கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
ரெட்டைத் தெரு - குறும்பட விமர்சனம்

 

அமிதா amithatamil@gmail.com

இயக்கம்: கே. சரவணக்குமார்
கதை: இரா. முருகன்
ஒளிப்பதிவு: வி.பி.சிவானந்தம்
இசை: இரா. ப்ரபாகர்
படத்தொகுப்பு: காரல் மார்க்ஸ்
நடிப்பு: இரா.முருகன், பரவை முனியம்மா, விஜய் ஆதித்யா, சண்முகவேலாயுதம், அர்ஜுனன் பிரபு, எஸ். வேணுகோபாலன்
தயாரிப்பு: வி.எஸ்.ஏ. கிரியேஷன்ஸ் டாக்டர் ஆர். ஹேமமாலினிநகரங்களுக்கு குடிபெயர்ந்துவிட்ட தமிழர்களுக்கு, இன்றைக்கு கொண்டாட்டம் என்பதன் சரியான அர்த்தம் தெரியாது. பண்டிகைகள், திருவிழாக்களை அவர்கள் எந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மிகப்பெரிய கேள்வி. குறிப்பாக, மண்ணுடன் கலந்த நமது விழாக்கள், பண்டிகைகள் அர்த்தமின்றி சுருங்கிவிட்டன. எதற்கென்று காரணமே தெரியாமல் பல்வேறு சடங்குகளை இன்றைக்கும் நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். பண்டிகைகளும் அதுபோல் அர்த்தமிழந்து சடங்குகளாக மாறிவருகின்றன.

பொங்கல் என்பது இயற்கையை போற்றும் நம் மண் சார்ந்த பண்டிகை. ஆனால் நாம் எல்லோருமே இன்றைக்கு "ஹேப்பி பொங்கல்" கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உணர்வு மங்கி இரண்டு வார்த்தைகளாகத் தேய்ந்துபோன இந்த ஹேப்பி பொங்கலின் இதர அம்சங்கள் கேஸ் அடுப்பில் - குக்கரில் வைக்கும் சர்க்கரைப் பொங்கல், நோகாமல் திங்க வசதியாக கூறுபோடப்பட்ட கரும்புத் துண்டுகள், டிவி பட்டிமன்ற கடி ஜோக்குகள், இத்யாதி, இத்யாதி. இவை எல்லாவற்றின் மூலமும் ஒரு திரிசங்கு பொங்கலையே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்தப் பண்டிகை எதற்குக் கொண்டாடப்படுகிறது என்ற அடிப்படை நோக்கம் இதில் பலி கொடுக்கப்பட்டு விடுகிறது.

இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது ரெட்டைத்தெரு. கதை இரா.முருகன், அவரே ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். பொங்கலைப் பற்றி பத்திரிகைக்கு கட்டுரை எழுதுவதன் வாயிலாகவே அவரும் பொங்கலின் சிறப்புகளை அசைபோடுவது நல்ல பகடி.

முருகன், (குண்டு) ராஜு என்ற இரண்டு நண்பர்களின் வாயிலாக கதை சொல்லப்பட்டுள்ளது. தன் வீட்டு மண்ணை எடுத்துப் போகும் எதிர்வீட்டுக்காரியை திட்டினாலும், பொங்கல் நாளன்று அதிகாலையில் எதிர்வீட்டுக்காரிக்கு கோலம் போடத் தெரியாமல் விழிக்கும்போது, திட்டியவரே போய் உதவும் சம்பவம் மூலம் கிராமத்தில் பகை எப்படி மிகச் சாதாரணமாக தீர்ந்துவிடுகிறது என்று காட்டியிருப்பது அழகு.

படம் சற்று மெதுவாகச் செல்வது போலிருந்தாலும், நிறைய விவரணைகள், நுணுக்கமான அம்சங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் உயிரை வழங்கியுள்ளன. காலை நேரத்தில் கோலம்போடும்போது இருட்டில் படம் பிடித்துள்ளது ஒர் உதாரணம். இப்படத்துக்கு இசை அற்புதமானதொரு உணர்வை தந்துள்ளது. தொழில்நுட்ப நேர்த்தி குறும்படங்கள் தரும் அனுபவத்தை மேம்படுத்தும் என்பதை உணர முடிகிறது.

சமீபகாலமாக காட்சியமைப்புகளின் அழகை கருத்தில் கொண்டு தமிழ் சினிமாவின் கிராமத்தைச் சார்ந்த திரைப்படங்களில் திருவிழாக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. திருவிழா காட்சிகளை விவரணையாகக் காட்டுவதன் மூலம் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துவதே அவற்றின் நோக்கம். இதற்கு நேரெதிராக எப்பொழுதும் சாப்பிடுவதிலேயே, நொறுக்குத்தீனி தின்பதிலேயே குறியாக இருக்கும் சாப்பாட்டு ராமன், சாப்பாட்டு ராணி கதாபாத்திரங்களும் சமீபகாலத் திரைப்படங்களில் அதிகமாக கிண்டல் செய்யப்படுகின்றன. இந்தக் கிண்டல் பெரிதாக எல்லையைமீறாமல், நையாண்டி செய்வதுடன் நின்றுவிடுவது நிம்மதி. இந்த இரண்டு அம்சங்களின் சுவடுகளை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது.

கே.சரவணக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை நாஸ்டால்ஜியா வகையைச் சேர்ந்ததாக வகைப்படுத்தலாம். அதேநேரம் சற்று கவனம் செலுத்தி இன்னும் நேர்த்தியான படமாக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

amithatamil@gmail.com

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)