கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
குண்டன் - குறும்பட விமர்சனம்

 

ஸ்ரீகணேஷ்  


குறும்படங்களில் நகைச்சுவையை மிக அரிதாகவே காண முடிகிறது..... 'லஞ்சம் வாங்காதீர்கள்', 'எச்சில் துப்பாதீர்கள்', 'கரம், சிரம் வெளியே நீட்டாதீர்கள்' என மெசேஜ் சொல்வதையே பெரும்பாலான குறும்படங்களில் செய்கிறார்கள். ஒரு படைப்பின் மூலம் ஒரு கருத்தை முன் வைக்கையில், அது குறித்தான முழுமையான அறிவோ ஆழமான புரிதலோ இன்றி ஒரு சிறுகுழந்தையின் பக்குவதையே அநேகக் குறும்படங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆயினும், முயற்சி செய்யும் ஆர்வத்தோடும், அடையாளம் பெறும் வெறியுடனும் புதிது புதிதாய் இயக்குனர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். இவர்களால் தான் குறும்படத்துறையும் இயங்குகிறது.

இயக்குனர் முரளி வழக்கமான பாதையில் இருந்து விலகி, சிரிக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்டு 'குண்டன்' குறும்படத்தைக் கொடுத்திருக்கிறார். ஆயினும், அதற்குள் சில கலைத்தன்மைகளைப் புகுத்தி ஒரு வெகுஜனப் படைப்புகுள்ளும் இயக்குனர் தன் தனித்திறமையை காட்ட முடியும் என நிரூபித்துள்ளார். வாழ்த்துக்கள் நண்பரே!! வசனங்களே இல்லாது காட்சிகளைக் கொண்டே கதையை நமக்கு அழகாகப் புரிய வைக்கிறார். பல இடங்களில் மனம் விட்டு சிரிக்க வைக்கிறார்.

குண்டாக இருக்கும் கதாநாயகன், தன் தோழியை காதலிக்கிறான். அவளிடம் அதைச் சொல்ல தடையாய் இருப்பது, அவனின் உடல் தோற்றம். தன் காதலைச் சொல்லும் முன், எப்படியாவது இளைக்க வேண்டுமென்று பட்டினி கிடந்து, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து எவ்வளவோ முயற்சிக்கிறான். இறுதியில் அவன் காதலிக்கும் பெண், அவனை விட குண்டான ஒருவனுடன் வந்து இவர் தன் என் காதலன் என அறிமுகப்படுத்துகிறாள். நொந்து பொய் 2 நிமிடங்கள் வருத்தப்படுபவன், பின்பு இத்தனை நாள் சாப்பிடாமல் வைத்திருந்த அனைத்துத் தின்பண்டங்களையும் வெறித்தனமாக சாப்பிடத் துவங்குகிறான். இந்தக் காட்சியில் சிரிப்பதோ, அவனுக்காக வருத்தப்படுவதோ பார்வையாளர்களின் மனவியலைப் பொருத்தது. ஒரு எளிமையான கருவை எடுத்துக் கொண்டு, மிக சிறப்பாக திரை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

திரைப்படக் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கியுள்ள இக்குறும்படம், பெரும்பான்மையான இடங்களில் சரியான இலக்கணத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. சிற்சில உள்புறக் காட்சிகளிலும், இரவு நேர ஷாட்களிலும் ஒரு அவசரம் தெரிகிறது. எல்லாக் குறும்பட இயக்குனர்களுக்கும் இருக்கும் நேரமின்மை, பட்ஜெட் நெருக்கடிகள் போன்றவையே காரணம் என எண்ணுகிறேன் ....

படத்தின் கதாநாயகன் கார்த்திகேயன். காதல், ஏமாற்றம், ஆசை என பல்வேறு உணர்வுகளை முடிந்த அளவு முக பாவனைகளில் வெளிபடுத்தியுள்ளார். காமெடி காட்சிகள் இவருக்கு அபாரமாக வருகிறது. முகத்தில் எப்போதும் ஒரு சிறிய குறும்பை வைத்திருக்கிறார். இவரே ஒரு இயக்குனரும் கூட. 'கார்த்திஸ் கனவு' இவருடையது தான். ஒளிப்பதிவாளர் சூரஜ் நெறைய ஷாட்களை வெவ்வேறு ஒளியமைப்பில் எடுத்திருக்கிறார், அதை எடிட் செய்திருக்கும் முரளி சிறப்பாகவே கோர்த்திருக்கிறார். இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருப்பது தெரிகிறது.படத்தில் மிகப்பெரும் பங்கு வகிப்பவர், இசையமைப்பாளர் அனில். படத்தின் உணர்வை நமக்குக் கடத்துவதே இவரின் இசை தான். இவர்களின் டீமுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இயக்குனர் மகேந்திரன் கூறியிருந்தார்- '' தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சொத்து, நம் நகைச்சுவைக் கலைஞர்களே. வேறெந்த மொழித் திரைப்படங்களிலும் இந்த அளவு இயல்பான நகைச்சுவையைக் காண முடிவதில்லை.

ஆஸ்கார் விருதுக்கு நம் நகைச்சுவை நடிகர்கள் மிகவும் தகுதியானவர்களே.."

குண்டன் போன்ற நகைச்சுவைக் குறும்படங்கள் தமிழில் நிறைய வரவேண்டும். நகைச்சுவை என்றாலே உடனே காதலையே கையிலெடுக்கிறார்கள்..... வெவ்வேறு களங்களில் இருக்கும் நகைச்சுவையைத் தேடி படைப்பாளிகள் பயணிக்க வேண்டும் என்பதே நம் எதிர்ப்பார்ப்பாய் உள்ளது. அவ்வகையில் குண்டன் நல்லதொரு பங்களிப்பை செய்துள்ளது.

- ஸ்ரீகணேஷ்

இக்குறும்படத்தைக் காண:

http://thamizhstudio.com/shortfilms_kundan.php

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)