கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
அஃறிணைகள்...? - குறும்பட விமர்சனம்

 

அமிதா amithatamil@gmail.com

பங்கேற்பு: லிவிங் ஸ்மைல் வித்யா, கிளாடி, உளவியல் நிபுணர் ஷாலினி
இயக்கம்: பி.இளங்கோவன் ஐ.ஆர்.ஏ.எஸ்
ஒளிப்பதிவு: என்.ஆர்.பழனிக்குமார்
படத்தொகுப்பு: எஸ்.ஆனந்த்
இசை:ஜேவி
தயாரிப்பு: கீதா இளங்கோவன்

"ரயிலில் கையேந்தும் திருநங்கைகள் மிகப் பெரிய தொந்தரவு" என்று இதழியல் துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சமீபத்தில் குறிப்பிட்டார். திருச்சி - சென்னை ரயிலில் விழுப்புரத்துக்குப் பிறகு ஏறும் சில திருநங்கைகள் ரயில் பயணிகளிடம் கையேந்தி தொந்தரவு செய்வதாக, "மிகுந்த சமூக உணர்வுடன் (!)" சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ரயிலில் கையேந்தியதற்காக அவமானப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட லிவிங் ஸ்மைல் வித்யாவின் வாழ்க்கை பற்றி இவர்களுக்குத் தெரிந்திருக்காது. அப்படியே தெரிய வந்தாலும், திருநங்கைகளுக்கே உரிய பிரத்யேக பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள, நமது சமூகத்தில் உள்ளவர்கள் எவ்வளவு தூரம் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்வி பலமாக எழுகிறது.

திருநங்கைகளின் கோபம் இந்த சமூகத்துக்கு எதிரானது. வட மாநிலங்களில் திருநங்கைகளை வளத்தின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் அவர்களிடம் கொண்டு சென்று ஆசீர்வாதம் பெறுகிறார்கள். ஆனால் தமிழக நிலைமை என்ன? இவ்வளவு நவீன வளர்ச்சிகள் வந்தும்கூட எதுவும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவதில்லை. பெண்களே சமமாக நடத்தப்படாத சமூகத்தில் திருநங்கைகளுக்கு என்ன நேரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மூளை வேலைக்கும், உடல் உழைப்புக்கும் பால் வித்தியாசம் கிடையாது என்ற அடிப்படையை புரிதல் நம்மிடம் இல்லை. இதை மறுத்து திருநங்கைகளுக்கு இந்தச் சமூகம் எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை. அவர்களை தனி ஜந்துகள் போலவே நடத்துகிறது. இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களில் இருந்தும் அவர்களை ஒதுக்கி வைப்பதன் மூலம், ஆண்கள் உலகம் அவர்களை தங்களது இச்சைக்கு எளிதில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த அடக்குமுறைக்கு எதிரான கோபம்தான் திருநங்கைகள் கையேந்தும்போதும், கடைகளில் கையேந்தும்போதும், மற்ற நேரங்களிலும் கோபமான செயல்பாடுகளாக வெளிப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் திருநங்கைகள் பேசுவதற்கு, எழுதுவதற்கு, தங்களை வெளிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இருந்தபோதும், திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாகவில்லை. இந்தச் சூழ்நிலையில் இரண்டு திருநங்கைகளின் வாழ்க்கையை டாக்கு - டிராமா போலக் கூறுகிறது பி. இளங்கோவன் இயக்கியுள்ள "அஃறிணைகள்". டாக்குமென்டரி என்பவை ஆவணப் படங்கள். நிஜத்தில் இருப்பதை ஆவணப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டவை. ஒருவரது நிஜ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அந்தச் சம்பவங்களை மீண்டும் சித்தரித்து எடுக்கப்படும் படங்கள் டாக்கு - டிராமா எனப்படுகின்றன. கிளாடியின் நிஜ வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த அவரது தோழி சபி, உளவியல் நிபுணர் ஷாலினி ஆகிய இருவரும் படத்திலும் பங்கேற்றிருப்பது படத்தின் மதிப்பை கூட்டுகிறது.

ஏற்கெனவே "என் பெயர் வித்யா" என்ற பெயரில் லிவிங் ஸ்மைல் வித்யா தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை பற்றிய விவரிப்புகள் ஒருபுறம் காட்சிகளாக விரியும் அதேநேரம், திருநங்கை ஆக வேண்டும் என்ற உணர்வுடன் அதற்குரிய மனக்குழப்பங்களில் இருக்கும் கிளாடியின் வாழ்க்கையும் மற்றொருபுறம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிளாடிதான் மூன்றாம் பாலினம் என்ற சான்றிதழை தமிழக அரசிடம் இருந்து முதன்முறையாகப் பெற்று, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு சேர்ந்தவர். கதாபாத்திரங்கள் மிகக் குறைவு. இயல்பாக கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் மோதல்கள் அதிகம் வெளிப்படவில்லை. பாலியல் தொழில் நடைபெறும் இடத்துக்கு வரும் ஆணின் முகம் காட்டப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது (ஆனால் அப்பொழுது திருநங்கையின் வீட்டுக்குள் இருக்கும் கிளாடி எதற்கு அவ்வளவு பயப்படுகிறார்?), கிளாடியின் மனதில் எழும் பெண்ணாக மாறிய கற்பனை போன்ற காட்சிகள் நன்று.

சாதாரண பார்வையாளரை மனதில் வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காட்சிப்படுத்துதல், படத்தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏற்கெனவே பதிவாகிவிட்ட விஷயங்கள் - காட்சிகளை தவிர்த்திருக்கலாம். ஆங்காங்கே சற்று மெலோடிராமாடிக் தன்மையும் தென்படுகிறது. உதாரணம்: திருநங்கை என்றால் கையேந்த வேண்டும் அல்லது பாலியல் தொழில் செய்ய வேண்டும் என்று தெரிய வரும்போது கிளாடியின் உணர்ச்சி வெளிப்படும் விதம். அதேபோல், வித்யா ரயிலில் அவமதிக்கப்படும் நிகழ்வு எழுத்தில் உள்ள அளவுக்கு காட்சிகளில் காத்திரமாக இல்லை.

அதேநேரம் ஷாலினி கூறும் வகையில், ஒரு விஷயத்தின் அறிவியலை புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நமது பார்வை அமைய வேண்டும் என்ற உணர்வு படத்துக்கு பெரும் பலம். திருநங்கைகளை புரிந்துகொள்ளாமல் தவறாக நடத்துவது நமக்குத்தான் அவமானம் என்று அவர் கூறியுள்ளது சத்தியமான வார்த்தைகள். பெரிதாக பேசப்படும் நமது பழைய இலக்கியங்களும்கூட திருநங்கைகளை சமமாக நடத்தவில்லை. மொழியில் இலக்கண ரீதியிலும் சமூக ரீதியிலும் நமது முன்னோர்கள் செய்த தவறை இனிமேலும் தொடரக் கூடாது. திருநங்கைகளை பெண் பாலிலோ அல்லது தனிப் பாலிலோ இணைப்பது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூட்டாக சிந்திக்க வேண்டும்.

மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகளின் நிஜவாழ்க்கை எடுத்துச் செல்லப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கு இந்தப் படம் உதவும்.

amithatamil@gmail.com

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)