கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய  32வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) 

ஸ்ரீகணேஷ் (படிமை மாணவர்)
 

தமிழ் ஸ்டுடியோவின் 32 வது குறும்பட வட்டம் 14 -5 -2011 அன்று எழும்பூர் ஜீவன்ஜோதி அரங்கில் மிகக் சிறப்பாக நடைபெற்றது. இம்மாத நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாய் இருந்தது. காரணம்...... சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டவர், இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமையாகிய திரு.பாலுமகேந்திரா. இளம் குறும்பட இயக்குனர்களுக்கு குறும்படத்தின் அழகியல், இலக்கணம் போன்றவற்றை கற்றுக்கொடுக்கும் விதமாக அவரின் 3 குறும்படங்களும் திரையிடப்பட்டன.

நிகழ்ச்சியின் முதல் பகுதியாக உலகக் குறும்படங்கள் திரையிடல் நடைபெற்றது. இம்மாதம் சுவீடன் நாட்டுக் குறும்படமான "TALK " திரையிடப்பட்டது. மனிதனின் தனிமை அவனுக்குள் உருவாக்கும் மனநிலைகளையும், வேதனைகளையும் இப்படம் மிகுந்த நுட்பமான கோணத்தில் சொல்லியிருந்தது.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான குறும்பட வழிகாட்டலில் இம்மாதம் திரு.சிவகுமார் கலந்து கொண்டார். திரைப்பட இயக்கம், ஆவணப் படங்கள், விளம்பரப் படங்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார் இவர்.

நிறையப் பயண அனுபவங்களும், உலகின் பல்வேறு மொழித் திரைப்படங்கள் பற்றிய விசாலமான அறிவும் உடையவர். நமது மோணா ஆவணப் படத்திரையிடலிலும் இவர் பரிந்துரைத்த ஒரு படமே திரையிட்டோம்.

சிவகுமார் ஆர்வலர்களுக்கு ஒரு படைப்பின் கதையை உருவாக்குதல், திரைக்கதை அமைத்தல் ஆகியவற்றில் உள்ள நுட்பங்கள் குறித்து விளக்கினார். "எந்தவொரு கதையும் ஒரு சிறு பொறியிலிருந்தே உருவாகிறது. அந்தப் பொறியை அபாரமாக வளர்த்து ஒரு கதையாய் உருவாக்குவதே ஒரு இயக்குனரின் சிறப்பு. இதையே சினிமாக்களில் idea அல்லது concept என்கிறார்கள். creative director என்பவர் இங்கு பயன்படுகிறார்.

மேலைநாட்டு சினிமா இலக்கணத்தில் ஒரு கதையினை உருவாக்கும் முறையை இவ்வாறு சொல்கிறார்கள்:

1. Collection of data & information on our subject
2. Classification of data.
3. Incubating the Information.

கதை எழுதுவதை ஏதோ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வேலையாக எண்ணக்கூடாது. அது ஒரு நுட்பமான வேலையாகவே உலக சினிமாக்களில் கையாலப்படுகிறது. அதன் கூறுகளை இளம் படைப்பாளிகள் கற்க வேண்டும்."

நிகழ்ச்சியின் மூன்றாம் பகுதியில் திரு.பாலுமகேந்திரா கலந்துகொண்டு அனைவரிடமும் உரையாடினார். உரையாடல் என்பதை விட திரையிடப்பட்ட தனது குறும்படங்களைப் பற்றி பார்வையாளர்களிடம் ஒரு அறிமுக இயக்குனரின் ஆர்வத்துடன் விவாதித்தார் என்று சொல்லலாம்.

'கதை நேரம்' நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட குறும்படங்களில் இருந்து 3 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இக்கதைகளின் சிறப்பே இவை எழுத்தாளர்களின் சிறுகதைக்கு திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்டுள்ளது தான்.

மாலனின் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'தப்புக்கணக்கு', சிவசங்கரியின் கதை 'பொன்னாசை', வாசந்தியின் சிறுகதை 'நம்பிக்கை'.

மூன்று கதைகளுமே முற்றிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இக்கதைகள் புத்தகமாகவும், படங்கள் dvd யாகவும் ஒரு சேரக் கிடைக்கின்றன. நிச்சயம் படியுங்கள், பாருங்கள்.... எழுத்துமொழிக்கும், திரைமொழிக்கும் இடையேயான ஒற்றுமைகள், வேற்றுமைகள் புரியும். அக்கலைஞனின் பேச்சிலிருந்து சில துளிகள்:

' அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். தீவிர இலக்கியப்பிரியன். வாசகன் என்பதை தாண்டி நான் ஒரு இலக்கிய உபாசகன். தமிழில் மிகக் சிறந்த சிறுகதைகள் உள்ளன. அவற்றைப் பதிவு செய்யும் நோக்கத்தில், கதை நேரம் நிகழ்ச்சியில் 52 சிறுகதைகளை குறும்படமாக எடுத்தேன். இளைஞர்கள் நிறையப் படிக்க வேண்டும். இலக்கிய வாசிப்பையே என் திரைப்பட வகுப்புகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.'

'கதை நேரம் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு குறும்படத்தை கொடுத்தாக வேண்டும். அதற்குள் கதைத்தேர்வு , திரைக்கதை அமைப்பு, படப்பிடிப்பு, post production என அத்தனை வேலைகளையும் முடிக்க வேண்டும். 1998 செப்டம்பர் - 1999 செப்டம்பர். ஒரு வருட காலம் ஓயாத உழைப்பு. என் படைப்புலக வாழ்வின் மிகக் சிறந்த காலகட்டம் அந்த ஒரு வருடமே என்பேன்.'

'ஒரு நாள் எனக்கும் மரணம் ஏற்படலாம். நான் வாழ்நாளெல்லாம் தீரக்காதலுடன் தேடி அலைந்த சினிமா என்னுடன் புதைக்கப்பட்டுவிடுமோ என நினைக்கவே பயமாய் உள்ளது. நான் கற்ற அனைத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் செல்வதே இதற்கு ஒரே வழி. அதற்காகவே திரைப்பட வகுப்பு எடுக்கிறேன். அவர்களை எம்மாணவர்கள் என்பதை விட பிள்ளைகள் என்றே சொல்வேன்.'

அந்த சனிக்கிழமை மாலை ஒரு மாபெரும் கலைஞனால் அறிவுப்பூர்வமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் நிறைந்தது.
இளைஞர்களுடன் உரையாடும் ஒரு வாய்ப்பை வழங்கியதற்காக பாலுமகேந்திரா தமிழ் ஸ்டுடியோவிற்கு நன்றி கூறினார். திரு.யாழ்நிலவன் நன்றியுரை வழங்க வட்டம் இனிதே நிறைவடைந்தது.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/324752009#

-----------------------------------------------------------------------------------

நாள்: சனிக்கிழமை (14-05-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரு. எம். சிவக்குமார் பங்கேற்கிறார். இவர் திரைப்பட ஆய்வாளர், ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் குறும்படங்கள் குறித்தும், ஆவணப்படங்கள் குறித்தும், அதன் தயாரிப்புகள் குறித்தும், படமெடுப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய குறிப்புகள் குறித்தும், ஆர்வலர்களுக்கு வழிகாட்டுவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரு. பாலுமகேந்திரா அவர்கள் இயக்கிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய விவாதங்கள் நடைபெறும்.
இனி அடுத்த சில மாதங்களுக்கு திரைப்பிரபலங்கள் எடுத்து குறும்படங்கள் மட்டுமே திரையிடப்படும். குறும்படம் எப்படி எல்லாம் எடுக்கப்பட வேண்டும் என்பதை விளக்கும் விதமாக இக்குறும்படங்கள் இருக்கும் என்பது திண்ணம். 

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

நம்பிக்கை

பாலு மகேந்திரா

22 நிமிடங்கள்

பொன்னாசை

பாலு மகேந்திரா

25 நிமிடங்கள்
தப்புக்கணக்கு

பாலு மகேந்திரா

22 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

இந்த மாதம் மூன்றாம் பகுதிக்கு சிறப்பு விருந்தினராக திரு. பாலுமகேந்திரா அவர்கள் பங்கேற்க இருக்கிறார். அவர் இயக்கிய குறும்படங்கள் குறித்து வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும், பொதுவாக குறும்படங்கள் குறித்தும் உரையாடவிருக்கிறார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</