கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறுந்திரைப் பயணம் குறுந்திரைப் பயணம்
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது குறுந்திரைப் பயணம் (விட்டிலாபுரம், மாமல்லபுரம்)

(6th Shortfilm Screening Travel, Vittilapuram Village, Near Mamallapuram, Chennai)


லிவி


தமிழ்ஸ்டூடியோவின் 6வது குறுந்திரைப் பயணம் கல்பாக்கத்திற்கு அருகில் உள்ள விட்லாபுரம் என்னும் சிறு கிராமத்தில் நடைபெற்றது. தமிழ்ஸ்டூடியோவின் படிமை மாணவர்களுடமன் குறுந்திரைப் பயண‌த்திற்கு பயணித்தோம். பல பேருக்கும் கல்பாக்கம் செல்வது இதுவே முதல் முறை. கல்பாக்கம் என்றதும் அணு உலை என்று படிந்த மனதிற்கு முற்றான‌ வேறொரு நிலபரப்பை தரிசித்தோம். கல்பாக்கத்தின் அழகு, தமிழக‌த்தில் வேறெங்கும் கண்டிராத வனப்பை தன்னுள் பொத்தி வைத்திருந்தது. அருகே அழகான் கடற்கரை. நேர் செய்யப் பட்ட ரோடுகள், ஒழுங்கமைந்த தெருக்கள், தூய்மையான் வழித்தடங்கள், சாலையின் இருபக்கங்களிலும் சடைதுப் போய் வளர்ந்த ம‌ரங்கள். பூங்காவைப் போன்றே முற்றும் முழுதாய் இருந்ததது கல்பாக்கம். பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே பட்டாசுத் சத்தம் போன்ற குருவிகளின் கூச்சல். முழுமையான சூனியத்தையும் பறவைகள் சத்தம் விழுங்கியது.

கொலைக்களம் இவ்வளவும் அழகாகக் தான் இருக்குமோ என்னமோ?. அணு உலை இருப்பதால் தானே இத்தனையும் பேணுகிறார்கள் என்ற நினைப்பு அதிகம் உறுத்தத் தொடங்கியது. விட்லாபுரம் பேருந்து வசதிகள் அதிகம் இல்லாத பங்கிட்டுக் கொள்ளும் ஆட்டோக்களை(share auto) நம்பியுள்ள ஊர். ஊருக்குள் செல்வதற்கு பசுமையான‌ விளை நிலத்தை வரப்பாக வைத்த மண் பாதைக்குள் செல்ல வேண்டும். அன்று ஊரின் தண்டு மாரியம்மன் கோவில் திருவிழா. நாங்கள் சென்ற நாளன்று கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. பனை மற்றும் தென்னை ஓலைகளால் வேய்ந்த வீடுகள் அதிகம். அங்கங்கே கல்வீடுகள். மாடிவீடுகளும் இருக்கிறது. புறாக் கூண்டை ஞாபகம் கொள்ளச் செய்யும் ஒரு அறையையும், தாழ்ந்து குனிவாகவே செல்ல இயலும் பனை வீடுகளையும் கடக்கையில் 2020ல் இந்தியா வல்லரசாக கனவு கண்டு கொண்டிருக்கும் கனவான்களை நினைக்க சிரிப்பு தான் வந்தது. தேனீர்க் கடை எதுவும் இல்லை. குழந்தைச் சாமான்கள் விற்கும் சிறு சிறு பெட்டிக் கடைகள். ஒரு வீட்டிற்கு அருகில் சுருக்கங்கள் பொத்த கிழவி அவளிடம் கதைத்துக் கொண்டிருக்கும் பேரன்கள் அல்லது சுற்றத்துச் சிறுவர்கள். முழுமையானதொரு கிராமத்தில் இறங்கிய உணர்வு. நகரமயமாததில் வாழ் நேர்ந்த ஏக்கத்தின் தவிப்பு. எல்லாமுமாக ஒரு வித அழகுணர்வுடன் இருந்தது அம்மாலைப் பொழுது.

திருவிழா மேடையிலேயே திரை கட்டி திரையிடத் தொடங்கினோம். முழுவதும் திரைபபட ஆர்வலர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அரை கால் சட்டை அணிந்த வெற்று மேனியும், புழுதி படர்ந்த முழு ஆடைகளுமாக அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவரிடமாவது சிறு சலனத்தை குறும்படங்கள் ஏறபடுத்தியிருந்தால் எங்கள் முயற்சி வெற்றி பெற்று விடும். இடையிடையே சிறு பெருத்த தூரல் வந்து வந்து போனது. குறும்படத்திரையிடல் சிறு இடைஞ்சல்களுடன் நடை பெற்றது. சரியாக 9 மணிக்கு ஊர் திருவிழாக்காரர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியும் இருந்தது. எங்களுக்கு ஒதுக்கப்ப்ட்ட நேரத்தில் தொடர்ந்து குறும்படங்களைத் திரையிட்டோம். திருவிழா ஏற்பாட்டின் நிகழ்ச்சி தொடங்கவிருந்ததால் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் எதுவும் வைத்துக் கொள்ளாமலே திரையிடல் முடிந்தது.

எங்கள் நிகழ்வு முடிந்ததும் களவாணி புகழ் ரீட்டா நடனக் குழுவின் நிகழ்ச்சி நடை பெற இருப்பதை அறிவித்தார்கள். 'மாரிய்ம்மா மாரியம்மா' பாட்டுடன் தொடங்கிய நடனம்,' கச்சேரி கச்சேரி கலை கட்டுதடி உன்ன பார்த்தா' பாடலுடன் குத்தாட்டம் போய்க் கொண்டிருந்தது. சிறு கிராமம் என்று எண்ணிய நாங்கள் அந் நிகழ்ச்சிக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்து விட்டோம். கிழவிகள், குமரிகள், வயதான‌வர்கள் சிறுவர்களென ஊரே குழுமிவிட்டதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே திரும்பினோம்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/hdyPJJ


-------------------------------------------------------------
சனிக்கிழமை (23-07-2011)

மாலை 6 மணியளவில்

சென்னையின் புறநகர் பகுதியான மாமல்லபுரம் அடுத்துள்ள விட்டிலாபுரம். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.

மாமல்லபுரம், கல்பாக்கம் இடையே அமைந்துள்ளது இந்த கிராமம்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருபதிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்திற்கு வர விரும்பும் ஆர்வலர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். 

நன்றி: மாஸ்டர் திரு. ஏ. கே. உமர்,
நிறுவனர். இயக்குனர் நண்பர்கள் கல்வி அறக்கட்டளை. 

ஊர் பொதுமக்கள், இளைஞர் நற்பணி மன்றம். 

தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைப்பு: கலையரசன்

உங்கள் கிராமத்தில் இதுப் போன்ற குறும்படத் திரையிடல்கள் நடைபெற வேண்டுமாயின் கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</