கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS படிமை படிமை
 
படிமை (தலைப்புக்கு நன்றி : தம்பி சோழன்)

ஆதவன்  

படிமை (திரைப்பட பயிற்சி இயக்கம் தொடக்க விழா)

நாள்: ஞாயிற்றுக்கிழமை , 28-11-2010

இடம்: No. 41, Circular Road, United India Colony, Kodambaakkam, Chennai 600026
Opposite to Liberty theater, neary by kodambakkam Park.

நேரம்: மாலை நான்கு மணியளவில் (4 PM)

வணக்கம் வாசகர்களே,

தமிழ் ஸ்டுடியோவின் கனவுத் திட்டமான "படிமை" திரைப்பட பயிற்சி இயக்கம் தொடக்க விழா எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (28-11-2010) மாலை நான்கு மணியளவில் கோடம்பாக்கத்தில் உள்ள தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் படிமை மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாணவர்களுடன், மேலும் பதினைந்து குறும்பட / இலக்கிய ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எனவே இதில் கலந்துக் கொள்ள விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்துக் கொள்ளவும்.

நவீன தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவரான திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் "படிமை" இயக்கத்தை தொடங்கி வைத்து வாசகர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.

இடத்தை தெரிந்துக் கொள்ள... நிலப்படத்தை பார்க்க (Map)

http://thamizhstudio.com/thodarbukku.php

முகவரி: 

No. 41, Circular Road, United India Colony, Kodambaakkam, Chennai 600026
Opposite to Liberty theater, neary by kodambakkam Park.

மேலும் விபரங்களுக்கு:

9840698236, 9894422268

--------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காமின் மற்றொரு புதிய முயற்சியாக புதிய கலைஞர்களை கண்டுப்பிடிக்கும் முயற்சியாக (மாற்று திரைப்படங்களை உருவாக்கும் முயற்சிக்கு முன்னோடியாக) பத்து ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திரைப்படம் சார்ந்த பயிற்சியளித்து ஒரு புதிய தலைமுறை கலைஞர்களை உருவாக்க தமிழ் ஸ்டுடியோ.காம் முனைந்துள்ளது. இதன் படி திரைப்படம் மட்டுமின்றி இலக்கியம் சார்ந்தும், ஒவ்வொரு பகுதி சார்ந்தும் எப்படி அந்தந்தப் பகுதி சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை புரிந்துக் கொள்ளவும் இந்த பயிற்சி உதவும். இதெல்லாம் பயிற்சிக் கொடுத்து எப்படி புரிய வைக்க முடியும் என்கிற வாதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், தீவிர பயிற்சியின் மூலம் எதுவம் சாத்தியப்படலாம் என்கிற உண்மையும் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்தப் பயிற்சி எல்லாப் பயிற்சிகளும் போன்று தன்னுடைய இயல்புத் தன்மையுடன் இருக்காது. முற்றிலும் மாறுபட்ட, ஒருவிதத் தேடலுடன் இருக்கும் என்பது திண்ணம். பயிற்சிக்கு ஏதும் கால அளவுக் கிடையாது. இவர் ஒரு நல்லக் கலைஞராக வெளிவருவார் என்று தமிழ் ஸ்டுடியோ.காம் கருதும் வரை அவர்களுக்கான பயிற்சி தொடரும். திரைப்படத்தை வெறித்தனமாக நேசிக்கும் எவரும் இந்தப் பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம்.

அதற்கான நிபந்தனைகள்:

1. திரைப்படத்தின் மீது தீராக் காதலும், எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வமும்,
2. அதிகமாக இலக்கியங்களை தேடித் பிடித்து படிக்கும் வழக்கமும்,
3. தொய்வில்லாமல் ஊர் சுற்றும் பழக்கமும் மட்டுமே இதற்கான தகுதிகள்.

இந்தப் பயிற்சிக்காக கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் எல்லா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் பயிற்சியில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். பயிற்சி எல்லா சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை நடக்கும்.

பயிற்சி பற்றி சில வரிகள்:

இதில் நடிப்பு, திரைக்கதை அமைப்பு, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை கோர்ப்பு, படத்தொகுப்பு, இயக்கம் என எல்லாத் துறை சார்ந்தும் பயிற்சி அளிக்கப்படும். ஆனால் இதற்கு முன்னர் ஆர்வலர்களை தயார் படுத்துவதற்காக இந்தியா முழுவதும் சுற்றிப் பார்க்கவும், மிக அதிகமாக ஆர்வலர்கள் விவாதத்தோடு படிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாக இருக்கும். தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், அவர்களின் வட்டார மொழி நடை போன்றவற்றை ஆய்வு செய்வதும் இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று. இதுப் போன்ற தொடர் பயிற்சிகளின் மூலம் ஒருவர் தன்னுடைய உருவாக்கத் (Creative) திறனை வளர்த்துக் கொள்ளலாம். மாதம் ஒரு முறை நிச்சயமாக ஒரு ஊருக்கு ஆர்வலர்கள் ஒன்று கூடியோ, தனித் தனியோ பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இது தமிழ் ஸ்டுடியோவின் கனவுத் திட்டம். ஆர்வமும், துடிப்பும் மேற்சொன்ன தகுதிகளும் உள்ள எவரும் இதில் கலந்துக் கொள்ளலாம். வெறும் கல்லாய் வாருங்கள்..உங்களை அழகிய உயிரோட்டமுள்ள சிலையாய் வடிக்க தமிழ் ஸ்டுடியோ.காம் காத்திருக்கிறது.

இதற்கான கலந்தாய்வுக் கூடம் எதிர்வரும் சனிக்கிழமை (16-10-2010) காலை பத்து மணியளவில் தமிழ் ஸ்டுடியோ.காம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஆர்வலர்கள் முன்பதிவு செய்துவிட்டுக் கலந்துக் கொள்ளலாம். 

முகவரி: 

No. 41, Circular Road, United India Colony, Kodambaakkam, Chennai 600026
Opposite to Liberty theater, neary by kodambakkam Park.

மேலும் விபரங்களுக்கு:

9840698236, 9894422268






 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</