கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) 

செந்தூரன் (படிமை மாணவர்)
 

தமிழ் ஸ்டுடியோவின் 33 வது குறும்படவட்டம் எழும்பூர் ஜீவனஜோதி அரங்கில் நடைபெற்றது.நிகழ்வின் முதல் பகுதியாய் அருண் வரவேற்புரை நிகழ்த்தினார்.இன்றைய விருந்தினராய் முதல் பகுதியின் சிறப்பாய் இலக்கிய ஆர்வலரும்,நகைச்சுவை நடிகருமான திரு.சார்லி அவர்கள் குறும்பட இயக்குனர்களுக்கான நடிப்பின் பரிணாமங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்தார்.

சார்லி அவர்களின் பேச்சிலிருந்து சில குறிப்புகள்.

நல்ல சினிமா உருவாக வழி செய்துக் கொண்டிருக்கும் அருண், குணா மற்றும் அவர்களின் குழுவினருக்கு எனது வணக்கங்கள்.எனக்கு கூட்டம் வருமா? வராதா? என்ற கேள்விகளுக்கு அப்பால் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.ஏனெனில் நான் ஒரு மிமிக்ரி நடிகனாகதான் அறிமுகமானேன்.கூட்டமே இல்லாமல் பல பொருட்காட்சிகளில் தனியே நின்றபடி மிமிக்ரி ஷோக்கள் நடாத்தியிருக்கிறேன்.நடிப்பு என்றால் என்ன?எல்லோருக்குமே தெரிந்த விஷயத்தை நாம் பலர் முன்னிலையில் நிழலாகவோ நியமாகவோ செய்து காண்பித்தாலே நடிப்பு.என் சுயத்தை இழந்து இன்னொருவனின் சுயத்தையும்,எண்ணத்தையும் சுமந்து நிற்பவன் தான் கலைஞன்.

நாட்டியம் கற்றுக்கொள்ள பல வருடங்கள் ஆகும்.அதன் அடிப்படையை கற்றுக்கொள்ளவே பல மாதக்கணக்கினில் ஆகிவிடும்.ஆனால் நடிப்பு எளிதான கலை என்ற எண்ணம்தான் பலர் மத்தியினில் உள்ளது.அதில் நிச்சயமாய் உண்மை இல்லை.சின்ன நடிகனாய் சில வினாடிகள் நிற்பது மிகக் கடினம்.நடிப்பின் கூறுபாடுகள், இலக்கணம் என்று எதுவும் கிடையாது.உறுதியானது எதுவும் இல்லை.நடிப்பு என்பது உடலும்,மனமும் சேர்ந்து இயங்குவதுதான்.இறகில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.நம்பும்படியாக ஒரு விடயத்தை செய்வோமேயானால் அது Realstic acting.அந்த காலத்தில் நடித்த நடிகர்களெல்லாம் ஓவர் ஆக்டிங் செய்கிறார்களென்று கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

அந்த காலத்து மன்னர்களெல்லாம் ஒரு விதமான் திமிரானது,எதையும் என்னால் செய்ய முடியும் என்ற மனோ நிலையில் இருப்பவர்களே இதனால் அந்த நடிகர்கள் தங்களை அப்படி நிறுவியதில் எந்த தவறும் இருக்கமுடியாது.நீ என்ன சொன்னாலும் அவன் நம்ப வேண்டும் இதுதான் நடிகனுக்கு விதிக்கப்பட்ட விதி.நான் எதைப்பார்த்து சொல்லுகிறேனோ அங்கு என் eye contact என்பது சரியாய் அமைந்திருத்தல் வேண்டும்.அவ்வாறு இல்லாமல் போகும்பட்சத்தில் பார்வையாளன் "இவன் பொய் சொல்லுரான்யா" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவான்.நடிகன் எப்போது தோற்பான்?நடிகன் தோற்கக்கூடிய இடம் சினிமா.அதாவது ஒரு நடிகன் பரிபூரணமாய் இருக்கக்கூடியவன்.அவனை சினிமா அதிகப்படியான விஷயங்களுக்காக தூக்கிப்பிடிக்கும் சந்தர்ப்பத்தில் தான் முழுமையை இழந்தவனாகவே கருதப்படுவான்.

ஏனெனில் அவனுக்கு இந்த தொக்கிப்பிடித்தல் என்பது தேவையற்ற ஒன்று.அந்த நடிகன் நாடக மேடையில் தோன்றும்போது அவனுக்கு எந்த தூக்கிப்படித்தலும் நிகழாது.அவன் சரியாய் அந்த கதாப்பாத்திரத்தை சரியாய் அவனே உயர்த்திப்பிடித்துவிடுவான்.எனவே நடிகன் வெற்றிபெறக்கூடிய இடம் நாடகமேடைதான்.நான் இப்போது சொல்லகூடிய விஷயம் உலக அரங்கினில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று.அனுபவமான நடிகன் தான் திறனை வெளிப்படுத்த முடிகிற ஓர் களம் இந்த குறும்படங்களின் வாயிலாகவே.இந்த குறும்படங்கள் என்பது கையில் ஆயுதமின்றி நிராயுதபாணியாய் நின்றாலும் கையையே ஆயுதமாய் பயன்படுத்தும் முறைதான்.சினிமாவில் நடிகர்களிரண்டு வகைப்படுத்தலாம் அதாவது ஒரு வகையினர் வாய்ப்பு இல்லாதவர்கள்.இன்னொரு வகையினர் வாய்ப்பு உள்ளவர்கள்.

வாய்ப்பு இல்லாதவர்கள் நல்ல நடிகராக இருந்துவிட்டால் சரி போனால் போகிறது என விட்டுவிடலாம்.ஆனால் வாய்ப்பு இருப்பவர்களுக்கு திறமை இல்லையெனின் அதைவிட கொடுமை எதுவும் இருக்க முடியாது.ஒரு நல்ல நடிகனுக்கு குரல் என்பது மிக முக்கியமான ஒன்று.அதேபோல் நடிகனுக்கு உடல் instument.மக்களை நேசித்து அவர்களை சந்தோசப்படுத்த ஒரு நடிகன் தன்னை எவ்வளவு வேண்டுமென்றாலும் வருத்திக்கொள்ளலாம்.இதில் தவறேதும் இல்லை.அதே போல் ஓர் நடிகனுக்கு ஒழுக்கம் என்பது மிக முக்கியமான ஒன்று.அதாவது சுய பரிசோதனை.ஒரு விஷயத்தை நடித்துக் காண்பிக்கும்போது நான் அதைச்சரியாய் செய்து கொண்டிருக்கிறேனா என்ற விளக்கம் இருக்க வேண்டும்.ஒவ்வொரு நடிகனுக்கும் இதற்க்கான வழிமுறைகள் வேறு.உதாரணமாக ஒரு மனித சிகரட் பிடிக்கிறான்.

அவன் முதலில் என்ன செய்வான்?சிகரட் பழக்கத்தை அதிக நாளாய் மேற்க்கொண்டு இருப்பவன் என்ன செய்வான்?அவனது eye contact என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?அவனின் அங்க அசைவுகள் எப்படி இருக்கும்?இவாறான கேள்விகளுக்கு உன்னிடம் பதிலும் உன் உளமும்,உடலும் ஒருமித்து பதில் சொல்லவேண்டும் இவன்தான் சரியான நடிகனாகவும் இருப்பான்.வெற்றி என்பது எவனோ ஒருவன் உருவாக்கி உனக்கு தருவது இல்லை.அதை நீதான் உருவாக்குகிறாய் என்ற நினைப்பு இருக்க வேண்டும்.வெற்றி என்று நான் குறிப்பிடுவது வெற்றுபொருளாதார வெற்றியை அல்ல.ஓர் நல்ல படைப்பின் வெற்றிதான் சரியான வெற்றியை இருக்க முடியும்.ஒரு திரைப்படம் தோல்வியடைகிறது எனில் அதற்க்கு முழுக்காரணம் அந்த படைப்பு பார்வையாளனை அதில் பங்குதாரன் ஆக்கவில்லை என்பதே.எதிலுமே உணர்வோடு இருங்கள்.

இதன் பின் சார்லியிடம் குறும்படம் இயக்குனர்கள் நடிப்பு சம்பந்தமான கேள்விகள் கேட்க்க ஆரம்பித்தனர்.

1. ஒரு நடிகனின் மனதை என் கதாப்பாத்திரத்தி அவனில் ஒர்ன்ற செய்ய நான் என்ன செய்யவேண்டும்?

படத்துக்கு என்னென்ன assets தேவையோ அதையெல்லாம் செய்யவேண்டும்.aspects-attitude.நடிகன் எதையுமே புரிந்து செயல்பட வேண்டும்.தன் எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும்.உள்ளும் புறமும் ஒன்றாய் இருத்தல் வேண்டும்.சில கதாப்பாத்திரங்கள் எப்பொழு பார்த்தாலும் நம்மை களைப்புற வைப்பதில்லை.அதைர்க்கான காரணம் எனவாய் இருந்துவிடும்?ஒன்றுமே இல்லை.நடிப்பில் ஓர் ஈர்ப்பு இருத்தல்வேண்டும்.நான் வண்ணக்கனவுகள் என்று ஓர் படம் நடித்தேன் அதில் எனக்கு வில்லன் கதாப்பாத்திரம்.அதை எப்போது பார்த்தாலும் அலுப்புத்தட்டாது.எல்லோருக்கும் புரியும்படி நடிப்பதுதான் ஈர்ப்பு.கதகளி,பிரெஞ்சு கலைகளின் ஆரம்பத்திலேயே கற்றுக்கொடுக்கப்படும் கலை"மனிதனை நேச.எல்லோரையும் சாதனையாளனாய் நினை."என்பதுதான்.எனது பெரும் கணவாய் ஒன்றை இங்கே பதிவு செய்ய எண்ணுகிறேன்.எனது இலட்சியம் பாரதியாய் ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்பதே.என்ன குரு ராமசாமியிடம் நடித்துக்காண்பித்திருக்கிறேன்.

2.மேடைநாடக நடிப்புக்கும்,சினிமா நடிப்புக்கும் உள்ள இடைவெளி என்பது எப்படியானது?

மேடைகளில் நடிகன் நடிகனாகவே இருப்பான்.சினிமாவில் இயக்குனருக்கு நடிகன் எப்படி தேவைப்படுகிறானோ அப்படிதான் இருக்கவேண்டும் நடிகன்.மேடை நாடகம் கஷ்டமானது.சங்கரதாஸ் சுவாமிகள் ரோமியோ,யூலியசை தமிழி மொழிபெயர்த்தார்.பின் பிரெஞ்சு நாடகங்களை தமிழில் எழுதினர்.அதன் பாதிப்பில் அல்லிஅர்ஜுனன் எழுதினர்,அவரின் பின் அவரின் சீடர்கள் எழுதினர்.எந்த கலைஞனுக்கும் சொந்தத கற்பனை இருத்தல்வேண்டும்.இது மேடை நாடகங்களில் சாத்தியமே.சிம்நிமாவில் இது சாத்தியமா?
3.ஒரு படைப்பாளியின் கற்பனைக்கும் இன்னொருவனை பொறுத்த முடியும்?
இந்த வேலையே சரியாய் செய்பவன்தான் நடிகன். அவனால் கோடீஸ்வரனாய்,பிச்சைக்காரனாய்,எச்சில் பொறுக்கியாய் எப்படி வேண்டுமானாலும் செய்ய முடியும்.கூச்சம் இன்றி,கூட்டத்தை பார்க்கும்போது பயமின்றி,கூடத்தை எப்பொழு நேசிக்கிறாயோ அன்றே நீ சரியான கலைஞன் ஆகிவிடுவாய்.

உலக அரங்கில் thamizh studio.com புதிய காலடித்தல்டம் பதிக்க உள்ளது.அதற்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடைபெறுகிறேன்.

குறும்படத் திரையிடல்

ச.கந்தசாமியின் நாவலான விசாரனைக்கமிசனைத்தழுவி இயக்குனர் வசந்த் திரைக்கதை எழுதி அவரால் எடுக்கப்பட்ட டெலிபிலிம் திரையிடப்பட்டது. படம் நிறைவடையும் தருவாயில் அந்த இரவரங்கின் உள்ளே அமைதியாய் நுழைந்தார் வசந்த் கூடவே படத்தின் நாயகன் தேனி முருகன். படம் இருளின் அமைதியை போலவே இருண்ட முகங்களாய் தென்பட்டது. அந்த இருளை அருண் பின்தொடராமல் குழைத்தார். இந்த அமர்விற்கு விமர்சகர் இந்திரன் வந்துசேர்ந்தார். இதை தொடர்ந்து முருகன் தனக்கும் வசந்துக்கும் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்ப்பற்றி பகிர்ந்து கொண்டார். அந்த உரையாடல் பின்வருமாறு. வசந்தின் எண்ணவோட்டம் நான் எதிர்ப்பாக்கும் கதாபாத்திரம் கருப்பாயிருத்தல் வேண்டுமே, ம்ம்ம் சரி முயற்சித்துப்பார்க்கலாம்.

சிறிது இடைவெளியின் பின் வசந்த் என்கதைக்கு சரியானவனாய்த்தான் இருக்கிறாய். அதை என்னால் நம்ப இயலமுடியவில்லை. மூன்று வருடங்களின்பின் இவரை வீட்டுக்கு சென்றுப்பார்த்தேன் அவரங்கே இல்லை பின் அவரது போன் நம்பருக்கு அழைத்து பேசினேன் வாய்ப்பு கேட்பதென்றால் போனில்தான் கேட்பாயா என்றார் வசந்த் அப்போதுதான் என் முட்டாள்த்தனம் உரைத்தது என்னை நொந்துகொண்டேன் இந்த அழகியவாய்ப்பை என்னால் மறக்க முடியாது லைட்டிங் செய்யக்கூடிய அந்த இடைவெளியற்ற நேரத்தில் என்னால் எதுவும் பண்ணமுடியாது என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன்.

ஆனால் அந்த நேரத்தில் வசந்த் டக் டக் என இதப்பன்னுங்க இந்த ரியாக்ஷன் குடுங்கனுட்டு போய்விடுவார்.அவர் மேல் கொண்ட மதிப்பிலே நான் நடித்துவிடுவேன்.என்னால் முடியாது என்ற நம்பிக்கை பிற்காலத்தில் உடைக்கப்பட்டுவிட்டது.என்னோடு நடித்த லக்ஷ்மி பெரிய நடிகை.அவரோட நின்னு நடிக்கிறது என்பது எனக்கு பெரிய விஷயம்.இரவுகளிலேன்னால் தூங்க முடிவதில்லை.அவருக்கு கொடுக்கப்பட்ட முகபாவங்களை மிக இலகுவாக நடித்து முடித்துவிடுவார்.வாய்ப்புக்கு நன்றி.என்று முடித்துக்கொண்டார்.அவரின் பின் விமர்சகர் இந்திரன் படத்தைப்பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்தார்.

thamizh studio.com சார்பாக இந்த படத்தினை பார்ப்பதில் மகிழ்வடைகிறேன்.இந்த படத்தை பார்க்க மிகவும் கஷ்டப்பட்டேன்.இப்போது அந்த வாய்ப்பு தானாய் வந்து அமைந்ததில் மகிழ்ச்சி.படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன்.வசந்தின் இந்த திரைப்படம் என் பரவச நிலையினை அதிகப்படுத்தியிருக்கிறது.இந்த பரவசத்தோடு உங்கள் முன்னிலையில் பேசுவதை பெருமையாய் எண்ணுகிறேன்.தமிழ் சினிமா வியாபாரிகளுடையே வசந்த் எனும் தனிப்பெரும் கலைஞனை நான் மதிக்கிறேன்.வசந்த் என்றாலே எந்த திறப்படத்திலுமே ஓர் அழகியல் இருக்கும் இதிலும் அந்த அழகியல் ஒவ்வொரு frame இலும் இருக்கிறது.இங்கே நம் சினிமா இயக்குனர்கள் முகத்துக்கு முகம் க்ளோசப் வைத்து சாவடிப்பார்கள்.ஆனால் படத்தில் ஒரு காட்சியில் தேநீர் வடிகட்டக்கூடிய இடத்திற்கு க்ளோசப் வைத்து இருப்பது தனி அழகியல்.முகம் மட்டும்தான் க்ளோசப் என்பது உடைத்தெரியப்பட்டுள்ளது.சினிமா என்பது கேட்பது, பார்ப்பதுமே ரசவாதம். பார்த்து, கேட்டு, ரசிக்ககூடிய மொழி சினிமா. மொழியை இந்த உலகம் எப்படி உள்வாங்கிக்கொண்டுள்ளது என்ற அறிவு கலைஞனுக்கு தேவை.மொழியின் இயலாமையை நாம் பயன்படுத்துவது சினிமா.

ஒன்றை எழுதும்போது, கமெராவில் வடிக்கும்போதும் ரசிகனுக்கு கற்பனைகள் ஓடிக்கொண்டேயிருக்கும்.இங்கே படத்தில் வந்துள்ள அந்த கதாப்பாத்திரங்கள் திட்டவட்டமான முடிவனை தந்துவிடுகின்றன.ச.கந்தசாமியின் முடிவு இங்கே தோன்றாது.பல காட்சிகளில் கற்பனைக்கு இடம் கொடுப்பதே நல்ல சினிமா.இந்த படத்தில் சில சில கேள்விகள் எனக்குண்டு அதாவது ரயில் பின்னணியில் வர என்ன காரணம்?சத்யஜித்ரே தன் படங்களில் இந்த பின்னநிஎல்லாம் பயன்படுத்துவார் காரன் காரியங்களுக்காய்.இதற்கு வசந்தின் பதில்.

ஒரு நாவலை திரைக்கதையாக்க எடுத்துக்கொள்வோமேயானால் அதில் எதைஎதை விடலாம்,அது எப்படி என்ற கேளிவிகள் முடிவு செய்யப்படவேண்டும்."அன்பே சிவம்"என்பதுதான் இங்கு முற்றுமுழுதாய்.நாவலின் சாராம்சத்தை மட்டுமே நாம் இங்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.அதைச் சூழ்ந்தே திரைக்கதையாக்களும் செய்யவேண்டும்.குறும்படம் என்பது அந்த கால அளவுகளுக்குள் பேசியாக வேண்டும்.இந்த ரயில் பின்னணியும் என் வாழ்வின் சிறுபகுதி அந்தநாலையே அது பின்னணியில் வருகின்றது அவ்வளவுதான்.நான் எப்படி சூர்யாவை அறிமுகப்படுத்தினேனோ அதேபோல் தேனீ முருகனை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனக்கு அவர்மேல் அளவுகடந்த அன்புள்ளது.எல்லோரும் நான் கோபப்படுவதாக கூறுகிறார்கள் அது அந்த நேரத்துக்கு மட்டுமே.உங்களுக்கு தெரியும் இவர் காமெடி நடிகர் என.ஆனால் இவர் அதற்கு மேல் தகுதியானவர்.ஓவர் அக்டிங் பண்ணுவது காமெடி விளையாட்டு அல்ல.அந்த நிலைதான் இங்கிருக்கிறது.14 நடிகர்களை அறிமுகப்படுத்தியிருகிறேன்.ஒரு படத்தில் 5 இசையமைப்பாளர்களை பயன்படுதியிருக்கிறேன்.இதில் எந்த தவறும் இல்லை.எந்த இயக்குனர் பிடிக்கும் என்பதைவிட எந்த படம் பிடிக்கும் என்பற்குதான் என்னிடம் பதில் இருக்கும்.இந்த படத்தை 10 நாட்களில் படம் பிடித்தோம் பொதிகைக்காக.இந்த படம் ஒரு ரசிகனை சென்றடைந்தாலும் எனக்கு சந்தோசம்தான்.இந்திரனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.அவரது தம்பி மகியை நான்தான் கலை இயக்குனராய் அறிமுகபடுத்தினேன்.

நாவலை பார்த்தவுடன் பயப்படாதீர்கள்.அது ஒன்றும் பெரிய விசயமில்லை என்பதை உணருங்கள்.நாவலும் ஒரு மீடியா தான்.தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற படம் பண்ணினேன்.அதிலும் ஓர் சூட்சுமம் இருக்கும் இதிலும் அப்படித்தான்.தொடர் உத்திகளுக்காக ரயில் சப்தத்தினை பயன்படுத்தினேன்.என் ஐந்து வயதில் எங்கள் வீட்டின் பின் வாசலின் வழியாய் ரயிலுக்குள் ஏறிவிடலாம்.அதன் பாதிப்பைக்கூட இருக்கலாம்.சின்னவயதில் இருந்தே அந்த ரயில் பயணம் எனக்கு பிடிக்காது.அது ஒரு உறவுநிலையை பிரிப்பவன் என்றே காண்கிறேன்.என்று பதில் கூறினார்.பின் வாசகர் கேள்விநேரம் ஆரம்பித்தது.உங்கள் கேள்விகளுக்கு படத்திலும்,முன்னைய பதிலும் விடையிருக்கிறது என முடித்துக்கொண்டார்.மக்களின் விருப்பங்கள்தான் இங்கு எதையுமே முடிவு செய்யும் நன்றி.

பின் நன்றியுரை யாழ்நிலவன் நிகழ்த்த வட்டம் இனிது நிறைவேறியது. இந்த இரவுகள் எப்பொழுதும் அதையாவது ஒன்றை பேசவைக்கும் என்பது இன்றும் நிரூபணமாகிவிட்டது.

செந்தூரன் (படிமை மாணவர்)

படங்கள்: சோமசுந்தரம் (படிமை மாணவர்)

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/33#


-----------------------------------------------------------------------
நாள்: சனிக்கிழமை (11-06-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.

சார்லி திரைப்பட நடிகராக இருந்தாலும், இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு இருக்காய் இல்லையென்றால் தரையில் உட்கார்ந்து நிகழ்வை ரசிக்கும் மனநிலை கொண்டவர்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரைப்பட இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்படுகிறது. எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் எழுதி சாகித்ய அகடமி விருது பெற்ற "விசாரணைக் கமிசன்" நாவலை வசந்த் அவர்கள் குறும்படமாக இயக்கியுள்ளார்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

விசாரணைக் கமிசன்

வசந்த்

01 மணி / 15 நிமிடங்கள்

 

 

 
 

 

 

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் வசந்த், எழுத்தாளர் சா. கந்தசாமி, இக்குறும்படத்தில் நடித்த, தேனீ முருகன், லட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</