கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 34வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) 

செந்தூரன் (படிமை மாணவர்)
 

தமிழ் ஸ்டுடியோ.காம் இன் 34 வது குறும்படவட்டம் சென்னை,எழும்பூரிலுள்ள ஜீவன்ஜோதி அரங்கத்தினுள் வெகு விமர்சையாய் நடைபெற்றது.இந்த மாத நிகழ்வு மூன்று அமர்வுகளாய் நடைபெற்றது.அமர்வில் முதல் பகுதியின்போது திரைப்பட இயக்குனர் திரு.சிம்பு தேவனும்,இரண்டாம் பகுதியின் பொது இயக்குனர் திரு.ஞானராஜசேகரனும் பங்கேற்று குறும்பட,திரைப்பட இயக்கத்திற்கான வழிகாட்டுதல் மேற்கொண்டனர்.இந்த மாதத்திலிருந்து குறும்பட வட்டம் தமிழ் ஸ்டுடியோ அருண்,குணா மேற்பார்வையில் படிமை மாணவர்களினால் தொகுத்து வழங்கப்பட்டது. வட்டத்தினை படிமை மாணவர் ஆனந்த் தொகுத்து வழங்கினார்.முதல் அமர்வின்போது இயக்குனர் வசந்தின் "தக்கையின் மீது நான்கு கண்கள்" என்ற குறும்படம் திரையிடப்பட்டது.பின் இரண்டாம் அமர்வு திரைப்பட வழிகாட்டல் திரு.சிம்பு தேவனால் மேற்கொள்ளபட்டது. அவரின் உரை:

சிம்பு தேவன் ; காமிக்ஸ் என்றது என் சின்னவயசுலயே எனக்கு பிடிச்ச மேஜர் இவென்டா இருந்துச்சு.நான் சின்னவயசுல இருந்தே என்னுடைய காமிக்ஸ்ச குமுதம்,விகடனுக்கு தொடச்சியா அனுப்பிகிட்டே இருந்தேன்.நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சுஜாதா விகடன்ல இருந்தார்.அந்த நேரத்தில் எனக்கு காட்டூன் என்றால் என்னவென்றே தெரியாது.காட்டூன் என்பது நகைச்சுவையுடன் பிரச்சனைகளை பேசுவது என்று சுஜாதா அறிமுகப்படுத்தினார்.அதன் பின் நான் விகடன் பரணீதரனை சந்தித்தேன்.அவரின் பேச்சும் என்னுள் மாற்றத்தை ற்படுத்தின.அதற்குமேல் என் பேராசிரியர் ஞானசம்பந்தன்.அதன் பின் விகடன் மாணவர் எடிட்டர் குழுவில் இணைந்து செயல்பேடன்.அங்கே சப் எடிட்டர் ஆக வேலை செய்தேன்.வேற வேற வேலைகள் செய்தாலும் நான் ஒரே தளத்திலேதான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.நான் விகடன் வேலை செய்த நேரங்களில் பல கட்டிடங்களுக்கு பின்னே இருந்தவாறு ஒரு சில மனிதர்களை வரைந்துகொண்டிருப்பேன்.இது எப்பவுமே மிகவும் கடினமானது.ஏனெனில் அந்த மனிதன் திடீரென கைகளை உயர்த்துவான்.அதை வரைய ஆரம்பித்தோமானால் அடுத்த நிமிடம் அந்த கை அங்கே இருக்காது.அவர் வேறு வேலை செய்துகொண்டிருப்பார்.அந்த உடலையும்,முகத்தையும் கண்ணில் உலவிக்கொண்டேயிருக்கவேண்டும்.ஓவியம் என்பது ஒரு inmovement தளம்.

நான் விகடனில் காமிக்ஸும்,ஓவியமும் வரைந்து கொண்டிருந்த நேரத்தில் என் எடிட்டர் ஒரு காமிக்ஸ் பண்ணவேண்டும் என்று கூறினார்.அப்போது உருவானதுதான் கி.முல சோமு.எனக்கு 36 வாரங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.இருந்தும் நான் 30 வாரங்களுக்குள்ளே முடித்துக் கொண்டுவிட்டேன். மிகவும் கடினம் காமிக்ஸ்.இந்த நேரத்துலதான் சேரனுடன் வேலை செய்யும் வாய்ப்பு அமைந்தது.அவரின் படங்களுக்கு நிறைய விதமான கதாப்பாத்திர வடிவங்கள் அமைத்துக்கொடுத்தேன்.

காடூன் காமெடிகளில் நிறைய விதமான வடிவங்கள் உள்ளன.எனக்கு பிடித்த நகைச்சுவையை எதிரில் இருப்பவன் ரசிப்பான் என்பதை எதிர்பார்கவே முடியாது.அதிலேயே ரசிகனின் palls தெரிந்துவிடும்.எனக்கு அழுத்தமான இயக்குனர் தேவைப்பட்டார்.அதன்படி சேரன் கிடைத்தார்.அவரின் திரைக்கதையினுள் இரண்டாம் பகுதியினை இவரின் உதவி இயக்குனர்களின் கைகளில் கொடுத்து அனைவரையும் உருவாக்கி எடுத்துவர சொல்லுவார்.அவரும் தன் கதையை எடுத்து வந்து எது தேவை தேவையில்லை என்பதை இலகுவில் எறிந்துவிடுவார்.அதனாலேயே அங்கே நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளகூடியதாய் அமைந்தது.ஒரு கதாப்பாத்திரம் உருவாகிறதெனில் அங்கே நம் கதாப்பாதிரமும் இலகுவில் வெள்ளிப்படும்.பாண்டிராஜின் கதைகளில் நல்ல மண்வாசனை இருக்கும்.என்னுடைய அறைநண்பன் a.r.முருகதாஸ்.அவரின் கதைகளில் நான் நிறைய ஸ்டோரிபோர்டு வரைந்திருக்கிறேன்.அதன் பின்தான் நான் சங்கர் சாரிடம் ஒரு உருக்கமான காதல் கதையொன்று சொன்னேன்.

அதன் பின் அவருக்கு அதில் உடன்பாடு இல்லாதது போன்று காணப்பட்டதால் ஒரு வரிக்கதையொன்று சொன்னேன்."ஒரு மன்னன் லூஸ் மன்னன்" என்றேன்.பின் ஒரு நாள் அழைத்து அந்த லூஸ் மன்னனை உருவாக்குங்கள் என்றார்.பின் ஒரு நாள் கதை சொல்லும்போது சரி அந்த மன்னனாக யார பிக்ஸ் பண்ணியிருக்கிங்க என்றார்.நான் "வடிவேல்" என்றேன்.அவர் சிரித்துவிட்டு பேசுங்கள் என்றார்.அந்த லைன் சொல்லுவதற்கு முன்பாக சந்திரகிரி என்னும் திரைப்படம் பார்த்தேன்.அது ஒரு பாதிப்பு.முதலில் இந்த வாய்ப்புக்கு சங்கர் சாருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.நான் historical சப்ஜெக்டை fantasy ஆக செய்கிறேன்.அரசியலை நான் வரலாற்றுப்பின்னணியுடன் பேசுகிறேன்.இது எனக்கு வசதியா இருக்கிறது.இது நான் பயணப்படுகிறேன்.ஓவியனாக மிகைப்படுதப்பட்டால்தான் நகைச்சுவை என்பதை உணர்கிறேன்.ஒரு சிறுவன் காலை சிம்மாசனத்தில் வைத்தால் சிரிப்பு வராது.அதையே ஒரு மன்னன் செய்தால் எப்படி இருக்கும் இது என் நகைச்சுவை.தமிழ் சினிமாவில் கதைகள் வெளியில் இருந்து வாங்குவது இல்லை.அது தமிழ் சினிமாவின் சாபக்கேடு.முயற்சி பண்ணினால் நல்ல திரைக்கதையாசிரியர்கள் கிடைப்பார்கள்.அந்த தப்பான வலயத்துள நானும் மாட்டியிருக்கேன். நமக்கு boundary line தெரிய வேண்டும்.அப்போதுதான் நம்மால் திரைகதை அமைக்கமுடியும்.அறை எண் 305 இல் கடவுள் இதில் நான் ஆத்திகம், நாத்திகம் இரண்டையுமே ஒரே தளத்தில்தான் வைத்திருக்கிறேன்.இதுல ethuvumE இல்லா.இரண்டுமே காலவரையற்றது.ஆன்மீகத்துல ஒரு பகுதி நிரூபிக்கப்படவில்லை. விஞ்ஞானத்தின் ஒரு பகுதியும் நிரூபிக்கப்படவில்லை.இதுதான் எண் சினிமா.

இங்கே பாடல்கள் என்பது நமக்கு ஆல்பம் என்ற முறை நம்மை முற்றுமுழுதாய் ஆட்க்கொள்ளவில்லை.வெகு சீக்கிரம் நம்மைவந்தடைந்துவிடும்.முன்னே பாடல்களுன் சினிமா 3 நேரமாய் வந்தது.இப்போது வெகுவாய் குறைந்து விட்டது.அது நம் வளர்ச்சிதான்.ஸ்டோரி போர்டு என்பது நமக்கானது.நம் திட்டமிடலுக்கானது.எதிரில் உள்ளவன் எப்படியிருக்கவேண்டும்,சாட் எப்படி எந்த கோணத்தில் அமைக்கபோகிறோம்.எந்த இடத்தில எந்த பொருட்கள்,கலைபொருட்கள் என்கிற வழிகாட்டல்களை கொண்டது ஸ்டோரி போர்டு.ஹோலிவுட் இன் இயக்குனர்களின் மிக முக்கிய அடையாளமே இந்த குறும்படங்கள்தான்.

இவ்வாறு பேசி சிம்புதேவன் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.பின் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன.

1.இதற்கான தைரியம்,சிந்தனை எப்படி?
சிம்பு:இதுக்கு காரணம் சங்கர்தான்.நான் என்.எஸ்.கே வின் சந்திரகிரி போன்ற படங்கள்தான். படங்களின் பாதிப்புகள் எப்பவுமே உள்ளே இருக்கும் இதுதான் அது.

2. எப்படி உங்களின் புத்திசாலிதனமான நகைச்சுவைகள் படித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடியதாய் அமைத்து விடுவதால் அது பாமரனை சென்றடையாதது ஒரு தோல்விதானே?
சிம்பு:சாதாரணமானவனுக்கு அது வெறும் நகைச்சுவை.மற்றையவனுக்கு அது பிரச்சனை.இதிலே இரண்டு லேயர் உங்களால் உணரமுடியும்.பட்டால் படட்டும் இல்லையென்றால் தேவையில்லை. இது என் கட்டமைப்பு.

3.ஒரு திரைக்கதை ஆசிரியன் வெளியிலிருந்து வராமல் இயக்குனரே அந்த வேலையை செய்வதால் என்ன ஆகிவிடபோகிறது?
சிம்பு;தொழில் எனும் இடத்தி இயக்குனரின் வேலை எடிட் செய்வதே.அது தாராளமாய் செய்யலாம். பாரபட்சம் இருக்காது.படைப்புகள் வேற வேறு தளத்தினுள் பயணிக்காது.ஒரு தளமாய் அமைந்துவிடும்.ரிப்பிடேசனை தவிர்க்கலாம்.வாழ்நிலை வேறுபடும்.

4.உங்களின் முந்தைய திரைப்பட வெற்றி பின்னைய திரைப்படங்களுக்கு அமையவில்லை.ஏன்?
சிம்பு;என்னுடைய அடித்தளம் மாறவேண்டும் என ஆசைப்பட்டேன்.நான் ஒரு படைப்பாளியாய் நான் ஒரே தளத்தில் இயங்கக்கூடாது.நான் என்ன உள்வாங்குகிறேனோ அதுதான் என்படம்.

5.நீங்கள் புலிகேசி எடுப்பதற்கு முன் உங்களிடம் உத்தமபுத்திரன் தந்திருந்தால் நீங்கள் உங்கள் படத்தை நிறுத்தியிருப்பீர்களா?
சிம்பு; நான் உங்களை கிண்டல் செய்ய வேண்டுமென்றால் உங்களின் குரலிலும் உங்கள் உடல் மொழியிளும்தான் அதை செய்யமுடியும்.நான் உத்தமபுத்திரனை கிண்டல் செய்யவேண்டும் என்றுதான் அந்த பாத்திரம் எடுத்துக்கொண்டேன்.அதே போல் தமிழ் திரைப்படங்களுய் உடை,ஆயுதங்கள் போன்றவற்றின் ஆய்வு கிடையாது.

6.melo drama என்றால் என்ன?
சிம்பு;நான் அதை எப்படி பார்கிறேன் என்றால் ஒரு இடத்திலுள்ள ஒரு சில கதாப்பத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துதல்.

34 வது குறும்பட வட்டத்தின்போது இயக்குனர் கு.ஞானராஜசேகரனின் ஒரு கண் ஒரு பார்வை குறும்படம் திரையிடப்பட்டது.ஒரு கற்பமடைந்த பெண் கிணற்றிலிருந்து நீர் இறைத்து குடத்தினுள் ஊற்றிக்கொண்டிருக்கிறாள்.நீர் அவளின் கைகளிலேபட்டு குடத்தினுள்ளே விழுகிறது.அந்த குடத்தினை தன் பேறு கால வயிற்றினுள் வைத்து அந்த பள்ளி வளாகத்தினுள் நுழைந்து,குடத்தினில் இருந்த நீரை வேறு பானையினுள் ஊற்றிவிட்டு இலகுவாய் நிமிர்ந்து நின்றவாறு அருகினில் இருந்த குவளை கட்டப்பட்ட ஒரு தடியினை மெதுவாய் சென்று எடுத்து கழுவி அத இருந்த இடத்தினிலே வைத்துவிட்டு செல்கிறாள்.இவ்வாறு முதல் காட்சி ஆரம்பமாகி நீர் எங்கிருந்து வருகிறது,தீண்டாமை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பதை இலகுவாய் உணர்த்துகிறது.அந்த பெண் வீட்டில் தன் பெண் குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் விதமாய் தயார் செய்து,எந்த வேலையுமின்றி இருக்கும் தன் குடிகார கணவனோடு அனுப்பிவைக்கிறாள்.குழந்தை பள்ளியில் படிக்கிறாள்.சிறிது நேரத்தில் இடைவேளை விடப்படுகிறது.

குழந்தைகள் அனைவரும் ஒன்றாயும்,குழுமியும் விளையாடிக்கொண்டிருகின்றனர்.அங்கு எங்கேயுமே நம்மால் எந்த வித இடைவெளிகளையும் காணமுடிவதில்லை.சிறிது நேரத்தில் ஒரு சிறுவன் அங்கே இருக்ககூடிய மண் பானையில் குவளை ஒன்றினை வைத்து தண்ணீர் முகர்ந்து அருந்துகிறான்.அவனை தொடர்ந்து ஒரு குழந்தை என நீர் அருந்துகிறார்கள்.அந்த பானைக்கு எதிரே ஒரு வயதானவர் அமர்ந்து தன் காதுகளை குடைந்தவாறே அவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்.அந்த பெரியவருக்கு முன்பாக ஒரு குழந்தை வந்து நிற்கிறது.பின் மீண்டும் ஒரு குழந்தை இவ்வாறு சிறிய நிரல் உருவாக பெரியவர் அசாதாரணமாய் எழுந்து வது அந்து குவளை கட்டப்பட்ட தடியை எடுத்து அதன் மூலம் கைகள் படாமல் தண்ணீர் ஊற்றுகிறார்.குழந்தைகள் ஒவ்வொருவராய் கையை நீட்டி நீர் அருந்துகிறார்கள்.அந்த பெண்ணின் குழந்தைக்கு மிகவும் அதிகமாய் தாகம் எடுக்க அந்த குழந்தை தன்னையும் மீறி குவளையை எடுத்து பானையில் கையை விட்டு நீர் அருந்த எடுக்க அதை பெரியவர் தடுக்கிறார்.அந்த நேரத்தில் அங்கு வரும் அவர்களின் வாத்தியார் அவளை கம்பு கொண்டு தாக்குகிறார்.

அந்த தடி அவளின் கண்களில் குத்தி விடுகிறது.அந்த்ய குழந்தையின் கண்களில் இருந்து ஆணம் வடிகிறது.அவளை மருத்துவமனைக்கு எடுத்து செல்லுகின்றனர்.அங்கு சிகிச்சை அளிக்கபட்டு அவள் வீட்டிற்கு வருகிறாள்.இந்த நேரத்தில் தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தபட்ட மக்களின் குரல் வலுப்பெறுகிறது.போராட்டம் வலுக்க அந்த தீண்டாமை நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சி தலைவர் வருகிறார்.பள்ளியில் மாணவர்களுக்கு இங்கு தீண்டாமை நடைமுறையில் இல்லையென்ற பாடம் வன்முறையோடு கற்பிக்கபடுகிறது.மாவட்ட ஆட்சி தலைவர் எல்லாவற்றையும் ஆய்வு செய்து இந்த பள்ளியில் தீண்டாமை பின்பற்றபடவில்லை என முறைகேடுக் கோர்வையை மூடும்போது குழந்தையொன்று பானையின் முன் வந்து கையேந்தி நிற்கிறது.தலைவர் அவளை நோக்கி வருகிறார்.குழந்தை கையேந்தி நிற்கிறது.அவளின் கைகளில் குவளையை கொடுத்து அவளையே நீர் முகர்ந்து அருந்த வைக்கிறார் மாவட்ட ஆட்சி தலைவர்.இறுதியில் குழந்தைகள் பொய் சொல்லாது என்ற உண்மையோடு படம் நிறைவடைகிறது.

இங்கேயே நமக்கான கேள்விகள் கேட்க படுகிறது.தீண்டாமையின் உண்மையான கோரமுகம் நம்மை பார்த்து பல் இளிப்பதை நம்மால் இலகுவாய் உணரமுடிகிறது.தண்ணீர் எடுத்து வந்த பெண்ணின் குழந்தைக்கே அங்கு நீர் கிடைக்கவில்லை எனும்போது அது நம் மேல் செருகப்பட்டிருக்கும் சமயங்களின்,ஜாதிகளின் வேறுபாட்டினையே புரியவைக்கிறது.சொந்த மண்ணிலே பிறந்த நமக்கு நீர் இல்லை,உரிமைகள் இல்லை,நாம் யார்? அவர்களின் அடிமைகளா என்ன? என்ற கேள்விகள் ஊடே படம் முடிவடைகிறது.

இதன் பின் கு.ஞானசேகரன் தன் குறும்படம் பற்றிய நினைவுகளையும்,தீண்டாமையின் கொடூர விளைவுகளையும் பற்றி உரையாற்றினார்.ஞானசேகரனின் உரையிலிருந்து:

12 வருடங்களுக்கு முன்னைய நினைவுகள் திரும்ப அழைக்கப்பட்டிருக்கின்றன.தமிழ் ஸ்டுடியோ.காம்இற்கு நன்றி.திருச்சூரில் மூன்று வருடங்கள் மாவட்ட ஆட்சி தலைவராய் பணிபுரிந்தேன்.அங்கே தான் தீண்டாமையின் முழு உருவத்தை பார்த்தேன்.தீண்டாமைக்கு தண்டனை என்பது கற்பழிப்புக்கு கொடுக்கப்படும் தண்டனையை விட அதிகமானது.ஆனால் இங்கு யாருமே தண்டிக்கபடுவதில்லை.அதற்காகவே இரு மீட்டிங் வைப்பார்கள்.மாதத்திற்கு ஐந்து வழக்குகள்.எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன பூச்சியம்.இதுதான் தீண்டாமை.கேரளா ஒரு முற்போக்கான மாநிலம் அதற்கே இந்த நிலைமை என்றால் நம்மைப்பற்றி கேட்கவே வேண்டாம்.ஒரு கொலை செய்யப்பட்டால் அது அந்த குடும்பத்திற்கான கொலை அல்ல.அந்த கொலை இந்த அரசாங்கத்துக்கு எதிரான கொலை.குற்றத்துக்கு எதிராளி யார்?ஆனால் அரசியல் சட்டம் இந்த தீண்டாமை சட்டம் சரி செய்யபடாதது.தனம் என்ற சிறுமி கண் குத்தப்பட்டாள். ஆனால் அந்த வழக்கு விட்டுக்கொடுப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டது.இந்த விட்டுக்கொடுப்பு என்பது இலகுவில் நம்மை கேலி செய்து விடக்கூடியது.பைத்தியக்காரனைப்பற்றி நம் பார்வை எப்படி இருக்கிறது?சினிமா எடுப்பவனுக்கு இந்த கேள்வி அதிர்ச்சி அளிக்கும்.

என்ன கேள்வி இது பைதியகாரதனமான கேள்வி?இதற்காகதான் ரூம்போட்டு இரச்சி சாப்பிட்டு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். அநீதி இழைக்கபடுகிறது இந்த படத்தில் என்னால் அதை செய்திருக்க முடியும்.ஆனால் அதை நான் செய்யமாட்டேன்.அப்படி செய்யவும் கூடாது என்பதில் மிகக் கவனமாயும் இருக்கிறேன்.என்னால் ஏன் நல்ல அரச அதிகாரியை உருவாக்க முடியாது?பெரியார் பிறந்த பூமியிலேயே ரெட்டைகுவளை கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது.இதை நாம்தான் எதிர்க்கவேண்டும்.இங்கே உண்மையின் குரல் எங்கே கேட்கிறது.இதற்காக உண்ணாவிரதம் நடாத்தபடுகிறது.போரட்டங்கள் நடாத்தப்படுகிறது.எது உண்மை? இதுவா உண்மையின் குரல்.இங்கே இருக்ககூடிய இன்னொரு விடயம் "நாளை முதல் ஜாதி ஒழிக்கபடுகிறது" இதைத்தானே எதிர்பார்க்கிறோம்.எல்லாமே தங்கள் சௌகரியத்துக்காகவே நடாத்தப்படுகிறது.இதை எதிர்க்கும்போது இவர்களெல்லாம் கதாநாயகன் ஆகிவிடுகிறார்கள்.தமிழ் நாட்டினில் கண்முன்னே நடக்கும் அநியாயங்களை எதிர்க்கும் புரட்சிகள் உருவாக வேண்டும்.தமிழன் எதையும் செய்யலாம்.தமிழ் எதையும் செய்யும்.நடப்பதையெல்லாம் பார்த்தல் நமக்கு என்ன பொறி தட்டும்?இந்த தனம் வழக்கு படித்தே எனக்கு என்ன தோன்றியதோ அதைதான் உங்களுக்கு தந்திருக்கிறேன்.இந்த விஷயத்தை பத்திரிகைகள் பெரியதாக்கி பெரிய நடிகர்களெல்லாம் நன்கொடை குடுக்க ஆரம்பித்து விட்டனர்.

எந்த பெண்ணால் தண்ணீர் நிறைக்கபடுகிறதோ அந்த பெண்ணின் குழந்தைக்கே நீர் கிடையாதாம்.அந்த தண்ணி அவளின் குடத்தினுள் இருந்து அந்த குடத்தினுள் விழுந்தவுடன் அந்த நீர் புனிதமடைந்து விடுகிறதாம்.ஐந்த படத்தில் அதிக இடங்களில் ஆங்கிலம் ஏன் பயன்படுத்தபடுகிறது என கேட்டார்கள்.இந்த படம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இலக்கிய கழகம் சார்பில் ஐநூறுக்கு மேற்பட்ட இடங்களில் திரையிடப்பட்டது.பார்க்கும் இடங்களில் ஒரு நிமிடம் சிந்திக்க வைக்க வேண்டும் இதுதான் சினிமா.சினிமா ஊடகம் நம் கைகளில் வந்துவிட்டது.கையில் காமெரா இருந்துவிட்டால் படம் பிடித்துவிடலாம்.லாப்டாப் இருந்தால் படத்தொகுப்பு செய்துவிடலாம் என்ற நிலை.அப்படி பார்த்தால் எழுத்தாளனால் படிப்பவன் எல்லாம் எழுத்தாளனா? இந்த முடிவு என்பது குறும்பட இயக்குனர்களிடம் இல்லை.இப்பொழு சிந்திப்பதை அடுத்த நிமிடம் படம் பிடித்துவிடலாம்.அடுத்த அடுத்த நிமிடம் படத்தொகுப்பு,பின்னணி அவ்வளவுதான்.முந்தைய காலங்களில் சினிமா என்பது அந்நியமாய் இருந்தது.எல்லோருக்குமே படம் எடுக்கும் தகுதி இருக்கிறது.தமிழி சினிமா மோகம் மிக மிக அதிகம் .சிநிமாவை விரும்பாதவனின் தொகுதி என இருக்கவே இருக்காது.ஆனால் படம் எடுப்பதற்கு அந்த மோகம் மட்டுமே போதாது.அது ஒரு கலை வடிவம்.அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.பத்து நபர்கள் ஒரு கூட்டம் ஒன்றில் சந்திக்கிறார்கள் எனில் அதில் இருக்கும் ஒவ்வொருவனும் படம் எடுத்திருக்கிறான்.இதில் எத்தனை படங்கள் வெளியே செல்லுகின்றன.இது சரிதானா? ஒருத்தன் எதையாவது அழகா இருக்குன்னு பார்த்துவிட்டால் போதும் அவ்வளவுதான்.அதை அப்படியே மனதில் ஊறப்போடுங்கள்.அதில் இருந்து வருவதுதான் சரியாய் இருக்கும்.குறும்படங்களில் நல்ல விஷயங்களும் நடந்திருக்கிறது.

முந்தைய காலங்களில் இரு படம் ஒரு வாரத்துக்கும் மேல் போனால் மட்டுமே அதன் வசூல்,வெற்றி பற்றி கூறமுடியும்.ஆனால் இன்று அப்படியல்ல.முதல் காட்சியிலேயே படம் வெற்றி,தோல்வியினை முடிவு செய்துவிடலாம்.இதை கலை வடிவமாகவும்,ஊடகமாகவும் இனங்கண்டு அணுகவேண்டும்.ஊடகத்தை வெற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்தாதீர்கள்.இலக்கிய படிப்பு என்பதே இந்த இளைஞர்களிடம் குறைந்துவிட்டது.இதை கேட்டால் அது இணையத்தில் இருக்கிறது என்பார்கள்.இதற்கு மேல் என்னதான் பேசிவிடமுடியும்.இப்படிப்பட்ட சமூகத்தில் என்னால் எதுவுமே செய்யமுடியாது என்ற தன்மை வந்து விடுகிறது.இது முழு நீள சினிமாவோடு சம்பந்தபட்டது அல்ல.முழு நீள சினிமாவுக்கு இருக்கும் ரசிகர்கள் இதற்கு அல்ல.ஏனெனில் ரசிகன் இங்கு இல்லா அவனே இயக்குனனாகே விடுகிறான்.ஒரு இயக்குனர் எனக்கு எதுவும் தெரியாது நான் இங்கே வண்டி ஊட்டினேன் இந்த ஹோட்டலில் மாவு பிசைந்தேன் என கூறி இந்த மக்குகளுக்கு உற்சாகம் ஈற்றி விடுகின்றனர் இந்த மக்குகளும் கிளம்பி வந்துவிடுகின்றன ஒரு மஞ்சள்பை சகிதம்.ஒரு படைப்பாளி என்பவன் ஒளிந்து கிடக்கிறான் நாம் அவனை தேடவேண்டும் சந்துகளில் இருப்பான்,எங்காவது ஒரு இடத்தில இருப்பான்.ஆனால் நாம் இங்குதான் வந்து தேடவே ஆரம்பிக்கிறோம்.சினிமாவில் இயக்குனர்களுக்கு மரியாதை அதிகம்.சினிமா என்பது ஆசையோடு சம்ந்தபட்ட விடயம் கிடையாது.இங்கே வந்து சுத்தி திரிந்து கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு நான்கு வருடங்களுக்கு பின்புதான் தெரியும் நாம் உதவமாட்டோம் என.பின்னால் அவர்களால் செல்லமுடியாது.இங்கேயே சுற்றிக்கொண்டு திரியவேண்டியதுதான்.நான் அப்படி நிறைய பேரை கண்டிருக்கிறேன்.குறும்படங்கள் திரைப்படங்களுக்கு தயார் செய்வன.அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நான் ஒரு முறை கேரளா தகழி சிவ சங்கரபிள்ளையின் வெட்டிற்கு போயிருந்தேன்.அவர் வீட்டை அடையாளம் காணமுடியாமல் அருகே இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்க அவர் மிக மரியாதையாய் அவர் வீடு தெரியும் ஏறுங்கள் என்றார் ஏறினேன்.அவரிடம் எப்படி அவர் வீடு தெரியும் என கேட்க ஆவலாய் இருந்தது கேட்டேன்."சார் நாமல்லாம் வாழ்க்கைய ஒரு மாதிரி பாப்பம் சார் அவங்கெல்லாம் ஒரு மாதிரி பாப்பாங்க சார்" என்றார்.இதுதான் படைப்பாளி.நாம் நூறு படங்கள் வெளியிடுகிறோம்.அதில் ஆரோ ஏழோ படங்கள் தான் ரசிகனை கவர்கிறது.ஆனால் மலையாளத்தில் வரும் படங்கள் அனைத்தும் ஏன் வெற்றியடைகின்றன?அவன் தன்னை தகுதியானவனாக ஆக்கிக்கொண்டே படைக்க ஆரம்பிக்கிறான் எனவே உங்களை தகுதிப்படுதிக்கொள்ளுங்கள். என கூறி தன் உரையை முடித்துக்கொண்டார்.பின் கேள்வி நேரம் ஆரம்பமானது.

உங்களை எது ஈர்த்தது?
ஞான: என் அப்பா தமிழ் நாட்டில் பிறந்த சாதாரண செடி.நான் நான்கு வருடம் பம்பாயில் இருந்தேன்.அங்குதான் எனக்கான வழியும்,தேடலும் ஆரம்பித்தது.இங்கு இருக்கும் வரை தமிழை மட்டுமே அறிந்து வைத்திருந்த நான் அங்கு போன பின் கலாசாரம் என்ன என்பதை அறிந்துகொண்டேன். என் பாரதியில் ஒரு வசனம் வரும்"நான் நானானது காசியில்" அதேபோன்று "நான் நானானது பம்பாயில்" அங்கேதான் கதை எப்படி சொல்லவேண்டும் என்பதை உணர்ந்தேன்.சாட் சொல்வதை விட திரைக்கதை எதையும் பேச வேண்டும்.எதிலும் சுயதைரியம் கொள்ளுங்கள்.ஹாலிவுடில் பதினையாயிரம் அடிக்கு உள்ளே படம் எடுத்தால் அவன்தான் ஆளுமை உள்ளவன் ஆனால் இங்கு மூன்று,நான்கு கோடி வாங்கும் இயக்குனர்களே மூன்று லட்சம் அடிக்கு மேல் செலவழிக்கிறார்கள்.நான் பாரதியில் 1.5 கோடி செலவு செய்தேன் அணைத்து ப்ரேமுக்குள் இருக்ககூடிய செலவுகளே ஆனால் வெளியில் ஒருவர் எவ்வளவு செலவு செய்திருப்பீர்கள் ஒரு எண்பத்தைந்து லட்சங்கள் என்றார். நான் என்ன சொல்லிவிடமுடியும்.

சென்சார் நமக்கு எதிராய்தானே செயல்படுகிறது?
ஞான:சென்சாரைப்பார்த்து பயங்கொள்ள தேவையில்லை.அது இரைச்சல்,காம உணர்வுகள்,வன்முறைகள் இதற்கு மட்டும்தான் எதிரானவர்கள்.ஆனால் இந்த ஐந்து வருடங்களாய் தமிழ் சினிமா ரசிகர்கள் வெறும் வன்முறையையே ரசித்துக்கொண்டிருக்கிரார்கள்.இது நல்ல சமுதாய வளர்சி இல்லை.இந்த ஒரு சினிமா வென்றதால் அதே போன்று சினிமா வருவது நல்லதல்ல.தமிழில் தைரியமாய் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.ஒரு படம் பார்த்தால் அந்த படம் பாத்தீங்களா?இல்லையா அவ்வளவுதானா நீங்க? இந்த கேள்விகளுக்காகவே நாம் படம் பார்க்க வேண்டியிருக்கிறது.அதுவே படம் பிடிக்கவில்லையெனில் பார்பவனையும் தடுத்து விடுவார்கள்.

எந்த பக்கம் வெற்றிபெறுகிறதோ அந்த பக்கம் தான் தமிழர்கள்.மைனாரிட்டி தமிழர்கள்.ஒரு சினிமாவில் தவறுகளை மீறி ஒரு விஷயம் இருந்தால் அதுதான் சினிமா அதைக்கொண்டாடுங்கள்.தவறுகளை பெரிதுபடுத்தாதீர்கள்.ரசிகனே படத்தை ரசி.இல்லையெனில் தூக்கிஎறி.நான் பாமரனை நம்புகிறவன்.என் படங்களில் தவறுகள் இருக்கும்.அதை மீறி வெளிவரும்.எனக்கு உதவிக்கு நிற்பவன் பாமரன்.அதனால் அவன் என் பாரதியை அவன் ஏற்றுக்கொண்டான்.இந்த புத்திசாலிகள் என் பாரதியை எதிர்த்தார்கள்.எந்திரனை தூக்கி நிறுத்தியவர்களும் இவர்கள்தாம்.

முடிந்தால் ரசி.இல்லையென்றால் தூக்கிஎறி இதுதான் என் வேண்டுகோள்.பெரியார் இந்த ஜாதி என்ற சட்டையின் பட்டன்களை கழட்ட வைத்தார் ஆனால் அவர் இறந்தவுடன் அவருடைய கழகத்தினரே அதற்கு சாவு மணி அடித்துவிட்டார்கள்.எதையும் தமிழன் ஏற்றுக்கொள்கிறான்.அன்றே தமிழன் சொல்லிவைத்தான் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" இது நம் ஜீனோடு கலந்தது.நாம் மாறுபட்ட சமுதாயம்.வெற்றி என்பது சமாதானமாகிவிடலே.நான் நேர்மையாய் இருப்பேன் என் சினிமாவுக்கு நன்றி.இவ்வாறு கூறி பேச்சினை முடித்துக்கொண்டார்.பின் யாழ்நிலவன் நன்றியுரை கூற வட்டம் இனிது நிறைவேறியது.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/34


-------------------------------------------------------------------------------------

நாள்: சனிக்கிழமை (09-07-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில திரைப்பட இயக்குனர் திரு. சிம்புதேவன் அவர்கள் பங்கேற்று இயக்கம் தொடர்பான நுட்பங்கள் தொடர்பாக பேசவிருக்கிறார். குறும்படங்களில், இயக்கத்திற்கான நுட்பங்கள் குறித்தும், ஒரு இயக்குனருக்கான ஆளுமைகள் குறித்தும் பேசவிருக்கிறார்.

சிம்புதேவன், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அரை எண் 305 இல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களின் இயக்குனர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரைப்பட இயக்குனர் ஞான ராஜசேகரன் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்படுகிறது. ஒரு கண் ஒரு பார்வை என்கிற இவரது குறும்படம் பரவலான விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்ற படமாகும். தமிழின் முக்கிய குறும்படங்களில் ஒன்று.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

ஒரு கண் ஒரு பார்வை

ஞான ராஜ சேகரன்

29 மணி / 33 நிமிடங்கள்

 

 

 
 

 

 

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஞான ராஜ சேகரன் IAS சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
------------------------------------------------------------------------------

இந்த மாதம் முதல் தமிழ் ஸ்டுடியோவின் படிமை மாணவர்கள் குறும்பட வட்டத்தை ஒருங்கிணைக்கும் பணியை செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு மாணவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

அதன் படி இந்த மாதம் குறும்பட வட்டம் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவிருக்கும் படிமை மாணவர்: ஆனந்த்.

ஆண்டிப்பட்டியை சேர்ந்த இவர் படிமை திரைப்பட அமைப்பில் தொடக்கத்திலிருந்தே தீவிரமாக பங்கேற்றிருப்பவர். மிக தீவிர வாசகர். எழுதுவதில் மிகுந்த ஆர்வமிக்கவர். பேசுவதிலும் தேர்ந்தவர்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</