கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம்

ஆதவன்  

கடந்த சனிக்கிழமை (31-01-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு இடையிலும் திரளான ஆர்வலர்கள் கலந்துக் கொண்டு வட்டத்தை சிறப்பித்தனர்.

மூன்றாவது குறும்பட வட்டம் போலவே இம்முறையும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வட்டம் நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக மூன்றாம் பிரிவின் சிறப்பு அழைப்பாளர் படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் வர முடியாதக் காரணத்தால் மூன்றாம் பிரிவு நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. மற்ற இரண்டு பிரிவுகளும் இனிதே நடைபெற்றது. முதலில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய விவாதம் நடைபெற்றது. பின்னர் இலக்கிய பிரிவில் திரு. பாரதி புத்திரன் அவர்கள் ஓர் அருமையான விவாத மேடை அமைத்துக் கொடுத்தார்.

முதல் பிரிவு:

சென்னையை சேர்ந்த திரு. ஆசி சௌந்தர் அவர்கள் இயக்கிய "பூமி" என்கிற குறும்படம் திரையிடப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழில் பற்றிய அருமையான விழிப்புணர்வுடன் எடுக்கப்பட்டிருந்த இக்குறும்படம் அவரது முதல் குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வாழும்போது பல இடங்களை மடக்கிப் போட்டு தொழில் நடத்தும் மனிதன் இறப்பிற்கு பிறகு அவனது எலும்புக் கூட்டிற்கு கூட இம்மண்ணில் இடமில்லாமல் போவதை அழகாக ஒரு

பாடலுடன் காட்சிப்படுத்தி இருந்தார். ஒரு சில தொழில்நுட்பக் குறைகளை தவிர்த்துப் பார்த்தால் "பூமி" அனைவருக்கும் ஏற்ற படமே. அடுத்தாக "பூமி" குறும்பட இயக்குனர் திரு. ஆசி சௌந்தர் அவர்கள் தனது அனுபவத்தை ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். பின்னர் பெரும்பாலான ஆர்வலர்கள் அவரிடம் பல்வேறு வினாக்களை கேட்டனர். அதற்கு விடயளித்துப் பேசிய இயக்குனர், தனது தவறுகளை அடுத்தக் குறும்படத்தில் திருத்திக் கொள்வதாக உறுதியளித்தார்.

இரண்டாவது படமாக புதுச்சேரியை சேர்ந்த திரு. யாழ் நிலவன் அவர்கள் இயக்கிய "தாய் பறவை" குறும்படம் திரையிடப்பட்டது. சிறுவர்களின் மன நிலையை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளது இக்குறும்படம். தனது போழுபோக்கிற்காக பறவைகளை அடித்துக் கொன்று துன்புறுத்தும் சிறுவன் ஒரு கட்டத்தில் தனது தவறுக்காக திருந்தும் இடம் அருமை. அவர் திருந்துவதற்கான காரணம் அழகாக கையாளப்பட்டுள்ளது. தனது முதல் குறும்படத்திலேயே முத்திரை பதித்த திரு. யாழ் நிலவன் அவர்களுக்கு ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர், அக்குறும்படத்தின் இயக்குனர் தனது அனுபவங்களை ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். குறிப்பாக விலங்குகளை, அல்லது பறவைகளை வைத்து படம் எடுப்பதன் சிரமத்தை அவர் விளக்கிய விதத்தை வைத்தே ஒரு ஆவணப்படம் எடுக்கலாம். அவ்வளவு சிரத்தையுடன் அக்குறும்படத்தை எடுத்து தனது அதை அனைவருக்கும் கொண்டு போய் அவர் சேர்த்திருக்கும் விதம் அருமை.

தொடர்ந்து வாசகர்கள் பல வினாக்கள் எழுப்ப அதற்கு இயக்குனர் தனது பார்வையை பதிவு செய்தார்.

மூன்றாம் படமாக பி. சிவக்குமார் அவர்கள் இயக்கிய "ஆயிஷா" எனும் குறும்படம் திரையிடப்பட்டது. இக்குறும்படம் "இரா. நடராசனின்" நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இதற்கு ஒளிப்பதிவு செய்த திரு. C.J. ராஜ்குமார் அவர்களின் திறமை இப்படத்தில் வெளிப்பட்டுள்ளது. ஆனால் இதுதான் அவரது முதல் படம் என்கிற தகவல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமியின் அறிவுக் கூர்மையை இந்த குறும்படம் மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளது. ஆனால் அச்சிறுமியை அடையாளம் கண்டுகொள்ளாத ஆசிரியர் சமூகம், அவளை படிக்க விடாத குடும்பம் என அவளை இந்த சமூகம் படுத்தும்பாடு நம்மையே கண் கலங்க வைக்கிறது. இறுதியில் அச்சிறுமிக்கு ஏற்படும் நிலை கண்டு கல்லும் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு உணர்வு பூர்வமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அக்குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. C.J. ராஜ்குமார் இக்குறும்படம் எடுக்க தயாரிப்பாளர் கிடைத்த கதையை அழகாக எடுத்துக் கூறினார். எவ்வித லாப நோக்கமுமின்றி தயாரிப்பாளர் கிடைத்தக் கதை அனைத்து ஆர்வலருக்கும் புது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கும். பின்னர் ஆர்வலர்கள் கேட்ட வினாக்களுக்கு பதில் அளித்து பேசினார் திரு. ராஜ்குமார்.

இக்குறும்படம் மும்பை, லண்டன் ஆகிய திரைப்பட விழாக்களில் பாராட்டும், பரிசுகளும் பெற்ற குறும்படம். மேலும், இக்குறும்படம் பல பள்ளிகளில் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் விளைவாக பல பள்ளிகளில் மாணவர்களை அடிக்கும் பழக்கத்திற்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய விருது ஆகும்.

முதல் பிரிவு முடிந்த பின்னர் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. "பூமி" குறும்படத்தில் நடித்திருந்த திரு. வெங்கட் ரமேஷ் அவர்கள் ஆர்வலர்கள் அனைவருக்கும் நூறு "லேஸ்" சிப்ஸ் பாக்கெட்டை இலவசமாக வழங்கினார். அவருக்கு ஆர்வலர்கள் சார்பிலும் தமிழ் ஸ்டுடியோ சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இரண்டாம் பிரிவு:

சென்னை கிறிஸ்டியன் கல்லூரி பேராசிரியர் முனைவர் திரு. பாரதி புத்திரன் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பில் புத்தகம் வழங்கி இரண்டாம் பிரிவு தொடங்கப்பட்டது. பின்னர் சிற்பங்கள் குறித்தும், வரலாறு குறித்தும் தான் சேகரித்த தகவல்களை ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். அவர் பேசிய ஒவ்வொரு வினாடியும் பல அறியத் தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

கேரளாவில் நடைபெறும் ஆய்வுகளில் உள்ள அக்கறையும் நுண்ணிய விபரங்களும் தமிழ்நாட்டில் நடைபெறும் ஆய்வில் நடைபெறாதது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் தெரிவித்த பல அறியத் தகவல்கள் விரியாவில் ஆவணப்படங்களாக எடுக்கும் முயற்சி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

மூன்றாம் பிரிவு:

மூன்றாம் பிரிவான குறும்பட வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சிறப்பு அழைப்பாளர் வராத காரணத்தால் நடைபெறாமல் போனது. அடுத்த மாதம் இந்நிகழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற குறும்பட வட்டங்கள் "சோதனை முயற்சியாகவே நடைபெற்றது. எனவே பல குறைகள் நடந்திருக்கும். திட்டமிடாமை, திரையிடப்படும் படங்கள் குறித்த தகவல் தெரிவிக்காமை என பல குறைகள் நடைபெற்றது என்பதை நாங்களும் அறிவோம். அடுத்த மாதம் முதல் புதுவிதமாக அதிக குறைபாடுகள் இல்லாமல் குறும்பட வட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திரையிடப்படும் படங்கள், சிறப்பு அழைப்பாளர்கள் குறித்த விபரங்கள் யாவும் முன்னரே வாசகர்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேலும், குறும்பட வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு முன்னுரிமை அளித்து பலரும் பயன்பெறும் வகையில் குறும்பட வட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். குறும்படங்கள் பற்றிய விரிவான பார்வை, குறும்படத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல பகுதிகள் வரும் மாதங்களில் குறும்பட வட்டத்தில் இடம்பெறப் போகிறது. மார்ச் மாதம் முதல் குறும்பட வட்டம் ஒரு நாள் முழுதும் நடைபெறும். காலை பத்து மணி முதல் மதியம் இரண்டு மணி வரை உலகத் திரைப்படங்கள், உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் ஆகியவை திரையிடப்பட்டு விவாதங்கள் நடைபெறும். வழக்கம் போல் மூன்று மணியளவில் குறும்பட வட்டம் தொடங்கப்பட்டு உறுப்பினர்கள் எடுத்த குறும்படங்கள் திரையிடல், இலக்கிய பகுதி, வழிகாட்டல் பகுதி, விவாதங்கள் ஆகியவை நடைபெறும்.

------------------------------------------------------------------------------------------------------

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் நான்காவது குறும்பட வட்டம்

நான்காவது குறும்பட வட்டம்: சனிக்கிழமை (31-01-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி:

இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய விரிவான விவாதம் நடைபெற உள்ளது. இறுதியில் அக்குறும்படங்களின் இயக்குனர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பார்கள்.

இரண்டாம் பகுதி:

தமிழில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி தெரிவு செய்யப்பட்டு, அதனை ஆர்வலர்கள் படிக்க, இலக்கியத் துறை சார்ந்த ஒருவர் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களை எப்படி திரைக்குள் கொண்டு வருவது, மேலும் அந்த சிறுகதையை எப்படி படமாக்கலாம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

மூன்றாம் பகுதி:

ஒரு குறும்பட இயக்குனர் அல்லது அந்தத் துறையின் அனுபவம் வாய்ந்த ஒருவர் தலைமைத் தாங்க குறும்பட வாசகர்கள் தங்களுக்குள் கருத்துகளை பரிமாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இதில் குறும்படங்களை எப்படி விற்பனை செய்வது, குறும்படங்களை எப்படி குறைந்த செலவில் படமாக்குவது போன்ற கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொடர்ந்து தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நடைபெறும் அரங்க வாடகை உள்ளிட்ட செலவுகளுக்காக இந்த மாதம் முதல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</