கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 28வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

 

தமிழ் ஸ்டுடியோ,காம்-ன் 28வது குறும்பட வட்டம் சென்னை இக்சா மையத்தில் 08,01,2011 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் செல்லையா முத்துசாமி. வசனகர்த்தா ராதாகிருஷ்ணன். இயக்குனர் பத்ரி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

முதல் நிகழ்வாக ஒளியோடு விளையாடு நடைபெற்றது, ஒளிப்பதிவாளர் செல்லையா முத்துசாமி தன் அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார், குக்கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்ற என்னால் ஒளிப்பதிவு கலை கற்றுக் கொள்ள முடியுமென்றால், ஏன் உங்களால் முடியாது என கேள்வி எழுப்பினார், போட்டோ என்பது காலத்தின் ஒரு துளி போன்றதாகும், போட்டோ வரலாற்று ஆவணம் எனவும் கூறினார், இயக்கம். ஒளிப்பதிவு செய்ய வாசிப்பு அனுபவம் முக்கியமானதாகும், படத்தொகுப்பு அறிவும் தேவையென கூறினார்,

இரண்டாவது நிகழ்வாக குறும்பட வழிகாட்டி நடைபெற்றது, இப்பகுதியில் துரோகி, பாணா காத்தாடி படங்களின் வசனகர்த்தாவான ராதாகிருஷ்ணன் உரையாற்றினார், 1997-லே திரைத்துறைக்கு வந்துவிட்டேன், பல வருடங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு வசனம் எழுதினேன், கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் பெரிய திரையில் செயல்படுகிறேன், திரைத்துறையில் வெற்றிபெற பொறுமை வேண்டுமென குறிப்பிட்டார், குறும்படங்களுக்கு வசனம் தேவையில்லை என்றார், நாம் எங்கு சென்றாலும் மனிதர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும், படைப்பாளன் முதலில் கதாப்பாத்திரமாக மாறிதான் தன் படைப்புகளை எழுத வேண்டுமென்றார், பஞ்ச் வசனம் விருப்பம் இல்லாமல் எழுதுவதாகக் கூறினார்,

மூன்றாவது பகுதியான குறும்ப திரையிடரிலில் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன, அவை பின்வருமாறு:-

1, மனோகரன் இயக்கிய போஸ்ட்மேன்
2, த.ஆ. சுப்புராஜ் இயக்கிய யாசகன் வந்தான்
3, இராம,முத்துகணேசன் இயக்கிய நிறைவு

வீராப்பு. ஐந்தாம்படை படங்களை இயக்கிய பத்ரி மூன்று குறும்படங்களையும் திறனாய்வு செய்தார்,

இயக்குனர் பத்ரி :-

இது எனக்கு புது அனுபவம், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நிறைய வாசித்தேன், உதவி இயக்குனராக மாறிய பின் வாசிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது, பிறகு இயக்குனராக மாறிய பிறகு வாசிக்க நேரம் கிடைக்கிறது, இப்போது மறுபடியும் வாசிக்கிறேன்,

வியாபாரத்திற்கான திரைப்படங்களுக்கு உழைப்பதை காட்டிலும் கூடுதலான உழைப்பு குறும்படத்திற்கு தேவை, நாம் எந்த பார்வையாளர்களை நோக்கி படம் எடுக்கிறோம் என்ற தெளிவு இருந்தால் சிறந்த படங்களை எடுக்கலாம்,

இங்கு திரையிடப்பட்ட மூன்று குறும்படங்களுமே சிறப்பாக இருந்தது, அந்த மூன்று இயக்குனர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள், போஸ்ட்மேன் குறும்படம் நாம் இழந்த பல விசயங்களை நினைவூட்டுகிறது, போஸ்ட்மேனுக்கும் மக்களுக்கும் இருந்த உறவுகளை அழகாக பதிவு செய்துள்ளார், இக்குறும்படத்தில் காட்சி கோணங்கள் மிக அழகுணர்ச்சியோடு கையாளப்பட்டுள்ளன, இதற்கு காட்டிய கவனத்தை கதாபாத்திரங்களின் இயல்புக்கும் மெனக்கெட்டு இருக்கலாம், நம்முடைய தொழிற்நுட்ப அறிவு கதைக்கு மீறி வெளியே தெரியக்கூடாது, முதரிலில் படம் பார்க்கும்போது பார்வையாளன் கதைக்கு வெளியே யோசிக்க தொடங்கிவிட்டால் நாம் தோற்றுவிட்டதாகத்தான் கருதவேண்டும், இரண்டாம் முறை, மூன்றாம் முறை ஒரு படத்தை பார்க்கும்போது நமக்கு குறைகள் தெரியலாம், தெரியும் அது தவறில்லை,

இரண்டாவது குறும்படமான யாசகன் வந்தான் சமூக சிந்தனையை நறுக்கென பதிவு செய்துள்ளது, இப்படத்தில் நடிகர்களை சிறப்பாக நடிக்க வைத்திருக்கலாம் என தோன்றுகிறது,

மூன்றாவது குறும்படமான நிறைவு மனதுக்கு நிறைவு தருவதாக உள்ளது, ஒரு நல்ல சிறுகதையை வாசித்த அனுபவம் கிடைத்தது,

அனைவருக்கும் இது முதல்படம் என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது, இதற்கு முன் பல குறும்படங்களை எடுத்ததை போன்றுள்ளது இவர்களது படைப்பு, அனைவருக்கும் மறுபடியும் என் பாராட்டுக்களை கூறி விடைபெறுகிறேன்,

சிறப்பு விருந்தினருடன் குறும்பட இயக்குநர்கள் மற்றும் பார்வையாளர் கலந்துரையாடல் நடைபெற்றது, குறும்பட இயக்குனர்கள் தன் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

நிறைவு குறும்படத்தில் இயக்குனர் இராம, முத்துகணேசன் :-

இக்கதை நான் எழுதி பாக்யாவில் வெளிவந்த சிறுகதை, இயக்குநர் பாலுமகேந்திராவிடம் ஒரு வருடம் சினிமா கற்றுக் கொண்டேன், எனக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை பரிசோதித்து பார்க்கும் விதமாகவே இக்குறும்படத்தை இயக்கினேன், என் படத்தில் பல தவறுகள் உண்டு என்பதனை நானறிவேன், படத்துக்காக யதார்த்தம் இல்லாத சில விசயங்களை சமரசம் செய்து கொண்டேன், அடுத்த படைப்பில் இத்தவறுகளை சரிசெய்து கொள்வேன்,

யாசகன் வந்தான் குறும்படத்தின் இயக்குனர் த.ஆ. சுப்புராஜ் :-

இக்கதை என்னுடைய சிறுகதைதான், படப்பிடிப்பு திட்டமிட்டிருந்த நாளில் மழை, அதனால் பதட்டத்துடனே இயங்க வேண்டிய சூழல், பிச்சைக்காரர் பாத்திரத்தை வடிவமைப்பதற்காக வெளியே செல்லுமிடங்களில் எல்லாம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை கவனித்து இருக்கிறேன், திடீரென தன் முடிவை மாற்றிக் கொள்ளும் நபர்களை பற்றி கேள்விபட்டிருக்கிறேன், இன்று ஊழல்கள் பெருகியுள்ள சூழலல் அதுபற்றி படம் எடுத்தால் நன்றாக இருக்குமென நினைத்துதான் இப்படத்தை இயக்கினேன், இக்குறும்படம் எடுத்ததினால் நான் பல விசயங்களை கற்றுக் கொண்டேன்,

இறுதியாக யாழ்நிலவன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்,


நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/28#

-------------------------------------------------------------------------------------நாள்: சனிக்கிழமை (08-01-2011)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - ஒளியோடு விளையாடு...

இந்த மாதம் முதல் முதல் பகுதியில் ஒவ்வொரு மாதமும், ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெறும். ஒலிப்பதிவின் தொழில்நுட்பங்கள், லென்ஸ், ஷாட்ஸ், கோணங்கள், போன்றவற்றை பற்றி விரிவான பயிற்சியும், ஆர்வலர்களுடன் அது சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும்.

இந்த மாதம் ஒளிப்பதிவாளர் செல்லையா முத்துசாமி ஒளிப்பதிவு தொடர்பான பயிற்சியை வழி நடத்துவார். இவர் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். குறும்படங்களுக்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட வசனகர்த்தா திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார். குறும்படங்களில் வசனங்களின் முக்கியத்துவம் குறித்தும், வசனங்களின் பயன்பாடும் குறித்தும் பேசவுள்ளார்.

இவர் துரோகி, பானா காத்தாடி போன்ற திரைப்படங்களின் வசனகர்த்தா ஆவார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

போஸ்ட்மேன்

மனோகர்

18 நிமிடங்கள்

யாசகன் வந்தான்

சுப்புராஜ்

8 நிமிடங்கள்
நிறைவு

ராம. முத்துகனேஷன்

12 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் பத்ரி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

வீராப்பு, ஐந்தாம் படை, தம்பிக்கு இந்த ஊரு போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</