கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 29வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

 

இந்த மாதம் குறும்பட வட்டத்தில் முதல் பகுதியில் குறும்பட ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் ஒளிப்பதிவு தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

இரண்டாவது குறும்பட வழிகாட்டலில் இயக்குனர் வித்யாதரன் இயக்கம் குறித்தும், தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்தும் வாசகர்களுடன் நீண்ட நேரம் உடையாடினார்.

மூன்றாவதாக மூன்று குறும்படங்களும் திரையிடப்பட்டு அது பற்றிய விரிவான விவாதம் நடைபெற்றது. தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குனர் விதயாதரன் இருவரும் குறும்பட இயக்குனர்களுடன், ஆர்வலர்களுடனான இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டனர்.

நிகழ்வு தொடர்பான மேலும் ஒளிப்படங்களைக் காண:

https://picasaweb.google.com/thamizhstudio/29#------------------------------------------------------------------------------
நாள்: சனிக்கிழமை (12-02-2011)

இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.

நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.


-----------------------------------------------------------------------------------------------------

முதல் பகுதி: (3 மணி) - ஒளியோடு விளையாடு...

முதல் பகுதியில் ஒவ்வொரு மாதமும், ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெறும். ஒளிப்பதிவின் தொழில்நுட்பங்கள், லென்ஸ், ஷாட்ஸ், கோணங்கள், போன்றவற்றை பற்றி விரிவான பயிற்சியும், ஆர்வலர்களுடன் அது சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும்.

ஒளியோடு விளையாடு நிகழ்வில் இந்த மாதம் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் பங்கேற்கிறார். இவர் செத்தாழை என்கிற குறும்படத்தின் ஒளிப்பதிவாளர். மேலும் தற்போது யுகம் என்கிற திரைப்படத்திற்கு ஆபரேடிவ் கேமரா மேனாக பணிபுரிகிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர் வித்யாதரன் பங்கேற்கிறார். குறும்படங்களில் இயக்கம் தொடர்பாகவும், முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் பேசவிருக்கிறார். மேலும் வாசகர்களின் இயக்கம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விடையளிப்பார்.

இவர் வைத்தீஸ்வரன், ரசிக்கும் சீமானே போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

விழித்தெழு

உசேன்

5 நிமிடங்கள்

விளையாட மறந்ததென்ன?

ஜெய் வினோ

22 நிமிடங்கள்
விண்ணைத் தாண்டி வருவேனா?

சிவபாதசுந்தரம்

8 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட தயாரிப்பாளர் சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

இவர் சமீபத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</