கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

ஆசிரியர் பற்றி

ஆர்.அபிலாஷ்.

எம்.பில் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். சொந்த ஊர் நாகர்கோவில். தற்போது சென்னையில். கல்லூரி ஆசிரியராக பணி. கடந்த 5 வருடங்களாக இலக்கியம், சமூகம், சினிமா, நாடகம், அறிவியல், விளையாட்டு என பல்வேறு துறைகள் சார்ந்து எழுதி வருகிறார். காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சுயசரிதையை தமிழாக்கி தனது இணையத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஒரு குறும்படத் தயாரிப்பில் பங்காற்றி உள்ளார். உயிர்மை பதிப்பகம் இவரது “இன்றிரவு நிலவின் கீழ்” என்ற மொழிபெயர்ப்பு தொகுப்பை வெளியிட்டுள்ளது. உயிர்மையில் கட்டுரைத் தொகுப்பு அச்சில் உள்ளது.

இவரது இணையதளம்: thiruttusavi.blogspot.com.

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
விழி

 

ஆர்.அபிலாஷ்  


புத்திஜீவிகளுக்கு அடுத்தபடி நம் குறும்படவாதிகளின் மனவெளியை ஆக்கிரமித்துள்ளவர்கள் குருடர்கள். விழியின்மை என்று கருத்துருவை ஒரு மாற்றுப் பார்வையாக முன்வைத்து புதிய அவதானிப்புகளை நிகழ்த்துவதற்கான சாத்தியங்களே இதற்கு காரணம். இத்தகைய முயற்சிகளில் ஊனம் குறித்த மிகை மதிப்பீடுகளை நாம் கராறாக புறக்கணிக்க வேண்டும். ஏன் எனில் மிகை சித்தரிப்புகள் ஊனர்களை சமூக மைய ஒழுக்கில் இருந்து மேலும் மேலும் விலக்குகின்றன.

ஒரு குருடன் சாலையில் குச்சியை தட்டியபடி நடந்து வருகிறான். சில சிறுவர்கள் சக்கரங்களை குச்சியால் ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கல்லில் தடுக்கி விழ வேண்டும். அதற்கு அவர்கள் விளையாடுவது இழுவையாக பல நொடிகள் பல கோணங்களில் காட்டப்பட்டு பிறகு நம் பற்கள் நெரிபடும் சமயத்தில் ஒருவழியாய் ஒரு சிறுவன் ’விழுகிறேன் பார்’ என்று கல்லின் முன் குட்டிக்கரணம் அடிக்கிறான். அடுத்து ஒரு ஆசாமி இதே போல் அவராகவே கல்லில் முட்டிக் கொண்டு காயத்தை சோதிக்கிறார். ஆனால் இருசாராருமே கல்லை நகர்த்தி ஓரமாக போடவில்லை. பிறகு கல்லை foreground செய்து குருடனை காட்டுகிறார்கள். அவர் நடக்கிறார் ... கிறார். பிறகு என்ன நடந்தது என்பதை குமுதம் ஆனந்தவிகடன் குறுங்கதை வாசகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.

கல்லை தூக்கி போடுகிறார். அப்போது ஒரு வண்டி சேற்றை வேறு அடித்து போகிறது. அதை அலம்பி விட்டு குருடர் எந்த புகாரும் இன்றி தன் பயணத்தை தொடர்கிறார். நிஜவாழ்வில் உங்கள் மீது சேற்றை அடித்தால், அதுவும் ஒரு சமூகசேவை செய்யும் சுபயோக தருணத்தில் அடித்தால், அடிவயிற்றில் இருந்து “ஓ...” “தே...” போன்ற பிரயோகங்கள் கிளம்பும். ஆனால் குருடர் அப்படி செய்தால் மைய-நீரோட்ட பார்வையாளனுக்கு உச்சுக்கொட்ட தோன்றாதே! இப்படியான தியாகி பாத்திரங்கள் பழைய சினிமாக்களில் விளிம்பு நிலை வேலையாட்களுக்கும், பிறகு தொண்ணூறுகள் வரை படித்த/குடும்ப பெண்களுக்கும் வழங்கப்பட்டது. பிறகு சாதி-பிரகடன படங்கள் உருவான போது தாழ்த்தப்பட்ட சாதியினர் தியாகமூர்த்திகள் ஆனார்கள்.

சுருக்கமாக இப்படம் உருவாக்கும் சித்திரம் போலியானது. ஊனர்களுக்கு உங்களைப் போல் அன்றாட வாழ்க்கையின் தேவைகளும் நெருக்கடிகளும் அவசியத்திற்கு உள்ளன. கல்லைத் தூக்கிப் போடுவது அல்ல அவர்கள் வேலை. சமூகம் குருடனை விட குருடு என்று சொல்வதற்கு இப்படி பாலா பாணியில் பாசிஸ கதைகூறலை மேற்கொள்ள தேவை இல்லை. குறும்படங்கள் மாற்றுசினிமாவுக்கான சிறந்த தளம். அங்கு இத்தகைய பிற்போக்கு முயற்சிகளுக்கு இடமில்லை.

நச்சுனு ஒரு வார்த்தை : வெளிச்சம் தேவை

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</