கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 30வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) 

ஸ்ரீ கணேஷ் (படிமை மாணவர்)
 

தமிழ் ஸ்டுடியோவின் 30 வது  குறும்பட வட்ட நிகழ்ச்சி 12-03-2011 அன்று எழும்பூர் ஜீவன் ஜோதி அரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.    

மாலை 4 மணிக்கு துவங்கிய விழாவின் முதல் பகுதியில் புதிதாய் வந்திருக்கும் வாசகர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் இவ்வனைவருமே மாற்று சினிமா மேல் ஈடுபாடு கொண்டு வந்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 

விழாவின் துவக்கத்தில் சின்னத்திரை நடிகையும், படிமை மாணவியுமான பாத்திமா பாபு கவிதை வாசித்தார். அதன் பின் சன் டிவியின் அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் அசத்தலாக காமெடி செய்யும் கருப்பசாமி மிக சிறப்பாக ஒரு கதையை பார்வையாளர்களுக்கு கூறினார். பார்வையாளர்களுக்கு நிச்சயம் அது ஒரு புது அனுபவமாய் இருந்திருக்கும் . 'ரயிலம்மா' என்னும் கதையை, சப்தங்கலோடும் வர்ணனைகளோடும் அவர் கூறுகையில் அரங்கில் நிறைய பேர் உருக்கமான மனநிலையை அடைந்தனர். கதை சொல்லும் நிகழ்சிகளும், கதை சொல்லிகளும் சமூகத்தின் இப்போதைய முக்கிய தேவை. அவரின் இந்த திறமை நிச்சயம் அபூர்வமானது.

நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் இந்த மாதம் குறும்படங்களில் இசையை பயன்படுத்தும் விதம் பற்றிய கலந்துரையாடல் நடந்தது. இப்பகுதியின் சிறப்பு விருந்தினராக இசைக் கலைஞர் அகஸ்டின் பால் கலந்து கொண்டார் . இவர் இசைஞானி இளையராஜா முதல் பல இசை அமைப்பாளர்களிடம் பணிபுரிந்துள்ளார். இசையின் பல்வேறு நுணுக்கங்களை பற்றி அனைவருக்கும் புரியும்படி பேசினார்.

அகஸ்டின் பால்-

சிம்போனி இசையின் முக்கிய அம்சங்களாக 3 ஐ கூறுவார்கள்- exposition, development & recapturation. இசை என்பது திரைப்படங்களின் உயிர்நாடி. ஒரு கதையின் உணர்வை பார்வையாளனிடம் இசை மூலமே கொடுத்து விட முடியும். இளையராஜா சார் பெரும் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே மிக சிறப்பாக, அதிவேகமாக இசையமைத்தார். அவரை இசைமேதை பீத்தொவனுடன் கூட ஒப்பிடலாம்.

இசையை எல்லா இடங்களிலும் இரைய விட்டுக்கொண்டே இருக்க கூடாது. மௌனம் கூட உணர்வை கொடுக்க கூடிய ஒரு இசை தான். ராஜா சார் இதை, "there is making of music in the rest , the silence is pregnant with music "என்பார். இளம் இயக்குனர்கள் குறும்படங்களில் இசையை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். 

இன்றைய இளம் இசை அமைப்பாளர்கள் நெறைய பரிசோதனைகளை தைரியமாய் செய்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் நிறைய படங்களுக்கு பின்னணி இசை அமைத்தே பின்னாளில் நல்ல இடத்தை பிடித்தார். இந்திய இசைகென்று ஒரு தனித் தன்மை உள்ளது. அதை வெறும் தொழில்நுட்பத்தை வைத்து மட்டும் அடைய முடியாது.

இவ்வாறு அகஸ்டின் பால் தனது பரந்து பட்ட அனுபவங்களையும், உலக அறிவையும் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். 

நிகழ்ச்சியின் 3 ம் பகுதியில் 3  குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றின் விவரம்:

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

அனாதை ஆனந்தன்

காசிராஜன்

15 நிமிடங்கள்

கார்த்தீஸ் கனவா

கார்த்தி

05 நிமிடங்கள்
திருக்குறள்

சுரேஷ்

15 நிமிடங்கள்

இப்பகுதியின் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர், நடிகர்  அஜயன் பாலா கலந்து கொண்டார். அவர் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து தன் கருத்துகளையும் அறிவுரைகளையும் இளம் இயக்குனர்களுக்கு  வழங்கினார். பின்னர் அவர் ஆற்றிய உரை அனைத்து குறும்பட இயக்குனர்களும் கேக்க வேண்டிய ஒன்றாகும்:

அஜயன் பாலா-

ஒரு 4 வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் குறும்படங்களுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை. நான் ஒரு குறும்படம் எடுத்துவிட்டு அதற்கான அங்கீகாரம் எங்குமே கிடைக்காத போது தான் இதை உணர்ந்தேன். 54  குறும்படங்களை வைத்து நானே ஒரு திரைப்பட விழா நடத்தினேன். பின்பு அதை தொடர முடியவில்லை. அத்தகைய பணியை தமிழ் ஸ்டுடியோ செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

குறும்படங்கள் திரைப்படங்களின் இலக்கிய வடிவம். இலக்கியமும் சினிமாவும் சமூகத்தின் இரு சக்கரங்கள். நூறாண்டுகள் கழித்து வர போகும் சந்ததியிடம் கூட ஒரு கலைஞன் தன் படைப்பால் பேச முடியும். அப்படிப்பட்ட உன்னத நோக்கம் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டும்.

எழுத்தாளனின் அறம் என்று ஒன்று இருக்கிறது. அவனுடைய படைப்பு எதையாவது மக்களுக்கு சொல்ல வேண்டும். அனுபவங்களை அகலபடுத்தும் நோக்கமே சினிமா. குறும்படங்கள் வணிக திரைப்படங்கள் எடுபதற்கான பயிற்சி களம் அல்ல. அது ஓர் தனித்த, உன்னத பணி. குறும்பட இயக்குனர்களுக்கு இந்த பொறுப்புணர்வு இருக்க வேண்டும். நாம் இப்போது எடுத்து கொண்டிருப்பது எல்லாம் கூட வித்தியாசமான கமர்ஷியல் படங்கள் தான். தமிழில் மாற்று சினிமாவும் ஒரு உலக சினிமாவும் வர வேண்டுமெனில் அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

தொகுப்பு: ஸ்ரீகணேஷ், படிமை மாணவர்

படங்கள்: அஜந்தன், படிமை மாணவர்

நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண: 

https://picasaweb.google.com/105647173808629498658/30#

--------------------------------------------------------------------------------

நாள்: சனிக்கிழமை (12-03-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி)

கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சிம்பொனி மற்றும் சேர்ந்திசைக் கலைஞர் அகஸ்டின் பால் கலந்துக் கொள்கிறார். இசையின் நுணுக்கங்கள் பற்றியும், குறும்படங்களில் இசையைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் ஆர்வலர்களுடன் விரிவாக கலந்துரையாடுகிறார். தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் இதுவரை இசைப் பற்றிய வழிகாட்டல் நடைபெற்றதே இல்லை என்கிற ஆர்வலர்களின் அந்த குறையும் இப்போது போக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

அனாதை ஆனந்தன்

காசிராஜன்

15 நிமிடங்கள்

கார்த்தீஸ் கனவா

கார்த்தி

05 நிமிடங்கள்
திருக்குறள்

சுரேஷ்

15 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் அஜயன் பாலா சித்தார்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் கதை விவாதக் குழுவில் பங்கேற்று வருபவர். மதராசப் பட்டினம், தென்மேற்குப் பருவக் காற்று போன்ற படங்களில் விவாதங்களோடு, நடிகராகவும் வலம் வந்தவர். விகடனில் நாயகன் தொடரின் மூலம் சரித்திர எழுத்தாளராகவும் அறியப்படுபவர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</