தமிழையும், தமிழ்நாட்டையும் தாண்டி குடும்ப சுமைகளை சுமக்கும் தமிழர்கள், தாயகம் விட்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என, தமிழர்கள் கிளை பரப்பி இருக்கும் அனைத்து தேசங்களிலும் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் இன்னும் மாறாத, மற்ற முடியாத தமிழார்வ மிகுதியாலும், தமிழ் புலமையாலும், கவிதை, கதை, கட்டுரை என எழுதுவதை கடமையாக கருதுகின்றனர். இவர்கள் மட்டுமே தன் தேசம் தாண்டியும் தமிழ் வளர்ந்ததற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.
அத்தகைய தமிழர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் படைப்புகளை வெளிக்கொண்டுவரும் களமாகவும் இந்த இணைப்பு செயல்படும். எனவே வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் படைப்புகளையும், கட்டுரைகளையும் தமிழ் ஸ்டுடியோவிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும் வெளிநாட்டில் வாழும் சாதனைத் தமிழர்கள் தங்களைப் பற்றியக் குறிப்புகள், தாங்கள் சாதித்த களம் போன்ற தகவல்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் புகைப்படத்துடன் அனுப்பி வைத்தல் நலம்.
|