கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா

ஆதவன் 11 -04 -09 : 12:03 PM

கடந்த சனிக்கிழமை (11-04-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. இந்த மாதம் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது.

முதலில் பத்து குறும்படங்கள் திரையிடப்பட்டன. பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. காலையில் பத்து குறும்படங்கள் பின்னர், மாலையில் மூன்று குறும்படங்கள் என இந்த மாதம் குறும்படத் திருவிழாவாக அமைந்தது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாசகர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர். குறும்பட உலகில் புதிய வரவாக செல்வி. திவ்யா அவர்கள் நுழைந்துள்ளார். இவர் இயக்கிய "இருண்ட வீடு" குறும்படம் இம்மாதம் காலையில் திரையிடப்பட்டது. தொடர்ந்து "Future", "மரணக்குழி", "சத்தமில்லாத மரணங்கள்" போன்ற குறும்படங்கள் திரையிடப்பட்டன.

குறும்படங்கள் திரையிடப்பட்டதும், அந்தக் குறும்படங்களின் இயக்குனர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது.

முதல் பகுதி:

இம்மாதம் இலக்கியப் பகுதிக்காக திரு. சுசி திருஞானம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். தன்னம்பிக்கை கதைகள் பலக் கூறி, வந்திருந்த பல படைப்பாளிகளை ஊக்குவித்தார். தொய்வு நிலையில் இருக்கும் பல படைப்பாளிகள் இவரது பேச்சால் உத்வேகம் பெற்றுள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர் எழுதிய புத்தகத்தில் இருந்து இவர் கூறிய மதுரா ட்ராவல் இயக்குனர் திரு. பாலாவின் உண்மைக் கதையும், சன் டிவி திரு. கலாநிதி மாறனின் கதையும் ஆர்வலர்களுக்கு மேலும் தெம்பை ஊட்டியது. தொடர்ந்து பேசிய சுசி திருஞானம் அவர்கள் படிக்க வேண்டிய ஐந்து புத்தகனளை ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

சிறந்த பதிவர் விருதளிக்கும் நிகழ்வு:

இந்த முறை சிறந்த விருது திரு. வினோத் அக்னிப் பார்வை என்கிற அவரது வலைப்பூவிற்காக வழங்கப்பட்டது. இவர் நமது தமிழ் ஸ்டுடியோ.காமில் சார்லி சாப்ளின் தொடரை எழுதி வருகிறார் என்பது குறிப்படத்தக்கது. இவருக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் திரு. குணசேகரன் அவர்கள் விருது வழங்க அதைப் பெற்றுக் கொண்ட திரு. வினோத் அவர்கள் 15 மணித்துளிகள் ஆர்வலர்களிடையே பேசி பல நல்லக் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு ஒரு நல்லாப் பதிவாக அமைந்தது. மனிதருக்கு உண்மையில் நல்ல குரல் வளம் அமைந்துள்ளது. பாராட்டுகள். ஆனால் இந்த மாதம் சிறந்த பதிவருக்கு எங்களால் ஊக்கத் தொகை ஏதும் வழங்க முடியவில்லை. காரணம் தொடர்ந்து இணையதளத்தை எந்தவித வருமானமும் இன்றி நடத்தி வருவதாலும், குறும்பட வட்டம் நிகழ்ச்சிக்கு போதுமான ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தினால், சில ஆயிரங்கள் நட்டம் ஏற்பட்டு விட்டதாலும் பதிவருக்கும் மற்ற குறும்பட படைப்பாளிகளுக்கும் எங்களால் ஊக்கத் தொகை வழங்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இரண்டாம் பகுதி:

குறும்பட வழிகாட்டலுக்காக நாம் அழைத்திருந்த திரு. மாணிக்கம் அவர்கள் வர இயலாத காரணத்தால் இம்முறை நமக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர் இயக்குனர். திரு. அருண் மொழி அவர்கள். இவர் திரைக்கதை அமைப்பது பற்றிய கலந்துரையாடலை நடத்தினார். உண்மையில் வழிகாட்டல் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று பல ஆர்வலர்கள் நம்மிடையே தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.

அந்த அளவுக்கு இந்த மாத வழிகாட்டல் பகுதியை மிகச் சிறப்பாக வழி நடத்திக் கொடுத்தார் அருண் மொழி அவர்கள். தொடர்ந்து ஆர்வலர்களின் வினாக்களுக்கு விடையளித்துப் பேசினார். குறும்படங்களுக்கு சென்சார் அங்கிகாரம் வாங்குவது குறித்து அவர் அளித்த விளக்கம் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்தது.

மூன்றாம் பகுதி:

இந்த மாதம் மூன்றாவது சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் திரு. ஜெயபாரதி அவர்கள் வந்திருந்தார். திரையிடப்பட்ட மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அவர் தனது கருத்துகளை பதிவு செய்தார்.

முதலாவதாக திரையிடப்பட்ட குறும்படம் "திரு. விஜிக்குமார்" அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்" என்கிறக் குறும்படம் திரையிடப்பட்டது. பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஒரு தந்தையின் கடைசிக் கட்ட வாழ்க்கை நிலையை இயக்குனர் படம் பிடித்திருந்தார். தன் மகனை படிக்க வைத்து பெரிய அரசாங்க பதிவியில் அமர வைத்த தந்தை இறுதியில் இறந்த பின்னர் குப்பைத் தொட்டியில் தீமூட்டப்படுவதாக அமைந்திருந்தது இக்குறும்படம். ஆங்காங்கே சிலக் குறைகள் தென்பட்டாலும் இயக்குனரின் முயற்சி பாராட்டத்தக்கது.

இரண்டாவதாக திரையிடப்பட்ட குறும்படம் "திரு. சக்தி பாரதி" அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்". சமூகத்தின் மீது தனக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை நிலைதான் இக்குறும்படம். இயக்குனர் இக்குறும்படத்தில் நடித்திருந்தார்.

கொஞ்சம் நீளத்தைக் குறைத்திருந்தால் இக்குறும்படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். இயக்குனருக்கு வாழ்த்துகள்.

மூன்றாவதாக திரையிடப்பட்ட குறும்படம் "திரு. நீலகண்டன்" அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்து..." கண் தானத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படம் நல்லதொருப் பதிவாக அமைந்தது. முன்னரே நாம் பார்த்திருந்த ஒரு சிலக் காட்சிகள் படத்தில் தொய்வு ஏற்படத்தி இருந்தாலும் இயக்குனரின் நல்ல முயற்சிக்கு நமது வாழ்த்துகள்.

மூன்று குறும்படங்களும் திரையிடப்பட்ட பின்னர் அக்குறும்படங்களின் இயக்குனர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. திரையிடப்பட்ட மூன்று குறும்படங்களுக்கும் பாராட்டி தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

இறுதியாக மூன்று குறும்படங்கள் பற்றியும் இயக்குனர் "திரு. ஜெயபாரதி" அவர்கள் தன்னுடைய கருத்தை பதிவு செய்தார். சற்றே காட்டமாக விமர்சித்தாலும் இறுதியில் இயக்குனர்களை தட்டிக்கொடுத்து அவர்களின் நல்ல எதிகாலத்துக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்தார். குறும்படங்களில் இசையை சத்தமாக வைத்து ஏன் படுத்தி எடுக்கிறீர்கள்..
ஒரு சிலக் காட்சிகளுக்கு இசையை விட மௌனமே சிறந்தது என்கிற கருத்தை பதிவு செய்தார். அனைத்து படைப்பாளிகளும் அதிகமாக இலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்றும், இலக்கியத்தைப் படிக்காதத்தின் விளைவே இது போன்ற புரிதல் இல்லாத தவறுகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். உண்மையில் ஒரு நல்லாப் படைப்பாளியை சீர்படுத்தும் முயற்சியாக அவரது பேச்சு அமைந்தது.

குறும்பட வட்டத்தின் இறுதி பகுதியாக ஆர்வலர்கள் தங்களை, தங்களின் திறமைகளை அறிமுகப் படுத்துக் கொள்ளும் பகுதி நடைபெற்றது. நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, என தங்களின் திறமைகளை ஆர்வலர்கள் அறிமுகப்படுத்த அவர்களின் தேவை இருக்கும் அனைவரும் அவர்களின் பெயர் மற்று தொலைபேசி என்னை குறித்துக் கொண்டனர்.

------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஏழாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -04 -09 : 07.45 PM

நாள்: சனிக்கிழமை (11-04-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - இந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று வெல்கம் டு சினிமா என்கிற பத்திரிகை நடத்திய குறும்படப் போட்டியில், முதல் மூன்று குறும்படங்களுக்கு பரிசளிப்பு விழா நடந்ததே தவிர குறும்படங்கள் திரையிடப்பவில்லை. முதல் முறையாக அவர்கள் குறும்படப் போட்டி நடத்துவதால் அதற்கான வழிமுறைத் தெரியவில்லை என்று அதன் அமைப்பாளர் தெரிவித்தார். தமிழ் ஸ்டுடியோ.காம் அந்த போட்டியை தன் வாசகர்களுக்கு தெரிவித்து அவர்கள் குறும்படங்கள் அனுப்ப காரணமாக இருந்தது. இதனால் பல வாசகர்கள் எங்களிடம் தொடர்பு கொண்டு தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டனர்.

எனவே வாசகர்கள் குறையை போக்கும் விதமாக வெல்கம் டு சினிமா நடத்திய குறும்படப் போட்டிக்கு வந்தக் குறும்படங்கள் அனைத்தும் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டத்தில் பதினைந்து திரைப்படங்களாக மூன்று மாதங்களுக்கு ஒளிபரப்பப்படும். எனவே உலகப் படங்கள் திரையிடல் பத்தாவது குறும்பட வட்டத்தில் தான் திரையிடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பப்படும் குறும்படங்கள் பெயர்கள் மற்றும் விபரங்களும் வெளியிடப்படும் முதல் மாதம் அதற்கான நேரமில்லாதக் காரணத்தால் இங்கு வெளியிடப்படவில்லை.

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

இலக்கியம் பகுதியல் இம்மாதம் "புன்னகை உலகம்" சிற்றிதழின் ஆசிரியர் திரு. "சுசி திருஞானம்" அவர்கள் பங்குபெற்று இலக்கியமும் குறும்படங்களும் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். இவர் "வெற்றியின் அறிவியல்", "நேர நிர்வாகம்", "உனக்குள் ஒரு மேதை", போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். "விஜய்" தொலைக்காட்சியின் செய்திப் பிரிவில் இன்புட் எடிட்டர் ஆக இருந்துள்ளார். மேலும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் சேனல் ஹெட் ஆகவும் இருந்துள்ளார். இவர் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. வினோத் அவர்கள். இவரது வலைப்பூ. http://agnipaarvai.blogspot.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

திரைப்படங்களில் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரியும் திரு. மாணிக்கம் அவர்கள் இம்மாதம் குறும்படங்களுக்கான "ஸ்டோரி போர்ட்" உருவாக்கம் குறித்து வழிகாட்ட உள்ளார். மேலும் இவர் பல படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பத்மஸ்ரீ கமலஹாசனின் பல படங்களுக்கு இவர்தான் "ஸ்டோரி போர்ட்" ஆர்டிஸ்டாக பணிபுரிந்துள்ளார். ஆளவந்தான், வெளிவராத மருதநாயகம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். எனவே வாசகர்கள் அது குறித்த தங்களது ஐயங்களை திரு. மாணிக்கம் அவர்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம். இந்நிகழ்வு முழுக்க முழுக்க ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகும்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

தி. நீலகண்டன் அவர்கள் இயக்கிய "நல்லதோர் வீணை செய்வோம்", திரு. விஜிக்குமார் அவர்கள் இயக்கிய "குப்பை மனசெல்லாம்", திரு. சக்தி பாரதி அவர்கள் இயக்கிய "எங்கெங்கு காணினும்..." ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.

மேலும் இம்மாதம் முதல் புதிதாக, குறும்படங்களை காண்பதற்கு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார். குறும்படங்கள் திரையிடப்பட்டு, கலந்துரையாடல் முடிந்த பின்னர் இந்த சிறப்பு விருந்தினர் அக்குறும்படங்கள் குறித்தான தனது பார்வையை வெளிப்படுத்துவார்.

இம்மாதம் இயக்குனர் திரு, ஜெயபாரதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் இயக்கிய "குருஷத்ரம்" திரைப்படம் இந்திய பாகிஸ்தான் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும், இவர் 2002 ஆம் ஆண்டு இயக்கிய "நண்பா நண்பா" திரைப்படத்தில் நடித்ததற்காக திரு. சந்திரசேகர் அவர்கள் நடுவண் அரசின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.

சிறந்த வலைப்பதிவருக்கு சிறிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</