கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
நடந்த கதை- குறும்பட விமர்சனம்

 

ஸ்ரீகணேஷ்  

இயக்கம்: பொன்.சுதா
தயாரிப்பு: அருள்
ஒளிப்பதிவு: ராசாமதி
இசை: மரியம் மனோகர்நடந்த கதை தலித் இலக்கியத்தின் மிக முக்கியமான பதிவு. ஒரு குறும்படம் என்பதையும் தாண்டி ஒரு தலைமுறையின் மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம்.

எழுத்தாளர் அழகிய பெரியவனின் "குறடு " சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கியுள்ளார் பொன்.சுதா. சாதிக் கொடுமையை பேசும் பெரும்பான்மையான படைப்புக்கள், சோகத்தையே சித்தரிக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிமிர்ந்து நிற்கிறது இக்குறும்படம். 'நான் உனக்கு சரிசமமானவன் தான் " என்று உறுதியுடன் கூறுகிறது.

ஒரு முதிய கிழவர் தன் பேரன் கீச் கீச் என சத்தம் வரும் செருப்பைப் போட்டுக்கொண்டு விளையாடுவதைக் கண்டு ரசிக்கிறார். இந்த சிறு விஷயத்திற்காக, காலில் செருப்பு போட்டுக் கொண்டு நடக்கும் உரிமைக்காக தன் தலைமுறை எவ்வளவு போராடியது என நினைத்துப் பார்க்கத் துவங்குகிறார். காட்சிகள் பின் நோக்கி விரிகின்றன.

தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் காண கிடைக்கக் கூடிய, சாதி அடக்குமுறைகள் நிறைந்த ஒரு கிராமம் தன் இக்கதையின் களம். அங்கே சேரியில் பிறந்த ஒரு சிறுவனுக்கு, மேல்சாதிக்காரர்கள் என சொல்லப்படுபவர்கள் மட்டும் நல்ல உடையணிந்து கொள்வதும், செருப்பு போட்டு நடப்பதும் தங்களுக்கு அது மறுக்கபடுவதும் புதிதாய் இருக்கிறது. அவனால் அதை ஜீரணிக்கவே இயலவில்லை. தன் தந்தையும், தன்னை சுற்றியிருக்கும் மற்றவர்களும் அதையே இயல்பாக எடுத்துக் கொள்வதும் அவனுக்கு புதிராக இருக்கிறது. அடங்கியே பழகி போன அவர்களின் இயல்பு, பாவம் அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. 

மேல்சாதிக்காரர்களின் முன் செருப்பு போட்டு நடக்க வேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் வளர வளர அதுவே உத்வேகமாய் மாறுகிறது. ஒரு முறை கோவிலில் கழற்றி வைக்கபட்டிருக்கும் செருப்புகளை ஆளில்லா இடத்திற்கு எடுத்துச் சென்று பலம் கொண்ட மட்டும் தூக்கி எறிகிறான். திசைகள் தோறும் வெறித்தனமாய் வீசி எறிகிறான். இக்காட்சியில் அவனது கோபத்தையும், நூற்றாண்டுகளாய் தேக்கி வைத்திருந்த குமுறலின் வெளிப்பாட்டையும் சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர்.

பின்பு அவன் தற்செயலாய் ஒரு ராணுவ வீரனை சந்தித்து, ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் தேர்வில் கலந்து கொள்கிறான். அந்த தேர்வில் வெற்றி பெற்றவுடன் தனக்கு கொடுக்கபட்டிருக்கும் பூட்சை அவன் ஆசையாக தொட்டு பார்க்கும் காட்சி மிக அற்புதமானது. பின்பு அவன் கம்பீரமாய் ராணுவ உடையணிந்து, பூட்ஸ் கால்களுடன் அதே வீதிகளில் நடக்கிறான். 

அவனை ஆதிக்க சாதியினர் வழிமறித்து வாக்குவாதம் செய்கிறார்கள். படத்தில் வரும் இக்காட்சி மிக முக்கியமானது. அவசியம் பாருங்கள். சாதி அடக்குமுறையின் வெளிபாட்டையும், அதற்கு இவன் கொடுக்கும் பதிலடியும் மிகச் சிறப்பாய் இருக்கும். இறுதியில் தன் இனத்தின் உரிமைக்காய் தைரியமாய் பேசிவிட்டு , அவன் அவர்கள் நிழலை மிதித்து செல்லும் காட்சி படத்தின் உச்சகட்டக் காட்சி. இன்று வரை திரையிடும் இடங்களிலெல்லாம் இக்காட்சி கைதட்டல் பெற்றுக் கொண்டிருக்கிறது. 

இலக்கிய படைப்பை அடிப்படையாய் வைத்து குறும்படம் எடுத்தால், எத்தகைய எல்லையைத் தொட இயலும் என்பதற்கு இக்குறும்படம் மிகச் சிறந்த உதாரணம். 

இலக்கியப் பிரதிகளை காட்சி ஊடகத்திற்கு மாற்றும்போது கவனிக்க வேண்டிய பல விசயங்களை மிக அருமையாக கையாண்டுள்ளார் இயக்குனர் பொன்.சுதா. குறடு என்கிற இலக்கியப் பிரதியின் தலைப்பை நடந்த கதை என்று மிக இயல்பாய் தலைப்பிலேயே கதையை பேச வைத்துவிட்டார். ராசாமதியின் ஒளி ஓவியத்தில் காட்சிகள் பளிச். சில இடங்களில் ஒளிப்பதிவு குறும்படங்களின் ஒளிப்பதிவுத் தரத்தை தாண்டி நிற்கிறது. 

இதுப் போன்றதொரு கதைக் களத்தை குறும்படமாக்க மிகுந்த துணிச்சல் வேண்டும். பொன்.சுதா தன்னுடுய முதல் படமான "மறைபொருளில்" இஸ்லாமிய சமூகத்தின் மிக முக்கிய விடயமான பார்த்தா அணிவதை ஒரு பெண்ணின் மனநிலையில் இருந்து மிக அருமையாக படம் பிடித்திருந்தார். யாருடைய பார்வையில் கதை சொல்ல வேண்டும் என்பதை சரியாக இயக்குனர் கணித்துவிட்டாலே அந்தப் படம் தன்னுடைய வெற்றி எல்லைக்கு அருகில் வந்து விடும். அந்த வகையில் நடந்த கதையும், வலியை உணர்ந்த ஒருவனின் பார்வையில் சொல்லப்படுவதால் அது படத்தை பார்க்கும் பார்வையாளனை வெகுவாக கவர்ந்துவிடுகிறது. 

படத்தின் மிகப் பெரிய பலம் அறிவுமதியின் பின்னணிக் குரல். மிக இயல்பாக படத்தை நகர்த்தி செல்கிறது அறிவுமதியின் ஆளுமை.

எல்லாவற்றையும் தாண்டி தமிழ் படங்களுக்கே உரித்தான இரைச்சல் இந்தப் படத்திலும் உண்டு. மௌனம் கூட ஒருவகையான இசையின் உச்சம் என்பதை தமிழ்நாட்டில் படம் எடுக்கும் (பாலு மகேந்திராவைத் தவிர) யாரும் தெரிந்து வைத்திருக்கவில்லை போலும். இயக்கம், ஒளிப்பதிவு என சில இடங்களில் இந்த குறும்படம் மிக நேர்த்தியாய் வந்திருந்தாலும், இசை நடிப்பு உள்ளிட்ட சில இடங்களில் சறுக்கி இருப்பது என்னவோ உண்மைதான். படத்தில் ஐயர் கதாப்பாத்திரத்தில் வரும் ஒரு சிலருக்கு அந்தக் கதாப்பாத்திரம் சுத்தமாக எடுபடவே இல்லை. முக்கியமான சில இடங்களில் ஆங்காங்கே மௌனத்தை விதைத்திருந்தால் நடந்த கதை இன்னும் நன்றாகவே நடந்திருக்கும். 


இயக்குனரின் நேர்காணலைக் காண:

http://thamizhstudio.com/creators_14.php

-ஸ்ரீகணேஷ்

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)