கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

ஆசிரியர் பற்றி

ஆர்.அபிலாஷ்.

எம்.பில் ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். சொந்த ஊர் நாகர்கோவில். தற்போது சென்னையில். கல்லூரி ஆசிரியராக பணி. கடந்த 5 வருடங்களாக இலக்கியம், சமூகம், சினிமா, நாடகம், அறிவியல், விளையாட்டு என பல்வேறு துறைகள் சார்ந்து எழுதி வருகிறார். காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் சுயசரிதையை தமிழாக்கி தனது இணையத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஒரு குறும்படத் தயாரிப்பில் பங்காற்றி உள்ளார். உயிர்மை பதிப்பகம் இவரது “இன்றிரவு நிலவின் கீழ்” என்ற மொழிபெயர்ப்பு தொகுப்பை வெளியிட்டுள்ளது. உயிர்மையில் கட்டுரைத் தொகுப்பு அச்சில் உள்ளது.

இவரது இணையதளம்: thiruttusavi.blogspot.com.

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
காத்து ... காத்து

 

ஆர்.அபிலாஷ்  சிவசங்கர் இயக்கி உள்ள காத்து ... காத்து ஒரு அரசியல், பொருளாதார விமர்சனப் படம். ஒரு எளிய கதை: ஒரு சிறுவன் தனக்கு கிடைக்கும் காசை முதலீடு செய்கிறான். எப்படி? சத்தியமாக நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவன் ஒரு முட்டை வாங்கி அதன் மீது அடை இருக்கிறான். பாரம் தாங்காமல் முட்டை உடைய திரும்பவும் அதை முயன்று ஏமாற்றம் அடைகிறான். படத்தின் ஆரம்பத்தில் சக்கரவர்த்தி எனும் பொருளாதார நிபுணரின் கருத்து காட்டப்படுகிறது: இந்தியாவின் ஐந்து ஆண்டு திட்டம் வறுமையை ஒழிக்க தவறி விட்டது. தமிழ் சினிமா வெளி பெரும் அரசியல் வறட்சியை கொண்டுள்ள சூழலில் இது கருத்தளவில் ஒரு சுவாரஸ்யமான முயற்சி. ஆனால் காட்சிபூர்வமாய் சிவசங்கர் தன் திறன்களை மெருகேற்ற வேண்டும்.

ஒரு உச்சபட்ச காட்சிக்கான தயாரிப்பு காட்சிகளை எதிர்பார்ப்பு உருவாக்கும் படி வளர்த்து எடுப்பது குறும்படங்களுக்கு தேவையான முக்கியமான நுட்பம். சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் மைய காட்சிக்கு பார்வையாளனை அழைத்து செல்ல தெரிய வேண்டும். ஆனால் ’காத்து காத்து’ படத்தின் வளர்த்தெடுப்பு காட்சிகள் தொய்வாக உள்ளன. இறுதியில் சிறுவனின் நிராசை தோன்ற வேண்டிய காட்சியில் அவன் சிரிக்கிறான். இக்காட்சியை சாமர்த்தியாக படத்தொகுப்பில் மாற்றியமைத்திருக்கலாம். அல்லது திரும்ப நடிக்க வைத்திருக்கலாம். படத்தின் முக்கிய சறுக்கல் இது. அடுத்து இப்படம் நமக்கு மற்றொரு முக்கிய ஐயத்தை எழுப்புகிறது: “ஒரு சிறுவன் இவ்வளவு யோசிப்பானா?”. இத்தனையும் செய்ய முடிந்த இயக்குனர் ஐந்தாண்டு திட்ட விமர்சனத்தையும் அவன் வாயால் சொல்ல விட்டிருக்கலாம்!

நச்சுனு ஒரு வார்த்தை : இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</