கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா

ஆதவன் 09-05-09 : 10:03 PM

கடந்த சனிக்கிழமை (09-05-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய எட்டாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. இந்த மாதமும் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது. இந்த மாதம் ஒவ்வொரு சொட்டும் ஆவணப்பட வெளியீட்டு விழாவும், மாலையில் வழக்கம்போல் குறும்பட வட்டமும் நடைபெற்றது.

இந்த மாதம் அரங்கமே நிறைந்து வழிந்தது. காலை நிகழ்வில் திரளான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர். பத்திரிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள் என பல்வேறுபட்ட ஆர்வலர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

காலை நிகழ்வு

இந்த மாதம் காலை நிகழ்வில் கவிஞர். வைகை செல்வி அவர்கள் இயக்கிய "ஒவ்வொரு சொட்டும்" ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் திரு. வசந்த் ஆவணப்படத்தை வெளியிட 'கல்கி' பத்திரிக்கை ஆசிரியர் திருமதி. சீதா ரவி அவர்கள் பெற்றுக்கொண்டார். அண்ணாப் பலகலைக்கழக சுற்றுசூழல் கல்வி மைய இயக்குனர் முனைவர். திரு. நவநீத கோபால கிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பத்திரிக்கையாளர் திரு. மாலன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ் ஸ்டுடியோ.காம் திரு. குணா அவர்கள் வரவேற்பு வழங்க, திரு. ராஜசேகர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

ஆவணப்படத்தில் பணிபுரிந்த தொழிநுட்ப கலைஞர்களுக்கு திரு. வசந்த் அவர்கள் பரிசுகள் வழங்கி மரியாதை செய்தார்.

பின்னர் பேசிய அனைவரும் இந்த ஆவணப்படம் தொழில்நுட்ப ரீதியிலும், கருத்து ரீதியிலும் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது என்று பாராட்டினர். திரைப்படங்களில் தனக்கு கிடைக்காத மனத் திருப்தி தான் ஒரு குறும்படம் எடுத்தபோது கிடைத்ததாக வசந்த் தெரிவித்தார். ஒவ்வொரு சொட்டும் ஆவணப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளது என்றும், சொல்ல வந்தக் கருத்தை மிகக் குறைந்த நேரத்தில் தெளிவாக விளக்கியுள்ளனர் என்றும் பாராட்டினார்.
பின்னர், மாலை மூன்று மணியளவில் நமது குறும்பட வட்டம் நிகழ்ச்சி தொடங்கியது.

முதல் பகுதி:

இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் திரு. முருகேசப் பாண்டியன் அவர்கள் பங்கேற்றார். இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். தன்னுடைய கிராமத்து நினைவுகளை மிக அழகாக வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். மேலும் பல்வேறு கிராமக் கதைகளும், புகழ் பெற்ற படங்களின் பெயர்களையும் கூறி, குறும்பட ஆர்வலர்களும் இது போன்ற படங்கள் இயக்கவும், இலக்கியங்களை குறும்படமாக எடுக்கவும் முன் வரவேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக இந்த மாதம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் புதுச்சேரியை சேர்ந்த முனைவர். திரு. மு. இளங்கோவன் அவர்கள் இந்த மாதம் சிறந்த பதிவர் விருதை பெற்றார். பின்னர் தன்னுடைய பதிவுகள் குறித்தும், பதிவு எழுத வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். இவர் புதுவை கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பகுதி:

இந்த மாதம் குறும்படத் திரையிடல் பகுதி இரண்டாம் நிகழ்வாக நடைபெற்றது. இந்த மாதம் இந்த பகுதிக்கு திருமதி. பிரசன்னா ராமசாமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார்.

முதலில் திரு. பத்மநாபன் அவர்கள் இயக்கிய "வினா" என்கிறக் குறும்படம் திரையிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தை திறனாய்வு செய்த திருமதி. பிரசன்னா அவர்கள் குழந்தைகள் பற்றி மிக அழகாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் தேவையில்லாத ஒரு சிலக் காட்சிகளை நீக்கினால் மிக தத்ரூபமாக வந்திருக்கும் என்று பாராட்டினார். இயக்குனருக்கு ஒரு சில ஆலோசனைகளும், படம் பற்றிய தனது விரிவான விமர்சனத்தையும் பதிவு செய்தார்.

அடுத்ததாக திரு. நித்தி அவர்கள் இயக்கிய "விடியலை நோக்கி" என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. இந்தப் படம் மிக அழகாக கிராமங்கள் பற்றியும், விவசாயம் பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இருந்த பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி, நாட்டில் விவசாயம் எவ்வாறு பாழ்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்கினர் திறனாய்வாளர் திருமதி. பிரசன்னா ராமசாமி.

அடுத்ததாக திரு. ஸ்ரீதர் இயக்கிய "டுலெட்" குறும்படம் திரையிடப்பட்டது. இந்தக் குறும்படம் மிகக் குறைந்த செலவில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ளதாக பாராட்டிய பிரசன்னா ராமசாமி அவர்கள் ஒரு சிலக் குறைகளை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று பாராட்டினார். பின்னர் மூன்றுக் குறும்பட இயக்குனர்களிடமும் கேள்விகள் கேட்டு நல்லதொரு விவாதத்தை நடத்தினார்.

மூன்றாம் பகுதி:

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதி மூன்றாம் பிரிவில் நடைபெற்றது. இந்த முறை படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அரஸ் இந்தப் பகுதியில் பங்கேற்றார். மேடை ஏறக்கூடாது என்கிற தனது கொள்கையில் உறுதியாக இருந்த சுரேஷ் அரஸ் அவர்கள் வாசகர்களுடன் ஒன்றாக அமர்ந்து மிக சிறப்பானதொரு கலந்துரையாடலை நடத்தினார். படத்தொகுப்பு சார்ந்த கேள்விகள் அனைத்தையும் வாசகர்கள் கேட்க சுமார் இரண்டு மணி நேரம் பொறுமையாக பதிலளித்தார்.
இந்த வழிகாட்டல் பகுதி வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/OvvoruSottumRelease8THKurubadaVattam#
-----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -05 -09 : 10.45 PM

நாள்: சனிக்கிழமை (09-05-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - இந்த மாதம் காலை நிகழ்வில் உலகத் திரைப்படங்கள் திரையிடல் நேரத்தில் கவிஞர். வைகை செல்வி அவர்களின் "ஒவ்வொரு சொட்டும்" ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெறும். இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலஇந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் திரு. ந. முருகேசப் பாண்டியன் அவர்கள் "இலக்கியமும் குறும்படங்களும்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.

இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. முனைவர் மு.இளங்கோவன் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.muelangovan.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு குறித்து மிக நுணுக்கமான பலத்த தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெறலாம். திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த "நான் கடவுள்", "மரியாதை" போன்ற படங்களில் மட்டுமின்றி பல வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

திரு. பத்மநாபன் அவர்கள் இயக்கிய "வினா", திரு. நித்தி அவர்கள் இயக்கிய "விடியலை நோக்கி" திரு. ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய "டுலெட்" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

இம்மாதம் புகழ்பெற்ற தியிப்பட திறனாய்வாளர் திருமதி. பிரசன்னா ராமசாமி அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</