கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
விழிப்போம் - குறும்பட விமர்சனம்

 

ஆர்.அபிலாஷ்  

கதை, இயக்கம்: ம.ராஜா
ஒளிப்பதிவு: ரூபன்
படத்தொகுப்பு: மு.ராம்பிரசாத்
பின்னணிக்குரல்: கண்ணன், ஆலன்
இசை: எஸ்.பி ரியாஜ் கபூர்

ம.ராஜா எழுதி இயக்கியுள்ள “விழிப்போம்” ஒரு தமாஷான பிரச்சாரப் படம். முதிர்ச்சியின்மையினால் உருவாகும் வேடிக்கையை குறிப்பிட்டேன். அது போக படத்தில் நிறைய குழப்பம் உள்ளது. ஒரு பிரச்சாரப் படம் கலையனுபவம் தராவிட்டாலும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சேதியை சொல்ல வேண்டியது முக்கியம். ம.ராஜாவின் படம் இங்கு சரிவதனாலே முதலில் குழப்பத்தையும் அதனாலான வேடிக்கையையும் குறிப்பிட்டேன். சுருக்கமாக படம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. குறைந்தபட்சம் திரையரங்கு நியூஸ் ரீல்களில் புற்றுநோயால் உடல் சிதைந்து விகாரமான நோயாளிகளை காட்டி செய்வது போல் கொஞ்சமேனும் பயமுறுத்த செய்வதும் இல்லை. ஆக இது ஒரு செய்திசார் பிரச்சாரம் என்பதும் இல்லாமல் ஒரு திகில் படம் கூட அல்ல.

படத்தின் கரு எய்ட்ஸ் விழிப்புணர்வு. ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் எய்ட்ஸை தடுப்பது சிக்கலானது என்று நமக்குத் தெரியும். ஏழ்மை, படிப்பறிவின்மை, குடும்ப ஆதரவின்மை, மருத்துவ வசதி மற்றும் விழிப்புணர்வு இன்மை என எத்தனையோ காரணங்கள் இந்நோயை தீ போல் பரவ விட்டுக் கொண்டிருக்க இப்படத்தின் இயக்குநர் ஒரே ஒரு தாரக மந்திரம் நமக்கு கற்றுத் தருகிறார். அதுவே அவரது சுருக்கமான தீர்வும். சுயக்கட்டுப்பாடு. ஒழுக்கமீறலை விட நான் மேற்கூறிய காரணங்களினாலே எய்ட்ஸ் தீவிரமாக பரவுகிறது; நலத்தை சீரழிக்கிறது. இதே காரணத்தால் இப்படத்தின் இலக்கும் தவறாக ஒரு தட்டினரை நோக்கி செலுத்தப்படுகிறது. உயர்மத்திய தட்டு மற்றும் உயர்தட்டு இளைஞர்கள் (ஆளாளுக்கு பைக் கொண்டுள்ள மற்றும் கஞ்சாவுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய முடிகிற சில கல்லூரி இளைஞர்கள்).

இப்படத்தின் நாயகர்களான கல்லூரி இளைஞர்கள் தங்கள் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக போதை மருந்து ஊசி பயன்படுத்துகின்றனர், தண்ணியடிக்கின்றனர், வாகன விபத்துக்குள்ளாகின்றனர். ஆனால் இம்மூன்றுமே இவர்களுக்கு எய்ட்ஸ் ஏற்படுத்துவதில்லை. இயக்குநர் எந்தளவுக்கு குழம்பியிருக்கிறார் என்பதற்கு இந்த காட்சிகளின் மூலம் காலத்தையும் ஆற்றலையும் அவர் வீணடித்துள்ளது சான்று. ஒரு ஏழை பாலியல் தொழிலாளியை புணர்வதனால் இளைஞர்களில் ஒருவனுக்கு எய்ட்ஸ் தொற்றி, அவனால் அவனது குடும்பமே நோய்க்குள்ளாகிறது. இங்கு நிஜமான கவனத்துக்குரிய பிரச்சனை இவ்விளைஞன் ஆணுறை பயன்படுத்த இல்லை என்பது தான். ஆனால் இயக்குநர் ஐஸை உருக விட்டு வேடிக்கை பார்க்கும் குழந்தை போல் என்னன்னமோ தகவல்களை கொட்டுகிறார்.

அப்துல் கலாம், ஹர்பஜன் சிங், காமராஜர் படங்களைக் காட்டி இவர்களைப் போல் நான் வாழ வேண்டும் என்று உபதேசிக்கிறார். ஆதாரமான பிரச்சனையை மறந்து நாயர் புலி வால் பிடித்த கதையாக ஒழுக்கத்தின் பின்னாலே ஓடுகிறார். இக்கதை எய்ட்ஸின் பரிமாணங்களை பேசுவதாக இருப்பதானால், அதன் கொடுமையை விளக்க உத்தேசிப்பதானால் அது மகாத்மாக் காந்திக் குரங்காக பொத்திக் கொண்டு மத்தியதர குமாஸ்தா பிரச்சாரம் செய்திருக்காது. அது அந்த பாலியல் தொழிலாளியை பற்றியதாக இருந்திருக்க வேண்டும். எய்ட்ஸ் பற்றின உரையாடல் அவளில் இருந்து ஆரம்பித்திருக்க வேண்டும். இப்படத்தின் ஆகச்சிறந்த காட்சியாக ஒன்று சொல்வேன். வாகன விபத்தில் ஒரு இளைஞனுக்கு தலை உடைந்து குடம் குடமாக ரத்தம் கொட்டுகிறது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கிடத்துகின்றனர். டாக்டர் வந்து பார்த்து வாயெல்லாம் சிரிப்பாக ”ஒன்றுமில்லை டிரஸ்ஸிங் செஞ்சா சரியாயிடும்” என்கிறார். இந்த படத்தின் தொனியை மிகச்சரியாக புரிந்து கொண்டவர் அந்த டாக்டர் வேடத்தில் நடித்தவர் தான்.

“விழிப்போம்”: திசைமாறிய எய்ட்ஸ் பிரச்சாரம்

abilashchandran70@gmail.com
thiruttusavi.blogspot.com

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)