கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

குறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 

குறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
editor@thamizhstudio.com

 

 

 

 
     
     
     
   
குறும்பட வழிகாட்டி
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  குறும்பட வழிகாட்டி TS குறும்பட வட்டம் குறும்பட வட்டம் 
வாயில் 
 
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 22வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)

சா. ரு. மணிவில்லன்
 

தமிழ் ஸ்டியோ.காம்-ன் 22வது குறும்பட வட்டம் 10.07.2010 இக்சா மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஆவணப்பட இயக்குனர் ரவிசுப்ரமணியம், இயக்குனர் சசி, கவிஞர் தாரா கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று (10.07.2010) எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 80-வது பிறந்த தினம். அவரை சிறப்பிக்கும் வகையில் ரவிசுப்ரமணியம் இயக்கிய இ.பா. ஆவணப்படம் திரையிடப்படும். இந்த ஆவணப்படம் சாகித்ய அகதெமிக்காக எடுக்கப்பட்டது. இத்திரையிடலுக்கு பிறகு மற்ற நிகழ்ச்சிகள் தொடரும் என வரவேற்பு வழங்கிய தமிழ் ஸ்டியோ அருண் கூறினார்.

முதல் நிகழ்வு - சிறப்பு நிகழ்ச்சி

இ.பா. ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதன் இயக்குனர் ரவி சுப்ரமணியம், இ.பா. ஆவணப்படம் பற்றியும் இ.பா. ஆளுமைப்பற்றியும் உரையாடினார்.

ரவி சுப்ரமணியம்

இந்திரா பார்த்தசாரதியுடன் எனக்கு இருபது ஆண்டுகளாக நட்பு உண்டு. எங்கள் இருவருக்கும் சொந்த ஊர் கும்பகோணம். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கும்பகோணத்தில் ஒரு லாட்ஜ் இருந்தது. அங்கு எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் என யார் வந்தாலும் அவர்களுக்கு தங்குமிடம் இலவசமாக கொடுத்து வந்தேன். அப்போது இ.பா. தான் பிறந்த ஊரை மறுபடியும் பார்ப்பதற்காக கும்பகோணம் வந்து இருந்தார். என் லாட்ஜில் தங்கியிருந்தார். அப்போது சுமார் 3 மாத காலம் அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

நான் விஜய் தொலைக்காட்சியிலும், பிறகு ஜெயா தொலைக்காட்சியிலும் செய்தி பிரிவில் வேலைபார்த்தேன். அப்போது தொழில் நிமித்தமாக சுமார் 1500 ஆவணப்படங்கள் எடுத்தேன். இ.பா.க்கு சரஸ்வதி சம்மான் விருது கிடைத்தபோது தொலைக்காட்சி செய்தியில் காட்டுவதற்காக ஒரு நாள் முழுக்க அவரைப் படம் பிடித்தோம். அதில் சுமார் 5 நிமிடம் செய்தியில் காண்பித்தோம்.

சாகித்ய அகதெமிக்காக இ.பா. படத்தை எடுத்தேன். அவரது சமகாலத்தியவர்களை, அவரது நாடக ஒத்திகைகளை படம் பிடித்தேன். கும்பகோணம், புதுச்சேரி, டெல்லி என பல ஊர்களுக்கு சென்று தகவல் திரட்டினேன். இ.பா. ஆவணப்படத்தில் இ.பா. நேரடியாக பேசுவது மிகக் குறைவுதான். சமகாலத்தவர்கள் அவர் ஆளுமைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதனை பதிவு செய்வதின் மூலமாக இ.பா. வின் ஆளுமையை பார்வையாளனுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளேன்.

கர்நாடக சங்கீதம் பற்றி ஆவணப்படம் எடுக்க பல நிறுவனஙகள் உதவுகின்றன. ஆனால் பிற துறைப் பற்றி ஆவணப் படம் எடுத்தால் யாரும் உதவுவதில்லை. நம் மண்ணின் கலாச்சாரத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவைகள் ஏராளம் உள்ளன. பெரிய நிறுவனங்கள் உதவினால்தான் தரமான ஆவணப்படங்களை உருவாக்க முடியும். இதற்காக செலவிடும பணம் திரும்ப கிடைக்காது என்பதினால் தனி மனிதர்கள் செய்ய முடியாது.

ஒரு ஆவணப்படம் யாருக்காக எடுக்கப்படுகிறது. என்ன சொல்ல போகிறோம். எப்படி சொல்ல போகிறோம் என்ற தெளிவு வேண்டும். உதாரணமாக இ.பா.வுக்கு பல முகங்கள், சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், தமிழாசிரியர், நாடகாசிரியர் என பல பரிமாணங்கள் கொண்டவர். நான் இ.பா.

ஆவணப்படத்தின் அவரது நாடகங்கள் பற்றி பேசினேன். தமிழின் முதல் நவீன நாடகம் இ.பா. எழுதப்பட்டது. அதனால் இ.பா.வின் நாடகம் சார்ந்த பங்களிப்பைப் பற்றி இ.பா. ஆவணப்படம் பேசுகிறது.

ஆவணப் படங்களை வெறும் நேர்காணல் போல் அல்லாமல் முடிந்தவரை காட்சி மொழியில் பதிவு செய்ய விரும்புகிறேன். யாரைப்பற்றி ஆவணப்படம் எடுக்கும்போதும் அவர்களுக்கு முன்பே கேள்விகளை சொல்ல மாட்டேன். முன் தீர்மானத்தோடு அல்லாமல் கேள்விக்கேட்டு அந்த நிமிடம் கிடைக்கும் பதில்களை பதிவு செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.

இரண்டாவது நிகழ்வு - குறும்பட வழிக்காட்டல் பகுதி

இம்மாதம் குறும்பட வழிக்காட்டல் பகுதியில் இயக்குனர் சசி கலந்து கொண்டார். உரையாற்றுவதைவிட கலந்துரையாடல் செய்வதை விரும்புவதாக கூறினார். 1950களில் வெளியான ஆஸ்கார் விருது பெற்ற ஒரு கறுப்பு வெள்ளை குறும்படத்தை ஷாட் பை ஷாட்டாக கதை சொன்னார். பிறகு குறும்பட ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார்.

கேள்வி - ஒரு குறிப்பிட்ட உணர்வுகளை காட்ட ஒரு குறிப்பிட்ட வகை ஷாட்டைதான் பயன்படுத வேண்டுமா?

சசி - தேவையில்லை. ஒரு காலத்தில் சோகத்தைக் காட்ட டாப் ஆங்கில் ஷாட்டை பிரமாண்டத்தைக் காட்ட லோ ஆங்கில் ஷாட்டை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பயன்படுத்தலாம்.

கேள்வி - சிறுகதை, நாவல் வடிவங்களை படமாக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

சசி - சிறுகதையை படமாக்கும்போது நிறைய விரிவுபடுத்த வேண்டும். உதாரணமாக வெளியிலோடு போயி சிறுகதையில் அவள் சாயங்கால நேரம் கள்ளிப்பழம் பொறுக்கினாள் என்ற ஒருவரிக் கதைக்கு சுமார் 10 நிமிட அளவுக்கு படம் எடுத்தேன். சிறுகதையல் விசயத்தை சுருக்கமாக சொல்லியிருப்பாங்க அதை நாம் விரிவாக படம் பிடித்தால்தான் தேவையான உணர்வை பதிவு செய்ய முடியும். ஆனால் நாவலை படமாக்கும்போது நிறைய பகுதிகளை குறைக்க வேண்டும். விரிவாக சொல்லப்பட்டிருக்கும் விசயத்தை சுருக்கமாக படம் பிடித்தால்தான் சிறப்பாக இருக்கும்.

கே - நான் இயக்குனராக என்ன செய்ய வேண்டும்?

சசி - இதற்கு பதிலாக ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் ஒரு சிறுகதையை உங்களுக்கு சொன்னால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். சுமார் 35 வயது மனிதர் ஜெ.கே.விடம் எனக்கு ஓவியர் ஆக வேண்டும் என்ற விருப்பம், ஆனால் நான் பள்ளியில் படிக்கும்போது முதலில் படி பிறகு படம் வரையலாம் எனக்கூறி என் பெற்றோர் என்னை படம் வரையவிடாமல் தடுத்தனர். பிறகு கல்லூரிப் படிப்பில் நிறைய மதிப்பெண் வாங்கினால்தான் நல்ல வேலை கிடைக்கும் என கூறினார்கள். படித்ததனால் படம் வரைய முயலவில்லை. நல்ல வேலை கிடைத்ததும் திருமணம், திருமணத்திற்கு பிறகு மனைவியோடு செலவிடவே நேரம் போதவில்லை. பிறகு ஓவியம் வரைவது எப்படி. இப்போது குழந்தைகள் பிறந்துவிட்டனர். அவர்களை கவனிக்கவே நேரம் சரியாக உள்ளது. ஆனால் என்னால் ஓவியம் வரைய முடியவில்லையே என்ற மன வருத்தம் எனக்குள்ளது. இது சரியா எனக் கேட்டார்.

அவருக்கு பதிலாக ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு குட்டிக்கதை சொன்னார். நீங்கள் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு ரயில் பயணம் செய்கிறீர்கள். ரயிலில் நிறைய கூட்டம். நீங்கள ஒருகால்மேல்தான் மற்றொரு காலை வைத்து நிற்கும் அளவுக்கு கூட்டம். இந்த இரண்டு நாள் பயணத்தில் நீங்கள் தூங்குவீர்களா? மாட்டீர்களா? உங்கள் தோள்மீதே தலைமைய சாய்த்தாவது நீங்கள் தூங்குவீர்கள்தானே, நீங்கள் ஓவியர் ஆக வேண்டுமென உங்கள் மனம் மட்டும் ஆசைப்படுகிறது. அதனால் நீங்கள் ஓவியராகவில்லை. உங்கள் லட்சியம் உங்கள் உடம்பு பூராவும் இருந்திருந்தால் நீங்கள் வெற்றி பெற்றியிருப்பீர்கள். அதுபோலதான் நீங்கள் இயக்குனராக வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தால் அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டும்.

கேள்வி - ஒரு படத்தை லைவாக பதிவு செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?

சசி - லைவ்வா பதிவு செய்ய கூடுதல் செலவாகும். அதைப் போல் கூடுதலான உழைப்பும் தேவைப்படும். தமிழ் சினிமாவில் சில படங்களில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே லைவாக பதிவு செய்துள்ளார்கள். இது தேவையில்லை என்பதே என் கருத்து

கேள்வி - ஒரு காட்சிக்கு சவுண்ட் எபெக்ட், இசை எது சரியானது.

சசி - அது இயக்குனரின் விருப்பம். உதாரணமாக ஒரு சீன மொழிப்படத்தில் ஒரு பெண் ரயில் வருகைக்காக காத்திருப்பாள். இப்போது பிண்ணனி இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். ரயில் அவர் பார்வைக்கு வந்து, பிறகு அவள் அருகே வந்து நிற்கும், ஆட்கள் இறங்குவார்கள் அவள் எதிர்பார்த்தவரை தேடுவாள், பிறகு ரயில் கிளம்பி சென்று மறையும். இந்த காட்சியில் ரயிலை காண்பிக்கவே மாட்டார். சவுண்ட் எபெக்ட் மூலமே அனைத்தையும் பதிவு செய்திருப்பார்

கேள்வி - பூ படத்தின் இறுதி காட்சி முடிவு வேறாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதாநாயகி தற்கொலை செய்து கொண்டிருந்தால் கூட பரவாயில்லை.

சசி- நீங்கள் அழகி படம் பார்த்தீர்களா? ம். பார்த்தேன்.
சசி - படம் பிடித்திருந்ததா? ம். ரொம்பவும் பிடித்திருந்தது
சசி - இரண்டும் ஒரே கதைதான். அதில் ஆண் தன் காதலியின் நிலைக்கண்டு வருத்தப்படுகிறான். இதில் பெண் தன் காதலின் நிலைக் கண்டு வருத்தப்படுகிறாள். இரண்டு பேரும் ஒரே காரியத்தை செய்கிறார்கள். ஆண் செய்தது சரி, பெண் செய்தது தவறு என நினைப்பது உங்கள் மனப்பிரச்சினை. என் படத்தை இன்னும் 15 வருடங்களுக்கு பின் வருபவர்கள் புரிந்து கொள்வார்கள்.

காதலன், காதலி இருவரின் வாழ்க்கையும் சோகமாக இருந்து ஒருவர் மற்றொருவருக்காக வருத்தப்பட்டால் அதில் என்ன தியாகம் இருக்கு. காதலி மகிழ்ச்சியாக இருக்கிறாள். காதலனின் வாழ்க்கை துயரமாக இருக்கு. இப்போது காதலி நான் நல்லா இருக்கேன். நீ கஷ்டப்படுரியடா என வருத்தப்படறதுதான் தியாகம்னு நினைக்கிறேன்.

கேள்வி - சொல்லாமலே படத்தின் இறுதி காட்சியில் கதாநாயகன் நாக்கை வெட்டிக் கொள்வது சரியா?

சசி -அந்த காட்சியை வைக்கலாமா வேண்டாமா என நிறைய நாள் யோசித்திருக்கிறேன். எனக்கு சமூக அக்கறை இல்லாமல் இல்லை. இந்த காட்சியை வைத்தால் யார் பாராட்டுவார்கள், யார் திட்டுவார்கள் என்பது எனக்கே தெரியும். ஆனால் நான் எடுத்துக் கொண்ட கதைக்கு அதுதான் சரியான முடிவு. அந்த முடிவை வைக்கவில்லை என்றால் படம் பிளாப். இன்று நான் இங்கு நின்று பேசிக் கொணடிருக்க முடியாது. மற்றவர்கள் பாராட்டுவார்கள் என்பதற்காக ஒரு காட்சியை வைக்க முடியாது. நாம் எடுத்துகொண்ட கதைக்கு எது சரியோ அதைத்தான் செய்ய வேண்டும்.

கேள் - என்னை இயக்குனராக தகுதப் படுத்திக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

சசி - நிறைய இலக்கியம் படிக்க வேண்டும். நிறைய படங்கள் பார்க்க வேண்டும். படம் பார்த்துதான் சினிமாவை கற்றுக்கொள்ள முடியும். அப்படி செய்தால் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும் என்பது கூடஅவசியமில்லை.

நான் நான்கு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். பிறகு ஒரு கதை ரெடி பண்ணினேன். சம காலத்தில் புதுமுக இயக்குனர்களுக்க யார் வாய்ப்பு அளிக்கிறார்கள் என பார்த்தேன். சூப்பர் குட் பிலிம்ஸ் என தெரிந்ததும் அவர்கள் என்ன மாதிரியான கதைகளை படமாக எடுக்கிறார்கள் என்பதை கவனித்தேன். அவர்களுக்கு ஏற்ற மற்றொரு கதையை எழுதித்தான் என் முதல்பட வாய்ப்பை பெற்றேன்.

நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலத்தில் தமிழ் ஸ்டியோ.காம் போன்ற அமைப்புகள் இல்லை. இது தரும் உற்சாகத்தில் நீங்கள் விரைவில் வெற்றி பெற முடியும். நீங்கள் அனைவரும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.

மூன்றாவது நிகழ்வு - குறும்பட திரையிடல்

இம்மாத குறும்பட திரையிடல் பகுதியில் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன. குபேந்திர மோகன் இயக்கிய ஆதரவு, மாக்ஸிம் இயக்கிய தேடல், டென்சிங் ராஜா இயக்கிய பூஜ்ஜியம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இக்குறும்படங்களை கவிஞர் தாரா கணசேன் திறனாய்வு செய்தார்.

கவிஞர் தாரா கணேசன்

3 குறும்படங்களுக்குமே சமூக பிரச்சினைகளை பேசுகின்றன. கலைஞன் என்பவன் பிரச்சினைகளை உள்வாங்கி தன் மன அதிர்வளை தன் படைப்புகள் மூலம் வெளிப்படுத்துகிறான். சமூக அவலக்ளை இனம் காணும் இவர்களின் சமூக அக்கறை பாராட்டுதலுக்குரியது.

முதல் குறும்படத்தின் கதைக்கரு சிறப்பான. வாழ்க்கையில் மிக அவசர அவசரமாக நேரமில்¬. இக்குறும்படத்தில் நிறைய உரையாடல்கள் உள்ளன. நடிகர்களின் முக பாவனைகள் போதுமானதாக இல்லை. விளக்கு வெளிச்சத்தை சிறப்பாக பயன்படுத்தி சரியாக பதிவு செய்துள்ளார்கள். ஒரு மனிதனுக்கு மனப்பிறழ்வு ஏற்பட சொல்லப்படும் காரணங்கள் போதுமானவைகள் அல்ல.

இரண்டாவது குறும்படத்தல் ஒலிப்பதிவு (சவுண்ட்) சரியாக இல்லை. ஆனால் மழைக்காட்சிகள் அவசர உலகின் இயல்புகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. உணர்வுகளை இன்னும் ஆழமாக பதிவு செய்து இருக்கலாம்.

மூன்றாவது குறும்படத்தின் முதல் ஷாட்டே மிகவும் சிறப்பாக உள்ளது. யாரும் விரும்பாத யாரும் கவனிக்காத மனிதனைப் பற்றிய இக்குறும்படம் எனக்குள் ஆர்.கே. நாராயணனின் ஒரு சிறுகதையை நினைவுப்படுத்துகிறது. அது ஒரு தபால்காரனுக்கும் ஊர் மக்களுக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றி சொல்லும் கதை. இந்த குறும்படத்தில் நிராகரிக்கப்பட்ட கடிதம் நிலத்தில் கிடக்கிறது. மழை பெய்கிறது. காற்று அடிக்கிறது. மெழுகுவர்த்தி எரிகிறது. இந்த ஒரு ஷாட்டில் ஐம்பூதங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை நன்றாக உள்ளது. பாராட்டுதலுக்குரிய படம்.

குறும்பட இயக்குனர்களுக்கும் தமிழ் ஸ்டியோ.காம்-க்கும் என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுதல் களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்புரையில் குபேந்திர மோகன் ஆதரவு குறும்படத்தை எடுக்க உதவியவர்களுக்க நன்றி கூறினார். அப்படம் எடுக்க தான்பட்ட சிரமங்களை பகிர்ந்து கொண்டார். திறனாய்வாளர் சுட்டிகாட்டிய தவறுகளை ஏற்றுக்கொண்டு, இனி வரும் படைப்புகளில் சிறப்பாக செய்வதாக கூறினார்.

சமூகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே பூஜ்ஜியம் குறும்படம் எடுத்ததாக குறும்பட இயக்குனர் டென்சிங் தனது ஏற்புரையில் கூறினார்.


இறுதியாக வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், குறும்பட ஆர்வலர்களுக்கும், தமிழ் ஸ்டியோ அருண் நன்றிக் கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://picasaweb.google.co.in/thamizhstudio/22#


-------------------------------------------------------------------------------------
நாள்: சனிக்கிழமை (10-07-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த மாதம் 10 ஆம் தேதி எழுத்தாளர் திரு. இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 80 வது பிறந்த நாள்.. அவரை சிறப்பிக்கும் பொருட்டு 22 வது குறும்பட வட்டத்தின் முதல் பகுதியில் இந்திரா பார்த்தசாரகுய் அவர்கள் பற்றிய ஆவணப்படம் திரையிடப்படும். இயக்கம்: திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திரு. சசி அவர்கள் பங்குபெறுகிறார்.

இவர், சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.

குறும்படங்களில் இயக்கம் தொடர்பான தொழில்நுட்ப அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிப்பார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
ஆதரவு  குபேந்திர மோகன் 17 நிமிடங்கள்
பூஜ்ஜியம் டென்சிங் 12 நிமிடங்கள்
செத்தாழை பிரசன்னா சுப்பிரமணியன் 25 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் ஆவணப்பட இயக்குனர் / திரைப்பட விமர்சகர் திரு. அம்ஷன் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். இவர் தமிழகத்தில் சினிமா குறித்த ரசனையும் கண்ணோட்டத்தையும் உருவாக்கத் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். இவரது சினிமா ரசனை (1990) இவ்வகையில் தமிழின் முன்னோடி நூலாகும். இவர் கி. ராஜனாரயனின் கிடை குறுநாவலைத் தழுவி எடுத்த திரைப்படம், ஒருத்தி (2003) இந்திய அரசினால் நடத்தப்படும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</