கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஆறாவது குறும்பட வட்டம்

ஆதவன் 17-03-09 :11.00 PM

கடந்த சனிக்கிழமை (14-03-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஆறாவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது.

இந்த மாதம் குறும்பட வட்டம் காலை பத்து மணிக்கு தொடங்கியது. முதலில் உலகப் படங்கள் திரையிடப்பட்டது. பின்னர் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. காலையில் இரண்டு உலகப்படங்களும் பின்னர் மாலையில் மூன்று குறும்படங்கள் என இந்த மாதம் திரைப்பட திருவிழாவாக அமைந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாசகர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர்.

திட்டமிடபடியே இந்த மாதம் குறும்பட வட்டம் நாள் முழுவதும் நடைபெற்றது. காலையில் "March of Penguines" திரைப்படமும் அதற்கடுத்து "Emmanuel's Gift" திரைப்படமும் திரையிடப்பட்டது. இதில் "March of Penguines" திரைப்படமும் ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம். "Emmanuel's Gift" திரைப்படம் இம்மானுவேல் என்கிற தனிமனிதன் ஓட்டப்பந்தய விளையாட்டின் மூலம் பெற்ற பரிசுப் பொருட்களை வைத்தே "கானா" என்கிற ஆப்பிரிக்க நாட்டை முன்னேற்றிய விதத்தை விளக்கும் படம்.

முதல் பகுதி:

பின்னர் மதிய இடைவேளை முடிந்ததும் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கியது. இந்த மாதம் திட்டமிடபடியே இலக்கியம் பகுதி தொடங்கியது. கவிஞர். திருமதி. வைகைசெல்வி அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர்களால் வர இயலவில்லை. ஆனால் ஆபத் பாண்டவனாய் வந்தார் தியேட்டர் கிளப் திரு. ஜெயராவ் அவர்கள்.

எனவே இந்த மாதம் இலக்கியம் பகுதியில் அவரது வழிகாட்டல் நடைபெற்றது. இலக்கியமும், நடிப்பும் என்று விரிந்த அவரது பேச்சு, இறுதியில் பல்வேறு பரிமாணங்களை நடித்துக்காட்டி முடிவு பெற்றது. வந்திருந்த பெரும்பாலான வாசகர்களை கவரும் விதமாக அவரது பேச்சு அமைந்தது. அவரது பேச்சும் ரத்தின சுருக்கமாக இருந்தது. மிக குறுகிய நேரம் மட்டுமே பேசி விடைபெற்றார்.

பின்னர் சிறந்த பதிவர் விருது வழங்கும் நடைபெற்றது. இந்த மாதம் சிறந்த பதிவருக்கான விருதை உண்மைத் தமிழன் திரு. சரவணன் அவர்கள் பெற்றார். இவ்விருதை தமிழ் ஸ்டுடியோ.காம் திரு. குணசேகரன் அவர்கள் வழங்க திரு. சரவணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். சொன்னது போலவே முதல் மாதம் வெறும் கோப்பையுடன் முடித்துக் கொள்ளப்பட்டஇவ்விருது இந்த மாதம் சிறிய ஊக்கத்தொகையுடன் சேர்ந்து வழங்கப்பட்டது. இனி மாதந்தோறும் கோப்பையுடன் சிறிய ஊக்கத்தொகையும் சேர்த்தே வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

விருது வழங்கப்பட்டதும் திரு. சரவணன் அவர்கள் பேசினார். வலைப்பூ தொடங்குவதன் நோக்கம், மற்றும் தொடங்குவதற்கான வழிமுறைகள் என்று அவரது பேச்சு விரிந்தது. மேலும், தொடர்ந்து எழுதுங்கள். எழுத எழுத உங்கள் எழுத்தும் வளப்படும். உங்களுக்கான அங்கிகாரம் வலைப்பூவில் உறுதியாக கிடைக்கும் என்றும் சொல்லி சென்றார். சிறந்த வலைப்பதிவருக்கான இந்த மாத ஊக்கத்தொகை விருதை நமக்கு வழங்கியவர் திரு. மணிகண்டன் அவர்கள்.

இரண்டாம் பகுதி:

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இரண்டாம் பகுதி தொடங்கியது. இந்த மாதம் திரைப்படத் துறையில் ஒலிப்பதிவாளராக பணிபுரியும் திரு. உதயகுமார் அவர்கள் குறும்பட வழிகாட்டல் நிகழ்ச்சியை இனிதே நடத்தி சென்றார். தனது திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், வெண்ணிலா கபடிக் குழு, நந்தலாலா, அஞ்சாதே போன்ற படங்களில் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் சிலாகித்து பேசினார்.

பின்னர் ஒலிக் குறித்தும், ஒலியை எப்படி குறும்படங்களில் பயன்படுத்துவது என்றும் தனது பேச்சை தொடங்கினார்.முடிவில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து சென்றார். வெண்ணிலா கபடிக் குழுவில் இறுதியில் கதாநாயகன் இறப்பதை எந்த வித ஒளியும் இல்லாமல் முடித்ததை வாசகர்கள் கேள்வி கேட்டனர். அது இயக்குனரின் விருப்பம் என்றும், மேலும் தனக்கு அந்த இடத்தில் ஒரு சஸ்பென்ஸ் வேண்டும் என்று இயக்குனர் கேட்டுக் கொண்டதின் காரணத்தினால் தான் அவ்வாறு செய்ய நேரிட்டது என்று கூறினார்.

மூன்றாம் பகுதி:

மூன்றாம் பிரில் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டது. இந்த மாதம் முதல் திரையிடப்படும் மூன்று குறும்படங்களுக்கும் கோப்பையுடன் சிறிய ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாதம் ஊக்க்க்தொகையினை நமக்கு வழங்கியவர் திரு. மணிகண்டன் அவர்கள். வாசகர்கள் சார்பாகவும் தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பாகவும் அவருக்கு நமது நன்றிகள்.

முதல் படமாக திரு. டென்சிங் ராஜா அவர்கள் இயக்கிய "கண்டு கேட்டு" திரைப்படம் திரையிடப்பட்டது. காதலர் தினத்திற்காக எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், காது கேட்காத காதலி பற்றியும், கண் தெரியாத காதலன் பற்றியும் அழகாக விளக்கியுள்ளது. குறும்படம் திரையிடப்பட்ட பின்னர் டென்சிங் ராஜாவிற்கு விருதும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
பின்னர் டென்சிங் ராஜா தனது குறும்பட அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார். பின்னர் வாசகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இரண்டாவது படமாக திரு. பாட்சா அவர்கள் இயக்கிய "சுயநலம்" குறும்படம் திரையிடப்பட்டது. கழிவு நீர்த் தொட்டியில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் பற்றிய அருமையான குறும்படம் இது. படத்தின் இறுதியில் அனைவரின் மனதிலும் எழுந்த கேள்வி. ஏன் கழிவு நீர்த் தொட்டியில் இன்னும் மனிதர்களே வேலை செய்கின்றனர். அதற்காக ஏன் இன்னும் இயந்திரம் கண்டுபிடிக்கப்படவில்லை.

கழிவு நீர்த் தொட்டியில் வேலை செய்வதன் கொடுமையை மிக அழகாக விளக்கி இருந்தார் இயக்குனர். பின்னர் கோப்பையும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

இறுதியாக அதன் இயக்குனர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொண்டார். குறும்படங்களால் என்ன சாதித்து விட முடியும் என்கிற கேள்விக்கு அவர் கூறிய ஒரு சம்பவம் பதிலாக அமைந்தது. இந்தக் குறும்படத்தில் நடித்தவர் உண்மையாகவே கழிவு நீர்த் தொட்டியில் வேலை செய்பவர். அதனாலேயே அவரை வெறுத்து ஒதுக்கிய இவரதுக் குடும்பத்தினர் இக்குறும்படத்தை பார்த்த பின்னர் அவரது அருமை பெருமைகளை தெரிந்துக் கொண்டனர் என்றும், இக்குறும்படம் ஒரு குடும்பத்தையே இணைத்து வைக்க காரணமாக அமைந்தது என்றும் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மூன்றாம் படமாக திரு. ராஜா அவர்கள் இயக்கிய "கழுவேற்றம்" குறும்படம் திரையிடப்பட்டது. இக்குறும்படம் தமயந்தியின் "அனல் மின் மனங்கள்" என்கிற சிறுகதையை மையமாகக் கொண்ட படம். மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்த இக்குறும்படம் பரவலான பாராட்டைப் பெற்றது. மனைவியின் சொல்லைக் கேட்டு தனது தாயை ஒருப் பூங்காவில் தனியாக விட்டு செல்லும் ஒரு மகனின் மன நிலையை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர். இந்தக் குறும்படத்திற்கும் கோப்பை, ஊக்கத்தொகை இரண்டும் வழங்கப்பட்டது.

பின்னர் திரு. ராஜா அவர்கள் இக்குறும்பட குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து விடைபெற்றார்.

திரையிடப்பட்ட மூன்று குறும்படங்களின் நிறை குறைகளை பற்றி திரு. உதயகுமார் தொடர்ந்து பேசினார்.

இறுதியில் தமிழ் ஸ்டுடியோ.காம் குறித்த வாசகர்களின் கருத்துகளோடு இந்த மாதம் நிகழ்வு முடிவுபெற்றது.

------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த பதிவர் விருது வழங்கும் விழா.

நாள்: சனிக்கிழமை (14-03-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை

10 AM - 2 PM - உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

3 PM - 7 PM - குறும்பட வட்டம்

முதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்

கவிஞர் திருமதி. வைகை செல்வி அவர்கள் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமக்கலம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மேலும் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறும். இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. சரவணன் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.truetamilans.blogspot.com

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

திரைப்பட ஒலிப்பதிவாளர் திரு. உதயகுமார் அவர்கள் ஒலித் தொழில்நுட்பம் குறித்து ஆர்வலர்களுக்கு வழிகாட்ட உள்ளார். மேலும் பல வெற்றிப் படங்களில் பணிபுரிந்த தனது அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். இவர் பணிபுரிந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் "வெண்ணிலா கபடி குழு"

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இம்மாதம், சென்னையை சேர்ந்த திரு. ராஜா அவர்கள் இயக்கிய "கழுவேற்றம்", சென்னையை சேர்ந்த திரு. டென்சிங் ராஜா அவர்கள் இயக்கிய "கண்டு கேட்டு", மற்றும் பெரோஸ் கான் இயக்கிய "சுயநலம்" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் புதியப் பகுதி இம்மாதம் முதல் நடைபெற உள்ளது.

இந்த மாதம் முதல் திரையிடப்படும் மூன்று குறும்படங்கள் மற்றும் சிறந்த வலைப்பதிவர் ஆகியோருக்கு சிறிய அளவிலான ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாதம் ஊக்கத் தொகையினை வழங்க இருப்பவர் சென்னையை சேர்ந்த திரு. மணிகண்டன் அவர்கள். வாசகர்கள் சார்பாக அவருக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</