கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
நிறைவு - குறும்பட விமர்சனம்

 

அமிதா  


இயக்கம்: இராம. முத்துகணேசன்
இசை: எம்.ஆர்.முரளிகிருஷ்ணா
ஒளிப்பதிவு: பி.வி.முருகேசன்
படத்தொகுப்பு: செந்தில்
நடிப்பு: கூத்துப்பட்டறை வினோத், கமலா
தயாரிப்பு: ராமநாதன் - பூங்கோதை பிலிம்ஸ்

பெரும்பாலான குறும்படங்கள் சென்னையில் வாழ்க்கை நடத்தும் இளைஞர்களே எடுக்கிறார்கள். இதனால் பெரும்பாலான நேரம் அவர்களது வாழ்க்கை அல்லது அவர்கள் திரும்பத்திரும்ப சந்திக்க நேரும் விஷயங்கள் அவற்றின் கருவாக அமைவது உண்டு. ஆனால் எந்த கருவாக இருப்பினும், அதை காட்சிரீதியாக சொல்லும் கதைசொல்லல்தானே முக்கியம். சென்னையில் பேச்சிலராக வாழும் ஓர் இளைஞனை (கூத்துப்பட்டறை வினோத்) மைய கதாபாத்திரமாகக் கொண்ட "நிறைவு" 11 நிமிடங்களே ஓடக்கூடியது. இயக்கம் இராம.முத்துகணேசன்.

நாம் பல நேரம் கடந்து செல்கிற ஒரு விற்பனைப் பிரதிநிதியைப் பற்றிய கதை இது. இந்த விற்பனைப் பிரதிநிதி சற்று வித்தியாசமானவர். இவரது தொழில் டிக்சனரி விற்பது. எத்தனை டிக்சனரி விற்கிறாரோ அதற்கேற்பவே அவரது வயிறு நிறையும். சென்னை சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் வந்து சேர்ந்தவர்களில் இவரும் ஒருவர். சென்னை எல்லோருக்கும் வாழ்க்கை தந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையை முதலாளிகளும் அவர்கள் சார்பாக இயங்கும் அரசும் சேர்ந்து பெருநகரங்களுக்கு வலிந்து உருவாக்குகிறார்கள். எல்லா வளங்களையும் ஒரே மையத்தில் குவிப்பதுதான் இவர்கள் நோக்கம். ஆனால் காலங்காலமாகவே ஒரு புள்ளியை மையப்படுத்தியவை விரிவும் ஆழமும் கொண்டதாக இருந்ததில்லை என்பது நிதர்சனம்.

தொழில்நுட்பத்தால் பளபளப்பு ஏற்றப்படாமல் சற்று கச்சாத்தன்மையுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பலரிடம் டிக்சனரியை விற்க அந்த இளைஞன் முயற்சிப்பதை, பல விண்டோக்களின் மூலம் காட்டியிருக்கும் படத்தொகுப்பு உத்தி நன்றாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த டிக்சனரி விற்கும் விற்பனைப் பிரதிநிதியின் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் உச்சபட்ச சம்பவமே இந்தப் படத்தின் கதை. கல்வி ஒருவனை வாழ வைக்க வேண்டும். நம் ஊரில் புத்தகங்களுக்கான மதிப்பும், ஏன் விலைமதிப்பும்கூட ரொம்பவே குறைவு. டிக்சனரிக்கள் எத்தனையோ சொற்களுக்கு அர்த்தம் பகிரக்கூடு்ம். ஆனால் அவற்றை விற்றுப் பிழைக்கும் ஓர் இளைஞனின் பசிக்கு அவை பதில் சொல்வதில்லை. தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகே பசியால் வாடும் பாட்டிக்கு அந்த இளைஞன் உணவு தரும் சம்பவம் நெகிழ்ச்சியான ஒன்றுதான்.

இப்படத்தில் இயக்குநர் மனிதத்தன்மையின் முக்கியத்துவத்தை கவனப்படுத்த முயற்சித்துள்ளார். அதிகப்படியான சென்டிமென்ட் டச் இல்லாமல் இதைச் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

பெருநகரங்கள் பெரும் மக்கள் கூட்டத்தை வாழ வைப்பதாக நம்பப்படுகிறது. இது மிகப்பெரிய மூடநம்பிக்கை. பெருநிறுவனங்களுக்கும் பெரிய தொழிற்சாலைகளுக்கும் மூலப்பொருள்கள் போல கூலித் தொழிலாளர் கூட்டத்தையே பெருநகரங்கள் சேர்க்கின்றன. மக்கள் அவற்றுக்கு கச்சாப்பொருள் மட்டுமே. கரும்பின் சாறு உறிஞ்சப்பட்டவுடன் அவை சக்கையாக துப்பப்படுவது போன்றதுதான் பெருநகர மனிதனின் வாழ்க்கை. இந்த எண்ணத்தை இப்படம் மனதில் கிளறிவிடுகிறது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)