கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறுந்திரைப் பயணம் குறுந்திரைப் பயணம்
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஐந்தாவது குறுந்திரைப் பயணம் புதுவஞ்சேரி (சென்னை)

(5th Shortfilm Screening Travel, Puduvanchery, Chennai)


செந்தூரன் (படிமை மாணவர்)  


தமிழ் ஸ்டுடியோ.காமின் ஐந்தாவது குறுந்திரைபயணம் சென்னையின் ஓரமாயும்,என் மக்கள் இயந்திரங்கள் அல்ல என்பதைபோலவும் மனிதம் சேர்த்து கட்டியெழுப்பிய இயற்கை அரணாகவும் கொண்ட சென்னையின் புறநகர் பகுதியான சேலையூரின் அருகேயுள்ள புதுவன்சேரி கிராமத்தினுள் எங்கள் குறுந்திரை பயணம் விமர்சையாய் நடைபெற்றது.கிராமத்தின் உள் நுழைந்தபோது எதையோ ஒரு சவாலை எதிர் நோக்கியே பயணமானோம்.சவால் என்பதே வெறும் வாய்ச்சவடாலாயே முடிந்துவிட்டது.எமக்கான உதவி Fighters Team ஆல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.

எமக்கான வேலை குறைக்கப்பட்டிருந்தது.குளமும் அதைச்சுற்றி சிறியதும்,பெரியதுமான வீடுகளும் என்றுமே வாழ வாய்ப்பளிக்கபடாத குடிசைகளையும் தாண்டியே எம் பயணம் முடிவடைந்தது.எம் கண்களில் எப்போதுமே இருக்ககூடிய எங்கள் மையங்கள்(அதாங்க சிறுசுங்க)எம்மிடம் ஒன்றொன்றாய் வந்து அமர்ந்து கதைபேசிக்கொண்டும்,சிரித்தவாறும் முன் பின் அறிந்தார் போல் குசலம் விசாரித்துக்கொண்டும் இருந்தனர்.சிறிது நேரத்தில் எம் குறுந்திரைபயணம் ஆரம்பித்தது.அதில் 8 குறும்படங்கள் திரையிடப்பட்டன.குறும்படங்கள் திரையிடப்பட்ட நேரத்திலிருந்து சுமார் ஒன்றரை மணிநேரம் ஊரடங்கு சட்டம் இயற்றினாற்போல் எங்கும் அமைதி,அவ்வப்போது அதிர்ச்சியான திரைக்காட்சிகளின்போது சலசலப்பு.இவ்வாறு திரைப்பட திரையிடல் இனிது நடந்தேறியது.

நடந்தேரியவுடன் எம் படிமை மாணவர் ஸ்ரீகணேஷ் குறும்படங்கள் ஏன் திரைடுகிறோம் என்ற எம் தாரக மந்திரங்கள் பற்றிய விளக்கம் அளித்தார்.பின் குறும்படங்கள் எப்படி இருக்கிறது என உருவமாய் சிறிதாயும்,பேசியதில் வளர்மரமாயும் இருவர் தம் கருத்தை பதிவு செய்துகொண்டார்கள்.எம் திருப்பதியான பாதையின் ஓரம் நம்மை நாமே திரும்பி பார்த்து அடுத்த தடம் சரியாய் இருக்கிறது என்பதை நிரூபித்து சென்றனர். பின் நம் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கலையரசன் நன்றியுரை கூறினார்.அதன் பின் நம் தமிழ் ஸ்டுடியோவின் நிறுவனர் அருண் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். அனைவரும் ஊரிடமே விடைபெற்றுக்கொண்டு மெதுவாய் களைய ஆரம்பித்தோம்.இன்றைய இரவும் இரவாயே இருந்துவிட்டது.

தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பொறுப்பு கல்பாக்கம் கலையரசன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுவன்செரியுள்ள Fighters Team குமார் அவர்களுடன் பேசி இந்நிகழ்வை மிக சிறப்பாக முடித்துள்ளார். தமிழ் ஸ்டுடியோவின் நல்லதோர் வீணை செய்து குழுவிலுள்ள நண்பர் சக்ரவர்த்தியின் ஆலோசனையின் பேரில் புதுவன்செரியில் குறும்படங்கள் திரையிட குமார் ஏற்பாடு செய்துக் கொடுத்தார். நிகழ்ச்சி சிறப்பாக நடக்க ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள்.

ஒருங்கிணைப்பு: கல்பாக்கம் கலையரசன்
உதவி : ஆர்ம்ஸ்ட்ராங்
(படிமை மாணவர்)


செந்தூரன் (படிமை மாணவர்)

படங்கள்: ஆர்ம்ஸ்ட்ராங், சிலம்பரசன் (படிமை மாணவர்)

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/cjTVtD#

-----------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஐந்தாவது குறுந்திரைப் பயணம் எதிர்வரும் சனிக்கிழமை (25-
06-2011) அன்று சென்னையின் புறநகர் பகுதியான சேலையூர் அருகிலுள்ள புதுவன்சேரி கிராமத்தில் நடைபெற உள்ளது. திரையிடல் மாலை ஐந்து மணியளவில் நடைபெற உள்ளது.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இருபதிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்திற்கு வர விரும்பும் ஆர்வலர்கள், சேலையூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய பின்னர் கீழ்க்கண்ட எண்களுக்கு அழைக்கவும்.

கலையரசன்:

இந்த திரையிடலுக்கு வழிவகுத்த நண்பர் சக்ரவர்த்தி, மற்றும் Fighters Team குமார் ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் மனமார்ந்த நன்றி.

உங்கள் கிராமத்தில் இதுப் போன்ற குறும்படத் திரையிடல்கள் நடைபெற வேண்டுமாயின் கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரங்களுக்கு
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</