கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 27வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

அஜந்தன்
 

தமிழ் ஸ்டுடியோ தனது 27 வது குறும்பட வட்ட நிகழ்வினை டிசம்பர் இரண்டாவது சனிக்கிழமை (11-12-2010) அன்று மாலை 4.30 மணியளவில் நிகழ்த்தியது. சிறப்பு விருந்தினர்களாக திரு. கிருஷ்ணா. G.P. - திரைப்படக் கல்லூரி பேராசிரியர் (ஒளிப்பதிவு), திரு. கஸ்தூரி ராஜா - திரைப்பட இயக்குனர் ஆகிய இருவரும் கலந்துக் கொண்டனர்.

தமிழ் ஸ்டுடியோவின் நோக்கம், செயல் திட்டம் குறித்து விவரித்ததுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார் நிறுவனர் அருண். அதனை தொடர்ந்து பேராசிரியர் கிருஷ்ணா ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒளிப்பதிவில் காட்சி, மற்றும் காட்சி பகுப்புகள் குறித்து விளக்க உரையாற்றினார். ஆவலர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பயனுள்ள முறையில் பதிலுரைத்தார்.

தொடர்ந்து குறும்பட வட்டத்தின் நோக்கமான குறும்படங்கள் திரையிடப்பட்டன.

மரங்களின் அவசியம் குறித்த திரு. கணபதி இயக்கிய அட்சயம், முன்கோபத்தை மையமாக வைத்து திரு. ரவி பிரகாஷ் இயக்கிய எக்ஸட்ரா, வன்முறை குறித்த விவாதத்தை தூண்டும் திரு. சரவணன் & கணேஷ் இயக்கிய தீராத பக்கங்கள் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. பின்னர் மூன்று குறும்படங்களைப் பற்றியும் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா விரிவாக பேசினார். அதன் நிறை குறைகளை அலசி ஆர்வலர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் தனது திரைப்பட அனுபவங்களையும் ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொண்டார். நல்ல கதையோடு வருபவர்களுக்கு தான் வாய்ப்பளிக்க காத்திருப்பதாகவும் கூறினார். பின்னர் குறும்படங்களின் இயக்குனர்கள் பேசினார். அவர்களுடன் ஆர்வலர்களும் சேர்ந்து விவாதத்தில் ஈடுபட்டனர்.இறுதியாக குறும்பட வட்டத்தின் செயலாளர் யாழ் நிலவன் நன்றி கூறினார்.

நிகழ்வு தொடர்பாக மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/1112201027#

-------------------------------------------------------------------------------------நாள்: சனிக்கிழமை (11-12-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த மாதம் முதல் புதிய பகுதியாக "களம்" என்கிற பகுதியில் இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உள்ளிட்ட துறைகளில் உதவியாளராக பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் திரைப்பட அனுபவங்களை குறும்பட ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். இதன் மூலம் திரைப்படத் துறையின் தற்காலப் போக்கு, குறும்பட துறையில் எந்தெந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற தெளிவு ஆர்வலர்களுக்கு ஏற்படும். 

மேலும், ஒரு உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி படத்தொகுப்பாளர் உள்ளிட்ட கலைஞர்களின் பணி என்ன என்கிற தெளிவும் இதன் மூல ஏற்படும்.

இதில் இந்த மாதம் கௌதம் மேனன், லிங்குசாமி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு. நாகராஜ் பங்கு பெறுகிறார். 

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சென்னை திரைப்பட கல்லூரி ஒளிப்பதிவு துறை பேராசிரியர் திரு. கிருஷ்ணா G.P. அவர்கள் பங்கு பெறுகிறார். 

குறும்படங்களில் ஒளிப்பதிவில் ஷாட் தொடர்பாகவும், எந்த ஷாட்டை எங்கே, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கவுள்ளார். ஒளிப்பதிவு தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிப்பார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு

அட்சயம்

கணபதி

12 நிமிடங்கள்

தீராத பக்கங்கள் 

ஷரன்

5 நிமிடங்கள்
ETC.,

ரவி பிரகாஷ்

9 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். 

என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப் பட்டி ராசா, துள்ளுவதே இளமை, கரிசக் காட்டுப் பூவே போன்ற படைகளின் இயக்குனர் ஆவார். 

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</