கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்

துவந்த யுத்தம் - துயரத்தின் சுவடுகள்

ஆதவன்  

கலை என்பது சில நேரங்களில் சமூகத்தின் பிரதிபலிப்பாகவும், சில நேரங்களில் அந்த சமூகத்தின் அவலங்களை தோலுரிக்கும் சாட்டையாகவும், சமூக மாற்றத்திற்கான ஒரு திறவுகோலாகவும் இங்கே சிலாகிக்கப்படுகிறது. கலைஞன் என்பவன் தனக்குள் ஒரு சமூகத்தை கட்டமைத்துக் கொள்ளாமல், தான் கட்டுண்டு வாழ்கின்ற சமூகத்தின் கட்டுகளை உடைத்தெறிகிற மிகப் பெரிய பணியை செய்பவன். அவன் தனக்குள் இருக்கும், உணர்வுகளையும், ரணங்களையும், வழிகளையும் சமூக மேம்பாட்டிற்காக கடத்தி செல்ல ஒரு வழியை நிர்ணயம் செய்கிறான். அதில் ஒன்றுதான் காட்சி ஊடகம். படிப்பதில் கூட சிலருக்கு கொஞ்சம் சுணக்கம் இருக்கும். ஆனால் அதையே காட்சியாக பார்ப்பதில் அவர்களுக்கு எவ்வித மனத்தடைகளும் இருப்பதில்லை. எனவேதான் காட்ச்சிப்படுத்தப்பட்ட எந்த ஒன்றும் போய் சேர வேண்டியவர்களை மிக எளிதாக சேர்ந்துவிடுகிறது.

சமீபத்தில் காணக் கிடைத்த குறும்படம் துவந்த யுத்தம். அசோக் குமார் என்பவர் இயக்கியுள்ள இந்த குறும்படம் தமிழ் சமூகத்தின் நீண்ட கால ஒரு பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சிங்களவர்களால் துன்புறும் தமிழக மீனவர்கள் (குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள்) தங்களின் பிரச்சனையை மைய அரசுக்கு உறைக்கும்படி எடுத்து சொல்ல கையாளும் தந்திரமே துவந்த யுத்தம்.
காட்சி ஊடகங்களில் கூட காதலில் மயங்கிக் கிடக்கும் இளைஞர்கள், புகைப்பிடிப்பதால் புற்றுநோய் வரும் என்று சொல்லி மருத்துவர்களாய் மாறும் இளைஞர்கள், எதனால் எய்ட்ஸ் நோய் வருகிறது என்று கூட முழுமையாக தெரியாமல் அதிலிருந்து எப்படி பாதுக்காத்துக் கொள்வது என்று பிரச்சாரம் செய்யும் பிரச்சார பீரங்கிகளான இளைஞர்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு சமூகத்தின் ஒரு பெரிய பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டதற்காக இந்த இயக்குனரை முதலில் பாராட்டலாம். மேலும் திரைப்படம் என்பதை தாண்டியும், குறும்படம் என்பது ஒரு மாற்று ஊடகம் என்று அவருக்கு தெரிந்திருக்குமாயின் அவரை இந்த குறும்பட உலகிற்கு ஒரு பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.

உணவு உண்பதற்கு முன் கைக்கழுவுதல், இலையாக இருந்தால் அதனை சுத்தப்படுத்துதல், பின்னர் உணவு வகைகளை இலையின் குறிப்பிட்ட இடங்களில் பொருத்துவது என்று நாம் சில ஏற்பாடுகளை செய்து விட்டுத்தான் உண்ண ஆரம்பிக்கிறோம். ஆனால் குறும்படம் எடுக்க வருபவர்கள் குறைந்த பட்சம் தாங்கள் எது சார்ந்து குறும்படம் எடுக்கிறோம் என்கிற சுய பிரக்ஞையோடு மட்டுமாவது கையில் கேமராவை எடுத்தால் குறும்பட உலகம் அவர்களை வாழ்த்தும். ஆனால் ஒரு மிக பெரிய சமூகப் பிரச்சனையை மிக குழந்தைத் தனமாக எடுத்து அதற்கு தங்களின் சார்பில் ஒரு தீர்வையும் சொல்லி விட்டு செல்வார்கள். துவந்த யுத்தம் இதில் கொஞ்சம் தப்பி பிழைத்திருகிறது.

ஆனால் முழுவதுமாக தப்பி பிழைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதுப் போன்ற ஒரு பிரச்சனையை குறும்படமாக்க நினைப்பவர்கள் குறைந்த பட்சம் சில, பல மாதங்கள் அதற்கான தரவுகள் சேகரித்து அதை சரிபார்த்து, யார் பக்கம் நியாயம், அந்தப் பிரச்சனையின் ஊற்று என்ன? என்பதையெல்லாம் ஆய்ந்து முதலில் தங்களுக்குள் அந்த படைப்பிற்கு ஒரு வடிவம் தர வேண்டும். ஆனால் மேலோட்டமாக மட்டுமே இதுப் போன்ற பிரச்சனைகளை அணுகி அதற்கு ஒரு தீர்வும் கொடுத்துவிட்டால் அது இந்த சமூகத்தில் மிக சிக்கலான விளைவுகளை உண்டாக்கும். சமூகப் பிரச்சனையை முன் வைக்கும் எந்த ஒரு படைப்பும் அதற்கான தீர்வை முன் வைக்க கூடாது என்பதே தார்மீக விதி. அந்தப் பிரச்சனையின் வீரியத்தை அது சார்ந்தவர்களுக்கு எடுத்து சொல்வதே அந்த படைப்பின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

ஒரு மத்திய அமைச்சரை கடத்திக் கொண்டு கடலுக்குள் போவது என்கிற இடத்தில் இந்த குறும்படத்தின் சறுக்கல் தொடங்குகிறது. மிக நுட்பமாக கையாள வேண்டிய இடமது. ஆனால் எவ்வித பெரிய திட்டமுமின்றி மிக சுலபமாக ஒரு மத்திய அமைச்சரை கடத்த முடியுமேயானால் இந்தியாவில் இருக்கும் அத்தனை அமைச்சர்களும் ஒரே நாளில் கடத்தப்படுவார்கள். மீனவர்கள் சிங்கள ராணுவ வீரர்களால் வதைக்கப்படுவதை மைய அரசிற்கு ஒரு செய்தியாக சொல்லாமல் ஒரு அதிர்ச்சியாக சொல்ல வேண்டும். அதற்கு ராமேஸ்வரம் வரும் மைய அரசின் அமைச்சரை கடத்திக் கொண்டு, கடலுக்குள் போய், சம்பவத்தை நேரடியாக காட்டினால் மைய அரசு உடனடியாக தங்களுக்கு விமோச்சனம் அளிக்கும் என்று ஏமாந்து போய் கடலுக்கு செல்லும் இரண்டு இளைஞர்களின் கதையை இயக்குனர் விவரிக்கிறார். மையக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நித்திஷ் தனது வேலையை நிறைவாக செய்திருந்தாலும், அறியப்பட்ட ஒரு முகம் குறும்படங்களின் மையத் தன்மையை குழைத்துவிடும் என்பதால் அந்தக் கதாப்பாத்திரத்திற்கு உண்மையான ஒரு மீனவரை தெரிவு செய்திருக்கலாம்.

அப்படியான கதாபாத்திர தெரிவுகளில் நிச்சயம் இயக்குனரின் களம் ஹீரோயிச தாக்குதல்களால் சிதைவுறாமல் காக்கப்பட்டிருக்கும். நித்திஷின் நண்பராக வரும் அந்த மீனவரின் இயல்பான பத பதைப்பு நித்திஷிடம் குறைந்து, கதாப்பாத்திரத்தை தாங்கி நிற்கிறேன் என்கிற மாய கர்வத்தை உண்டு பண்ணி கடைசியில் அவரது நடிப்பின் உழைப்பைக் கெடுத்து விடுகிறது. மத்திய அமைச்சர் கதாப்பாத்திரமும், அவரை கடத்துவதற்கு உதவ நிர்பந்திக்கப்படும் உள்ளூர் எம்.எல். ஏ. காதாப்பாத்திரமும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.. நடிக்கிறார்கள் அவ்வளவுதான்.

கருத்தியல் ரீதியாக இன்னும் இதுப் போல நிறைய குறைகளை சொல்ல முடிந்தாலும், இந்தப் படத்தில் குறை சொல்ல முடியாத ஒரு பகுதி, அதன் தொழில்நுட்பம். கேமராக் கோணங்கள், படத்தொகுப்பு உத்தி, இசை என தொழில் நுட்ப ரீதியாக இந்தப் படம் நிச்சயம் சோடை போகவில்லை. இந்தப் படத்தை பார்க்க தூண்டுவதில் அதன் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு பெரும்பங்கு. ஒளிப்பதிவு செய்திருக்கும் கே. ஜி. வெங்கடேஷ் காட்சிகளை சட்டகங்களுக்கு மிக அழகாக வடிவமைத்திருக்கிறார். அத்தனை துல்லியமான ஒளிப்பதிவு குறும்படத்திற்கான பெரிய பலம். கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு. ஆனால் கடலில் நடக்கும் இரவுக் காட்சிகளில் யதார்த்தம் தவறி விடுவதால் கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. பாலாவின் படத்தொகுப்பு அத்தனை காட்சிகளையும் மிக அருமையாக, கோர்வையாக வடித்திருக்கிறார். அதுவே ஒரு படைப்பிற்கான தேவையை செய்திருக்கிறது. ஏதேதோ புரியாத 'கட்'களின் பெயர் சொல்லி நம்மை மிரள வைக்காமல் தேவையான இடங்களில் சிலிர்ப்பூட்டுகிறார். இசை உண்மையில் இந்தப் படத்திற்கு மிக பெரிய பலமா இல்லையென்றாலும், பலவீனமும் இல்லை. குறும்படத்திற்கான தேவையை செய்திருக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி. அசோக் குமார் நிச்சயம் ஒரு நல்ல இயக்குனராக அடையாளம் காணப்படலாம். ஆனால் அதற்காக குறைந்த பட்ச உழைப்பு தேவைப்படுகிறது என்பதை அவர் புரிந்துக் கொண்டால் அது சாத்தியமாகும்.

இதெல்லாம் தாண்டியும், இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களின் பட்டியலில் துவந்த யுத்தம் திரைப்படத்திற்கும் நிச்சயம் இடமுண்டு.

இந்தக் குறும்படத்தை காண விரும்பும் நண்பர்கள் அதற்கான விலைக்கொடுத்து அதன் இயக்குனர் அசோக் குமாரிடம் பெற்றுக் கொள்ளலாம். குறும்படங்களை இலவசமாக பார்க்கவேண்டும் என்கிற நமது எண்ணங்களை உடைத்து இதுப் போன்ற குறும்படங்களை விலைக் கொடுத்து வாங்குவதன் மூலம் நாமும் குறும்பட வளர்ச்சிக்கான காரணியாக மாறலாம்.

தொடர்புக்கு: அசோக் குமார்: 91-9884211009

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com