_big.jpg) |
பேச்சால் அறியப்படுவது மொழி. ஆனால் கலையைப் பொறுத்தவரை உணர்வுகளே பேசும். கண்களே பேசும். திரைப்படத்திற்கு அத்தகையக் கண்களாக விளங்கக் கூடியவர் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவு பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் புதிய தொளிழ்நுட்பங்கள் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்ளப் போகிறார். ஒளிப்பதிவாளர் திரு. சி. ஜே. ராஜ்குமார்.
|
இனி அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.
எஸ்.ஜெ. தொழில்நுட்பக் கல்லூரியில் திரைப்பட தொலிழ்நுட்பம் படிப்பை முடித்ததும், பதினைந்து வருடம் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. தங்கபச்சான் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராகப்
பணியாற்றியுள்ளார். "காதல் கோட்டை முதல் "பாண்டவர் பூமி" வரை.
இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஆயீஷா என்ற குறும் படம் சிறந்த படத்திற்கான விருதினை லண்டம் திரைப்பட விழாவில் பெற்றது. கனவு மெய்பட வேண்டும் என்ற திரைப்படம் பின் வரும் மூன்று சர்வதேச அளவிலான திரைப்படம் திரையிடும் விழாவில் திரையிடப்பட்டது.
பெல்ஜியம் சர்வதேச திரைப்பட விழா,
கைரோ சர்வதேச திரைப்பட விழா, மற்றும்
அம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா.
:பெரியார்" என்ற திரைபடத்தின் முக்கியமான பகுதிகளை படமாக்கி அனுபவம் உள்ளவர். மேலும் சிறந்த நிழல் படத்திற்கான பல பரிசுகளை பெற்றவர். பல கல்லுரிகளில் நிழல் படத்திற்கான காட்சி அமைத்தலை நடத்தியவர். இவரது சிறந்த வேலைகள் பல இதழ்களில் பிரசுரமாகி உள்ளது.
இனி விழிகள் உங்களோடு பேசும். மாற்றத்திற்காக உள்ளே வாருங்கள். தொழில்நுட்பத்தை உங்களுக்குள் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.