கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய  31வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) 

ஸ்ரீகணேஷ் (படிமை மாணவர்)
 

தமிழ் ஸ்டுடியோவின் 31 வது குறும்பட வட்டம் நேற்று (09-04-2011) எழும்பூர் ஜீவன்ஜோதி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது . உண்மையில் வழக்கத்தை விட நிறைய பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அரங்கம் நிரம்பி போய் கூடுதல் இருக்கைகள் போட்டும் இடம் பத்தாமல் நிறைய பேர் நின்று கொண்டே நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

இம்மாத நிகழ்ச்சி வழக்கத்தை விட மிக சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது என்பது அனைவரின் கருத்தாகும். நிகழ்ச்சியின் முதல் பகுதியான உலக படங்கள் திரையிடலில் இம்மாதம் "The White Balloon " எனும் இரானிய திரைப்படம் திரையிடப் பட்டது. ஒரு சிறுமியின் வாழ்கையை ஈரானின் கலாச்சாரப் பின்னணியில் இப்படம் விளக்குகிறது. நேரம் கிடைக்கையில் அவசியம் பாருங்கள்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான குறும்பட வழிகாட்டலில் ஒளிப்பதிவாளர், photographer ' Wide Angle ' ரவிஷங்கர் கலந்து கொண்டு ஒளிப்பதிவு, புகைப்படக் கலையின் நுணுக்கங்களை மிகச் சிறப்பாக விளக்கினார். வந்தவுடனே அருணிடம் வந்திருக்கும் audience யார், எந்த பின்னணியில் இருந்து வருபவர்கள் எனக் கேட்டார். பெரும்பாலானவர்கள் மாணவர்கள், உதவி இயக்குனர்கள், குறும்பட இயக்குனர்கள் என அறிந்ததும் அவர்களுக்கேற்ற வகையில் தொழில்நுட்ப விஷயங்களை விரிவாக விளக்கினார்.

அவரின் உரையிலிருந்து சில துளிகள்:" ஒளிப்பதிவில் lighting , framing போன்றவை மிக முக்கியமான அம்சங்கள். இந்த இடத்தில் ஒளிப்பதிவு செய்ய போகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் முழுவதும் இந்த இடத்தை observe செய்ய வேண்டும். காலையில் இங்கே ஒளி எப்படி விழுகிறது, அதுவே மதியம் எப்படி மாறுகிறது என study பண்ண வேண்டும். நேராக காமெராவை கொண்டு வந்து வைத்து வருவதை எடுப்பது ஒரு நல்ல ஒளிப்பதிவாளருக்கு அழகல்ல.

எதிரே இருக்கும் கன்னிமாரா நூலகத்தை எத்தனையோ பேர் பார்த்திருப்பீர்கள். தினமும் லட்சகணக்கான மக்கள் இப்படியே போகிறார்கள், வருகிறார்கள். ஆனால் ஒரு மணிரத்னம் தான் இந்த இடத்தை ஆழ்ந்து கவனித்து திருடா திருடா படத்தில் 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ' எனும் பாடலை எடுத்தார். அம்மாதிரி பாடலை பி.சி சாரை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக திரையில் தர முடியாது. ஒரு நல்ல கலைஞன் இது மாதிரி விஷயங்களில் எப்போதும் கவனத்தோடும், தேடலோடும் இருக்க வேண்டும்.

பார்வையாளர்களின் கேள்விக்கு மிக பொறுமையாகவும், சிறப்பாகவும் பதிலளித்தார் திரு.ரவிஷங்கர்.

நிகழ்ச்சியின் 3 ஆம் பகுதியான குறும்படங்கள் திரையிடலில் இம்மாதம் அரசியலைப் பேசும் குறும்படங்கள் 4 திரையிடப்பட்டன. இவற்றை குறும்படங்களின் முன்னோடியாக போற்றப்படும் திரு.லெனின் பார்த்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு, இளம் இயக்குனர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இம்மாதம் முதலில் திரையிடப்பட்ட குறும்படம் 'அரசியல்ல இதெல்லாம்..'. அரசியல் கட்சிகள் தங்கள் சேனலில் ஏட்டிக்குப் போட்டியாக பொய் செய்திகள் தருவதை நகைச்சுவையாகக் கிண்டலடித்த இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அனைவரும் கை தட்டி, தொடர்ந்து சிரித்து இப்படத்தைப் பார்த்தனர்.

இக்குறும்படம் நம் இணையதளத்திலும் உள்ளது. இதைப் படிப்பவர்கள் அவசியம் பாருங்கள். லெனின் இப்படம் பற்றிப் பேசுகையில், "படம் நகைச்சுவையோடு மிக சுவாரசியமாக இருந்தது" என்றார். 'Wide Angle ' ரவிஷங்கர் தனக்கும் படம் மிகவும் பிடித்ததாக கூறினார். இயக்குனர் வசந்தராஜ் பேசுகையில் வீட்டில் டிவி பார்க்கும் பொது கிடைத்த சிறு பொறியை வைத்தே இக்கதையை எழுதியதாகக் கூறினார். நல்ல குறும்படம்.

அடுத்ததாக 'வீதி இலக்கியம்' எனும் குறும்படம் திரையிடப்பட்டது. சாலையோரம் வாழும் ஒரு ஓவியனுக்கும், திடீரென பள்ளிக்குச் செல்ல முடியாமல் ரோட்டில் நோட்டீஸ் கொடுக்கும் வேலைக்கு வந்திருக்கும் சிறுவனுக்கும் இடையேயான உறவே இப்படத்தின் கதை. அரசியல் இவர்கள் மேல் நிகழ்த்தும் பாதிப்புகளையும் தொட்டுச் செல்கிறது படம்.

'Wide Angle ' ரவிஷங்கர் இப்படத்தின் ஒளிப்பதிவில் நிறைய குறைகள் இருப்பதை சுட்டிக் காட்டினார். பல ஷாட்களில் focus சரியாக இல்லையென்றார். புதிதாக படமெடுக்க வருபவர்கள் இம்மாதிரி தொழில்நுட்ப விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

லெனின் பேசுகையில் கதைப்படி இப்படம் சிறப்பாக உள்ளதாகவும், அரசியலை தைரியமாய் சாடுவதாகவும் கூறினார். மேலும் முதல் 5 நிமிடங்கள் வசனமே இல்லாது காட்சியால் கதை சொல்ல முயன்றதும் நல்ல முயற்சி என்றார்.

அடுத்ததாக திரையிட்ட குறும்படம் "விளையாட்டு". இதன் இயக்குனர் நீலகண்டன் நல்ல அனுபவமுள்ளவர். குழந்தைகள் விளையாடும் விளையாட்டை குறியீடாக வைத்து அரசியலைப் பற்றி பேசும் இவரது குறும்படம் மிகவும் ரசிக்கப்பட்டது. எந்தவொரு படைப்பும் அதன் கருத்தை நேரடியாகப் பேசாமல் மறைமுகமாகப் புரிய வைக்கும் போதும் அது மிகச் சிறந்த கலைப் படைப்பாகிறது. அவ்வகையில் இக்குறும்படம் மிக அழகான வெற்றியைப் பெற்றுள்ளது. creative -ஆக கதை சொல்லியிருக்கும் மிக நல்ல முயற்சி. படத்தில் 1 நிமிடம் சிறுவர்களிடையே வரும் ரீமிக்ஸ் பாட்டு மட்டும் தேவை இல்லாதது. அதைப் பல சுமாரான குறும்படங்களில் பார்த்து விட்டோம். இம்மாதிரி ஒரு சிறந்த குறும்படத்திற்கு இது போன்ற commercial ஒப்பனைகள் தேவையே இல்லை.

லெனின் இப்படத்தை இப்படம் முழுக்க குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்டு பெரியவர்களுக்கான விஷயங்களை சொல்வது ரசிக்கும்படி இருந்ததென்றார். இறுதியில் positive -ஆக முடித்ததையும் பாராட்டினார்.

குறும்படங்களில் சென்சார் தேவைஇல்லாததால் அரசியலை தைரியமாய் பேச முடிகிறது என்றும், இயக்குனர்கள் நகைச்சுவையை குறைத்துக் கொண்டு சீரியஸ் விஷயங்களை இன்னும் நிறைய பேசலாம் என்றும் தன் கருத்தைக் கூறினார். 4 படங்களுமே கதை கட்டமைப்பில், கருவில் சிறப்பாக இருந்ததென்றும், சிந்தனையில் நல்ல creativity இருந்ததென்றும் வாழ்த்தினார். குறைந்த பொருட்செலவில் எடுக்கப்படும் இக்குறும்படங்கள் சொல்ல முயற்சித்ததை சரியாக சொல்லியிருக்கின்றன என்றார்.

இறுதியாக திரையிடப்பட்ட குறும்படம் "வாழ்க ஜனநாயகம்". ஏற்கனவே நிறைய முறை நம் குறும்பட வட்டத்தில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்ற படம். முழுக்க முழுக்க ஒரு செட்டுக்குள்ளேயே எடுக்கபட்டுள்ள இக்குறும்படம் நல்ல முயற்சி. முழுக்க முழுக்க வித்தியாசமான கேமரா கோணங்களை வைத்தே கதை நகர்த்தபடுகிறது. சில குறியூடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2006 -ல் எடுக்கப்பட்ட இக்குறும்படம் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருத்தமாக இருப்பதே இதன் சிறப்பு. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் போடும் மாறுவேடங்கள், பொய் வாக்குறுதிகள் போன்றவற்றிற்கு வசனங்களில் சாட்டயடி கொடுக்கிறார் இயக்குனர் கணபதி.

"Wide Angle '' ரவிஷங்கர் முழு படத்தையும் செட்டுக்குள்ளேயே முடித்திருந்தாலும் ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் சிறப்பாக இருந்தன என்றார். குறை என்று சொல்ல வேண்டுமானால் படத்தின் நீளம் அதிகம். கொஞ்சம் குறைத்திருக்கலாம். சில வசனங்கள் திரும்ப திரும்ப வருகின்றன. இதை மட்டும் சரி செய்திருக்கலாம். ஆயினும் இக்குறும்படம் அனைவரும் பார்க்க வேண்டியது. நம் தளத்தில் உள்ளது. அவசியம் பாருங்கள்.

பின்பு பார்வையாளர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அவர்கள் குறும்படங்களின் இயக்குனர்களிடம் தங்கள் கேள்விகளை வைத்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக யாழ் நிலவன் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/105647173808629498658/31#

-----------------------------------------------------------------

நாள்: சனிக்கிழமை (09-04-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிஷங்கரன் அவர்கள் பங்கேற்று ஒளிப்பதிவு தொடர்பான முக்கியமான வழிகாட்டலை நடத்துகிறார். ஆர்வலர்கள் ஒளிப்பதிவு தொடர்பான தங்களின் அனைத்து விதமான ஐயங்களையும் கேட்டு தெளிவுப் பெறலாம்.

இவர் திருட்டுப் பயலே, வியாபாரி போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

இந்த மாதம் தேர்தல் சிறப்புக் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

வாழ்க ஜனநாயகம்

கணபதி

15 நிமிடங்கள்

விளையாட்டு

நீலகண்டன்

20 நிமிடங்கள்
அரசியல்ல இதெல்லாம்

வசந்த்

05 நிமிடங்கள்
வீதி இலக்கியம்  ஸ்ரீ கணேஷ் 08 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் படத்தொகுப்பாளர் பி. லெனின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நான்கு குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

லெனின் அவர்கள்தான் தமிழின் முதலில் குறும்பட வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம்தான் தமிழில் குறும்படங்களுக்கான களம் அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. மேலும், திரைப்படத் துறையில் வெற்றிகரமான படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். காதலன் திரைப்படத்திற்கு படத்தொகுப்பிற்காக வி.டி. விஜயனுடன் இணைந்து தேசிய விருது பெற்றவர்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</