தமிழ்த்திரையுலகில் அதன் போக்கை மாற்றிய பல திரைப்படக் கலைஞர்களின் நேர்காணல் இந்தப் பகுதியில் இடம்பெறுகிறது. மேலும் குறும்படத்துறையில் தங்கள் தடம் பதித்த பலரின் நேர்காணல்களும் இடம்பெற உள்ளது. சாதாரணமான நேர்காணலாக இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ வாசகர்களே திரைக்கலைஞர்களை நேர்காணல் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக நிழல் நடத்திய குறும்படப் பட்டறையில் திரு. பாலுமகேந்திரா அவர்கள் பேசியத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. மேலும்
முதல் நேர்காணல் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. பி. லெனின் அவர்களுடன் நடைபெற உள்ளது. லெனின் அவர்களை நேர்காணல் காணப்போவது உங்களில் ஒருவர் தான். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். தமிழ் ஸ்டுடியோவைப்பற்றி உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அத்துடன் உங்களிப்பற்றிய விபரங்களையும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். உங்கள் ஆலோசனை, பயோடேட்டா ஆகியவற்றின் அடிப்படியில் ஐவர் தெரிவு செய்யப்பட்டு தமிழ் ஸ்டுடியோ வின் நேர்காணல் நடைபெறும். இதில் தெரிவு செய்யப்படும் ஒருவர்தான் திரு. லெனின் அவர்களை நேர்காணல் காணப்போகும் வாசகர்.
தெரிவு செய்யப்படும் வாசகர் வெளிமாநிலம் அல்லது வெளிமாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் அவரது பயணச் செலவை தமிழ் ஸ்டுடியோ ஏற்றுக்கொள்ளும். மேலும் லெனின் அவர்களை நேர்காணல் செய்யும் வாசகருக்கு பல பரிசுகள் காத்திருக்கின்றன.
உடனே நீங்கள் அனுப்ப வேண்டிய விபரங்கள்:
1. தமிழ் ஸ்டுடியோ மேலும் சிறப்படைய உங்கள ஆலோசனைகள்
2. உங்கள் பயோ டேட்டா (உங்களைப் பற்றிய முழு விவரம், உங்கள் தொலைபேசி என் மிகவும் முக்கியம்)
3. வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: டிசம்பர் 20, 2008
மின்னஞ்சல் வசதி இல்லாதவர்கள் கடிதம் மூலமாக உங்கள் ஆலோசனை மற்றும் பயோ டேட்டாவை அனுப்பி வைக்கலாம்.
கடிதம் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
மோ. அருண்
349, கண்ணகி நகர்,
ஒக்கியம் துரைப்பாக்கம்
சென்னை - 600096 |
M. Arun
349, Kannagi Nagar,
Okkiyam Thuraipakkam
chennai 600 096
|
தொடர்புக்கு: 9840698236 / 9894422268
|