கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
தக்கையின் மீது நான்கு கண்கள்- குறும்பட விமர்சனம்

 

ஸ்ரீகணேஷ்  

படத்தொகுப்பு: சசி மேனனின்
ஒளிப்பதிவு: பிஜு விஸ்வநாத்
ஒலிப்பதிவு: ஹிதேஷ் கிருஷ்ணா
இசை: அரவிந்த் சங்கர்
இயக்கம்: வசந்த்பெரியதிரை இயக்குனர்கள் குறும்படங்கள் எடுப்பது மிகவும் ஆரோக்யமான செயல். அப்படி குறும்படத் துறையில் வீரியமாக இயங்கியவர்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். ஒருவர் , பாலுமகேந்திரா; மற்றொருவர் இயக்குனர் வசந்த். மற்ற பெரியதிரை பெரும்புள்ளிகள் குறும்படங்கள் எடுப்பதாக சொல்லிக் கொண்டு சிறியத் திரைப்படங்கள் எடுத்து குறும்படத் துறையையும் உலகத் தரத்திற்கு உயர்த்துவதாக செவி வழி செய்தி. பாலச்சந்தர் இதையே வேறு வடிவில் சின்னத்திரை நாடகங்கள் மூலம் புதுப்புது கதைகள் சொல்ல முயற்சித்தார். முயற்சித்தார் அவ்வளவுதான். மாற்று முயற்சிகள் கவனிக்கபடுவது மிகவும் அவசியம். மிக முக்கியமாக அது மாற்று முயற்சிதானா என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

இயக்குனர் வசந்த் இயக்கிய 'தக்கையின் மீது நான்கு கண்கள்'. மிக எளிமையான முறையில் அதிகப் பொருட்செலவின்றி எடுக்கப்பட்டுள்ளது. புதிதாய் முயற்சி செய்யும் ஒவ்வொரு குறும்பட இயக்குனருக்கும் இப்படம் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும்.

ஒரு காலத்தில் படைப்புகளின் வழியே வாழ்ந்த சா.கந்தசாமியின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இக்குறும்படம், ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான உறவைப் பேசுகிறது. உடனே, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த வழக்கமான குறும்படம் என எண்ணி விடாதீர்கள். இப்படத்தின் சிறப்பே, மனிதர்களின் இயல்பை உண்மையாகக் காட்டுவது தான். ஒரு மனிதனுக்குள் இருக்கும் பல்வேறு உணர்வுகள் இப்படத்தில் வெளிப்படுகின்றன. அன்பு, பாசம், பொறாமை, கோபம் எல்லாமே ஒரே மனிதனுக்குள் பல்வேறு சூழல்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பதை, இக்குறும்படம் மூலம் உணரலாம்.

இக்கதையின் பாத்திரங்கள் மூன்றே மூன்று பேர் - ஒரு தாத்தா, பாட்டி, அவர்களின் பேரன். தாத்தா ஊரில் இருக்கும் ஒரு சிறு ஓடையில் மீன் பிடிக்கும் தொழில் செய்பவர். தாய், தந்தை இல்லாத பேரனுக்கோ தாத்தாவின் தொழில் மீது பெரிய ஈர்ப்பு. தன் தாத்தா மீன் பிடிப்பதை ஏதோ பெரிய அதிசயம் போலவும், தாத்தாவை பெரிய ஹீரோவாகவும் வியக்கிறான். எல்லாக் குழந்தைகளுக்குமே சிறு வயதில் தந்தையோ, தாத்தாவோ தானே ஹீரோவாக, உலகத்தின் எல்லாமுமாக இருக்கிறார். ஆனால் தாத்தாவோ அவனுக்கு எதையும் சொல்லித் தருவதில்லை. அவன் நன்கு படித்து வேறு வேலைக்கு செல்லட்டும் என நினைக்கிறார்.

ஆனாலும் பேரன் எப்படியோ மீன் பிடிக்க கற்றுக்கொள்கிறான். முந்தைய தலைமுறையை மிஞ்சும் இன்றைய தலைமுறையைப் போல், அவன் தாத்தாவை விட சிறப்பாகவே மீன் பிடிக்கத் துவங்குகிறான். இது தாத்தாவிற்கு சிறு சலனத்தை ஏற்படுத்துகிறது. இது தான் கதையின் மிக முக்கியமான இடம். பாசம், உறவு இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தன்மான உணர்வு அவனை எப்படி இயக்குகிறது என்பதை இயக்குனர் திரைக்கதையில் மிக நுட்பமாக பதிவு செய்கிறார். தன்னை ஒருவன் வெற்றி கொள்ளும்போது, இயல்பாகவே கோபம் வருகிறது. அது பேரனாய் இருக்கும் போது செயலாய் வெளிப்படுத்த முடியாத நெருக்கடியும் ஏற்படுகிறது. ஆயினும், சொல் இருக்கிறதே...!!! அதை விட பெரிய ஆயுதமும் வேண்டுமா என்ன? அந்த முதியவரின் கோபம் சொற்கள் மூலம் நெருப்பாய் அவ்வப்போது சீறுகிறது. இது அந்தப் பிஞ்சு சிறுவனுக்கும், பாட்டிக்கும் மன வேதனையை அளிக்கிறது.

கோபம், பொறாமையில் ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்ந்து விட முடியும்? அந்த உணர்வுகளின் பெருஞ்சுமையை அந்த முதியவர் எவ்வளவு நாள் சுமந்துவிட முடியும்? எங்கெங்கோ அலைந்து திரிந்து மீண்டும் தன் கூட்டுக்கே திரும்பி வரும் பறவை போல், மனித மனம் இளைப்பாறுதலைத் தேடுகிறது. எத்தனையோ காயங்களுக்குப் பிறகும் மனிதன் ஏதோ ஒரு அன்பை நம்புகிறான். பல நேரங்களில் காயப்படுத்திய உறவுகளே, அவனை மீண்டும் தேற்றவும் செய்கின்றன. முதியவரின் கோபத்தையும், பின்பு அவர் மனம் மாறுவதையும் நிச்சயம் உங்களால் உணர முடியும், இயக்குனர் வசந்த்தின் காட்சிகள் வழியாக.

இப்படத்தில் தாத்தாவாக நடித்திருப்பவர், 'கலைமாமணி' A .K . வீராசாமி. முதல் மரியாதை படத்தில் 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி' என்பாரே... அவரே தான். பேரனாக நடித்திருக்கும் சிறுவன் ராம் சரவணனும் நன்றாக நடித்திருக்கிறான். அசல் கிராமத்து சிறுவனாகவே தெரிகிறான். சசி மேனனின் படத்தொகுப்பும், பிஜு விஸ்வநாத்தின் ஒளிப்பதிவும் சிறந்த தரம். ஹிதேஷ் கிருஷ்ணாவின் ஒலிப்பதிவு மிகவும் துல்லியம். அரவிந்த் சங்கரின் இசை, அவருக்கு பெரியத்திரைக் கதவுகளையும் திறந்து விடும் என்றே தோன்றுகிறது.

இறுதியாக, இயக்குனர் வசந்த்.. தன் படங்களுக்கென தனி ஒரு மொழியைக் கொண்டு வந்தவர். மெல்லிய உணர்வுகள், அழகான இசை, மென்மையான கதாபாத்திரங்கள் நிறைந்த வசந்த் படங்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். இக்குறும்படத்திலும் வசந்தின் முத்திரை சிறப்பாகவே வெளிப்படுகிறது. வசந்தின் மிகப் பெரும் சிறப்பே அவர் படைப்புகளில் இறுதி வரை வெளிப்படும் மனிதம் தான். சுவாரசியங்களுக்கும் சிறிதும் பஞ்சமிருக்காது. 3 குறும்படங்களையும், தன் குருநாதர் பாலச்சந்தர் பற்றி ஒரு ஆவணப் படத்தையும் எடுத்துள்ள அவரிடமிருந்து இன்னும் நிறைய குறும்படங்களை எதிர்பார்க்கிறோம். அவரின் அடுத்த படைப்புக்களை நம் அனைவரின் கண்களுமே எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

- ஸ்ரீகணேஷ்

இக்குறும்படத்தைக் காண:

http://thamizhstudio.com/shortfilms_thakkai_mnk.php


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)