கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 25வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

சா. ரு. மணிவில்லன்
 

தமிழ் ஸ்டியோ.காம்-ன் 25-வது மாத குறும்பட வட்டம் சென்னை இக்சா மைய அரங்கில் 9.10.10 அன்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மக்கள் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கார்மல், தயாரிப்பாளர் தனஞ்செயன், எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறும்பட திரையிடல்

2009-2010 ஆண்டில் குறும்பட வட்டத்தில் திரையிட்ட படங்களில் இருந்து (ஆறு பிரிவுகளில்) சிறந்த படங்கள் திரையிடப்பட்டன.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர்

பெற்ற விருது

நடந்த கதை

பொன்.சுதா

2010 இன் சிறந்த படம்

செவ்லி

அறிவழகன்

சிறந்த ஒளிப்பதிவு

செத்தாழை பிரசன்னா சுப்பிரமணியன்

சிறந்த ஒளிப்பதிவு

வாழ்க ஜனநாயகம்

கணபதி

சிறந்த நகைச்சுவைப் படம்

திற

பிரின்ஸ் என்னாரெசு பெரியார்

சிறந்த படத்தொகுப்பு

பெல் அடிச்சாச்சு

அருண்

சிறந்த இயக்குனர்

25 மாதத்திற்கான சிறப்பு திரையிடல்

1. The Back Waters - அருள் கார்த்திக்

குறும்பட திரையிடலுக்கு பிறகு முறையான வரவேற்பை தமிழ் ஸ்டியோ குணா வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

கார்மல்

எந்த குறும்பட மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறதோ அது சிறந்த குறும்படம். இந்த குறும்படங்கள் மீது விமர்சனம் வைக்க விரும்பவில்லை. நாம் இழந்து போன கிராம வாழ்க்கையை, நாம் இழந்து போன கதை சொல்லிகளை இக் குறும்படங்கள் பதிவு செய்துள்ளன. தொழிற்நுட்பமும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற களம் படைப்பாளி செழுமை பெற உதவும். இதுபோன்ற விழாக்கள் பெறுக வேண்டும். இவை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்த விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். தமிழ் ஸ்டியோ.காம் விருது பெற்ற இயக்குனர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை கூறி விடை பெறுகிறேன்.

தனஞ்செயன்

அண்மையில் நண்பரின் சிபாரிசின் பேரில் Post Man என்ற குறும்படத்தை பார்த்தேன். மிக சிறப்பாக இருந்தது. அது தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு திரையிடப்பட்ட ஏழு குறும்படங்களையும் ரசித்து பார்த்தேன். ஏழும் ஏழு விதமான அனுபவங்கள்.

வாழ்க சனநாயகம் இன்றைய அரசியலை நையாண்டி செய்துள்ளது. இதன் இயக்குனர் வருங்காலத்தில் பாண்டியராஜ், பாக்கியராஜ் போல் சிறப்பான நகைச்சுவை படங்களை வழங்கக் கூடும்.

பெல் அடிச்சாச்சு குறும்படம் பள்ளி செல்ல வேண்டிய வயதில் வேலைக்கு செல்லும் சிறுவனின் நிலையை மிக குறுகிய கால அளவுக்குள் சிறப்பாக பதிவு செய்துள்ளது.

நடந்த கதை குறும்படம் நம் நாட்டில் நிலவி வரும் சாதிய ஏற்ற தாழ்வுகளைப் பற்றிய சிறப்பான பதிவாகும்.

செத்தாழை குறும்படம் கிராமப்புற அழகை பதிவு செய்துள்ளது. அதே சமயம் அங்கு அறியாமையால் நிகழும் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் கசப்பான செய்தியையும் பதிவு செய்துள்ளது பாராட்டுக்குரியது.

செவ்ளி குறும்படம் இரவு நேர கிராமத்தை மிக சிறப்பாக பதிவு செய்துள்ளது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவையும் சொல்லியுள்ளது. செத்தாழை, செவ்ளி, நடந்த கதை ஆகிய குறும்படங்களை நமக்கு கிராமத்திற்கு சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

திற குறும்படம் நம் நாட்டில் நிலவும் இந்து - முஸ்லிம் பிரச்சினையை மிக தீவிர தன்மையுடன் பதிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். தமிழ் ஸ்டியோ. காம் பயணம் சிறப்பானது. இதன் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள். குறும்பட இயக்குனர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

தமிழ் ஸ்டுடியோ அருண்

இரண்டு வருடங்களுக்கு முன் மெரீனா கடற்கரையில் தொடங்கிய பயணம் இன்று 25 மாதங்கள் கடந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. குறும்பட வட்டம் நிகழ்ச்சியோடு மாதந்தோறும் பௌர்ணமி இரவு - உலக படங்கள் திரையிடல், ஊர் சுற்றலாம் வாங்க - சில மாதங்களுக்கு ஒரு முறை வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை பார்வையிடல், கிராமங்களை நோக்கி குறும்படங்களை கொண்டு செல்லுதல், குறும்படம் எடுக்கலாம் வாங்க, இப்பகுதியில் இலவச கேமிரா, படத்தொகுப்பு மற்றும் வழிக்காட்டல், கொஞ்சம் தேநீர் நிறைய அரட்டை - எழுத்தாளர்களுடன் கலந்துரையாடல் ஆகிய பணிகளை செய்து வருகிறோம்.

குறும்படம் என்பது அறிவுரை சொல்வதற்கானது மட்டுமல்ல. அது ஒரு காட்சி ஊடகம் என்பதனை புரிந்துக் கொண்டு படம் எடுக்க வேண்டும். அந்த புரிதலை ஏற்படுத்தும் குறும்பட பயிற்சி பட்டறையை வரும் வாரங்களில் தமிழ் ஸ்டியோ செய்யவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்த ஆண்டு விருது பெற்றவர்களுக்கு பண பரிசு கொடுக்க முயற்சிப்போம் என்று சென்ற ஆண்டு கூறியிருந்தேன். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. அடுத்த வருடம் விருது வாங்குபவர்களுக பண பரிசு கொடுக்க முயற்சிப்போம்.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களோடு, செடி, பயணம் என இரண்டு குறும்படங்களை இயக்கிய சுப்புராஜ் மற்றொரு சிறப்பு விருந்தினராக கவுரவப்படுத்தப்படுகிறார். அவரைப்போல் உங்களில் ஒருவர் அடுத்த வருடம் இந்த சிறப்பை பெற்றிட நல்ல குறும்படங்களை இயக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அழகிய பெரியவன்

அண்மையில் வேலூரில் நடைபெற்ற நூலாறு 2010 புத்தக கண்காட்சியில் குறும்பட திரையிடல் செய்த தமிழ் ஸ்டியோடிவின் பணிகளை பார்த்து வியப்படைந்தேன். குறும்படங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை கண்டு ஆச்சரியமடைந்தேன். ஒரு மனிதன் தான் விரும்பும் துறையில் நம்பிக்கையுடனும், ஈடுபாட்டுடனும் உழைக்கும்போது வெற்றியாளனாக மாறுகிறான்.

இந்திய, தமிழக திரைப்படங்கள் இன்னும் நாடக தன்மைகளை தாண்டவில்லை. புற வாழ்க்கை சார்ந்த புரிதல் இல்லை. கலை கலைக்காகவா? கலை வாழ்க்கைகாகவா? என்ற விவாதம் நீண்ட காலமாக உள்ளது. கிழிந்த உடை அணிந்த பெண்ணை நாம் எப்படி பார்க்கிறோம் என்பது அவர் அவர் சமூக அக்கறை சார்ந்த வெளிப்பாடாகும்.

இந்த நாட்டில் சனநாயகம் என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கிறது. சனநாயகத்தின் போர்வையில் நடைபெறும் அநியாயங்கள் எத்தனை? என்பதையெல்லாம் வாழ்க சனநாயகம் நையாண்டி செய்துள்ளது.

எல்லா துறைகளிலும் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இதை வெளிக்கொண்டு வரும் நபர்களை மாவட்ட நிர்வாகம் மிரட்டுகிறது. பள்ளி செல்ல முடியாமல் போகும் ஒரு சிறுவனின் நிலை பெல் அடிச்சாச்சு சிறப்பாக பதிவு செய்துள்ளது.

கொங்கு மண்டல கிராமங்களில் இன்னும் 12, 13 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்யும் கொடுமையுள்ளது. இந்த சமூக கொடுமைகளை நாம் படைப்பில் கொண்டு வரவேண்டாமா? அதைத்தான் செத்தாழை குறும்படம் செய்துள்ளது. அக்குழுவினரை நாம் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

நடந்த கதை குறும்படம் இளம் மனங்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதனை பல இடங்களில் நான் நேரடியாக பார்த்துள்ளேன். காட்சி ஊடகத்தின் வலிமையை உணர முடிகிறது.

அண்மையில் பீப்ளி லைப் என்ற இந்தி படம் பார்த்தேன். சம கால கிராம வாழ்க்கை பிரச்சினைகளை சிறப்பாக பதிவு செய்துள்ளார்கள். நாம் இழந்து வரும் கிராமங்களைப் பற்றி கதை சொல்லிகள் பற்றி குறிப்பாக தாத்தா - பேரன் உறவு முறையை செவ்ளி அழகாக படம் பிடித்துள்ளனர்.

திற குறும்படம் எனக்குள் பல விசயங்களை நினைவுப்படுத்துகிறது. ஒரு சிறந்த படைப்பின் பணி இதுவாகத்தான் இருக்கும். 1947 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது மதங்களை முன் வைத்து மனிதர்கள் பிரித்தார்கள், பிரிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், கொலை செய்தார்கள். பல துயரங்கள் நடைபெற்றன. அந்த அவலங்களை மாண்டோ தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்தார். மறுபடியும் இந்த அவலம் நிகழ வேண்டாம் என்று எண்ணிதான் படைத்திருப்பார். ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு பிறகும் அந்த துயரம் வேறு வேறு வடிவங்களில் தொடரத்தான் செய்கிறது.

முன்பிருந்ததை காட்டிலும் இன்று இந்து - முஸ்லிம் உறவு சிக்கல்கள் நிறைந்ததாகத்தான் உள்ளது. அண்மையில் வழங்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு அதை உறுதிபடுத்துவதாக உள்ளது. பல புத்தகங்களை வாசித்தேன், பல தீர்ப்புகளை ஆராய்ந்தேன் என கூறிவிட்டு ஒரு நீதிபதி நம்பிக்கையின் பேரில் தீர்ப்பு எழுதுகிறார். நம்பிக்கையின் பேரில் தீர்ப்பு எழுதுவதற்கு சட்ட புத்தகம் எதற்கு, வரலாற்று ஆராய்ச்சி எதற்கு, அகழ்வாராய்ச்சி எதற்கு என்பது புரியவில்லை. மசூதியை இடித்தவர்கள் பற்றி ஒரு கண்டனம் கூட கிடையாது. இதுபோல் நிறைய விசயங்களை நினைவுப்படுத்துகிறது திற குறும்படம்.

The Black Waters என்ற குறும்படம் மிகவும் காட்சிப்பூர்வமாக எடுத்துள்ளார்கள். ஆற்று மணல கொள்ளை போவதைக் கூட காட்சி மொழியில் பதிவு செய்துள்ளார்கள்.

தமிழ் ஸ்டியோ.காம்-க்கும், குறும்பட இயக்குனர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் கூறி விடைபெறுகிறேன்.

இறுதியாக விருது பெற்றவர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.

தமிழ் ஸ்டியோ அருண் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ராஜசேகர் தொகுத்து வழங்கினார்.

நிகழ்வு சார்ந்து மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.co.in/thamizhstudio/25#

தொகுப்பு : சா. ரு. மணிவில்லன்
saru.manivillian@gmail.com


-------------------------------------------------------------------------------------நாள்: சனிக்கிழமை (09-10-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. 
நேரம்: மாலை 4.30 மணியளவில்

சிறப்பு அழைப்பாளர்கள்:

கார்மெல் (மக்கள் தொலைகாட்சி)
தனஞ்செயன் (மோசாபீயர்)
பாஸ்கர் சக்தி (எழுத்தாளர் & திரைப்பட வசனகர்த்தா)
அழகிய பெரியவன் (எழுத்தாளர்)
ரமேஷ் கண்ணா (இயக்குனர் & நடிகர்)

வணக்கம் நண்பர்களே...

குறும்பட ஆர்வலர்களின் திரளான ஆதரவினால் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்வு இந்த மாதத்தோடு தனது இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் இனிதே அடியெடுத்து வைக்கிறது. மேலும், இது 25 வது குறும்பட வட்டம் என்கிற காரணத்தினால் வெள்ளி விழாவாகவும் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நல்ல நேரத்தில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், குறும்பட ஆர்வலர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

முதலாம் ஆண்டு நிறைவு விழா போல் இந்த மாதமும் சென்ற ஆண்டில் திரையிடப்பட்ட 36 குறும்படங்களில் இருந்து வெவ்வேறு பிரிவுகளில் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெற விருக்கிறது. வழக்கம் போல் இந்நிகழ்விலும் ஆர்வலர்கள் திரளாக கலந்துக் கொண்டு நிகழ்வை வெற்றியடைய செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர்

பெற்ற விருது

நடந்த கதை

பொன்.சுதா

2010 இன் சிறந்த படம்

செவ்லி

அறிவழகன்

சிறந்த ஒளிப்பதிவு

செத்தாழை பிரசன்னா சுப்பிரமணியன்

சிறந்த ஒளிப்பதிவு

வாழ்க ஜனநாயகம்

கணபதி

சிறந்த நகைச்சுவைப் படம்

திற

பிரின்ஸ் என்னாரெசு பெரியார்

சிறந்த படத்தொகுப்பு

பெல் அடிச்சாச்சு

அருண்

சிறந்த இயக்குனர்

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</