைபெறுவது இயலாது. ஆனால் தனக்காக வாழாமல் பிறர்க்காக வாழும் ஒரு சில ஆன்றோர்கள் தான் இந்த உலகம் செழுமையுற காரணம். அவர்கள் மனம் வைத்தல் இந்த இயக்கம் மாபெரும் வெற்றி அடையும் என்பதில் எமக்கு ஐயம் ஏதும் இல்லை.
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இன்னும் சில ஆண்டுகளில் அழியப் போகும் மொழிகளில் தமிழும் ஒன்று. இது போன்ற அறிக்கைகள் தமிழர்களை கொதிப்படையச் செய்யும். ஆனால் உண்மை அதுதான். ஆனால் இதற்கு முன்னரே நாம் இழந்து விட்ட நம்முடைய செல்வங்கள் பல. அவற்றிற்காக நாம் ஒரு நாளும் வருந்தியது கிடையாது. இனி இழக்கப்போகும் அடையாளங்களுக்கும் ஒரு சிலர் வருந்தப் போவது கிடையாது. ஆனால் வருந்தும் உள்ளங்களே உங்களுக்காக இனி நாம் நம்முடைய எந்த அடையாளங்களையும் இழக்கப்படக்கூடாது என்கிற அக்கரையிலும், இழந்து விட்ட செல்வங்களை ஆவணப்படுத்தி மீட்டெடுக்கும் உறுதியுடனும் தொடங்கப்பட்ட இயக்கமே இந்த உண்டியல் இயக்கம்.
ஒரு சில பெருந்தகைகள் மனது வைத்தால் மறைக்கப்பட்ட அல்லது மறைந்துபோன தமிழகத்தின் வரலாறு, இனம், மொழி போன்றவற்றின் ஆவணங்கள் மீட்டெடுக்கபடலாம். டாவின்சி வரைந்த மோனோலிசா ஓவியம்தான் இந்த உலகில் மிகச்சிறந்த ஓவியமாகக் கருதப்பட்டு வருகிறது. ஆனால் என்னுடைய நண்பர் ஒருவர் பேசுகையில் மோனோலிசா ஓவியத்தை விட மிகச்சிறந்த ஓவியங்கள் தமிழர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வரையப்பட்டு விட்டது போன்ற செய்தியை பகிர்ந்து கொண்டார்.
இது போன்ற கலை சார்பான செய்திகளும், மேலும், உலகின் மூத்த மொழியான தமிழன் பெருமைகள் பற்றியும், பல்வேறு ஆவணங்கள் உலகெங்கும் தமிழர்களிடையே விரவிக் கிடக்கின்றன. ஆனால் அவற்றை பதிவு செய்ய நல்ல களம் அமையாமல் அத்தகைய ஆவணங்கள் அவர்களுடனேயே அழிந்து போகும் அபாயம் உள்ளது. அத்தகைய ஆவணங்கள் பதிவு செய்யப்பட, மேலும் பல ஆவணங்கள் கண்டுப்பிடிக்கப் பட, சிதறிக் கிடக்கும் ஆவணங்கள் ஒன்று சேர்க்கப் பட என ஒட்டுமொத்தப் பணிகளுக்கும் பணம் ஒரு தடையாக உள்ளது. எனவே இது போன்ற ஆவங்கள் சேகரிக்க விரும்பும் ஆர்வலர்களுக்கும், அவர்களுக்கு உதவ முன்வரும் நல்ல உள்ளங்களுக்கும் பாலமாக இந்த உண்டியல் இயக்கம் செயல்பட விரும்புகிறது.
இயக்குனர்களுக்கு:
 |
மிக அரிதான ஆவணங்கள் சேகரித்து அவற்றை ஆவணப்படங்களாக பதிவு செய்ய விரும்பும் இயக்குனர்கள் அந்த ஆவணங்கள் பற்றிய குறிப்புகளையும், அவற்றை சேகரித்து ஆவணப்படமாக பதிவு செய்ய ஆகும் செலவுகளையும் ஒரு திட்ட தீட்டி, அந்த திட்டத்தை தமிழ் ஸ்டுடியோவிற்கு அனுப்பி வைக்கும்படியாக கேட்டுகொள்ளபடுகிறார்கள். மேலும், அந்த பதிவுகளின் திருட்டைத் தடுக்கும் பொருட்டு எங்களுக்கும் அனுப்பும் பிரதியை, உங்களுக்கும், சுய விலாசமிட்டு அஞ்சல் செய்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
உங்கள் ஆவணங்கள் பற்றிய குறிப்புகளை சுவைபட, அதன் வீரியம் குறையாமல், மேலும், செலவுகளை அழகாக வரிசைப்படுத்தி, அந்த ஆவணங்களின் அருமைகளை அனைவரும் எளிதில் புரிந்துக் கொள்ளும்படியும் எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். ஏனெனில் அந்த திட்டத்திற்கு உதவ விரும்பும் அன்பு உள்ளங்களுக்கு நீங்கள் குறைந்த பட்ச ஆர்வத்தையாவது ஏற்படுத்த வேண்டும்.
உதவும் அன்பு உள்ளங்களுக்கு:
 |
இங்கு காணப்படும் ஆவணங்களை, ஆவணப்படங்களாக பதிவு செய்ய ஆகும் ஒட்டுமொத்த செலவுகளையும் ஒருவரே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பங்களிப்பாக அந்த திட்டத்திற்கு உங்களால் முடிந்த அளவு உதவித் தொகையாக அனுப்பி வைத்தால் போதும். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ஆன செலவுத்தொகை கணக்கு உங்களுக்கு தெரிவிக்கப்படும். உங்கள் உதவி அனைத்தும் தகுதி உடைய ஒரு இயக்குனருக்கு சென்று சேர்வதை மட்டுமின்றி அவை செலவு செய்யப்படும் விதத்தையும் தமிழ் |
ஸ்டுடியோ உங்களுக்கு தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்கும். உங்களின் இந்த சிறு உதவி நீங்கள் சார்ந்த அந்த இனம் மொழி மற்றும் வரலாறு போன்றவற்றை காக்கும் அரணாக விளங்கும் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள். நீங்கள் உதவி செய்து ஆவணப்படங்களாக வெளிவரும் படைப்புகளின் வெளியீட்டு விழாவிற்கு, உதவி செய்த ஒவ்வொருக்கும் அழைப்பு விடுக்கப்படும். உதவிய உள்ளங்கள் கௌரவிக்கப்படும்.
உங்கள் உதவி தொகையை கீழ்கண்ட வங்கி எண்ணுக்கு ஆன்லைன் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். அல்லது வேறு வழிகளில் நீங்கள் பணம் அனுப்ப விரும்பினால் உங்களுக்கு அதற்க்கான வழிமுறை தெரிவிக்கப்படும். பின்னர் அந்த வழிமுறையின் படி பணத்தை அனுப்பி வைக்கலாம். தமிழ் ஸ்டுடியோ இங்கு ஒரு பாலமாக மட்டுமே செயல்படும். அதற்க்காக நீங்கள் அனுப்பும் தொகையிலிருந்து ஒரு ரூபாய் கூட தன்னுடைய வளர்ச்சிக்காகவோ, அல்லது சர்வீஸ் சார்ஜாகவோ எடுத்துக்கொள்ளப் படாது. உங்கள் தொகை முழுவதும் அந்த ஆவணப்பட இயக்குனர்களையே சென்றடையும்.
 |
|
| |
|
| ICICI வங்கி |
|
உங்கள் உதவி தொகையினை கீழ்க்கண்ட வங்கி கணக்கு எண்ணிற்கு மாற்றம் செய்த பின்னர் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வங்கி கணக்கு எண்ணில் போடலாம். அல்லது ஆன்லைன் மூலமாக பணப்பரிமற்றமும் செய்யலாம். பணமரிமாற்றம் செய்த பின்னர் தங்கள் முகவரி, தொலைபேசி என் முதலியவற்றை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
|
|
| |
|
வங்கி கணக்கு எண்: 000101564346
|
|
| கணக்கு வைத்திருப்பவர் பெயர்: அருண். மோ (Arun M.) |
|
கிளை: செனோடப் சாலை, சென்னை (Cenotaph Road, Chennai) |
|
|