கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

தமிழில் வெளிவரும் குறும்படங்கள் குறித்த திறனாய்வு இந்தப் பகுதியில் இடம்பெறும். குறும்பட இயக்குனர்களையும், படைப்பையும், ஆர்வலர்களுக்கு அறிமுகம் செய்து, அதே நேரத்தில் அந்தக் குறும்படம் சார்ந்த சில நிறை குறைகளை ஆராய்வதே இந்தப் பகுதியில் நோக்கம். இந்தப் பகுதிக்கு உங்கள் குறும்படங்களை அனுப்ப: வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

அல்லது தொடர்பு கொள்க:


9840698236, 9894422268

 

 

 

 
     
     
     
   
குறும்படங்கள் திறனாய்வு
1
 

 

 

 

 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்படங்கள் திறனாய்வு குறும்படங்கள் திறனாய்வு வாயில்
 
நாளைக்கு மழை பெய்யும் - குறும்பட விமர்சனம்

 

அமிதா  


இசை - சதீஷ்குமார்,
ஒளிப்பதிவு - ஆண்டனி,
படத்தொகுப்பு - ரவி,
பாடல் - பிரபாகர்,
தயாரிப்பு: ஜி.என். ராஜா (ஐரிஸ் செல்லுலாய்ட்)

இயக்கம்: அ. வேல்மணி

தமிழ் குறும்படச் சூழலில் பெரும்பாலான படங்கள் சென்னை, சென்னை பிரச்சினைகளைச் சுற்றியும் இளைஞர் பிரச்சினைகளை மையமிட்டும் எடுக்கப்படுகின்றன. கிராமத்துக்குச் செல்லும் படங்களும்கூட ஏற்கெனவே பேசப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றை கவனப்படுத்துவதுடன் நின்றுவிடுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் - மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது அ. வேல்மணி இயக்கியுள்ள "நாளைக்கு மழை பெய்யும்".

இப்பகுதியிலுள்ள பெரும்பாலோர் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இவர்கள் சம்சாரி என்றழைக்கப்படுகிறார்கள். திடீரென தந்தை இறந்துவிட்ட சூழ்நிலையில், சிறிதளவு நிலம் வைத்திருக்கும் ஒரு இளம் சம்சாரியின் வாழ்க்கையை பின்தொடர்கிறது இந்தப் படம். பள்ளி செல்லும் வயதைத் தொடாத மகள், இளம் மனைவியுடன் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க முயற்சிக்கிறார் அந்த இளைஞர். ஒரு நண்பரின் உதவியுடன் பக்கத்து நகரத்தில் இருக்கும் மலர் சந்தையில் மண்டி நடத்தும் ஒருவரிடம் கடன் வாங்கி ரோஜா பயிரிட ஆரம்பிக்கிறார். பக்கத்து தோட்டத்துக்காரரிடம் மோட்டார் இரவல் கேட்டு ரோஜாக்கள் வாடாமல் பார்த்துக் கொள்வது முதல், அரசியல் விழாவுக்காக அதிகாலைக் குளிரில் மண்ணெண்ணெய் விளக்கில் மலர்களை பறிப்பது வரை கணவனும் மனைவியும் தங்கள் தேவையை நிறைவேற்றப் போகும் பயிரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குகிறார்கள். வாழ்க்கையை கடைத்தேற்ற அவர்களுக்குத் தெரிந்த வழி அது தானே.

தங்கள் நம்பிக்கையை எல்லாம் கொட்டி வளர்த்து, மலர்களை பறித்துக் கொண்டு காலையிலேயே மண்டிக்குப் போய்ச் சேர்கிறார் அந்த இளம் சம்சாரி. ஆனால் மாலை வரை காத்திருந்ததுதான் மிச்சம். மிதப்பாக மலர் பறித்து வரச் சொன்ன உள்ளூர் அரசியல் புள்ளி ஏமாற்றி விடுகிறார். மலர்களின் வாழ்க்கை ஒரு பகல் தானே. மலர்கள் வாடிப் போக, அந்த சம்சாரியி்ன் வாழ்க்கையும் வதங்கிப் போகிறது. ஆனாலும் வாழ்க்கையை ஓட்டியாக வேண்டுமே. நேற்று வரை சம்சாரியாக இருந்தவன், கூலிக்கு கட்டட வேலைக்குச் செல்கிறான். அதேநேரம் விற்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் விடப்பட்ட தப்புப்பூவைப் பறிக்கச் செல்லாமல் இருந்துவிடுகிறாள் அவனது மனைவி. "அரைச்சு சென்டுக்கு போகப் போறதை, எப்பொழுது பறித்தால் என்ன" என்று கேட்கிறாள் அவள். "ஆனால் பூப்பதைப் பறிக்காமல் அலட்சியம் செய்தால், செடி பூப்பதை நிறுத்திவிடும்" என்கிறான் சம்சாரி. விரக்தியே வாழ்க்கை என்று தேங்கிவிட்டால் எதுவும் சுகமாக இருக்காது, "நாளைக்கு மழை பெய்யும்" என்பது அவன் நம்பிக்கை.

இந்தப் படத்தில் இளம் சம்சாரியாக நடித்த ப்ரியனுக்கு நெய்வேலி புத்தக விழாவில் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருக்கிறது. அவரது துணைவியாக ஷாலினி மற்றும் கணேசன், சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை - சதீஷ்குமார், ஒளிப்பதிவு - ஆண்டனி, படத்தொகுப்பு - ரவி, பாடல் - பிரபாகர்.

"இவனுங்களே சோத்துக்குத் தண்டமாகவும், பூமிக்குப் பாரமாகவும் ஆக்கிவிடுகிறார்கள்" என்று மலர் விற்பனையைக் கெடுத்த அரசியல்வாதிகளைப் பற்றி ஒரு விவசாயி கூறும் வசனம் அருமை. கதை நகர்வும் சம்பவச் சித்தரிப்பும் அவற்றை நேர்த்தியாகக் கோர்த்துள்ள படத்தொகுப்பும் படத்தை உயர்த்துகின்றன. இடையே சேர்க்கப்பட்டுள்ள பாடல்கூட நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் இருக்கும் அமெச்சூர்தன நடிப்பு, சிற்சில இடைவெளிகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், இந்தப் படம் நல்லதொரு பதிவை நம் மனதில் ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற சற்று விரிவான குறும்படங்களை யாராவது தயாரிக்க முன்வருவது மிக முக்கியமானது. ஐரிஸ் செல்லுலாய்ட் சார்பில் ஜி.என். ராஜா தயாரித்துள்ளார்.

ஒரு மாற்றுத் திரைப்படமாக செதுக்குவதற்கான அடிப்படை அம்சங்களுடன் திகழ்கிறது இந்தப் படம். விவரணைகளைச் சேர்த்தால் நல்லதொரு திரைப்படமாகவும் ஆக்கலாம். விவசாயிகளின் தற்கொலை பற்றி அனுஷா ரிஸ்வியின் "பீப்லி லைவ்" நம்மை உலுக்குகிறது என்றால், "நாளைக்கு மழை பெய்யும்" நம்ம ஊர் நிஜம்.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)