கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 

தமிழ் ஸ்டுடியோவின் 61வது குறும்பட வட்டம்

- கவிஞர் பச்சோந்தி  

தமிழ் குறும்படங்களின் வரிசையில் ஒரு முக்கியமான, ஒரு வித்தியாசமான, காட்சி மொழிக்கான அத்தனை சாத்தியக்கூறுகளையும் கொண்ட ஒரு சிறப்பான படம் பார்த்த நிறைவைத் தந்தது எனலாம் தமிழ் ஸ்டுடியோ நடத்திய 61 அது குறும்பட வட்டத்தில் திரையிட்ட மீண்டும் ஒரு புன்னகை , THE WIND இரண்டு படங்களில் ஒன்றான THE WIND என்கிற குறும்படம்.

தொடர்ந்து 5 வருடங்களாக நடைபெற்றுவந்த குறும்படவட்டம். கடந்த ஒரு ஆண்டாக நடைபெறாமலிருந்தது ஒரு ஏமாற்றமே குறும்பட ரசிகர்களுக்கும், குறும்பட இயக்குனர்களுக்கும். மீண்டும் பல சோதனைகளைக் கடந்து ஆரம்பிப்பது நமக்கெல்லாம் ஒரு மழைக்காலம்தான். அந்த வகையில் பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற 61 வது குறும்படம் நிகழ்வை தரிசிப்போம் வாசிப்பின் வழியாக.

திரையிடல் தொடங்குவதற்கு முன்பாக அனைவரையும் வரவேற்று அருண் பேசியதாவது,

ஈரானியப் படங்களால் அங்கே எப்படி மாற்றம் நடந்ததோ, அதேபோல் குறும்படம் மூலமாக இங்கேயும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதுவரை 4000 குறும்படங்கள் பார்த்திருக்கிறோம். தமிழ்ச் சூழலில் குறும்படங்களை திரைப்படத்துறைக்கு செல்ல விசிடிங்கார்டு மாதிரி இல்லாமல், ஆத்மார்த்தமாக நேசித்து எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இன்று திரையிடப்படும் இரண்டு படங்களில் “THE WIND” எனக்கு நெருக்கமான படம்.

திரைப்படங்களை மாற்றக்கூடிய சக்தி - அறந்தை மணியன்

1902 இல் வந்த trip to the moon என்கிற குறும்படம்தான் உலகிலேயே முதன்முதலாக வந்த அறிவியல் புனைவு படம். ஞாயிறு Script, திங்கள் shooting, வெள்ளி Release, சனிக் கிழமை Rest என்று குறும்படங்கள் எடுப்பவர்கள் உண்டு. ஆறு ஆண்டுகளில் 400 படங்கள் திரையிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. உலகின் மிகச்சிறந்த படைப்பாளி குறும்படம் ஆவணப்படம் எடுத்தவர்கள் என்று வரலாறு சொல்கிறது. ஒன்று இரண்டு அல்ல ஏராளமான முயற்சிகளை தமிழ் ஸ்டுடியோ செய்கிறது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை எப்போது வருமென்று காத்துக்கொண்டிருந்த காலம் உண்டு. தடியின்றி தொடர்ந்து நடைபெறவேண்டுமென்றும், திரைப்படங்களை மாற்றக்கூடிய சக்தி இவர்களிடம் இருக்கிறது என்றும் அறந்தை மணியன் பேசினார்.

படிமங்களால் கட்டமைக்கப்பட்ட சமூகம் - அரவிந்தன்

வீட்டைவிட்டு வெளியே வந்தவர், வீடு திரும்புவதற்கான சாத்தியமின்றிப் போகிறது. ஆனால் போராடி, தப்பிப் பிழைத்து வீடு வருகிறோம். இரண்டு படங்களில் Film Making இல் மேலானதாய் இருக்கிறது WIND. நல்லவொரு காட்சிப்படுத்தல், சம்பவமில்லை, ஒரு பொட்டல்வெளி, தீக்குச்சி, ரெண்டு செல்போன், அதில் பேட்டரில் இல்லாமல் ஒன்று, பாலன்ஸ் இல்லாமல் ஒன்று. குருவி, நாய், தூக்கில் தொங்குபவனின் செல்போனுக்கு வரும் அவன் காதலின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்ப பேலன்ஸ் இல்லாமல்போவது, அவள் போன்பண்ணும்போது கற்பமான அவளிடம் இவன் இறந்ததை சொல்லலாமா? இல்லை அவளிடம் இப்போதைக்கு சொல்லக்கூடாது என்று ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்திய விதம் ரொம்ப இருந்தது. இதுபோன்று சிறந்த படத்தை எடுப்பதே உங்களின் குறிக்கோளாகட்டும், சினிமாவுக்காக இருக்கக்கூடாது.

திரைப்படங்கள்தான் இன்று சமூகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன. சினிமாவில் கிடைக்கும் புகழ், பணம் இவைரெண்டும் நம்மைப் பாதித்து இதன் படிமம் நம்மை பிடிக்கிறது. இப்படி திரைப்பட படிமங்களால் இச்சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் எடுக்கிறதே சினிமாதான், இதை திரையரங்கில் காட்டினால்தான் சினிமா என்பது கிடையாது. மற்றபடி சினிமா வாய்ப்புக் கிடைத்தால் பயன்படுத்தலாம். ஆனால் அதுவே இலக்காக நம்மை அளக்கவேண்டாம். தனக்கான கலையைத் தானே கண்டடைவதே ஒரு கலைஞனின் நோக்கமாக இருக்க வேண்டும். அதைப் பார்ப்பவர்களுக்கும் அவரவர் வாழ்க்கையாக இருக்கிறது. இதுபோன்ற சிறந்த குறும்படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும். அதை விற்றாக வேண்டும். நமது திறமையை, தகுதியை அளக்கும் ஒரு அளவுகோல்தான் இது. சினிமா ஒன்றே அல்ல. இவ்வாறு ஊடகவியலாளார் அரவிந்தன் பேசினார்.

இயக்குனர் பாலாஜிதரண் பேசும்போது படித்த சிறுகதைகளையே குறும்படமாக எடுக்கனும் என்ற ஐடியா வரனுமென்றார்.

தமிழ்சினிமாவின் மாற்றம் - பாலாஜி மோகன்

Genuinity மாற்றாதவர்கள் அடுத்தடுத்த கட்டம் போவார்கள். Genuine, Mature, Talent person தான் மணிகண்டன். இவர் Life Naturity Movie Maker. மணியின் திரைப்படங்கள் Shuttled வகையைச் சார்ந்தது. இவர் எடுத்த காக்கா முட்டை தமிழ் சினிமாவில் மாற்றாத்தைக் கொண்டுவரும். எல்லோருக்கும் நேரம் சுருங்கிக்கொண்டே இருக்குறது. நாளை Future Film பண்ணுறவங்ககூட Short Film பண்ணுவாங்க. சிலர் ஹாபியாகக் கூட குறும்படங்கள் எடுக்கின்ற காலம் வரும். முன்பெல்லாம் எப்போது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வரும் என்று ஏங்கிக்கொண்டு இருப்போம். எத்தனை இடர்பாடு வந்தாலும், முகநூலை முடக்கினாலும் ஒரு இயக்கம் செய்யவேண்டிய அத்தனை செயல்களையும் ஒரு இயக்கமாகவே அருண் மிகச்சிறப்பாக செய்கிறார். இவ்வாறு இயக்குனர் பாலாஜி மோகன் பேசினார்.

காற்று நிரப்பிய படம்:

குறும்படத்தை வேற மீடியமா பண்ணனும். காக்கா முட்டை எங்கபோயி உட்காரமோ, அங்கபோயி உட்காந்து பல்வேறு தடங்களுக்குப் போகிறது. அது சிறுவர்களுக்கான படம். மிகைப்படுத்தலில்லாமல் எதார்த்தமா இருக்குமென தன் கருத்தைக் கூறிய இயக்குனர் மணிகண்டனிடம் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். கேள்வி : ஏன் WIND ன்னு பெயர்வைக்கக் காரணாம். பதில்: உலகம் இருக்குமோ இல்லையோ காற்று சுற்றிக்கொண்டே இருக்கும். படம் முழுவதும் காற்று இருக்கும். உரையாடல் நிறைய இருந்தா நல்லபடம் இல்லை, உரையாடல் குறைவா இருந்தா நல்லபடம் என்று கூறுவது சினிமாவின் இலக்கணம் கிடையாது. உரையாடல் நிறைந்த சிறந்த படம் இருக்கு.

கே : ஏன் தூக்கில் தொங்கியவனின் முகத்தைக் காட்டலை?
பதில் : செத்தவனின் முகத்தைக்காட்டனும்னு விரும்பலை.

மேலும் தூக்குக்கயிறின் சத்தமா? இல்லை மரக்கிளையின் சத்தமா? ஏனென்றால் ஒரு கிளையில்தான் கயிறு கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கிரீச் கிரீச் சத்தம் இரு கிளைகள் உரசுவதைப்போல் இருக்கிறதே என்றும் செத்தவனின் Point of View வில் கேமரா வருகிறதே என்றும் நுட்பமான கேள்விகளை பார்வையாளர்கள் கேட்க கேட்க சலிப்பின்றி பதில்களைக் கூறினார் இயக்குனர் மணிகண்டன்.

ஓராண்டு பசியில் வந்தவர்களுக்கு, ஒரு பெரும் விருந்தாக அன்றைய குறும்பட வட்டம் அமைந்திருக்கும் என்பதில் வியப்பொன்றுமில்லை.

-----------------------------------------------------------------------------------------------------
நாள்: 14-02-2015, சனிக்கிழமை.

இடம்: இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர்.

நேரம்: மாலை 5.30 மணிக்கு.

திரையிடப்படும் குறும்படங்கள்: விண்ட், மீண்டும் ஒரு புன்னகை (காக்கா முட்டை திரைப்பட இயக்குனர் மணிகண்டனின் இயக்கத்தில் வெளியான இந்த குறும்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்மா போன்றோர் நடித்துள்ளார்கள்)

சிறப்பு விருந்தினர்கள்:

இயக்குனர் பாலாஜி மோகன்
இயக்குனர் பாலாஜி தரணிதரன்
தயாரிப்பாளர் சி.வி. குமார்
தயாரிப்பாளர் & நடிகர் சித்ரா லக்ஷ்மணன்
பத்திரிகையாளர் அரவிந்தன் (தமிழ்-இந்து)
பத்திரிகையாளர் நா.கதிர்வேலன்
& இயக்குனர் மணிகண்டன்...

நண்பர்களே சில மாத இடைவேளைக்கு பிறகு தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் மீண்டும் தொடங்கவிருக்கிறது. இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இக்சா மையத்தில் குறும்பட வட்டம் மாலை 5.30 மணியளவில் தொடங்கிவிடும். தமிழில் வெளியாகும் குறும்படங்களை மக்களுக்கு திரையிட்டுக் காட்டக் கூட சரியான இடமில்லாத சூழலில் ஏழு வருடங்களுக்கு முன்னர் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் தொடங்கப்பட்டது.

தொடர்ச்சியாக 60 மாதங்கள் நடந்த குறும்பட வட்டம் பொருளாதார பிரச்சனையில் ஒரு வருடம் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் குறும்பட வட்டம் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. குறும்படங்கள் திரையிடல், குறும்படம் எடுப்பதற்கான ஆலோசனை, எடுத்த குறும்படங்களை அனுபவமுள்ள இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பார்த்துவிட்டு ஆலோசனை வழங்குவது என தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் முழுக்க முழுக்க குறும்படங்களைக் கொண்டாடுவதற்கான இடமாக இருக்கப்போகிறது. எனவே நண்பர்கள் இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையை தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்திற்காக ஒதுக்கி வைத்துவிடுங்கள்.

அனைவரும் வருக.. அனுமதி இலவசம்...

உறுப்பினர்களாக சேர விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்: 9840698236

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்
     
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio