கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
ஏழுமலை ஜமா - குறும்பட விமர்சனம்

 

செந்தூரன்  


ஆடிக்கொண்டிருக்கும் கால்களை எந்நாளிலும், எவரினாலும் கட்டிவிடமுடியாது. கட்டிவிட்டாலும், என்றும் தரையில் நிற்காத கால்கள் எப்படியும் திமிறி கட்டுகளை பிய்த்தெறிந்துவிடும். பவா செல்லத்துரையின் "ஏழுமலை ஜமா" எனும் உயிரோட்டமான சிறுகதையினை தழுவி எஸ். கருணாவால் எடுக்கப்பட்டது இந்த ஏழுமலை ஜமா குறும்படம்.

பெங்களூர் சந்தையில் உள்ள காய்கறி மண்டியில் கூடைதூக்குபவரான ஏழுமலை வாத்தியார் கூடவே அவரின் உடலின் அங்கங்களின் ஒன்றாகிப்போன கூத்துச் சலங்கையையும் எடுத்துக்கொண்டு இருண்மையிலே தன் சொந்த ஊரினை நோக்கி புறப்படுகிறார். பயணத்தில் குனிந்துகொண்டவரின் தலைப்பகுதியிலிருந்து ஜமாவின் வீரியமான நடை விரியத்தொடங்குகிறது. ஏழுமலை வாத்தியாரும், குழுவினரும் கூத்து போடுவதற்காக ஊருக்கு வருகின்றனர். வழியினில் சாராயத்தினை அளவாக அருந்திவிட்டு ஊருக்குள் செல்லுகின்றனர். சிறு ஒற்றையடிப் பாதையினூடே கிராமத்தினை அடைந்து அங்கு பக்தியுடன் குளித்து கூத்திற்க்கு ஆயத்தப்படுத்திக்கொள்கின்றனர். எல்லாமும் முடிந்து கூத்தும் ஆரம்பம் ஆகிறது. பாஞ்சாலி சபதம் எனும் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதில் ஏழுமலை வாத்தியார்தான் துரியோதனனாக வேஷம் கட்டுகிறார். கூத்தில் துரியோதனன், தம்பி துச்சாதனனிடம் பாஞ்சாலியின் புடவையினை அவிழ்த்து எரிவாயென ஆணையிடுகிறான்.

அதன்படியே துச்சாதனன் அவளின் சேலையினை அவிழ்க்க அவள் கிருஷ்ணனை நினைந்து உருகி கதறுகிறாள். அதன்படியே கிருஷ்ணன் அவளை காப்பாற்றுகிறான் என கூத்து முடிவடைகிறது. கூத்து முடிந்தவுடன் வாத்தியார் தன் பரிவாரங்களை ஊருக்கு அனுப்பிவிட்டு தன் இரண்டாம் தாரம் வீட்டிற்கு செல்கிறார். அவளும் வாத்தியாருக்காகவே காத்திருந்தவள் போல் கதவினை திறந்து உள்ளே அழைத்து அவருக்கு விருந்து அளிக்கிறாள். பின் அவரின் கால்களை பிடித்துவிடுகிறாள். ஏழுமலை வாத்தியார் அன்றைய இரவினை அவளுடனேயே கழிக்கிறார். விடிந்தவுடன் தன் சொந்த ஊர் நோக்கி புறப்படுகிறார். அங்கே அவரின் வீட்டில் மனைவி கரித்து கொட்ட சிரித்தபடியே அதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு வெளியே செல்கிறார். அங்கே அவருக்கு அதிர்ச்சியாய் அவரின் சக ஜமா கலைஞன் செய்தி சொல்கிறான்.

ஊரில் திருவிழாவின்போது சினிமா படம் போடுவதாயும், கூத்திற்கு அதிகம் செலவாவதாயும் சினிமாவிற்கு இருநூறு, முன்னூறு மட்டுமே செலவு குறைக்கபடுவதாயும் கூற அவர் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்று சாராயம் குடிக்கிறார். வருடங்கள் கடக்கிறது. அடுத்த வருடமும் இந்த சினிமாக்காரர்களின் ஆதிக்கமே இருக்க அவரின் உள்ள இருந்த கலைஞன் வெறிகொண்டு அலைந்து தனியே ஆட ஆரம்பிக்கிறான். வருடங்கள் உருளுகின்றன. சினிமா, டான்ஸ் என எல்லாமுமே மாறுகிறது. ஏழுமலை வாத்தியாரின் கூத்துகுழுவினர் ஒவ்வொருவரும் தொழில் தேடிக்கொள்ளலாம் என்று வெவேறு தொழில்களை கூற இது எதிலுமே மனதை கூத்தினை விட்டுக்கொடுத்து அப்படியொரு வாழ்க்கை நமக்கு தேவையில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். பாஞ்சாலி சபதத்தில் வேஷம் கட்டிய ஒவ்வொருவரும் செய்யும் வேலைகள் நம் கண் முன்னே திரையில் விரிகிறது. தந்திரதாரி கண்ணன் கரும்பு வெட்டுகிறான், பாஞ்சாலி சித்தாளாக வேலை பார்க்கிறாள், துச்சாதனன் ரிக்ஷா இழுக்கிறான், இதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்துவிட்டு நமக்கு மரியாதையில்லா ஊரினில் இருக்க வேண்டாமென எண்ணி இரவோடு இரவாக மனைவியிடம் கூறிவிட்டு பெங்களூர் செல்கிறார். பெங்களூரின் முகம் இவரை ஒருமையிலேயே வரவேற்கிறது. மண்டியில் எப்போதுமே இருக்கும் அழுகிய இலைகளின் வாடையும், ஜல் ஜல் என எப்போதும் கூத்தாடும் கால்கள் அங்கும் ஆடுகிறது, காய்கறி மூட்டைகளை சுமப்பதற்காய் சலங்கையின்றி. எப்போதுமே ஒருமையிலேயே பேசக்கூடிய முதலாளிகள்,சக தொழிலாளிகள் என ஒவ்வொருவரும் வாத்தியாரை ஓடு ஓடு என விரட்டுகிறார்கள்.வாத்தியாரின் அகன்ற விரிந்த முடியினை கேலி செய்யும் இவரின் மகனைப்போன்று இருப்பவன் "ஏழுமலை கூத்து போடும்போது மட்டும்தான் இந்த ஜிட்டு தலையாய வெட்டிட்டு கிராப்பு வெட்டிக்கடா" என கிண்டல் செய்கிறான். மீண்டும் அவரினுள் இருக்கும் கலைஞன் தலையெடுக்க ஆரம்பிக்கிறான். அவர் தன்னையும் அறியாமல் கூட்டத்தின் நடுவே ஆடி விழுந்து விடுகிறார்.

மேலும் இனிமேலும் இருக்க வேண்டாம் என முடிவுகொண்டு அங்கிருந்து மீண்டும் தன் ஊரினை நோக்கிவருகிறார். வீட்டுக்கு வந்தவுடன் மனைவி கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் படுத்துக்கொள்கிறார். விடிந்ததும் ஊரில் இருப்பவர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகள் ஊசியாய் குத்துகிறது. பதில் சொல்லமுடியாது அங்கிருந்து வேகமாய் கிளம்புகிறார். வாத்தியார் ஊரிற்கு திரும்பி வந்ததை கேள்விப்பட்ட ஜமா குழுவினர் வாத்தியாரிடம் மீண்டும் வேறு வேலைக்கு போவதைப்பற்றியே பேச அவர் கோபத்துடனும், ஆதங்கத்துடனும் "எவனாச்சும் கூத்துப்போடலாம் வாத்யாரேனு சொன்னீங்களாடா " என கண் கலங்கி அழுகிறார். அனைவரும் வெளியேறி செல்கின்றனர்.வாத்தியாரின் கைகளை பிடித்து ஒரு பெரியவர் எதையும் விட்டுவிடாதே என அழுகிறார். இரவு தன் ஆற்றாமையினை மது அருந்திவிட்டு மிக வேகமாக சைக்கிளினை ஓட்டுகிறார். வேகம் தாளாமல் கீழே விழுகிறார். கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்து பீடியினை எடுத்து பிடிக்கிறார். பின் பாடுகிறார்.

அவர் பாடலை குழப்பும் விதமாய் தூரத்திலிருந்து கூத்து சப்தம் கேட்கிறது. அதை கூர்ந்து கவனித்தபடியே அதை நோக்கி செல்கிறார் அங்கே சிறு குழுவினர் கூத்து பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். நடவு தவறாய் இருப்பதை உணரும் வாத்தியார் சிங்கமாய் நுழைந்து அடவு எடுத்து ஆடி அவர் சுருண்டு விழுகிறார். விளக்கின் வெளிச்சத்தில் அவர் யாரென தெரிந்து இவர் "நம்ம ஏழுமலை வாத்தியார்" கூறிவிட்டு "சரி ஓடிப்போய் தண்ணி எடுத்துட்டு வாங்க" என கூற அனைத்து கால்களும் வேகமாய் தண்ணீர் எடுக்க மறைகிறது.

சிறுகதையினை தழுவி குறும்படம் எடுப்பது என்பது இலகுவான காரியமில்லை. காலங்கள் எப்போது வண்ணத்துப்பூச்சியாய் பறந்துவிடுவன. திரைக்கதையின் வடிவம் சிறுகதையினை எந்த மாற்றமும் இன்றி பயணப்பட்டிருப்பதுதான் திரைக்கதையின் வீரியம். கட்டிப்போடப்பட்ட கலைகளும்,காட்டிக்கொடுத்து ஊழிக்கூத்து காண்பிக்க பயன்படுத்தப்பட்ட கலைகளும் நம்முடையதுதான். தமிழன் தமிழன் என மார்தட்டி "வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்" என சினிமா வசம் பேசும் கரை வேட்டிக்காரர்களிடமும் நாம் வேண்டுவது என்னவாய் இருந்துவிடும்???

கலைகளையும் கலைஞர்களையும்(??) வாழவையுங்கள் என்று நம்மால் கேட்டுவிடமுடியுமா என்ற சந்தேகத்தினை மறக்கடித்துவிடுவார்கள் கரை வேட்டிக்க்ராரகள். காயடிக்கப்பட்ட சமூகமாய்த்தானே நாம் வளர்க்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். எதையுமே கேள்வி கேட்க கூடாது அப்படியும் கேட்டால் நீ தமிழனில்லை, உனக்கு வரலாறு தெரியவில்லை என தாங்கள் மனிதம் அறுத்து இரத்தம் குடித்ததை மறைத்துவிடுவார்கள். இங்கும் இவர்களும்,பண முதலாளிகளும் (ரெண்டுமே ஒண்ணுதான்).

சினிமாவை இறக்குமதி செய்து ஆரோக்கியமான விஷயங்களை மக்கள் மனதிலிருந்து திட்டமிட்டு பறித்துக்கொண்டார்கள் . அழகிய கலைகளை பேணி வந்த நாம் வேண்டுமென்றே வியாபார சினிமாவிற்குள் இறக்கிவிடப்படுள்ளோம். இந்த மாதிரியான அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குறும்படம் ஏழுமலை ஜமா. சினிமாவிற்கும், கூத்திற்கும் உள்ள நம்பகத்தன்மை குறும்படத்தில் வரும் துச்சாதனன் புடவையினை களைதலின் மூலம் இலகுவில் அறிந்துகொண்டுவிடலாம்.அழிக்கப்படும் கலைகளின் கோரமான முகத்தினை சிறுகதையாக முன்னமே பவாவும், திரை வடிவில் கருணாவும் ஒன்றுக்கொன்று எந்த பாதிப்புமின்றி அதன் தரத்தினை குறைக்காமல் இருந்தது மிகவும் அசாத்தியமானது. படத்தொகுப்பினில் சில சில காட்சிகள் காலங்கள் மாற்றத்திற்க்கு ஏற்ப அல்லாமல் இடைச்செருகலாக இருந்தமை படத்தின் தரத்திற்கு கேள்விக்குரியிடும் தன்மையினை உருவாக்குகிறது. இசை படத்தின் தரத்தினை மேலும் உயர்த்துகிறது. தெருக்கூத்து இசை நேரடிசப்தம் போன்று அமைந்தது அருமை. படத்தின் ஒளித்தொகுப்பு சிறப்பாய் இருந்தாலும் சில சில இடங்களில் அதிகப்படியான நடுக்கங்களும், தெளிவான பார்வையும் இல்லாமையே குறைகளென இலகுவில்பார்க்க கூடியதாய் இருந்தது. குறும்படத்தினில் மூன்று விதமான நிறங்கள் பின்பற்றப்பட்டுள்ளன. யாவுமே சரியானதை என்றாலுமே இறுதியில் எதற்காக கருப்பு மற்றும் வெள்ளை நிறம் மாறியவுடன் மீண்டும் ஓர் கூத்து கலைஞர்கள் துளிர் விடுகிறார்கள் எனும்போது மீண்டும் பசுமையான நிறத்திற்கு மாறியிருக்கலாமே ஏன் இயக்குனர் அதை அப்படியே விட்டிவிட்டார். எரிந்தகுச்சி எரியாது என்பதற்கு இது ஓர் குறியீடாக இருக்கலாம்.நடிகர்களின் தேர்வு சிறப்பு அதில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் தெருக்கூத்து கலைஞர்களே என்பதில் அதிக மகிழ்வு.ஏனெனில் வெறும் ஏட்டுச்சுரைக்கயாகவே இருந்துவிடாமல் போனதில்.

அடுத்து இதேபோன்ற தொழில்நுட்பத்திலும் தரமான குறும்படம் வரவேண்டுமென எதிர்பார்ப்போம்.

- செந்தூரன்

இக்குறும்படத்தைக் காண:

http://thamizhstudio.com/shortfilms_elumalai_jama.php


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)