கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

 
 

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறுந்திரைப் பயணம் குறுந்திரைப் பயணம்
வாயில் 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் 7 ஆவது குறுந்திரைப் பயணம் - கிராமம்:மேட்டுகார்க்குணம் - திருவண்ணாமலை

(7th Shortfilm Screening Travel, Mettukarkunam Village, Thiruvannamalai)

 

 


நண்பர்களே

நாள்: 26-05-2012

ஒரு மாற்று ஊடகம் உருவாக முதல்படி அது எல்லா தரப்பு மக்களுக்கும் முதலில் தெரியப்படுத்தப்பட வேண்டும். மேலும், குறும்படங்களையும், ஆவணப்படங்களையும் கிராம மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் திரைப்படங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மாயை விலகும். எல்லாருக்கும் திரைப்படம் எடுக்க ஆசைவரும். திரைப்படத் துறையில் ஜனநாயகத்தை கொண்டு வருவதில் நிறைய நல்லப்படங்கள் வெளிவர வாய்ப்புண்டு. அல்லது குறைந்தபட்சம் தேவை இல்லாத திரைப்படங்கள் வெளிவருவதற்கான சாத்தியங்கள் குறைந்து போகும். அந்த வகையில் கிராம மக்களிடம் குறும்படங்களை கொண்டு சேர்க்க தமிழ் ஸ்டுடியோ ஆரம்பித்த திட்டம்தான் குறுந்திரைப் பயணம். இதன் படி ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்திற்கு சென்று அந்த கிராம மக்களோடு பழகி மாலை ஒரு திறந்த வெளியில் நல்ல பல அருமையான குறும்படங்களை திரையிட்டு அதுப் பற்றி அந்த கிராம மக்களிடம் விவாதிக்கும் நிகழ்வு நடைபெறும். பின்னர் அந்த கிராம மக்களில் ஆர்வம் இருக்கும் பலருக்கும் குறும்படங்கள் எடுக்க பயிற்சிக் கொடுக்கப்படும். அந்த வகையில் தமிழ் ஸ்டுடியோவின் ஏழாவது குறுந்திரைப் பயணம் திருவண்ணாமலையில் உள்ள மேட்டுகார்க்குணம் கிராமத்தில் எதிர்வரும் மே மாதம் 26 & 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில் ஆர்வமுள்ள வெளிமாவட்ட நண்பர்களுக்கு கலந்துக் கொள்ளலாம்.

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் போகும் வழியில் சரியாக 19வது கிலோ மீட்டரில் நாயுடு மங்கலம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து கிழக்குப் பக்கமாக 6கிலோ மீட்டர் வந்தால் இந்த கிராமத்திற்கு வந்துவிடலாம்...

திருவண்ணாமலையிலிருந்து வேலூருக்குச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் நாயுடு மங்கலம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் நிற்க்கும். அங்கிருந்து நம் கிராமத்திற்கு நமது நண்பர்கள் வண்டியில் அழைத்துக்கொண்டு வந்து விடுவார்கள்....எத்தனை பேர் வந்தாலும் உணவு,தங்குமிடம் செய்து தருகிறோம் என்று அந்த கிராமத்தில் வசிக்கும் நண்பரும் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் ச. சு. அருள் கூறி இருக்கிறார். எனவே அருமையான குறும்படங்களை மக்களோடு மக்களாக பார்க்க அனைவரும் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதில் குறும்பட இயக்குனர்களும், கலைஞர்களும் கலந்துக் கொள்ளலாம். உங்கள் குறும்படமும் இந்த நிகழ்வில் திரையிட விருப்பமிருந்தால் தொடர்பு கொள்க. 9840698236

இப்படி ஒரு நிகழ்வை நடத்தலாம் என்றதும் மிக ஆர்வமாய் முன்வந்த நண்பர் ச. சு. அருள், உணவு தங்குமிடத்தையும் (அனைவருக்கும்) ஏற்பாடு செய்துக் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள். நண்பர்களே அனைவரும் வாருங்கள். திருவண்ணாமலையில் சந்திப்போம். வர விரும்பும் நண்பர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள். குறும்பட இயக்குனர்கள், கலைஞர்களையும் இந்த நிகழ்விற்கு வரவேற்கிறோம்.

தொடர்புக்கு: 9840698236


 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்
Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com