கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
எரிபொருள் - குறும்பட விமர்சனம்

 

செந்தூரன்  

படத்தொகுப்பு - ராஜேஷ்
ஒளிப்பதிவு -மாபொ ஆனந்த்
இசை -பிரசன்னா, ஷாம், பிரவின்
தயாரிப்பு - வெ. இராசேந்திரன், பழ.கருப்பையா, ஏ.என்.பி.லஷ்மன ராஜா
எழுத்து-இயக்கம்- சி.ஜெ.முத்துகுமார்



மதுக்கோப்பையின் வழியே வழிகிறது வீரியமில்லா அழுகைசப்தங்கள். அழுகைசப்தங்களுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஓரமாய் நின்றுகொண்டு பார்த்தும் பார்க்காததைப்போல் பார்த்துக்கொண்டு கவிதையும்,சினிமாவும் வடிப்பவர்கள் அரசியல்வாதிகள். நவீன உலகத்தில் வழ்பவர்களெலாம் மனிதமொன்றை தொலைத்துவிட்டு திரிகிறோம்.இதைத்தான் எரிபொருள் குறும்படத்தின் திரைக்கதைஆசிரியர் முன்னிறுத்துகிறார் போலும். கதையின் கருவை மட்டுமேயே சரியானதாய் வைத்துக்கொண்டு என்ன செய்வது? உணர்வுகளின் மையப்புள்ளியை கைப்பற்றி அதற்கான மையங்களோடு பேச தெரிந்த ஆசிரியர், ஏனோ கதாப்பாத்திரங்களின் தன்மையை மறந்தும், அதன் வலிமைதனையும் உணராதும் நடமாடுவது ஏனோ?

பெரியவரின் நடிப்பு எப்பவுமே துருத்திக் கொண்டுதான் இருக்கிறது. கதாப்பாத்திரங்கள் எல்லாமுமே வெறும் செய்திவாசிப்பாளர்களாவே வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். எல்லோருமே அந்த வயதானவரை சொல்லிவைத்தால் போல் பெரியவர் என்றே அழைக்கின்றனர். அவருக்கு பெயர் இல்லையா என்ன???? இல்லையென்றால், இந்த சமூகத்திடம் இவர்கள் யாரையுமே மதிப்பதில்லை என்ற கோபமா? என்று தெரியவில்லை. இயக்குனர் பேச எடுத்துக்கொண்ட விஷயம் எதையோ அதைவிடுத்து, உறவுகளின் வலிமையை விலைவாசி என்ற அசுரனோடு ஒரே உறையில் வைப்பது இயக்குனருக்கு சரியாய் ஏன் தோன்றியதோ? விலைவாசியும்,உறவுகளும், மனிதமும் அதைச் சார்ந்துமட்டுமே இயங்குகிறதா?? ஏன் உறவுகளை தண்ணீர் தெளித்து வெட்டிவிடுகிறார் இயக்குனர். அரசியல்வாதி "நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க பாஸ்" என்று கூறுமளவிற்க்கு அரசியல்வாதி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். இப்புடி நம்ம அரசியல்வாதிகளும் இருந்த ரொம்ப நல்ல இருக்கும்ல. ஹ்ம்ம் அதற்க்கு மேல் "உங்கள எனக்கு தெரியாதே 20 வருசமா நான் இங்கதான் இருக்கேன் உங்கள நான் இங்க பாத்ததே இல்லையே' என்று கூறும் ஆண் அருகில் நிற்க்கும் பெண் கையில் பூனை, ஏன் நாய்கிடைக்காத குறையை பூனையை வைத்து தீர்த்துக்கொண்டதுபோல் தெரிந்தது. மேல்தட்டுபெண்கள் என்றால் கையில் நாயும், பூனையும் வைத்துக்கொண்டே இருப்பார்கள் போல. இந்த சினிமா பண்றவங்க தப்பையே நாமும் செய்தால் எப்படி என்று புரியவில்லை..அதே போன்று பிணமெரிப்பவரையும் மிகக் கொடுமையானவனாக காட்டவேண்டுமென்று யார் அழுதார்கள்.அந்த வயதானவரை தவிர மற்றவர்கள் அனைவரும் கொடுமையானவனவர்களாக சித்தரித்தது ஏன் இயக்குனர் அவர்களே?

வெறும் கொடுமையான மனிதம் இல்லா உலகிலா வாழ்ந்துகொண்டு இருக்கிறோம், என்ற குற்ற உணர்விலேயே உலவவேண்டியதுபோலான மனச்சிதைவு ஓவியத்தை வரைந்துள்ளது ஏன்?

எடுத்துக்கொண்ட கருவை தாக்கப்பட வேண்டியவர்கள் யாரோ அவர்களை விடுத்து தாக்கப்பட்டவர்கள் நாமாய்த்தான் இருக்கிறோம்.பின்னணிஇசை பல இடங்களில் கோரமாய் ஒலிக்கிறது. குறும்படத்திலே மிக முக்கியமாய் கூறவேண்டியது கேமரா பகுதியின் ஆளுமை. மிக அருமையான பகுதி. மரணகானா மிக உருக்கம் ஆழ்ந்த உள்ளக்குமுறலை இலகுவில் அழவைத்துவிடும் போல் உள்ளது. மேலும் திரைக்கதை வீரியம் அடையவேண்டும். இவ்வாறான குறும்படங்கள் வெளிச்சென்று விதைகளை உருவாக்கவேண்டிய கடமை இருப்பதனாலேயே, அப்படி இல்லாத பட்சத்தில் அது வெறும் வேலி ஓணானாகவே இருப்பது வேதனையளிக்கும் விடயமாகும்.

- செந்தூரன்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)