கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா

ஆதவன் 15-06-09 : 11:03 PM

கடந்த சனிக்கிழமை (13-06-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஒன்பதாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. இந்த மாதமும் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது. இந்த மாதம் காலை நிகழ்வில் உலகத் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சியும், மாலை மூன்றுமணியளவில் குறும்பட வட்டமும் தொடங்கியது.

காலை பத்து முப்பதிற்கு "டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த "ஹோட்டல் ர்வாண்டா" என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. இது சற்றே பெரிய படமாதலால் இந்த மாதம் ஒரு உலகப் படம் மட்டுமே திரையிடப்பட்டது. அதுத்த மாதம் "தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்" திரைப்படம் திரையிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல் பகுதி:

இந்த மாதம் எழுத்தாளர் திரு. நீலகண்டன் அவர்கள் இலக்கியம் பகுதியின் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். "கலைகளை ஆவணமாக்குவோம்" என்கிற தலைப்பில் மிக நல்லப் பலக் கருத்துகளை பதிவு செய்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பகுதியிலேயே நமக்குத் தெரியாமல் நடந்துக் கொண்டிருக்கும் பல அதிர்ச்சி தகவல்களை பதிவு செய்தார்.

மேலும் அழிந்துக் கொண்டிருக்கும் பலக் கலைகளை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பதிவு செய்தார்.

அடுத்ததாக இந்த மாதம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரு. நரசிம் அவர்கள் இந்த மாதம் சிறந்த பதிவர் விருதை பெற்றார். தவிர்க்க முடியாதக் காரணத்தால் அவரால் வர இயலவில்லை. அவர் நண்பர் அவருக்கான விருதை பெற்று சென்றார்.

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டி நிகழ்வில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். தனது ஒளிப்பதிவு அனுபவங்கள் குறித்தும், இயக்குனர் அனுபவம் குறித்தும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். பின்னர் ஆர்வலர்கள் தங்கள் வினாக்களை எழுப்ப அவர்களுக்கு மிக பொறுமையாக பதிலளித்தார்.

மேலும் இந்த வாரம் ஆர்வலர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சிறந்த குறும்படங்களை எடுத்த ஒரு சிலருக்கு தானே உதவி இயக்குனராக வாய்ப்பு வழங்குவதாகவும் அறிவிப்பு செய்தார். தமிழ் ஸ்டுடியோ.காம் பரிந்துரைக்கும் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மூன்றாம் பகுதி:

மூன்றாம் பகுதியான குறும்படங்கள் திரையிடல் பகுதியில் இந்த வாரம் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். இதில் முதலில் திரு. சா.சு அவர்கள் இயக்கிய "வேண்டுதல்" என்கிற குறும்படமும் அடுத்து திரு. சரவணன் அவர்கள் இயக்கிய "அறியாமை" என்கிறக் குறும்படமும், அடுத்து செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய"இருண்ட வீடு" என்கிறக் குறும்படமும் திரையிடப்பட்டது. மூன்றுக் குறும்படங்களையும் பார்த்து முடித்தப் பின்னர் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் அந்தக் குறும்படங்கள் குறித்து தனது பார்வையை பதிவு செய்தார். மிக நேர்த்தியாக ஒவ்வொரு காட்ச்சியையும் குறிப்பிட்டு அதன் நிறைகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டி அனைத்து இயக்குனர்களையும் தட்டிக்கொடுத்தார்.

மேலும் இந்த மூன்றுக் குறும்படங்களையும் வரிசைப்படுத்தி அதன் இயக்குனர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். மிக சிறந்த விமர்சனங்களையும், கருத்துகளையும் பதிவு செய்தார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/20099#
------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.

நாள்: சனிக்கிழமை (13-06-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்

இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த "தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்" திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த "ஹோட்டல் ர்வாண்டா" திரைப்படமும் திரையிடப்படுகிறது.

இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - கலைகளை ஆவணமாக்குவோம்.

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் "கலைகளை ஆவணமாக்குவோம்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.

இவரைப் பற்றி:

இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.

சிறந்த வலைப்பதிவர் விருது:

இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.narsim.in/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவர் பணியாற்றியுள்ள படங்கள்:

திரு. சக்தி சரவணன் அவர்கள் "பூவே உனக்காக", "சூரிய வம்சம்", "ஆஹா" "திருப்பாச்சி", உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த "சிலம்பாட்டம்" படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய "இருண்டவீடு", திரு. சா.சு. அவர்கள் இயக்கிய "வேண்டுதல்" திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய "அறியாமை" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</